Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Thursday, May 5, 2011

இளைஞர்களைப் பிரதான அதிகாரத்திற்குள்ளும் சீஷத்துவத்திற்குள்ளும் நுழைத்தல்


Getting our youths into “Discipleship” and “The Great Commission”
இளைஞர்களைப் பிரதான அதிகாரத்திற்குள்ளும் சீஷத்துவத்திற்குள்ளும் நுழைத்தல்

1.   எழிமையானதும் வேதாகமத்தின் அடிப்படையிலானதும்.
2.   பிரதான அதிகாரத்திற்குளும் பிரதான கட்டளைக்குள்ளும் வேரூன்றியிருத்தல்.
மத்தேயு 28.18-20 ‘அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி, வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன், என்றார்.’ (மத்தேயு 28.18-20)
இயேசு அவனை நோக்கி, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும உன் முழு மனதோடும் அன்புகூறுவாயாக. இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.’ (மத்தேயு 22.37-39)
3.   இயேசு கிறிஸ்துவை தேவ வல்லமையோடு அறிவித்தல்
எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் நல்ல ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம். அதறக்க நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப் படுகிறேன். (கொலே.1.28-29

எவ்வாறு?
1.    ஜெபித்தல் – தேவனாகிய பரிசுத்த ஆவியைனவரின் உதவியை நாடுதல்.
2.    ஏவிடுதல் – ஒவ்வொரு இளைஞனையும் ஜெபத்தோடு, தேவனோடு உறவாடிட ஏவிடுதல்.
3.    திறன்களைப் புகுத்திடுதல் – ஒவ்வொரு இளைஞனுக்குள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் வசனங்களைப் போதித்துப் புகுத்திடுதல்.
3.1.  இயேசு கிறிஸ்துவோடு நெருங்கி உறவாட இளைஞர்களுக்குத் தேவையான திறன்களைப் புகுத்திடு.
3.2.  ஒவ்வொரு இளைஞனும் வேதத்தை ஒரு முறைக்கு இருமுறை அல்லது பல முறையாவது கவனமாய் வாசித்து வாசித்து, அனுதினமும் அதனைத் தன் ஜீவியத்தில் கடைபிடிக்க ஊக்குவிக்க வேண்டும்.
3.3.  ஒவ்வொறு இளைஞனும் பாவ இச்சையின் சோதனையை மேற்கொள்ள, ஜெய ஜீவியம் ஜீவிக்க தேவனாகிய பரி.ஆவியானவரின் துணையை நாடக் கற்பிக்கவேண்டும்.
3.4.    வேத வசனத்தைத் திரும்பத் திரும்ப தியானிக்கக் கற்பிக்க வேண்டும்.ங
4.   இளைஞர்களை சுவிசேஷ பிரிபல்லியத்திற்கு உலகத்திற்குள் அனுப்புதல்.
5.   இளைஞர் ஊழியத்தில் பிரதான அதிகாரம், பிரதாக கட்டளை ஆகியவைகளை உள்ளடக்கிய சிந்தையைப் புகுத்த வேண்டும்.

நாம் என்ன செய்வது?
1.   சபை மூப்பர்கள், போதகர்கள் இளைஞர்களோடு அனுக்கமான தொடர்புகளை ஏற்படுத்தி, திடகாத்திரமான உறவுகளை வளர்த்திட வேண்டும்.
2.       சபையிலுள்ள ஒவ்வொரு இளைஞனையும் தேவனாகிய பரிசுத்த ஆவியானவரோடு ஆராய்ந்து அறிந்து, அவனின் மனப்போக்கு, குணாதியசங்கள் போன்றவற்றைத் துல்லியமாக குறிப்பெடுத்துக் கொள்ளுதல்.
2.1. தேவனாகிய பரி.ஆவியானவரோடும், ஜெபத்தோடும், இளைஞர்களோடு உண்மையைப் பேசுங்கள். அப்படிப் பேசும் பொழுது, அது ஒரு கடினமான உரையாடலாகக் கூட இருக்கக்கூடும். அனால், இளைஞர்களின் உண்மையான ஆவிக்குரிய வாழ்க்கை நிலைமைகளை எடுத்துக் கூறுங்கள்.
2.2. இளைஞர்களை உற்சாகப்படுத்த கதைகளைச் சொல்லாம்.
2.3. பரசுத்த ஜீவியத்தின் பிரதிபலன்கள் யாவை போன்றவற்றைப் பற்றி சொல்லலாம்.
2.4. பாவ ஜீவியத்தின் ஆக்கினையைப் பற்றிச் சொல்லலாம்.
2.5. ஒவ்வொரு இளைஞனையும் குறைந்தபட்ச அளவாவது நேசிக்க வேண்டும். அவர்கள் இருக்கும் நிலைமையிலிருநது மேல் நிலைமைக்குக் கொண்டு வர வேண்டும்.
2.6. நாம் ஒவ்வொரு இளைஞனையும் தேவ வார்த்தைகளைக் கொண்டு, அவர்களுடைய நடவடிக்கைகளைத் திருத்த வேண்டும். நம்முடைய இருதயத்தில் இயேசுவின் மனவுருக்கமான நேசமும், தேவனாகிய பரி. ஆவியானவரின் துணையோடு அதைச் செய்ய வேண்டும். அவர்களுடைய சிந்தையில கிரியை செய்து மருரூபமாக்குவார்.
2.7. ஒவ்வொரு இளைஞனுக்கும் நமக்காகவும் ஜெபிக்க வேண்டும்.
2.8. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய ஆத்துமாவை சுத்திகரிக்க வேண்டும். ஏன்? தேவனாகிய கர்த்தர் நாம் பாவக் கரை படிந்த ஆத்துமாவோடு ஏறெடுக்கும் ஜெபத்திற்கு ஒருபோதும் பதிலளிப்பதில்லை. தாசனாகிய தாவீது இவ்வாறு தம்மை நினைப்பூட்டுகிறார். “என் இருதயத்தில் அக்கிர மசிந்தை கொண்டிருந்தேனானானல் ஆண்டவர் எனக்குச் செவி கொடார்,” (சங்.66.18) எவ்வளவுக்கு அதிகமாக நாம் பாவத்திற்கு நம் இருதயத்தில் இடம் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்குத் தக்கதாக, நம்முடைய ஜெபம் கேட்கப்படாது.
2.9. நாம் மெய்யான எழுப்புதல் நம் மத்தியிலும் நம் தேசத்தின் மத்தியிலும் வர வேண்டுமானால், நாம் நம்முடைய ஆத்துமாவை பரிபூரணமாய் சுத்திகரிக்க வேண்டும். அப்பொழுது வல்லமை பரலோகத்தில் இருந்து நம்மிடத்தில இரங்கி வரக் காண்போம்.
2.10.                      ஆன்ம சுத்திகரிப்பைப் பற்றி இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.
a.        இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்குப் பரிசுத்த ஆவியைத் தந்தருளினதுபோல அவர்களுக்கும் தந்தருளி, அவர்களைக் குறித்துச சாட்சி கொடுத்தார்: விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார். (அப்போஸ்தலர் 15.8-9)
b.        ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முஐடயவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலக்க் கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது. ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள். ஆகையால் ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக் கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான். (2 தீமத்தேயு 2.19-21)
2.11.                      மற்றவர்களுக்காகவும் தனக்காகவும் மன்றாடவும் ஜெபிக்கவும் கற்றுக் கொடுங்கள். முதலில் ஒரு நபரோடு தொடங்குங்கள்.
2.12.                      நீங்கள் நடத்தும ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஓய்வு நாள் பள்ளி, வாலிபர் கூட்டங்கள், ஜெபகூடங்கள்) இளைஞர்களை வழி நடத்திச் செல்லுங்கள்.
2.13.                      மெய்யான சீஷத்துவம் என்ன என்பதைப் பற்றிக் கற்றுக் கொடுங்கள். அது ஒரு நிகழ்ச்சி அல்ல; ஆனால் அது நம்முடைய அன்றாட வாழ்க்கை முறை என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.
2.14.                      ஒவ்வொரு இளைஞனையும் சுவிசேஷ பிரபல்லியம் செய்யும் திறன்களை புகுட்டி, சுவிசேஷ பிரபல்லியத்தைச் செய்ய வேண்டும். இந்தச் செயலை மறு சூழற்சியாய் பல முறை நாம் செய்ய வேண்டும்.

இவ்வூழியத்தை எவ்வாறு அணுகுவது?
1.   சபை போதகரை ஈடுபடுத்துதல். ஒவ்வொறு மலேசிய இளைஞனின் ஆவிக்குரிய வளர்ச்சியின் பொறுப்பு மலேசிய சபையின் போதகருக்குண்டு. ஒரு போதகரின் முழு ஒத்துழைப்பில்லாமல் இந்த சத்தியத்தை சுழல் படுத்துவதில் சுணக்கம் ஏற்படும்.
2.   மலேசிய இளைஞனின் பெற்றோர்களை ஈடுபடுத்துதல்.
2.1. மலேசிய இளைஞனின் ஆவிக்குரிய வளர்ச்சியில் பெற்றோர்களுக்கு அளப்பரிய பங்குண்டு என்பதை உபாகமம் 6ல் காண்கிறோம்.
2.2. உங்கள் சபை போதகரை உற்சாகப்படுத்தி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இளைஞர்களை சீஷத்துவத்துக்குள் வழி நடத்திச் செல்ல வேண்டும்.
2.3. கிறிஸ்தவ பெற்றோர்களல்லாத இளைஞனுக்கு சபையில் ஆவிக்குரிய வாழ்க்கையில் முதிர்ச்சியடைந்த பெரியவர்களின் உதவியோடு, அவர்களுக்கு வழி காட்டலாம்.
3.   உபவாசத்தோடும் ஜெபித்து, இத்தேசத்திற்கு (மலேசியாவுக்கு) பெரிய எழுப்புதல் வர வேண்டிட வேண்டும். உங்களின் விசுவாசத்தை வளர்த்திடவும்.
4.   உங்களின் வழிகாட்டிக் கையேடு உங்கள் வேதாகமம்.
5.   உங்களின் வழிநடத்துபவர் தேவனாகிய பரிசுத்த ஆவியானவர்.
5.1. தேவனாகிய பரசுத்த ஆவியானவர், ஏக திருத்துவத்தின் மூன்றாம் நபர். அவர்தாம் ஒவ்வொறு விசுவாசியின உள்ளத்தில் வாசம் செய்து, வழி நடத்துபவர்.
5.2. தேவனாகிய பரிசுத்த ஆவியானவர் உன்னை வழி நடத்துபவர்.
5.3. தேவனாகிய பரிசுத்த ஆவியனவர்தாம் உங்களின் இளைஞனையும் வழிநடத்துபவர்.
5.4. தேவனகிய பரிசுத்த ஆவியானவர், உங்கள் இளைஞர்களைத் தேவனாகிய கர்த்தரோடு மிகவும் நெருக்கமாக நெருங்கி வந்து உரவாட கற்றுக் கொடுக்கிறார். என் நாமத்தினாலே பிதா அனுப்ப்ப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். (யோவான் 14.26).
5.5. தேவனாகிய பரிசுத்த ஆவியானவர்தாமே மலேசிய இளைஞர்களுக்குப் பெலனளித்து சுவிசேஷத்தில் மிக ஆழமாக வேரூன்றிடுவார். நான் குடிகளை அஸ்தோத்திலும், செங்கோல் செலுத்துகீறவனை அஸ்கேலோனிலும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணி, பெலிஸ்தரில் மீதியானவர்கள் அழியும்படிக்கு என் கையை எக்ரோனுக்கு விரோதமாகத் திரும்ப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். (ஆமோஸ் 1.8).
5.6. தேவனாகிய பரிசுத்த ஆவியானவர்தாமே மலேசிய இளைஞர்களை தேவ சாயலாக மறு ரூபமாக்குவார் கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூப்ப்படுகிறோம். (2கொரி. 3.17-18)
5.7. தேவனாகிய பரிசுத்த ஆவியானவர் தாமே உங்களுக்குச் சகல ஞானத்தையும் பெலத்தையும் தந்து, உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் எதிர்ப்புகளையும் சந்திக்க உதவு புரிந்து ஆவிக்குரிய வளர்ச்சியில் நடத்திச் செல்வார்.


நாமே மலேசிய இளைஞர்களுக்கு முன் மாதிறி. அப்பொழுதுதான் நாம் வெற்றியின் கனியை எதிர்ப்பார்க்கலாம்.

முதலாவது நாம்தாமே பரிசுத்தமும், கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும் ஜீவியமும் வாழ்ந்தால் ஒழிய, நாம் மலேசிய இளைஞர்களை சீஷத்துவம் – சுவிசேஷம் என்ற வாழ்க்கைக்குள் அவர்களைக் கொணர முடியாது. மட்டுமல்லாமல், நாம் தாமே வேதத்தை நன்றாகப் புரிந்து கொண்டால் மட்டுமே மலேசிய இளைஞர்களை சீஷத்துவத்துக்குள்ளும் சுவிசேஷ பிரபல்லிய ஜீவியத்துக்குள்ளும் வர உழைக்க முடியாது.

நினைவிலிருக்கட்டும், இயேசு கிறிஸ்துவின் சாட்சி பல தரப்பட்ட மக்களிடமிருந்து வருகிறது. ஆகவே, நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி பிரதிபலிக்கும் முன்னும் அறிவிக்கும் முன்னும் உங்கள் கண்கள் அவர் மேலே பற்றியிருக்கட்டும். நீங்கள் ஒவ்வொறுவரும் மிகவும் விசேஷித்த விதத்தில் அவருக்கு சாட்சிகளாய் இருக்கிறீர்கள்.

எந்த மனுஷயையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம். அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன். (கொலே.1.28-29)யின் படி, இயேசு கிறிஸ்துவை சார்ந்தே உங்கள் உழைப்பைக் கொடுங்கள். அவரைத் தேடித் தேடி வாழும்போது, அவரின் சத்துவமும் வல்லமையும் உங்களுக்குள் பெருகும். அப்பொழுது நீங்கள் வல்லமை பொருந்தி சாட்சிகளாவீர்கள்.

நானே திராட்ச்ச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னைய்ல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. (யோவான் 15.5) யின்படி, பரி.பவுலின் போதனையும் ஜீவியமும் குறிக்கோளும்கூட இயேசு கிறிஸ்துவை அறிவித்து, எல்லா இளைஞர்களையும் சகல ஞானத்துக்குள் வழிநடத்தி சென்று, அவர்களை முழுமை பெற்றவரகளாய் இயேசு மன் திரித்துவதாகும். இவை யாவையும் சுய முயற்சியால் கூடாது.

தேவனாகிய கர்த்தர் தாமே கிருபையையும் ஞானத்தையும் தந்து, மலேசிய இந்திய இளைஞர்களை அவருடைய சாயலை அடைய வழி நடத்துவாராக.

சவால்கள்
1.   எல்லா ஊழியங்கலும், உறவுகளில் விரிசல் ஏற்படும்; எதிர்மாறையான வியாக்கியானங்கள் வரும்; மனதைப் புண்படுத்தும் கருத்துகள் வரும்; ஏமாற்றங்கள் வரும்; நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு ஆவிக்குரிய எழுப்புதலை நோக்கி முன்னேறுகிறீர்களோ, அவ்வளவுக்கு எதிர் மறையான எதிர்ப்புகளும் வரும்.
a.   ஒரு சிலர், “இளைஞர்களை ஆவிக்குரிய வாழ்க்கைக்குள்வழி நடத்துவது உங்களுடைய வேலை அல்ல”, என்று கூறுவார்கள்.
b.   ஒரு சிலர், “இளைஞர்களை விளையாட்டு போன்ற காரியங்களைக் கொண்டு அவர்களை உற்சாகப்படுத்தி சபையோடு நெருக்கப்படுத்த வேண்டும்.” என்று கூறுவார்கள்.
c.   ஒரு சிலர், “பிரதான கட்டளையை மட்டும் கவனம் செலுத்தினால் போதும்,” என்று கூறுவார்கள்.
d.   வேறு சிலர், “பிரதான கட்டளையை மட்டும் கவனம் செலுத்துவது ஒரு வெட்டி வேலை”, என்று கூறுவார்கள்.
e.   இது ஒரு பயங்கரமான ஆபத்து. எப்பொழுதெல்லாம், உங்கள் ஆவிக்குள்ளாக அனல் பற்றிக் கொள்ளுகிறீர்களோ, அப்பொழுதெல்லாம் பரம வைரியான பிசாசானவனின் கவனத்தை ஈர்கக்றீர்கள். அவன் உங்களைப் பின்னுக்கு மிகவும் வருத்தித் தள்ளுவான். நீங்கள் கடவுளோடு நெருங்கும் போது, பிசாசானவனும் மிகவும் அழுத்தமாக இருளோடு எதிர்ப்பான்.
f.    தீய சக்தியைக் கொண்டு, கண்ணுக்குத் தெரியாத பாதாள படு குழியில் மகா யுத்தத்தை ஏற்படுத்துவான். எவ்வாறு நீங்கள் எதிர்த்து நிற்கப் போகறீர்கள்? நீங்கள் உங்களையே தாழ்த்தி முழுங்காலிட்டு கண்ணீரோடு ஜெபியுங்கள்.
g.   ஜெபி, தொடர்ந்து ஜெபி, நேசி, உற்சாகமாக எதிர்ப்பை சந்தித்திடு.

நீ மட்டுமே
இயேசு கிறிஸ்துவின் வல்லமைக்கு உட்பட்டு நடந்து கொண்டால், மெய்யாய் ஒரு பெரிய மாற்றத்தை
        உன் சபையில்
        உன் குடும்பத்தில்
        உன் அண்டை அயலானிடத்தில்
        உன் நண்பனிடத்தில்
                                உண்டு பண்ணுவாய்.
அது வரைக்கும் அது நடைபெறாது. நீ உன் முதல் அடியை எடுத்து வைத்து வழி நடத்தும் வரைக்கும்.

ஆக்கம்: பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை
மொழிபெயர்ப்பு: திரு.ராபின்சன் விக்டர்
டைப்செட்டிங்: திரு. ஜான்சன் விக்டர் (6 மே 2011)


www.bibatee.blogspot.com

பதிவிறக்கம் செய்ய:

PDF வடிவம்
Word 2010 வடிவம்





Wednesday, May 4, 2011

அவனின் வாழ்க்கைக் குறிப்புகள்



1.     அவனின் பூர்வீகம் - அடிமையின் மகன்
a)    இஸ்ரவேலர் குழந்தைகளைக் கொன்று போட எகிப்தின் அரசனான பாரோன் கட்டளையிட்ட அதே நேரத்தில் பிறந்தான் (யாத்2.1-4).
b)     எகிப்து தேச சட்டத்தின் படி, இஸ்ரவேலர் அடிமைகளின் புத்திரன்.
c)     அவனுடைய முன்னோர்கள் யோசேப்பின் காலத்தில் மேய்ப்பர்களாக வந்து கோசேன் என்ற ஊரில் தங்கினார்கள். 400 வருடமாக அங்கே பாடு பட்டனர். அவர்கள் எகிப்தில் வாழ்ந்த முற்பகுதியில் பாடுகள் அனுபவிக்கவில்லை. யோசேப்பை அறியாத ஓர் அரசன் ஆட்சிக்கு வந்த பிறகே அவர்கள் பாடுகள் அனுபவித்தனர்.


2.     தேவனின் திட்டத்தால் ஓர் இளவரசான வளர்தல்
a)     பாரோனின் மகள் தனது குழந்தையாகத் தத்தெடுத்து, அவனுக்குத் தேவையான உதவிகளை வழங்குதல்.
b)     தேவனின் திட்டத்தின்படி பாரோனின் மகள் மோசேயின் தாயாரிடமே பாலூட்டக் கேட்டுக் கொண்டாள். அவன் மொத்தமாக தனது தாய்மை அன்பை இழக்கவில்லை (யாத்2.10)
c)     எகிப்தியரின் எல்லா ஞானத்திலும் அவன் பயிற்சி பெற்றான்.
(யாத்.2.5-10, அப்7.21-22).
d)     ஓவிய எழுத்துக் கல்வி, இசைக் கல்வி போன்றவை எகிப்தியர் கல்வியில் அடங்கியுள்ளன. மறநிலையின்பம் (ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டு), உடல் வலிமைப் பயிற்சி போன்ற ஆற்றல்களையும் அவன் பெற்றிருக்கக் கூடும். (JD டோக்ளஸ், புதிய வேதாகம அகராதி),  (IVF, லண்டன், 1962, பக். 844 ff).


3.     தன் ஜனங்களுடனான மோசேயின் எபிரேய இன உணர்வு
a)     பாரோனின் அரண்மனையில் வளர்க்கப்பட்டாலும், தன் சொந்த ஜனங்களின் பாடுகளில் பரிதாபப்பட்டான்.
b)     ஓர் எபிரேயன் எகிப்தியனிடம் வதைக்கு ஆளான போது மோசேயின் முதல் அழைப்பு ஏற்பட்டது. எபிரேயனை வதைத்துக் கொண்டிருந்த எகிப்தியனை மோசே கொன்று, அவன் உடலை மண்ணில் புதைத்தான். (யாத்2.13).
c)     சிறைப்படுத்தப்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்ள மீடியன் என்ற ஊருக்குத் தப்பிச் சென்றான்.


4.     தேவன் அழைப்பதோடு நில்லாமல் இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்கும் பொருட்டு மோசேக்குப் பொருத்தமான பயிற்சியையும் வழங்கினார்.
a)     தனிமையும் எளிமையும் மோசே இஸ்ரவேலர்களை விடுவிப்பதற்கு ஏதுவான கட்டளையைப் பெற வழிவகுத்தது. 
b)     தன் ஜனங்களின் பாடுகளைக் குறித்து மோசே அனுதாபங் கொண்டாலும் பாலைவனத்தில் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருக்கும் போதுதான் அவர்களை விடுவிக்க அழைப்பு கிடைத்தது. எந்த இடத்திலும் அழைப்பு கிடைக்கலாம். ஆமொஸ் விவசாயியாக இருக்கும்போது அழைப்பைப் பெற்றான். விழித்திருப்பதோடு எதிர்பார்த்தும் வாழ வேண்டும்.
c)     தொடக்கத்தில் தனது ஜனத்தை விடுவிப்பதற்கான அழைப்பை மோசே ஏற்கமறுத்தான் (யாத்3.11). தன் குடும்பத்தை விட்டு எகிப்திற்குச் செல்ல நேர்ந்தது. எகிப்திற்குத் திரும்பும்போது, யாரும் அந்தக் கொலையை அறியாததுபோல் காணப்பட்டது.


5.     தேவன் சக்திவாய்ந்த நிலையில் மோசேயை அழைத்தார் (வெளி3.7-10)
a)     என் ஜனங்கள் எகிப்தில் படும் துன்பங்களை மெய்யாகவே நான் கண்டேன்.
b)     அடிமைத் தனத்தால் அவர்கள் கூக்குரல் என் காதுக்கு எட்டிற்று. அவர்கள் துன்பத்தில் எனக்குக் கருத்துண்டு.
c)     அவர்களை இரட்சித்து, இத்தேசத்தில் இருந்து விடுவித்து பாலும் தேனும் ஓடுகிற கானானியர்களின் தேசத்திற்குள் கொண்டு வந்து சேர்ப்பேன்.
d)    இப்போது அவர்களின் கூக்குரல் என் காதுக்கு எட்டிற்று.
e)     எகிப்தியர்கள் அவர்களை அடிமைப்படுத்தும் விதத்தைக் கண்டேன் (யாத்3.9)
f)     என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களை எகிப்தில் இருந்து விடுவிப்பதற்கு நான் உன்னை பாரோனிடத்தில் அனுப்புகிறேன்.
g)     நான் உன்னோடு இருப்பேன் (யாத்3.12)


6.     பல வலிமைப் பயிற்சி பெற்றிருந்தாலும் மோசேயிடம் சில ஊனங்கள் காணப்பட்டன (யாத்4.18-31)
a)     சில நேரங்களில் சிலர் தடங்கல்களையும் சிரமங்களையும் கூறி, அழைப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள முயல்வர். (உம் - மோசேயின் நாவூனம்).
b)     என் நாவூனத்தினால் பாரோன் எனக்கு செவி சாய்க்காமல் போகக் கூடும்? ஆரோன் மோசேயைப் பிரதிநிதித்துப் பேசினான். (யாத்5.30)
c)     அவருடைய பெரும் பணிக்காக என்ன பேச வேண்டும், எப்போது பேச வேண்டும், அதன்  நோக்கத்தை வெளிப்படுத்த தேவன் நமக்கு ஒரு தேற்றவாளனை வழங்குவார்.

7.    தேவனால் அழைக்கப்பட்ட மனிதரும் குற்றம் புரியலாம் (எண்20.1-13)
a.    மோசே மெர்பியாவில் மும்முனை குற்றங்களில் ஈடுபட்டான்:
b.    வெறுமனே கட்டளையிடுவதினால் மாத்திரம் பாறையில் நீர் கசியுமா? என்று மோசே சந்தேகங் கொண்டான்;
c.    அவன் தேவையில்லாமல் பாறையை இரண்டு முறை தட்டினான். இது தேவையில்லாத பொறுமையிழப்பைக் காட்டுகிறது. தேவன் அவன் மீது கடும் சினம் கொண்டார்.
d    தான் செய்த அற்புதங்களை தேவ மகிமைக்குப் பயன்படுத்தவில்லை. மாறாக தன்னையும் தன் சகோதரனையும் பெருமைப்படுத்திக் கொண்டான்.



8.     தயக்கம் காட்டிய தேவ விடுதலையாளன்
a.    தேவன் அவனை ஆண்டுகொண்டார் (யாத்4.1-7)
b.    தேவன் மோசேக்கு அற்புதம் செய்யும் ஆற்றலை வழங்கினார். - தேவன் அவனுக்கு வல்லமையையும் அதிகாரத்தையும் வழங்கினார்.
c.    சராசரி மனிதனான மோசே மாபெரும் வல்லமையோடு எழுந்தான்.
d.    தேவன் அவனுக்கும்  அவன் சகோதரனுக்கும் ஆதாரப் பொருள்களையும், கரத்தையும் நீரையும் வழங்கினார்.
e.    மோசே ஆரோனோடு பங்காளித்துவ ஆதாயத்தைப் பெற்றான்.


எப்படி துலங்குவது?
மோசேயைப் போல் நாமும் அழைப்பை ஏற்கலாம், தேவன் தேவையான ஆதாரப் பொருள்களையும், ஆற்றலையும், ஆதரவையும் வெற்றி பெறும் பொருட்டு வழங்குவார்.


9.     மோசே பல சவால்களை எதிர்கொண்டான் (யாத்5.1-23)
a)     முதலில் பாரோனோடு வாக்குவாதம் உருவானது (யாத்5.1)
b)     ஆராதனை செய்யும் பொருட்டு ஜனங்களை வனாந்திரத்திற்குப் போகச் சொன்னது பெருமளவில் பொருளாதாரத்தையும் மனித வளத்தையும் சீர்குலைக்கும் (வ3,5, 7)
c)    எகிப்திய ஆட்சியாளர்களிடம் இருந்து ஜனங்கள் கொடுமையான உழைப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.
d)    சுதந்திரத்திற்கான கிரயம் - ஊக்கம், பொறுமை, விடாமுயற்சி, மனப்பூர்வமான சம்மதம் தேவ மீட்புக்கான திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஆற்றலில் நம்பிக்கை வேண்டும். (Hugh, R. Page Jr. Exodus: The People's Bible Commentary BRF, London, 2006).
e)    இயற்கையின் சீற்றம் (யாத்7.25-8.13) வாதகைளால் பல தொல்லைகள் (8:16-32) . தேவனுடைய கரங்களை அவர்களை வழிநடத்திற்று.


10.     வனாந்திரத்தில் ஒரு விஷேச பயணம் (13.17-14.4)
a)     செங்கடலைக் கடத்தல் (அதி15)
b)     மேகம், அக்கினி மூலம் தேவன் அவர்களை வழிநடத்தினார்.
c)     பத்துக் கட்டளைகள் (அதி20)
d)    ஜனங்கள் அந்நிய தெய்வங்களை வணங்கத் தூண்டப்பட்டனர் (அதி33)  - தங்கத்தில்     செய்யப்பட்ட கன்றுக்குட்டி


11. தேவன் முழுமையான மாற்றத்தைக் கொண்டு வந்தார் (34.29-35)
a)     மோசேயின் முகம் பிரகாசித்தது.
b)    அவன் நற்செய்தியில் சார்ந்திருந்தான்.
c)    அவனின் புனித கடமைக்குத் தேவையான ஆதாரங்கள் வழங்கப்பட்டன (35-36.7)


12.    முடிவுரை
    மோசேயின் மூலமும் யோசுவாவின் மூலமும் தேவன் தமது நோக்கத்தை நிறைவேற்றினார். அவர்கள் இருவதும் வெவ்வேறு காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


13.    விவாதத்திற்கான கேள்விகள்
v    மோசேக்குப் பாலூட்டியது யாரு?
v    எகிப்தியர்களின் கல்வி தேவ ஜனங்களை விடுவிப்பதற்கு எவ்வாறு அவனுக்கு உதவிற்று?
v    40 ஆண்டுகால வனாந்திரப் பயணத்தில் அவன் எதிர்நோக்கிய சவால்கள் என்ன?
v    அவனால் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்க முடிந்ததா?
v    பத்துக் கட்டளைகளை எழுதுக.
v    அனுதாபத்தையும் ஜெப மன்றாட்டையும் தவிர்த்து நாம் எப்படி துன்பப்படும் மக்களுக்காக கடமையாற்றலாம்?