Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Wednesday, May 4, 2011

சீஷர்கள் - பகுதி 2 (DISCIPLES - Part 2)


  1. http://www.4shared.com/document/avjwW5tt/Disciples_Part_2.html
  2. http://www.4shared.com/file/fjcs97I2/Disciples_Part_2.html

  1. 1.   இயேசு கிறிஸ்துவைப் போல் ஜீவிக்க, அவரோடு நடவுங்கள்.
  2. 2.   நீங்கள் அன்பில் நடவுங்கள். இயேசு கிறிஸ்து நம்மை நேசிக்கிறார். உங்கள் நடத்தை இயேசு கிறிஸ்துவின் அன்பிலும் ஞானத்திலும் ஊண்றப்பட்டதாய் இருக்க வேண்டும்.
  3. 3.   கிறிஸ்தவத்தை ஒரு மதக் கோட்பாடாக ஏற்றுக் கொள்ளாமல், இயேசு கிறிஸ்துவின் சித்தமாய் ஏற்றுக் கொள்ளுங்கள்.
  4. 4.   உங்கள் வாக்கிலும் செய்கையிலும் இயேசு கிறிஸ்துவைக் காண முடிகிறதா?
  5. 5.   சீஷர்கள் மன்னிக்கப் பட்டவர்கள். இலவசமாய்ப் பெற்ற அந்த மன்னிப்பை இயேசு கிறிஸ்துவுக்குள் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
  6. 6.   சீஷர்கள் விசேஷித்த விதமாய் தனித்துப் பிரித்தெடுக்கப் பட்டவர்கள். அவர்கள் பரிசுத்த கடவுளின் பனிக்கென்று தனியே பிரித்தெடுக்கப்பட்டவர்கள்.
  7. 7.   சீஷர்கள் மறுபடியும் மறுபடியும் பரிசுத்தப்படுத்தப் பட்டு கடவுளின் பணினைச் செய்ய வேண்டும்.
  8. 8.   சீஷர்கள் சுவிசேஷத்தை உலகெங்கும் போய் அறிவிக்கக் கடனாளிகளாய் இருக்கிறார்கள்.
  9. 9.   சீஷர்களும் அப்போஸ்தலர்களும் தங்களின் எஜமானிடமிருந்து கேட்ட, கண்ட விஷயங்களை அறிவிக்க வேண்டும்.
  10. 10.  பரி.பவுலைப் பொறுத்த வரை, சுவிஷேம் என்பது, கடவுளின் கிருபையை ருசித்தரியாத ஜனங்களுக்குக், கடவுளின் திருக்குமாரனாகிய இயேசு நம்மிடத்தில் அனுப்பப்பட்டு பாவத்திலிருந்து இரட்சிக்கிறார், என்பதை அறிவிக்கும் பணியாகும்.
  11. 11.  சீஷர்கள் ஊழியக்கார்ர்கள்.
  12. 12.  எமி கார்மைக்கால் அம்மையாருக்கு சுவிசேஷகனின் வாழ்க்கை, மரிப்பதற்காகவே மாற்றப்பட்டுள்ளது.
  13. 13.  சீஷர்கள் இருவராய் நடனமாடுவதுபோல், கடவுளின் வல்லமையை நமக்குள் செலுத்தி, விசுவாசத்தினால் கிரியை செய்வதாகும்.
  14. 14.  நேசிக்கிறவர்களாய் மாற வேண்டும் என்றால், நேசமான காரியங்களைச் செய்வதே.

  1. 1.   ஒரு சீஷன் (இளைஞன்) வேத வசனத்தைக் கேட்கிறவனாய் மட்டுமல்லாமல், கீழ்ப்படிந்து நடக்கிறவனாயும் இருத்தல் வேண்டும்.
  2. 2.   மலேசிய இளைஞனும் சீஷனுமாகிய நீங்கள் இத்தேசத்திலே உப்பாகவும் ஒளியாகவும் வாழ வேண்டும். இத்தேசத்திற்குக் கடவுளின் சித்தம் என்ன என்பதை அறிந்துணர்ந்து சரியான பாதையில் நடக்க வேண்டும்.
  3. 3.   சீஷர்கள் உண்மையை அன்பினால் எடுத்துரைக்க வேண்டும். வன்முறைகள் அடங்கிய கலவரங்களில் ஈடுபடக் கூடாது. ஒரு சீஷனின் தலையாய கடமை திக்கற்றோர்களுக்கும் நம்பிக்கையிழந்தவர்களுக்கும் ஆதரவும் அரவணைப்பும் அளித்திட வேண்டும். அவர்களைக் கண்டும் காணாமல் சென்று விடக் கூடாது. அவர்களை ஏளனம் செய்து விரட்டியடிக்கக் கூடாது.
  4. 4.   ஒரு சீஷன் மிகவும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்து தன்னுடைய சுவிசேஷ பிரபல்யத்தை மேற்கொள்ள வேண்டும்.
  5. 5.   ஒரு சீஷன் தீர்க்கதரிசியாக செயல்பட வேண்டும். தன் தேசத்தையும் மக்களையும் வரப்போகும் பேராபத்துகளிலிருந்து காப்பாற்ற அவர்களுக்கு முன் எச்சரிப்பு அறிவிக்க வேண்டும்.
  6. 6.   சீஷன் தன் சிருஷ்டிகரை நேசிக்க வேண்டும். கடவுளின் சித்தத்தின்படி நேசிக்க வேண்டும்.
  7. 7.   சீஷன் கேட்கிறதற்குத் தீவிரமாயும் பேசுவதற்கும் கோபிப்பதற்கும் தாமதமாயும் இருக்க வேண்டும்.
  8. 8.   ஒரு மெய்யான சீஷன் இத்தேசத்தையும் பேரரசரையும் மிகவு நேசிக்கவும், இத்தேசத்தின் சமாதானத்தைப் பேணிக் காக்கவும் பாடுபட வேண்டும்.
  9. 9.   சீஷன் போல் சகிக்கும் தன்மை உடையவனாய் மாறிட வேண்டும்.
  10. 10.  சீஷன் பல முறை மேற்கூறப்பட்டுள்ள காரியங்களைக் கடைபிடிக்க வேண்டும். 

  1. 1.   வேத வசனத்தைச் சீஷன் தன் இருதயத்தில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். (சங்.19.11)
  2. 2.   வேத வசனத்தை சீஷன் மனப்பாடம் செய்ய வேண்டும். பின்பு அது வளர்ந்து பெரிய மரமாகி கனி கொடுக்க ஆரம்பிக்கும்.
  3. 3.   சீஷர்கள் மற்றவர்களை உயிரோடே கிறிஸ்துவுக்காக பிடிக்கிறவர்களாக வேண்டும்.
  4. 4.   சீஷர்கள் எல்லைகளைக் கடந்து சென்று கிறிஸ்துவைப் பிரசங்கிக்க வேண்டும். (லூக்கா 24:4-48)
  5. 5.   சீஷர்கள் தங்கள் உடமைகளையும் (குடும்பங்களையும் விட்டு விட்டு) கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும் (மத்தேயு 1:29-39)
  6. 6.   சீஷர்கள் சுவிசேஷம் தனக்கு மட்டும் சொந்தம் என்று ஒரு போதும் நினைக்க்க் கூடாது. மாறாக, அதை இருள் நிறைந்த உலகுக்கு வெளிச்சம் கொடுக்க அறிவிக்க வேண்டும் (மத்தேயு 4:21-25).
  7. 7.   கடவுள் நம்மை நேசிக்கிறார் என்றும் அவர் நம்மை நினைவில் வைத்துள்ளார் என்றும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தம் சீஷர்களைப் பேர் சொல்லி அழைத்துள்ளார். (யோவான் 3:16, சங்.119:17-18, யோவான் 10:3).
  8. 8.   சீஷர்களை மற்ற சீஷர்களோடு இளணக்கிறார்; நமது சிந்தனை பாணியை மாற்றுகிறார்; நமது நோக்கை மாற்றுகிறார்; மன நிலையை மாற்றுகிறார்; அவரைப் போலவே மறு ரூபமடையச் செய்கிறார்; நாம் கிறிஸ்துவில் நிலைத்திருந்தால், அவர் அன்பில் நிலைத்திருப்போம், என்பதும் நினைவில் இருக்கட்டும். அவரின் அன்பு நம்மேல் படர்ந்து ஊடுருவ வேண்டும் என்று ஜெபத்தில் கேட்டுக் கொள்.
  9. 9.   சீஷர்கள், கடவுள் என்ன நினைப்பார் என்ற எண்ணத்தில் செயல்படுவார்கள். மற்றவர்கள் என்னை என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தில் செயல்பட மாட்டார்கள்.
  10. 10.  ஆராதனை ஒரு சீஷனின் மையப்பகுதி என்பது நினைவிலிருக்கட்டும. கடவுள் நமக்கு என்னென்ன நன்மைகள் செய்தார் என்பதை அவர்கள் நினைவு கூற வண்டும். (நெகேமியா 9.5)


Written by:
Bishop Batumalai

Translated by:
Robinson Victor


Type-setting:
Johnson Victor

04.05.2011 @1.40 am

Monday, May 2, 2011

ஒரு சீஷன் (A DISCIPLE)


[url=http://www.4shared.com/document/JPmOMqkb/A_DESCIPLE.html][/url]
[url]http://www.4shared.com/document/JPmOMqkb/A_DESCIPLE.html[/url]


1.   இயேசுவை மாத்திரம் பார்த்து ஜீவிக்கும் ஜீவியம்
2.   “என்னைப் பின்பற்றுங்கள்” என்று பரி.பவுல் கூறுகிறார்.
3.   இயேசுவின் அன்பை, ஒற்றுமையை, ஏற்றுக் கொள்ளுதல், தியாகத்தைப் பின் பற்றுவோமா?
4.   மற்றவர்களிடம் கூறுங்கள்,“என்னைப் பின்பற்றுங்கள், நான் இயேசுவைப் பின்பற்றுகிறேன்.”
5.   தேவனாகிய கர்த்தர் ஆபிராகாமிடம் கூறினார், “என்னைப் பின்பற்றி வா, நான் உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்”. (ஆதி. 12:2-3).
6.   அழைப்பைப் பெற்ற ஒவ்வொறு சீஷனும், தன் தன் சிலுவையை அனுதினமும் சுமந்து இயேசுவைப் பின்பற்றிச் செல்ல வேண்டும். நிச்சயமாகத் துன்பமும், பாடுகளும் துயரமும் தவிர்க்க முடியாது. தெய்வீகப் பார்வையில் இக்கருத்து மிகவும் அர்த்தமுள்ளது.
7.   சீஷர்களும் அப்போஸ்தலர்களும் அரிய பெரிய காரியங்களைச் செய்தனர். (அப். 5:12)
8.   சீஷன் ஒரு சாட்சியாக (இரத்த சாட்சியாக) அழைக்கப்பட்டுள்ளான். ஆதித் திருச்சபைகளில், இயேசுவுக்காகப் பலர் இரத்த சாட்சிகளாக மரித்த்துண்டு. கடவுளின் பிள்ளைகள் நிச்சயமாக பாடுகளும் சட்ட ரீதியான நடவடிக்கைளையும அனுபவிக்க நேரிடும் (வெளி.12:17). ஆனாலும் கர்த்தர் ஒவ்வொறு சீஷனையும் ஒருபோதும் கைவிட மாட்டார்.
9.   இயேசு சொன்னார், “நான் நிச்சயமாய் உலகத்தை ஜெயித்தேன்” (யோவான் 16:50).
10.  சீஷன் இரட்சகராகிய இயேசுவை விசுவாசிக்கிறவன். அவன் இயேசுவை ஆண்டவர் என்றும் இரட்சகர் என்றும் அறிக்கை செய்கிறான்.
11.  சீஷன் தன்னுடைய பழைய நம்பிக்கைகளைக் கைவிட அழைக்கப்பட்டுள்ளான்.
12.  சீஷன் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ந்து முதிர்ச்சியடைய அழைக்கப்பட்டுள்ளான் (லூக்கா 2:52). அவன் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
13.  சீஷன் இயேசுவைப் போல் ஆக ஓட நினைக்கிறான். ஆனால் அவன் கிறிஸ்துவைப் போல் ஆக அழைக்கப்பட்டுள்ளான்.
14.  சீஷன் கிறிஸ்துவைப் பின்பற்றினால், அவனை இயேசு மனுஷர்களைப் பிடிக்கிறவர்களாக்குவார்.
15.  சீஷன் தன் ஜீவனை இயேசுவினிடம் அர்ப்பனித்தவன். (மத். 10:37; மாற்கு 8:34).
16.  சீஷன் இயேசுவையே சார்ந்து ஜீவிக்கிறவனாய் இருக்கிறான். (மாற்கு 4:19; மாற்கு 1:7).
17.  சீஷன் தன் சுய ஆசபாசங்களை வெறுத்து விட்டவன். தன் சக்தியையும் நேரத்தையும் இயேசுவுக்காக செலவளிப்பான்.
18.  சீஷன் இயேசுவைத் தெரிந்து கொள்ளவில்லை; ஆனால், இயேசு சீஷனைத் தெரிந்து கொண்டார். (யோவான் 15:16)
19.  இயேசு சீஷனை சுவிசேஷத்தை அறிவிக்க கற்றுக் கொடுத்து அனுப்புவிறார் (மத்தேயு 28:19).
20.  சீஷன் இயேசுவின் பிரதிநிதியாக உலக முழுவதும் நியமித்துள்ளார்.
21.  சீஷன் கடவுளின் ஊழியத்திற்குத் தன் திறன்களை வளர்த்து ஆயத்தப்படுத்தப்பட வேண்டும்.
22.  அநேகர் இயேசுவைப் பின்பற்றினாலும், இயேசு அந்த பன்னிரெண்டு பேர்களை மாத்திரம் தெரிந்து கொண்டார். (அதில் நீங்களும் கூட சேர்ந்துள்ளீர்கள்).
23.  இயேசு முதலில் ஜெபித்துதான் அந்த பன்னிரண்டு பேர்களைத் தெரிந்து கொண்டார் (லூக்கா 6:12).
24.  சீஷர்கள் இயேசுவோடு இருந்து கற்றுக் கொண்டார்கள் (மாற்கு 3:14).
25.  இயேசு, சீஷர்களின் அவிசுவாசம், சிறு பிள்ளைத்தனம் (அறியாமை), காட்டிக் கொடுத்தல் போன்றவைகளினிமித்தம் அவர்களைக் கைவிட்டுவிடவில்லை; ஆனால், அவர்களைத் தொடர்ந்து பின்தொடர்ந்து சென்றார்.
26.  சீஷர்கள் பெரிய காரியங்களைச் செய்வார்கள் என்று இயேசுவுக்கு நம்பிக்கையிருந்தது.
27.  சீஷர்களிடம் பெரிய குறைகள் இருந்தாலும் இயேசு அவர்களிடம் பிரதான கட்டளையை ஒப்படைத்தார். (மத்தேயு 28).
28.  பரத்துக்கு ஏறும் முன், ஒரு சில அறியாமையை மட்டும் சீஷர்களிடத்தில் விட்டுச் சென்றார்.


IMRI: நசரனாகிய இயேசு
RexIudaeorum: நசரனாகிய இயேசு யூதர்களின் ராஜா

மொழி பெயர்ப்பு: ராபின்சன் விக்டர்
டைப் செட்டிங்: ஜான்சன் விக்டர்