Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Friday, February 3, 2012

90. பர்தொலொமேயு


கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களில் ஒருவன்

முக்கிய வசனம்
அவனோ தன் வீட்டிலே ஒரு தேவதூதன் நிற்கிறதைக் கண்டதாகவும், யோப்பா பட்டணத்திலிருக்கிற பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைக்கும்படிக்கு மனுஷரை அவ்விடத்திற்கு அனுப்பு;  (அப்.11.13)

சுருக்கமான குறிப்புகள்
·         இயேசுவின் 12 சீஷர்களில் அதிகமாக அறியப்படாதவன் இவன்.
·         இவன் தொலொமேயுவின் குமாரன். இவனுடைய பெயர் ‘யுத்த வீரன்’ என்றும் பொருள்படும்.
·         சீஷர்களில் ஒருவன் இவனை இயேசுவிடம் கொண்டு வந்திருக்கக் கூடும்.
·         சுவிசேஷ ஊழியராக இந்தியாவுக்குச் சென்று அங்கே இரத்தச் சாட்சியாக மரித்தார் என்று கூறப்படுகிறது.

1. முகவுரை – இவனுடைய சரித்திரம்
மேற்கு மலேசியா சிங்கப்பூர் திருமண்டலம் பரி.பர்தொலொமேயுவின் திருநாளன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் முதலாவது பேராயர் பிஷம் பெர்குசன் டேவி அவர்கள் 1909ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். வேலை ஓய்வு பெற்ற்றபின் இவர் இந்தியாவின் தேசிய மொழியான ஹிந்தியைக் கற்று, இந்தியாவில் சுவிசேஷகராக ஊழியம் செய்து, பின்பு ஆப்பிரிக்காக் கண்டத்துக்குப் போய் கிறிஸ்துவுக்கு சேவை செய்தார்.

2.         பர்தொலொமேயு யார்?
இயேசுவின் முதலாவது 12 சீஷர்களில் இவன் ஒருவன். பர்தொலொமேயு என்று அழைக்கப்பட்டான். யோவான் 1ம் அதிகாரத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் நாத்தான்வேல் இவன் என்று சிலர் கருதுகின்றனர். இயேசு தண்ணீரைத் திராட்சரசமாக மாற்றிய கலிலேயாவிலுள்ள கானாவூரிலிருந்து வந்தவர். பர்தொலொமேயுவும் மாற்றப்பட்டான். அர்மேனியாவிலும், இந்தியாவிலும் ஊழியம் செய்த்தாகச் சொல்லப்படுகிறது. இவர் இரத்த சாட்சியாகத் தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதுவும் சீஷத்துவத்தின் கிரயம். ஒரு சீஷன், அப்போஸ்தலன் அல்லது இரத்தசாட்சியாக இறப்பதன் கிரயம் என்ன என்பதை அநேகர் புரிந்துணர்ந்து கொள்வதில்லை.

3.         பர்தொலொமேயுவிடமிருந்து என்ன கற்ற்றுறக் கொள்ளுகிறோம்?
மூன்று முக்கியமான விஷயங்களை நாம் பார்க்கலாம்.
அ)        சீஷத்துவம் – கற்றுக் கொள்ளும் மாணவனாக இருப்பது.
ஆ)       அப்போஸ்தல உழியம் – மக்களிடத்திற்கு அனுப்பப் படுதல்.
இ)        இரத்தச் சாட்சி – பலியாகுவது போல் துன்பப்படுதல்.

            மலேசியாவிலும், வேறு எந்த இடத்திலும் தேவனுடைய திருச்சபையின் வளர்ச்சி, அபிவிருத்திக்கு மேற்கூறிய  விஷயங்களும் அத்தியாவசியமானவை. சீஷரில் ஒருவன் என்பது உறுதியாகிறது. நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சீஷராகும் படி அழைக்கப் பட்டிருக்கிறோம். இது நீண்ட காலத்திற்குரிய அழைப்பு. இயேசுவின் சீஷயர்கள் தங்கள் வாழ்க்கையை இயேசுவுடன் வாழ்ந்தார்கள். நமது குரு (போதகர்) இயேசுவே. நெருக்கமான உறவில் தான் கற்றுக் கொள்ள முடிகிறது. நாம் அப்போஸ்தலராக, சுவிசேஷத்தை மற்றவர்களுக்கு அறிவிக்கவும், அதை நமது ஜீவியத்தின் மூலம் காண்பிக்கவும் மற்றவர்களுக்கு அறிவிக்கவும், அதை நமது ஜீவியத்தின் மூலம் காண்பிக்கவும் அனுப்பப் படுகிறவர்களாக இருக்கிறோம். ஆனால் அதற்கு முன்பாக நாம் தேவனுடைய வார்த்தையைக் கற்று, பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்பட வேண்டும். ஒரு கிறிஸ்தவன் தேவனுடைய வார்த்தையையும் அவருடைய ஆவியையும் நிறைந்தவனாக இருக்க வேண்டும். இது ஒரு ஜீவியகால முழுமைக்குமான அழைப்பு. எங்கேயும், எல்லா இடங்களிலும் தம்மைப் பின்பற்றும்படி இயேசு அழைக்கிறார்.

2.         இரண்டாவது விஷயம், கிறிஸ்துவின் அப்போஸ்தலனாக இருப்பது. இயேசு இந்த உலகில் தேவனுடைய சுவிசேஷகராக, “பிதா என்னை அனுப்பினது பேல நானும் உங்களை அனுப்புகிறேன்’ என்று கூறினார் (யோ.20.21). அவர் நம்மை வல்லமையோடும், அதிகாரத்தோடும் அனுப்புகிறார் (மாற்கு 6.7-8, 12). அப்போஸ்தலர்கள் தங்கள் வீடுகளை விட்டுச் சென்று ஒவ்வொருவரிடமும் தேவனிடம் திரும்பும்படிக் கூறத் தொடங்கினார்கள். கிறிஸ்தவ ஊழியத்திலும், சாட்சியிலும், எப்போதும் சிலர் ஏற்றுக் கொள்ள மறுப்பதற்காக சாத்தியம் உள்ளது. நாம் இதற்கும் ஆயத்தமாக இருக்க வேண்டும். வளர்ந்து வரும் திருச்சபைகள் இருக்கின்றன. வளர்ச்சியே இல்லாமல் செயல்பட்டு வரும் சபைகளும் இருக்கின்றன. வளர்ச்சியே இல்லாமல் செயல்பட்டு வரும் சபைகளும் இருக்கின்றன. வளரும் சபை ஊழியரை அனுப்பும் சபையாக இருக்கிறது.

3.         மூன்றவாது விஷயம், பர்தொலொமேயு இரத்த சாட்சியாக மரித்தான் என்பதாகும். “ஓர் இரத்தச் சாட்சி சிந்தும் இரத்தம் திருச்சபையின் வித்து” என்று கூறப்படுகிறது. உண்மையுள்ளவர்களும் தங்களையே அர்ப்பனிக்கும் தியாக சிந்தையுள்ளவர்களுமான கிறிஸ்தவ சுவிசேஷகர்கள் நம் நாட்டுக்குத் தேவையாக இருக்கின்றனர்.

4.         வேத வசன ஆதாரங்கள் – சுவிசேஷங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் உதவியாக இருக்கின்றன

5.         விவாதத்துக்கான கேள்விகள்
1.         சீஷன், அப்போஸ்தலன், இரத்தச் சாட்சி – இவைகளின் அர்த்தம் என்ன?
2.         மலேசியா சிங்கப்பூர் திருமண்டலம் எப்போது அமைக்கப்பட்டது?
3.         இந்த திருமண்டலத்தின் முதலாவது பேராயர் யார்?
4.         பர்தொலொமேயு எவ்வாறு இரத்த சாட்சியாக மரித்தார்?
5.         ஒரு சுவிசேஷ ஊழியருக்கு நாம் எவ்வாறு உதவி செய்யலாம்?


மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்,
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.

87. அப்பொல்லோ


87.       அப்பொல்லோ – அப்போஸ்தலர் நடபடிகளில் உள்ள சுவிசேஷ ஊழியர்களில் ஒருவன்.


முக்கிய வசனம்
25 அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஸ்நானத்தைமாத்திரம் அறிந்தவனாயிருந்து, ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம்பண்ணிக்கொண்டுவந்தான். 26 அவன் ஜெபஆலயத்தில் தைரியமாய்ப் பேசத்தொடங்கினபோது ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைச் சேர்த்துக்கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக்காண்பித்தார்கள்.  (அப்போஸ்தலர் 18.25-26)

சுருக்கமான குறிப்புகள்
·         அக்சந்திரியா பட்டணத்து யூதன் (அப்.118.2240
·         வேதாகமத்தை ந்ந்நன்கு அறிந்திருந்தான்.
·         நல்ல பேச்சுத் திறன் வாய்ந்தவனாக இருந்தான். பழைய ஏற்பாட்டை நன்றாகப் புரிந்துணர்ந்து கற்றிருந்தான்.
·         ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் இவன் இயேசுவைப் பற்றி அதிக திட்டமாய் அறிந்து கொள்ள உதவி செய்தார்கள்.

1.    முகவுரை – இவனுடைய சரித்திரம்
பொது இடங்களில் பேசுவதற்குச் சிலருக்கு இயற்கையான திறமை இருக்கிறது. சிலர் அத்துடன் நல்ல செய்தியையும் சேர்த்துச் சொல்றார்கள். அப்பொல்லோ எபேசு பட்டணத்துக்கு வந்த போது, கிருபையினால் விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தான். அவன் ஜெப ஆலயத்தில் தைரியமாகப் பேசி, பழைய ஏற்பாட்டு வார்த்தைகளை விவரித்துக் கூறி, இயேசுவே கிறிஸ்து என்று போதித்தான். கிறிஸ்தவ மார்க்கத்தை எதிர்த்த யூதருடன் பலமாகத் தாக்கம் பண்ணினான். வெகு சீக்கிரமே ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் இவன் நன்கு பேசுவதைக் கவனித்தார்கள்.

பழைய ஏற்பாட்டையும் யோவான் ஸ்நானகளையும் அடிப்படையாகக் கொண்டே இவன் பிரசங்கித்து வந்ததை கவனித்து கொண்டுபோய் இயேசுவைப் பற்றியும் அந்நாட்களில் நடந்த விஷயங்கள் பற்றியும் அவனுக்குப் போதித்தார்கள். இயேசுவின் வாழ்க்கை, சிலுவை மரணம், உயிர்த்தெழுதல், பரிசுத்த ஆவியின் வருகை பற்றி அவனுக்குக் கூறியபோது அவன் சுவிசேஷத்தை முழுமையாக அறிந்து கொண்டான். புதிய பலமும் தைரியமும் பெற்றுக் கொண்டான்.

இதன் பின்பு அப்பொல்லோ அகாயா நாட்டிற்குப் போக விரும்பினான். அங்குள்ள மக்கள் அவனை ஏற்றுக் கொள்ளும்படி அவர்களுக்கும் கடிதம் கொடுத்தனுப்பினார்கள். கொரிந்து பட்டணத்திலும் அப்பொல்லோ சவிசேஷத்தைப் பிரசங்கித்து, அதை எதிர்த்தவர்களுடன் தர்க்கித்து வந்தான். வழக்கமாக நடைபெறுகிறது போலவே இதினிமித்தமாகப் பல பிரச்சனைகள் எழும்பின. அவனுடைய செய்தியைப் பின்பற்றுவதற்குப் பதிலாக சிலர் அப்பொல்வைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு அவனைப் பின்பற்றினார்கள். இதனால் கொரிந்தியர் மத்தியில் பிரிவினை ஏற்பட்டதைப் பவுல் கண்டிக்க வேண்டியதாயிற்று. தங்களுக்குப் பிடித்தமான ஊழியர்களின் பெயரைக் கொண்டு பிரிவுகளை ஏற்படுத்தினர். அப்பொல்லோ கொரிந்து பட்டணத்தை விட்டுச் சென்று மறுபடி திரும்பி வரத் தயங்கினான். கொரிந்துவில் பவுல் விதைத்த சவிசேஷமாகிய விதைகளுக்கு நீர் பாய்ச்சிய உழியக்காரன் அப்பொல்லோ என்று பவுல் குறிப்பிட்டார். தீத்துவுக்கும் பவுல் அப்பொல்லோவைக் குறித்து எழுதினான் (தீத்து 3.3). இவன் பல இடங்களுக்கும் பயணம் செய்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வந்தான்.

தன்னுடைய இயற்கையான திறமைகளைக் குறித்து பெருமை கொள்ளாமல் மென்மேலும் கற்றுக் கொள்வதில் ஆர்வமுடையவனாக இருந்தான். தாங்கள் பவுலிடமிருந்து கற்றுக் கொண்டதை ஆக்கில்லா, பிரிஸ்கில்லாள் அப்பொல்லோவுக்குக் கற்றுக் கொடுக்கும்படி தேவன் உபயோகித்தார். அப்பொல்லோவும் அதைக் கற்று ஒஒரு சிறந்த சுவிசேஷப் போதகர் ஆனான். கற்றுக் கொள்வதில் உனக்குள்ள ஆர்வம், தேவன் தாம் விரும்பும் வண்ணமாக நீ இருக்கும்படி உனக்கு உதவி செய்ய எடுத்துக் கொள்ளும் முயற்சியை எவ்வளவாகப் பாதிக்கிறது.


2.    பலமும் சாதனைகளும்
a.     ஆதித் திருச்சபையில் திறமையும் சொல்வன்மையும் வாய்ந்த பிரசங்கி.
b.     தனக்குப் போதனை செய்வதை ஏற்றுக் கொள்ள விருப்பமுள்ளவன்.
c.     எபிரெயர் நிருபத்தை எபதியவர் யார் என்று திட்டமாகத் தெரியாத பட்சத்தில், எபதியிருக்கலாம் என்று குறிப்பிடப் படும் பெயர்களில் இருக்கிறார்.

3.    இவருடைய வாழ்க்கையிலிருந்து படிக்கும் பாடங்கள்.
a.     தேவனுடைய வல்லமையுடன் கொடுக்கப்படும் சரியான செய்தியே பயனுள்ள சுவிசேஷத்தை எடுத்துக் கூறுவதாகும்.
b.     சவிசேஷத்தைத் தெளிவான வார்த்தைகளினால் விளக்கிக் கூறும்போது அது விசுவாசிகளை ஊக்குவிப்பதாக இருப்பதுடன் அவிசுவாசிகளுக்கும் உண்மையை எடுத்துக் காண்பிப்பதாக இருக்கிறது.

4.    வேத வசன ஆதாரங்கள்
a.     அப்.18.24-28, 19.1, 1கொரி.1.12, 3.4-66,22, 4.16, 16.12, தீத்து 3.13.

5.    விவாத்த்துக்கான கேள்விகள்.
a.     சுவிசேஷத்தைப் பரப்புவதில் எவ்வாறு உதவி செய்தான்?
b.     அவனுடைய விசேஷித்த தாலந்து என்ன?
c.     இயேசுவைக் குறித்து அவனுக்குப் போதித்தது யார்?
d.    சுவிசேஷமாகிய விதைக்கு எவ்வாறு நீர் பாய்ச்சினீர்?
e.     ஆதித் திருச்சபையில் பிரிவுகள் ஏற்படுவதற்கு இவன் எவ்வாறு காரணமாக இருந்தான்?


மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்,
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.