Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Wednesday, August 22, 2012

68. நோவா


லாமேக்கின் குமாரன்

முக்கிய வசனம்
நோவா தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய்து முடித்தான்.” (ஆதியாகமம் 6 : 22)

சுருக்கமான குறிப்புகள் 
v  நோவா உத்தம மனிதன். (ஆதி 6 :9)
v  அவன் தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான். (ஆதி 6 : 9)
v  அவன் அதிக, நீண்ட நாட்கள் உயிரோடிருக்க ஆசீர்வதிக்கப்பட்டிருந்தான்.
v  நோவாவும், அவன் குடும்பத்தாரும் வெள்ளத்திலிருந்து தப்பிப் பிழைத்தார்கள்.
v  கர்த்தர் நோவாவோடு உடன்படிக்கை செய்தார். (ஆதி 6 : 18)
v  அவன் குமாரர்கள் சேம், காம், யாப்பேத்.

1.         அறிமுகவுரைஅவன் கதை 
            அநேக வியாக்கியானம் கூறுபவர்கள் அவர் பெயரை `இளைப்பாறுதல்என்பதோடு சம்பந்தப்படுத்தினார்கள் நோவாவின் வாழ்க்கையின் கதை ஒன்றோடு மட்டுமல்ல, இரண்டு பெரிய, பயங்கரமான வெள்ளங்களோடு சம்பந்தப்பட்டிருக்கிறதுநோவா காலத்தில் உலகத்தில் பாவத்தினால் வெள்ளம் ஏற்பட்டதுசிருஷ்டிப்பின் தேவன் பூரணத்துவம், அன்பு ஞாபகம் வைத்திருந்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து ஒன்றானதுதேவனின் ஜனங்களில் நோவா மாத்திரம் தான் விடப்பட்டு இருந்தான்கொடூரமான நிலைமையில் தேவனின் ஒத்துழைப்பு 120 வருட நீண்ட கடைசி வாய்ப்புஅந்த நேரத்தில் அவர் வாழ்க்கையின் தெளிவான விளக்கத்தைக் கூற நோவா இருந்தான்முக்கிய நோக்கம் வறண்ட நிலத்தில் ஒரு பெரிய படகு போல் இல்லாமல் வேறில்லைநோவாவுக்கு கீழ்ப்படிதல் ஒரு திட்டத்தின் நீண்ட கால பொறுப்பு எனத் தெளிவாகிறது.

            நம்மில் அநேகருக்கு ஏதாவது ஒரு திட்டத்தில் இணைந்திருப்பது கஷ்டமாயிருக்கிறதுஅது தேவனின் வழிகாட்டுதலா, இல்லையாநோவாவின் கீழ்ப்படிதலின் அளவு, தற்கால மனிதர்களின் வாழ்வுகால அளவை விடப் பெரிதாயிருப்பது சுவாரஸ்யமானதுநீண்ட காலத் திட்டத்தோடு ஒத்துப்போவது நமது முக்கியமான வாழ்க்கைதான்ஆனால் ஒரு வேளை நோவாவின் வாழ்க்கை நமக்குக் கிடைக்கும் பெரிய சவால்தேவனின் கிருபையை ஏற்றுக்கொண்டு வாழ்தல், முழு வாழ்நாட்களிலும் கீழ்ப்படிதலோடும், நன்றியோடும் வாழ்தல்

2.         பலங்களும் நிறைவேற்றுதலும் 
a)    அவன் சந்ததியில் தேவனைப் பின்பற்றுகிறவர்கள் விடப்பட்டிருந்தார்கள்.
b)    மனித சந்ததியில் இரண்டாவது தகப்பன்.
c)    பொறுமை, உறுதி, கீழ்ப்படிதலுள்ள மனிதன்.
d)    கப்பல் கட்டுபவர்களில் முதலாவது தலைவன்.

3.         பலவீனங்களும் தவறுகளும் 
            அவன் குடித்ததினால் அவனுடைய குமாரர்களின் முன்னால் தர்ம சங்கடமான நிலையில் இருந்தான்.

4.         அவன் வாழ்க்கையிலிருந்து பாடங்கள். 
a)    தேவன் அவருக்குக் கீழ்ப்படிபவர்களிடம் விசுவாசமாயிருப்பார்.
b)    தேவன் எப்போதும் கஷ்டத்திலிருந்து காப்பாற்றமாட்டார்ஆனால் பகை மூலம் வரும் கஷ்டங்களில் நமக்காகக் கவலைப்பட்டுக் கவனிப்பார்.
c)    கீழ்ப்படிதல் நீண்ட கால வாக்குத்தத்தம்.
d)    ஒரு மனிதன் விசுவாசமாயிருக்கலாம்ஆனால் அவன் இயற்கையான பாவமானது அவனுடன் கூட பிரயாணம் செய்யும்.

5.         வேதாகமக் குறிப்புகள்:  
நோவாவின் கதை ஆதியாகமம் 5 : 29 – 10 : 32ல் சொல்லப்பட்டிருக்கிறது.  1 நாளா. 1 : 3 – 4; ஏசாயா. 54 : 9; எசேக்கியேல். 14 : 14, 20; மத்தேயு. 24 : 37 -38; லூக்கா. 3 : 36, 17 : 26 -27; எபிரெயர். 11 : 7; 1 பேதுரு 3 : 20; 2 பேதுரு. 2 : 5.  இவைகளில் அவன் குறிப்பிடப்பட்டிருக்கிறான்

6.         விவாதத்திற்குரிய கேள்விகள் 
            6.1       அவன் பின்னணியைப்பற்றி உனக்கு என்ன தெரியும்?
            6.2       முதல் வெள்ளத்தைப்பற்றி உனக்கு என்ன தெரியும்?
            6.3       அவனும் அவன் குடும்பத்தாரும் எப்படி வெள்ளத்திலிருந்து தப்பித்தார்கள்?
            6.4       அவன் எப்படி தேவனுக்குக் கீழ்ப்படிந்தான்?
            6.5       அவன் வாழ்க்கையிலிருந்து நாம் என்ன பாடங்கள் கற்றுக் கொள்ள முடியும்?


மொழிபெயர்ப்பு
திருமதி நாயகம் பட்டு
பரி.யாக்கோபின் ஆலயம்.

31. ஆமான்



தீய எண்ணம் கொண்ட பிரதம மந்திரி, எஸ்தர் புஸ்தகத்தின் விரோதி.

முக்கிய வசனங்கள்:
ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான்.  ஆனாலும் மொர்தெகாயின் மேல் மாத்திரம் கைபோடுவது அவனுக்கு அற்பக் காரியமாகக் கண்டது.  மொர்தெகாயின் ஜனங்கள் இன்னாரென்று ஆமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபடியால், அகாஸ்வேருவின் ராஜ்யமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் ஜனமாகிய யூதரையெல்லாம் சங்கரிக்க அவன் வகை தேடினான்.”  (எஸ்தர் 3: 5 – 6)

v  ஆகாகியனாகிய அம்மெதாத்தாவின் குமாரன், எஸ்தர் காலத்தில் பெர்சியாவில் இராஜாவாகிய அகாஸ்வேருவின் கீழ் உயர்ந்த அதிகாரியாக இருந்தான்.
v  இன சம்பந்தமான நீதியற்ற விரோதத்தினால், ஆமான் யூதர்களைச் சங்கரிக்க சதி ஆலோசனை செய்தான்.
v  அவனை வணங்குவதற்கு மொர்தெகாய் மறுத்ததால் அதைப் பெரிய காயமாக நினைத்துக்கொண்டான்.
v  அவன் மொர்தெகாயைத் தூக்கில் போட தீர்மானித்தான்.
v  ஆமான் யூதர்களைக் கொல்ல சதியாலோசனை செய்தது வெளியரங்கமானபோது, அவனையும், அவனுடைய பத்து குமாரர்களையும் மொர்தெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் தூக்கிப்போட்டார்கள்.



சுருக்கமான குறிப்புகள்
1.         அறிமுகவுரைஅவன் கதை
            மிகுந்த கர்வமுள்ள ஜனங்கள், தங்கள் அதிகாரம், செல்வாக்கு மற்றவர்களைவிட மேலானது என்று நினைக்கிறவர்கள் அவர்களது சொந்த எல்லையில்லா மதிப்பை அடிக்கடி மதிப்பிடவேண்டும். ஆமான் அளவுக்கதிகமான கர்வமுள்ள தலைவனாயிருந்தான். அவன் இராஜாவைத் தன் மேலதிகாரியாக அறிந்திருந்தான்.  ஆனாலும் மற்றவர்களுக்குச் சமமான ஒருவராகத்தான் ஏற்றுக்கொள்ள முடிந்தது.  ஒரு மனிதன், மொர்தெகாய் அவனுக்கு மரியாதையாகக் கீழ்ப்படிந்து வணங்க மறுத்தபோது, ஆமான் அவனை அழிக்க விரும்பினான்.  அவன் மொர்தெகாயின் மேல் விரோதம் நினைத்தவனாயிருந்தான்.  அவன் முன்னதாகவே எல்லா யூத ஜனங்கள் மேலும் இன விரோதம் நிறைந்தவனாயிருந்தான்.  ஏனென்றால் யூதர்களுக்கும், ஆமானின் சந்ததியார் அமலேக்கியருக்கும் இடையில் நீண்ட காலமாக விரோதம் நிலைத்திருந்தது.  மொர்தெகாய் தேவனிடம் முன்னறிவித்ததும், எந்த மனிதர்களுக்கும் அடைக்கலம் கொடுக்க மறுத்ததும் ஆமானின் சொந்த நிலையான மதத்திற்குச் சவாலாயிருந்தது.  ஆமான் யூதர்கள் தன் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறதைக் கண்டதால் அவர்களைக் கொல்லத் தீர்மானித்தான். 

            தேவன் ஆமானின் வீழ்ச்சியையும், அவன் ஜனங்களின் பாதுகாப்பையும் ஆமான் அகாஸ்வேரு இராஜாவின் அதிகாரத்திற்குக் கீழ் வரும்முன்பே ஆயத்தமாக்கியிருந்தார்.  எஸ்தர், ஒரு யூத ஸ்திரீ இராணியாக ஆனாள்.  மொர்தெகாயின் பங்கு, கொலை முயற்சியை வெளிப்படுத்தியதால் இராஜா அவனிடம் கடமைப்பட்டிருந்தார்.  ஆமான் மொர்தெகாயைக் கொலை செய்வதிலிருந்து காப்பாற்றப்பட்டது மாத்திரமல்ல, அவனை மரியாதை செய்ய, அவமானத்தைப் பிரகடனம் செய்ததால் வருத்தப்பட்டான்.  சில மணிநேரத்திற்குள் ஆமான் மொர்தெகாயைத் தூக்கிலிட ஏற்படுத்தின தூக்குமரத்தில் மரணமடைந்தான்.  அவன் யூதர்களை அழித்துவிடவேண்டும் என்று எண்னினது தடை செய்யப்பட்டது.  எஸ்தர் வித்தியாசமாக எல்லாவற்றையும் தேவனுக்காக எதிர்கொண்டு வெற்றி பெற்றாள்.  ஆமான் எல்லாவற்றையும் தீமையான காரியங்களுக்கு ஒப்புக்கொடுத்து தோல்வி அடைந்தான். 

ஆமானைப் பற்றிய கதையைப் பற்றி நமது முதல் பதில் அவன் தகுதிக்கேற்றதைப் பெற்றான் என்று சொல்லவேண்டும்.  ஆனால் வேதாகமம் ஆழமான கேள்விகள் கேட்க வழி நடத்துகிறது.  எவ்வளவு அதிகமாய் ஆமான் என்னிலிருக்கிறான்?  நீ மற்றவர்களை அடக்கியாள விரும்பினாயா? மற்றவர்கள் என்னை நான் நினைத்தபடி உயர்வாக மதிக்கவில்லை என்றால் நான் அவர்களை அச்சுறுத்தினேனா?  என் பெருமை தாக்கப்படும்போது பழி வாங்க வேண்டும் என்று விரும்பினாயா?  இப்படிப்பட்ட நடத்தையைத் தேவனிடம் ஒப்புக்கொண்டு, அதற்குப் பதிலாக மன்னிப்பைக் கொடுக்கும்படி அவரிடம் கேள்.  அப்படியில்லையென்றால் தேவனின் நியாயத்தீர்ப்பு அந்தக் காரியத்தை முடிவு செய்யும். 

2.         பலங்களும் நிறைவேற்றுதலும்
பெரிய அதிகாரியாக சாதனை பெற்று, பெர்சியாவின் இராஜாவாகிய அகாஸ்வேருவிற்கு இரண்டாவது நிலையில் இருந்தான்.

3.         பலவீனங்களும் தவறுகளும்
a)    மற்றவர்களை அடக்கியாள வேண்டும் என்ற எண்ணமும், உயர்ந்த மரியாதை பெற வேண்டும் என்பதும் அவனது உயர்ந்த நோக்கம்.
b)    அவன் கர்வத்தாலும், சுய மதிப்பினாலும் கன்மூடித்தனமான நம்பிக்கை கொண்டிருந்தான்.
c)    மொர்தெகாயைக் கொல்ல அவனுக்காக தூக்குமரத்தை ஏற்படுத்தத் திட்டம் பண்ணினான்.
d)    சாம்ராஜ்யத்தின் மூலமாக தேவனின் ஜனங்களைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினான்.

4.         அவன் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்.
a)    பகை தண்டிக்கப்படவேண்டும்.
b)    தேவன், தீமையான திட்டங்களைத் திட்டமிடுபவர்களைத் திரும்ப அனுபவிக்க ஆச்சரியமான குறிப்பு வைத்திருக்கிறார்.
c)    பெருமையும், சுயமதிப்பும் தண்டிக்கப்பட வேண்டும்.
d)    திருப்தியில்லாத அதிகாரத்தில் தாகம், கெளரவம் சுய அழிவைக் கொண்டு வரும்.


5.         வேதாகமக் குறிப்புகள்
ஆமானின் கதை எஸ்தர் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

6.         விவாதத்திற்குரிய கேள்விகள்
            6.1       அவன் குடும்பப் பின்னணியை விளக்கு.
            6.2       அரசாங்கத்தில் அவன் பதவி என்ன?
            6.3       ஆமான் ஏன் மொர்தெகாயை வெறுத்தான்?
            6.4       எப்படி அவனும், அவன் பிள்ளைகளும் கொல்லப்பட்டார்கள்?
            6.5       அவன் வாழ்க்கையிலிருந்து ஒருவர் என்ன பாடங்கள் கற்றுக்கொள்ள முடியும்?

மொழிபெயர்ப்பு
திருமதி நாயகம் பட்டு
பரி.யாக்கோபின் ஆலயம்.

Saturday, August 11, 2012

70. ராகேல்


யாக்கோபின் மனைவி

முக்கிய வசனம்:
அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷங்கள் வேலை செய்தான். அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்ச நாளாகத் தோன்றினது.” (ஆதி 29: 20)

சுருக்கமான குறிப்பு
v  லாபானின் இளைய குமாரத்தி.
v  யாக்கோபின் விருப்பமான மனைவி, யோசேப்பு, பென்யமீனின் தாய்.
v  அவள் மிகுந்த அழகுள்ள பெண்ணாயிருந்தாள். ஆனால் கொள்கையற்ற நடவடிக்கைக்குத் தகுந்தவளாயிருந்தாள்.
v  அவள் பதான் அராமிலுள்ள ஆரானில் அவள் பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்தாள்.
v  அவள் யாக்கோபைத் திருமணம் செய்ய ஒத்துக்கொண்டாள்.
v  அவளுடைய மூத்த சகோதரி லேயாள்.
v  எருசலேமுக்குப்  பக்கத்திலுள்ள அவளது கல்லறை இப்பொழுது கூட மரியாதைக்குரியதாய் இருக்கிறது.

1.         அறிமுகவுரை  - அவள் கதை
            அவள் பெயர் `பெண் ஆடுஎன்று பொருள்படும். சரித்திரம் இங்கே தானாகவே திரும்பச் சொல்லப்படுகிறதாகக் காணப்படுகிறதுஒரே குடும்ப கதையிலுள்ள இரு முறை ஆரானிலுள்ள நகரக் கிணறு காட்டப்படுவது விசேஷமான நிகழ்வாகக் காணப்படுகிறதுஇங்கேதான் ரெபெக்காள் ஈசாக்குக்கு மனைவி தேடவந்த ஆபிரகாமின் ஊழியக்காரனான எலியேசரைச் சந்தித்தாள்.  40 வருடங்களுக்குப் பிறகு, ரெபெக்காளின் குமாரன் யாக்கோபு அதே கிணற்றிலிருந்து மாமன் மகள் ராகேலுக்கும், ஆடுகளுக்கும் உதவி செய்து ஆதரவைத் திரும்பச் செலுத்தினான். அவர்களுக்கு இடையில் உண்டான உறவுமுறை, காதல் நவீன காலத்து கண்டுபிடிப்பு என்பதை ஞாபகப்படுத்துவது மட்டுமல்லஆனால் பொறுமை, அன்பு இதைப் பற்றிய சில பாடங்களையும் கூடப் போதிக்கிறது.

            ராகேலுக்கான யாக்கோபின் அன்பு பொறுமை, அனுபவம் இரண்டும் கலந்ததுயாக்கோபு அவளுக்காக ஏழு வருஷங்கள் பொறுமையோடு காத்திருந்தான்அந்த இடைவேளையில் அவன் சுறுசுறுப்பாயிருந்தான். அவன் ராகேலுக்காக எடுத்த பொறுப்பு அவளுக்குள் பலமான விசுவாசத்தைப் பிரகாசிக்கச் செய்ததுஅதினால் யாக்கோபின் மேல் அவள் வைத்த விசுவாசம் கைநழுவிப்போய் அவள் சொந்த அழிவுக்கு இட்டுச் சென்றது. அவள் மலடியாயிருந்ததால் ஏமாற்றப்பட்டு, யாக்கோபின் பாசத்திற்காக, அவள் சகோதரியிடம் போட்டியிட நம்பிக்கையற்றவளாயிருந்தாள்அவள், அவன் முன்னதாகக் கொடுத்திருந்த உண்மையான அன்பை அவனிடமிருந்து பெற்றுக்கொள்வதில் வெற்றியடையப் பிரயாசப்பட்டாள்

ராகேல் சம்பாதிக்க முடியாததைச் சம்பாதிக்கப் பிரயாசப்படுவது, நாம் செய்யக்கூடிய மிகுந்த, பெரிதான தவறைப் படம் பிடித்துக் காட்டுகிறது.  அவளைப் போல நாமும் எப்படியாவது அன்பைச் சம்பாதிக்க - தேவனின் அன்பை நாமாகவே பிரயாசப்படக் காணப்படுகிறோம்ஆனால் அவர் வார்த்தையிலிருந்து வேறு விதமாய் நாம் இரண்டு பொய்யான கருத்துகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தோம்ஒன்று அவருடைய அன்பைப் பெற்றுக் கொள்ள நாம் பெற்றுக் கொள்ளத்தக்கதாக நல்லவர்களாய் இருக்கிறோம் என்று நினைப்பது, அல்லது நாம் அவருடைய அன்பைச் சம்பாதிக்க நமக்குத் தகுதி இல்லை. அது நம்முடையதல்ல என்று ஏற்றுக்கொண்டோம் என்று அறிந்து கொண்டோம்வேதாகமம் வேறு ஏதாவது குறிப்பை ஏற்படுத்தவில்லையென்றால் இதை அறைகூவல் விடும்தேவன் நம்மை நேசிக்கிறார்அவருடைய அன்புக்கு ஆரம்பமில்லைநம்பமுடியாத பொறுமையுள்ளது. நாம் செய்ய வேண்டியது ஒத்துழைப்புஎது இலவசமாகக் கிடைக்கிறதோ அதைச் சம்பாதிக்கப் பிரயாசப்படக் கூடாதுதேவன் அநேக வழிகளில் சொல்லியிருக்கிறார்நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை, அந்த அன்பை உனக்காகச் செய்த எல்லாவற்றிலும் நிரூபித்துக் காட்டியிருக்கிறேன்நான் ஏற்றுக்கொள்ளமுடியாத உனக்காக உன் பாவத்திற்காக என் குமாரன் இயேசுவை விலை மதிக்கமுடியாத தியாகம் செய்தேன்இப்பொழுது என் அன்பினால் வாழ், என்னோடு ஒத்துழை, முழு மனதோடு என்னை நேசி, நன்றி செலுத்துவதில் உன்னை ஒப்புக்கொடு. விலை கொடுப்பது அல்லவாழ்க்கையை முழுவதுமாக வாழ்நீ அன்பாக இருக்கிறாய் என்று சுயாதீனமாக அறிந்துகொள்.”

2.         பலங்களும் நிறைவேற்றுதலும்.
a)     அவள் தன் குடும்பத்திற்கு மிகுந்த விசுவாசம் காண்பித்தாள்.
b)     அவள் அநேக வருஷங்கள் மலடியாயிருந்த பிறகு யோசேப்புக்கும் பென்யமீனுக்கும் தாயாக இருந்தாள்.

3.         பலவீனங்களும் தவறுகளும்.
a)     அவள் பொறாமை, போட்டி அவள் சகோதரி லேயாளோடு உள்ள உறவு முறை தடைபட்டது.
b)     அவள், யாக்கோபின் அன்பு அவள் பிள்ளைகள் பெறத் தகுதியைச் சார்ந்திருக்கவில்லை என்பதை உணர்ந்து கொள்ளத் தவறிவிட்டாள்.

4.         அவள் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்.
a)     விசுவாசம் எது, உண்மை எது, எது சரியானது என்பவைகளால் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
b)     அன்பு ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். சம்பாதிக்கப் படக்கூடாது.

5.         வேதாகமக் குறிப்புகள்:
ராகேலின் கதை ஆதி: 29  - 35: 20ல் சொல்லப்பட்டிருக்கிறதுஅவள் ரூத் 4: 11ல் குறிப்பிடப்பட்டிருக்கிறாள்.

6.         விவாதத்திற்குரிய கேள்விகள்.
            6.1       அவள் குடும்பப் பின்னணியை விளக்கு.
            6.2       அவள் பிள்ளைகள் யார்?
6.3       அவள் எப்படி தன் குடும்பத்திற்குத் தன் விசுவாசத்தைக் காட்டினாள்?
            6.4       அவளுடைய பலவீனங்கள் யாவை?
            6.5       அவள் வாழ்க்கையிலிருந்து நாம் என்ன பாடங்கள் கற்றுக்கொள்ள முடியும்?


மொழிபெயர்ப்பு
திருமதி நாயகம் பட்டு
பரி.யாக்கோபின் ஆலயம்.

Monday, August 6, 2012

67 நெகேமியா



உடைக்கப்பட்ட அலங்கங்களையும், ஜனங்களின் வாழ்வையும் கட்டின இராஜப்பிரதிநிதி.


சுருக்கமான குறிப்புகள்
v  நெகேமியா பெர்சிய இராஜாவாகிய அர்தசஸ்டாவுக்குப் பானபாத்திரக்காரன்.
v  அவனுடைய ஜனங்கள், தேசம் இவைகளின் மேல் உள்ள அன்பு தேவையான சமயத்தில் உதவி செய்ய ஏவினது.
v  கி.மு. 445ல். இராஜப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு நாசமான அலங்கத்தைத் திரும்பக் கட்ட உதவி செய்தான்.
v  எஸ்றாவின் வருகைக்கு ஜனங்களுக்கு வழி வகுத்தான்.

1.    அறிமுகவுரை
            நாம் பெரிய வெற்றியை வாக்குத்தம்பண்ணின மிக உத்தமமான புத்தகங்கள் விற்கப்படும் காலத்தில் வாழ்கிறோம்நெகேமியாவின் கதை சிறந்த விற்பனையாயிருக்கிறதுஅவன் கர்த்தருடைய வார்த்தையின் மனிதன் மட்டும் அல்லஆனால் செய்கையின் மனிதனாகவும் இருந்தான். ஜெப மனிதனாக இருந்ததால் கர்த்தரோடு பயணம் செய்தபோது அவனுடைய உண்மையான நினைவுகளையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டான்அவன் வாழ்க்கையின் மூலம், கர்த்தர் எருசலேமின் அலங்கத்தைத் திரும்பக் கட்டினது மாத்திரமல்ல, அவருடைய வழிகளை ஜனங்களுக்குப் போதித்தார். ( விவரம், ஒவ்வெரு நாளும் இயேசுவோடு, வாசிக்கஜூலைஆகஸ்டு 2007 வெளியீடு.) 

1.     நெகேமியா எந்தக் காலத்திலும் நமது வாழ்க்கைக்காக நமக்கு ஆவியின் கொள்கைகளைக் கொடுத்தான்அவன் இராஜாவுக்கு ஒரு பானபாத்திரக்காரனாக பெரிய முக்கியமான பொறுப்பில் இருந்தான். ஏனென்றால் அவன்தான் திராட்சரசம் விஷம் கலக்காமல் இருக்கவும், எப்போதும் இராஜாவின் சமூகத்தில் இருக்கவும் தன்னை ஒப்புக்கொடுத்தான். அவன் ஒரு பாதுகாவல் அதிகாரி.

2.    நெகேமியாவுக்கு ஆவியின் வீழ்ச்சியைப்பற்றியும், எருசலேமின் பொதுவான அக்கறையின்மை பற்றியும் அறிவிக்கப்பட்டது. ( 1: 1-2)  கர்த்தரின் நகரம் பரிதாபகரமான நிலையில் உள்ளது. அவன் அவரின் பரிசுத்த நகரத்திற்காக உள்ள கர்த்தரின் நோக்கத்தை நிறைவேற்ற விரும்பினான்நெகேமியா முதலாவதாகக் கர்த்தரை வைத்தான்தனது பதவியை அல்லஅவன் உட்கார்ந்து அழுதான்அவன் ஒப்புக்கொண்டான். (1: 4)

3.    எருசலேமின் நாசமான நிலையினால் அவன் முதலாவது அவன் உணர்வினால் அழுதான்பிறகு தான் அதின் மீட்புப் பணியைச் செயல்படுத்த ஆயத்தமானான்பாதுகாப்பு, பெருமை, நன்மை இவைகளுக்கு அலங்கங்கள் மிகவும் முக்கியமானது.

4.    அவன் உபவாசமிருந்து ஜெபம் பண்ணினான். அவன் கர்த்தரின் வார்த்தையினால் மட்டும் வாழவில்லைஆனால் கர்த்தரின் வழிகாட்டுதலைச் சார்ந்திருந்தான்மரியாதையான நடத்தை, கீழ்ப்படிதல் அவனுடையது. (1: 4)  அவன் ஜெபத்தில் உறுதியாயிருந்தான். (1: 8 -11)  கர்த்தர் நம்பிக்கையான, முக்கியமான மனிதனை உபயோகித்தார்.  வித்தியாசத்தைக் காட்டினது ஜெபத்தில் உறுதி. ஆனாலும் நெகேமியா காத்திருக்கும் சோதனையைப் பின்பற்றினான்அவன்  அழுதான், கவலைப்பட்டான், ஜெபித்தான். தொடக்கம் நெகேமியாவின் கையில் இல்லை. அது கர்த்தரின் கையில் இருக்கிறது.  கர்த்தரின் நேரம் எப்போதும் பூரணமானதுசரியான நேரத்தில் பகுத்துணர்ந்துகொள்

5.     யோசேப்பில் இருந்தபடி, கர்த்தரின் கிருபையின் கரம் அவன் மேல் இருந்ததால், இராஜா நெகேமியாவின் வேண்டுதல்களை அனுமதித்தார். (2: 8)  நெகேமியா எருசலேமுக்குப் பிரயாணம் செய்ய ஏற்பாடுபண்ணி, இராஜாவால் அனுப்பப்படுகிறோம் என்று அறிந்து மிகவும் இருதயத்தின் நிறைவோடு இருந்தான்பாதுகாப்பான பிரயாணம் உத்தரவாதம் அளிக்கப்பட்டதுஅவனுடைய எல்லா தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டதுஅனுப்பப்படுதல், பாதுகாப்பு, பூர்த்தி செய்தல் இந்த மூன்று காரியங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு தேவைக்காகக் கொடுக்கப்பட்டது அடையாளமாயிருக்கிறதுஎன்றாலும் நெகேமியா, சமாரியாவின் தேசாதிபதி சன்பல்லாத், தொபியா என்னும் ஊழியக்காரனாலும் அநேக எதிர்ப்புகளை எதிர்கொண்டான்கிறிஸ்தவ சரித்திரத்தைப் படிப்பதிலிருந்து எப்போதாவது யாராவது ஒருவர் கட்ட ஆரம்பிக்கும்போது எதிர்ப்புகள் ஏற்படும் என்பதைக் கற்றுக்கொள்ளலாம்.

6.     மற்றவர்கள் தூங்கும்போது நெகேமியா வேலை செய்தான்மேலும், எருசலேமுக்காக தேவன் தன் மனதிலே வைத்த திட்டத்தை அவன் ஒருவருக்கும் சொல்லவில்லை. (2: 12)  காரியங்களை முழுவதுமாக தகுந்த தைரியமாகக் கவனித்துக்கொள்ளவும், என்ன செய்ய வேண்டும் என்பதைப் பகுத்தறியவும், பிறகு வேலை செய்ய எழும்பவும், தேவனின் உயர்ந்த இயக்கம் நெகேமியாவைப் போன்ற ஒருவரிடம் ஆரம்பமானது

7.     நெகேமியா அலங்கத்தைக் கட்ட ஜனங்களை அழைத்தான்நாம்இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள்.” (2 : 17)  நமது சொந்த வாழ்க்கையிலும் சில அலங்கங்கள் இருக்கலாம்அவைகள் திரும்பக் கட்டப்பட தேவை உள்ளதுகாத்துக்கொண்டிராமல் திரும்பக்கட்ட ஆரம்பிப்பது நல்லதுஇன்னும் அவன் அநேக சவால்களின் மத்தியிலும் எங்கள் காரியத்தைக் கைகூடி வரப்பண்ணுவோமே தவிர விட்டு விலகமாட்டோம் என்று சொன்னான். (2 : 20)  சன்பல்லாத், தொபியா, அரபியனான கேஷேம் இவர்கள் அவனை எதிர்த்தார்கள்நெகேமியாவைப் போல், சாத்தானையும் அவன் வேலைகளையும் எதிர்த்துப் போராடக்கூடிய ஆண்களும், பெண்களும் நமக்குத் தேவைநெகேமியாவின் நம்பிக்கை அர்தசஷ்டா இராஜாமேல் இல்லைதேவன் மேல் இருந்தது

8.    தேவன் (இம்மானுவேல்) நம்மோடிருந்தாலும், முதலாவது ஒழுங்கான தலைமைத்துவம் இணைந்திருப்பதுதான் ஒற்றுமை என்று நிர்வாக நிபுணர்கள் கூறுகிறார்கள். (3 : 1 – 2)  இது ஜனங்கள் ஒன்று சேர்ந்து, எவர்கள் செயல்பாடுகளும் ஒன்றிணைந்து இருந்தால், வெற்றிகரமாக முழுமை பெற ஒத்துழைக்க சம்பந்தப்பட்டிருக்கும்அங்கே இணைந்து செயல்படவில்லையென்றால், அங்கே ஒன்றுபடுதல் இராது, அல்லது தனிப்பட்ட விருத்தி, வளர்ச்சி இராதுஅவர் வித்தியாசமான வரம் பெற்ற பலவிதமான ஜனங்களைத் திரட்ட முடியும். (3 : 3 – 4)  இந்த வரங்களைப் பயன்படுத்தி குறைவான சோர்வோடு நிறைவான திறமைகளை அடைய முடியும்இங்கே முக்கியமானது குழுவாக ஒத்துழைப்பது. (3 : 7)  நாம் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்களாயிருந்தால், பிறகு அவருடைய இராஜ்யத்தைக் கட்டுவதற்கு எல்லா தனிப்பட்ட எண்ணங்களும், அக்கறைகளும் இரண்டாவது நிலைக்குப் போய்விடும்

9.     நெகேமியா எல்லா நிலைமையிலும் வாழும் ஆண்கள், பெண்கள் ஒன்று சேர்ந்து எருசலேமிலுள்ள அலங்கங்களைக் கட்ட ஒத்துழைக்க திறமைசாலியாயிருந்தான்.  (3 : 8 – 12)  அரசியல் அதிகாரிகள் மேற்பார்வையாளர்களாக வேலை செய்ய வற்புறுத்தலாம். ஆனால் அதற்குப் பதிலாக மற்றவர்களோடு சேர்ந்து தோளுக்குத் தோளாக இணைந்து வேலை செய்தார்கள்இது தலைமைத்துவத்துக்கு உதாரணம்.

10.    நெகேமியா எல்லாரையும் மெச்சி, புகழ்ந்து சிபாரிசு செய்தான். (3 : 13 – 14)  நெகேமியாவின் கண்களில் ஒவ்வொருவரும் திறமையற்றவர்களாகவும், சுயநலமுள்ளவர்களாகவும் இல்லாமல் ஒரே மதிப்புள்ளவர்களாகக் காணப்பட்டார்கள்நெகேமியாவுக்கு அவன் எல்லா வேலைக்காரர்களும் பெயரால் தெரியும். (3 : 14)  மார்க் டுவெய்ன், அவர் மாதம் முழுவதும் புகழுரையினால் வாழ முடியும் என்று கருத்துரைத்தார்பொதுவாக நாம் புகழ்வதைவிட அதிகமாக குறைகூறத்தான் ஆயத்தமாயிருக்கிறோம் என்பது எவ்வளவு மனவருத்தம்.

11.    நெகேமியாவின் அடுத்த பொறுப்பு வீடு. – அதற்காக அவர்கள் நகரத்தையும் அலங்கங்களையும் கட்டினதுபோல் குடும்ப நெருக்கத்தையும், சொந்தத்தையும் ஆழமான கருத்துள்ளவர்களாயிருந்தார்கள் நாம் நமது வீடுகளை ஜெபம், நேர்மை, நம்பிக்கை, திறந்த மனம் இன்னும் பலவகைகளினால் உள்ள அலங்கங்களோடு நமது வீடுகள் கட்டப்படுவது தேவை. ( 3 : 28)

12.    முக்கியமான ஒழுங்கு முறை தொடர்பு கொள்ளுதல்இது அதிகாரத்திலுள்ள பிரதிநிதிக்குழு உத்தரவு சம்பந்தப்பட்டதுஆனதால் அந்த முடிவு தலைமையிடம் உண்மையாக ஆலோசிக்க வேண்டிய தேவையில்லை. ( 3 : 32) ஒரு கடினமான வேலை துண்டு துண்டாய்க் கையாளப்பட்டால் முக்கிய நிர்வாகமாக மாறுபடும்சுருக்கமாக அந்த நான்கு கொள்கைகள் இணைதல், கூட்டுறவு, சிபாரிசு செய்தல், தொடர்பு கொள்ளுதல்.

13.    நெகேமியா ஒரு ஜெபம் செய்யும் மனிதன். ( 4: 5)  அவன் குறை கூறலை எதிர்கொள்ளும்போது ஜெபத்தில் கர்த்தரிடம் தன் இருதயத்தின் கவலையை ஊற்றினான்அவனை எதிர்த்தவர்களுக்கு விரோதமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதற்குப் பதிலாக தவறைத் திருத்துவதற்குக் கர்த்தரை வரவழைத்தான். ஆம். மற்றவர்களுக்காக ஜெபம் செய்வதற்கு ஒருவர் ஆவியில் நிறைந்தவராக இருக்கவேண்டும்.

14.    ஜனங்கள் இருதயத்தின் நிறைவினால் வேலை செய்ய ஆவலாயிருந்தார்கள். ( 4 : 6)  நெகேமியா கர்த்தரிடம் ஜெபம்பண்ணியது மட்டுமல்ல, பயத்தை எதிர்கொள்ள இரவும், பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தான். ( 4 : 9)  வேலையோடு நம்பிக்கை இணைய வேண்டும்பயத்தை நம்பிக்கையினால் மட்டும்தான் எதிர்கொள்ள முடியும். ஒருவர் மேல் உள்ள நம்பிக்கை அல்லஆனால் கர்த்தரின் மேல் உள்ள நம்பிக்கைஅவன் யுத்தம் செய்ய ஆயுதம் தரித்தான்அவனுடைய மூன்று கூர்மையான எதிர்ப்பு, ஜெபம், விழிப்புள்ள ஜாமங்காக்கிரவர்கள், தொடர்ந்து தேவனைப் பார்க்கும் பொறுப்பு. கட்டடம் கட்ட பொருட்களைக் கொண்டு வந்தவர்கள் ஒரு கையினாலே வேலை செய்து, மறுகையினாலே ஆயுதம் பிடித்திருந்தார்கள். ( 4: 17)  நாம் யுத்தம் செய்வது தேவையானதுஆனால் கட்டுவதற்குத் தைரியம் வேண்டும்

15.    நெகேமியா ஜனங்களோடு சேர்ந்து வேலை செய்தான். ( 4: 21) அவன் ஜனங்களில் ஒருவனாக இருந்தான்டெரக் கிட்னர் நெகேமியாவைப் பற்றி அவர் விளக்கத்தில் கூறியிருப்பது, அவன் ஒரு தற்பெருமைக்காரனல்லஆனால் அவன் பங்களிப்பு மிகுந்த பயனுடையதாக அமைய அவனுடைய விசேஷமான திறமைகளை உபயோகித்தான்கஷ்டமான நிலைமைகள் எழும்பும்போது குறிக்கோளோடும், நம்பிக்கையோடும் எதிர்கொண்டான்அவன் அவனுடைய ஜனங்களின் தேவைகளுக்காக உணர்ச்சி உள்ளவனாயிருந்தான்நாம் சிதைந்த பாதையில் இருக்கக்கூடாதுசிதைந்த பாதைக்கும், பிரேதக் குழிக்கும் இடையில் உள்ள ஒரே வித்தியாசம் அதன் ஆழம்தான்.

16.    நெகேமியா எப்படி பிரச்சனையை நிவிர்த்தி செய்தான்? (5 : 1)  முதலாவது ஒப்புக்கொண்டான். (5: 6)  பிறகு அவன் ஆலோசனைபண்ணி சந்தர்ப்பத்தை மதிப்பிட்டான். (5 : 7)  பிறகு அவன் சரியான தந்திரத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. நாம் சந்தர்ப்பத்திற்கேற்றபடி சிறந்த வழியைக் கடைப்பிடிக்க கவனமாகவும், ஜெபத்தோடும் சிந்திக்க வேண்டும். நாம் எது சரி, எப்படி செய்வது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்நாம் நமது தேவனுக்குப் பயந்து நடக்க வேண்டும்.( 5: 9)  நெகேமியா தன் சொந்த உதாரணத்தின் மூலம் அவனுடைய முன்மாதிரியான வாழ்க்கையை ஜனங்கள் ஏற்றுக்கொள்ள அவர்களைச் சம்மதிக்க வைத்தான். ( 5: 13)  அதிபதிகள் ஜனங்களிடம் அவர்களுடைய நிலங்களையும், சொத்துக்களையும் திரும்பக் கொடுத்துவிடவும், அவர்களிடமிருந்து இனிமேல் உயர்ந்த வட்டியை எதிர்பார்க்க மாட்டோம் என்று வாக்குத்தத்தம் பண்ணினார்கள்அவனுடைய சொந்த உதாரணம் மிகுந்த உதவியாய் இருந்தது. ( 5: 15)  ஒருவருக்குத் தேவை தேவபயம்ஒருவர் வெற்றி பெற வேண்டுமானால் தவறுக்கு `இல்லைஎன்றும் சரியானவற்றிற்கு `ஆம்என்றும் சொல்லத் தேவை.  மற்றொரு முக்கியமான கருத்து தனிப்பட்ட சிந்தனையுள்ள மனம் தோன்றியிருக்கிறது. (6 : 3) அவன் `நான் பெரிய வேலையைச் செய்கிறேன். நான் ஏன் அதை விட்டு உங்களிடம் வந்து, உங்களைச்சந்திக்க வேண்டும்என்று சொன்னான். (6:3)

17     நெகேமியா எப்படி அவனுடைய போராட்டத்தை சமாளித்தான்? (6:9)  அவன் ஜெபம் செய்தான். நாம் தேவனின் மேல் நம்பிக்கை கொள்ளத் தேவையாய் இருக்கிறது. நெகேமியா செமாயாவைச் சந்தித்த போது ஜெபத்தில் கர்த்தரிடம் திரும்பினான்.  52 நாட்களுக்குள்ளே அலங்கங்கள் கட்டி முடிக்கப்பட்டது. (6 : 14)  அவன் பெரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேர்ந்தாலும் அவன் வெற்றி பெற்றான்.  ஒரு மனிதன் அவன் நெருக்கடியில் இருக்கும்போது அவனுடைய அளவான குணம் வெளியரங்கமாகும்.

18.    முதல் ஆறு அத்தியாயங்கள் எருசலேமின் அலங்கங்கள் கட்டப்படுவதைப்பற்றி சம்பந்தப்பட்டது. அடுத்த ஏழு அத்தியாயங்கள் ஜனங்களின் மறு ஆலோசனையின் மேல் கருத்து சொல்லப்பட்டிருக்கிறதுஅவன் முக்கியமான பொறுப்புகளை யாரிடம் ஒப்படைக்க முடியுமோ அப்படிப்பட்ட தகுதியான மனிதர்களைத் தேர்ந்தெடுத்தான். ( 7 : 1 – 3)  அத்தியாயங்கள் 8லிருந்து 13வரை சமாதானம் அளிக்கும் வேலையாயிருந்ததுஜனங்களில் போதகர்களின் வம்சாவளியின் புனிதத்தைத் தீர்மானிக்க முதலாவது ஜனக்கணக்கு எடுக்கப்பட்டது

19.    கற்பித்தலிலும் போதிப்பதிலும் புனிதத்தன்மை இருக்கவேண்டும். ( 7 : 64) 

20.   அங்கே நம்பிக்கை இல்லையென்றால் தியாகம் தேவை. ( 7 : 70 ) அலங்கம் திரும்பக் கட்டப்பட்டு குடும்பங்களும் பதிவு செய்யப்பட்ட பிறகு நெகேமியா கொஞ்ச காலத்திற்குப் பின்னால் மறைந்திருந்தான். எஸ்றா, லேவியர்கள் இவர்களால் மீதி நாளில் உபவாசம்பண்ணவும், ஒன்றும் தயாரிக்காதவர்களுக்கு அவர்களுடைய உணவைப் பங்கிட்டுக் கொடுக்கவும், நேரத்தைச் செலவழிக்கவும் உற்சாகப்படுத்தப்பட்டார்கள். ( 8 : 10) பிறகு நெகேமியா தேவனின் மகிழ்ச்சி அவர்களுடைய பலம் என்று ஜனங்களுக்கு ஞாபகப்படுத்தினான்.

21.    நெகேமியா அவன் பொறுப்பை நிரூபித்தான். (10 : 1) நெகேமியாவும் எஸ்றாவும் தேவன் உள்ள கூடாரம் (உடன்படிக்கையின் படி) கூடாரத்தினுள் நுழைவதின் மூலம் ஆவியின் லாபத்தைப் பாதுகாக்கலாம் என்று தீர்மானித்தார்கள். நெகேமியா மற்றவர்கள் வாழ்க்கை குற்றத்திற்காக வருந்துதல் பொறுப்பைப் புதுப்பிக்க வழி வகுத்தது. (உதா: நெகேமியா 10:8)  கீழ்ப்படியாமை ஜனங்களின் மேல் தண்டனையைக் கொண்டுவந்தது. நெகேமியா நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளைக் கடைப்பிடித்தான். ( 10 : 29)  நெகேமியாவின் புஸ்தகம் ஆராதனையின் முக்கியத்துவத்தைக் கோடிட்டு காட்டியிருக்கிறது. ( 10 : 39)

22.   நெகேமியா நகரத்தாரின் புதுப்பித்தலை அறிமுகப்படுத்தினான். ( 11 : 1 – 19)  நெகேமியா எந்தக் குடும்பத்தார் புது குடியிருப்பில் வசிக்கமுடியும் என்பதைக் கணக்கெடுத்தான்எருசலேம் நகரம் வேதாகமக் கொள்கைப்படி ஸ்தாபிக்கப்பட்டதுநெகேமியா போதக, லேவிய முறைப்படி உள்ள குடும்பங்களின் சரித்திரத்தை விளக்கப்படுத்தினான்ஜனங்களும், தலைவர்களும் மறக்கப்படவில்லை. ( 12 : 1)  நெகேமியா ஸ்தோத்திர ஆராதனைக்கு ஒழுங்குபண்ணினான். ( 12 : 43) உற்சாகமும், பக்தியும் ஆராதனையின் பங்காயிருந்தது.

23.   நெகேமியா பொதுவாக எருசலேமில் 12 வருடங்கள் (கி.மு. 457 – 445) தேசாதிபதியாக இருந்தான்பிறகு பெர்சியா ராஜசபைக்குத் திரும்பினான். அவன் திரும்பி வரும்பொழுது ஆலயம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. ( 13 : 14)  வழி விலகிப்போன உயர்ந்த போதகர் எலியாசிப் ஒரு காரணமாயிருந்தார். நெகேமியா பிரபுக்களிடம் சவால் விட்டு நிலைமையைச் சீர்திருத்தம் செய்ய முயற்சி செய்தான். ( 13 : 21) நமது காலத்தில் நல் நடத்தையின் வீழ்ச்சியைப்பற்றி எப்படி அறிமுகப்படுத்துவோம்? அவனுடைய கடைசி சீர்திருத்தம் கலப்பு திருமணங்கள் சம்பந்தப்பட்டது. ( 13 : 31)  ஒரு கிறிஸ்தவர் ஒரு கிறிஸ்தவரல்லாதவரைத் திருமணம் செய்வதை ஒப்பிட்டுப் பார்.

24.   அவன் ஒரு ஜெப மனிதன். ( நெகே. 2 : 4)

2.    அவன் பலமும் நிறைவேற்றுதலும்.
a.   அவன் குணம், உறுதி, ஜெபம் கொண்ட மனிதனாயிருந்தான்.
b.   அவன் புத்திகூர்மையுள்ள திட்டமிடுபவர், ஏற்பாட்டாளர், இயக்குநர்.
c.   அவன் தலைமைத்துவத்தின் கீழ் எருசலேமைச் சுற்றியுள்ள அலங்கம் 52 நாட்களில் திரும்பக் கட்டி முடிக்கப்பட்டது.
d.   அரசியல் தலைவராக அவன் தேசத்தை மத சம்பந்தமான சீர்திருத்தத்திலும், ஆவியின் எழுச்சியிலும் வழிநடத்தினான்.
e.   அவன் எதிர்ப்பு சமயங்களிலும் அமைதியாக இருந்தான்.
f.    அவர்கள் பாவம் செய்யும்போது, அவன் ஜனங்களிடம் நேரிடையாக உண்மையாயிருக்க தகுதி பெற்றவனாயிருந்தான்.


3.    அவன் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்.
a.   எந்தத் துணிகரமான செயலுக்கும் முதல் படி ஜெபம்பண்ணுவது.
b.   தேவனின் வழியைப் பின்பற்றும் ஜனங்கள் செய்ய முடியாத கடமைகளையும் நிறைவேற்ற முடியும்.
c.   தேவனுக்காக உண்மையான சேவை செய்வதில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று அவரோடு பேசுவது, அடுத்தது அவரோடு நடப்பது.


4.    வேதாகமக் குறிப்புகள்
நெகேமியாவின் கதை நெகேமியா புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.


5.    விவாதத்திற்குரிய கேள்விகள்.
a.  எருசலேமின் பயங்கரமான தேவையைப் பார்க்கும்போது அவன் எப்படி எதிர்கொண்டான்?
b.  இடிந்துபோன அலங்கங்களை அவன் எப்படி திரும்பக் கட்டினான்?
c.   யார் அவனை எருசலேமின் தேசாதிபதியாக நியமித்தார்?
d.  எருசலேமின் அலங்கங்களைக் கட்டும்போது அவன் எதிர்கொண்ட எதிர்ப்புகளை விளக்கப்படுத்து.
e.  நெகேமியாவிடமிருந்து நாம் கற்கும் பாடம் என்ன?


மொழிபெயர்ப்பு:
திருமதி நாயகம் பட்டு,
பரி.யாக்கோபின் ஆலயம்.