Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Sunday, September 11, 2011

32. அன்னாள்


எல்கனாவின் மனைவியும், சாமுவேலின் தாயாரும் ஆனவள்.



அப்பொழுது அவள்: என் ஆண்டவனே, இங்கே உம்மண்டையிலே நின்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணின ஸ்திரீ நான்தான் என்று என் ஆண்டவனாகிய உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். 1சாமுவேல் 1:26



கதைச் சுருக்கம்

·       அன்னாள், எல்கனாவின் மனைவி, சாமுவேலின் தாயார்.
·       அன்னாள் ஒரு ஜெபிக்கும் பெண்மணி.
·       அன்னாள் சாமுவேலைக் கடவுளின் வேலைக்கு அர்ப்பணித்தாள்.
·       ஏலி, ஆசாரி அன்னாளை ஊக்குவித்தான்.



முன்னுரை

ஜெபிக்கும் தாய் (நான் பிள்ளைக்காக யேகோவா கர்த்தரின் வேண்டினேன், அவரும் நான் கேட்டதை எனக்குக் கொடுத்தார். அதனால், நான் அவனை யேகோவா கர்த்தரிடம் கொடுப்பேன். அவன் வாழ்நாள் முழுவதும், அவன் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டான்) (1 சாமு.1:26-28).



1.     அன்னாள் என்றால் யேகோவா கர்த்தரின் கிருபை என்று அட்த்தமாம். அவள் எல்கனாவின் மனைவியும், சாமுவேலின் தாயாருமாவாள். அவள் ஒரு ஜெபிக்கும் பெண்மணி. பல வருடங்களாக அவள் மலடியாக இருந்தாள். இறுதியாக எப்பொழுதும் குடும்பத்தோடு செல்லும் சிலோவிலுள்ள தேவாலயத்திற்குச் சென்றனர். இது வாழ்க்கையின் ஒரு முக்கிய பங்காகும். பிள்ளை வரம் கிடைத்த்தற்காக அவள் ஒரு சத்தியம் செய்தாள். அவள் தன் பிள்ளையைக் கடவுளுக்கு அர்ப்பணித்தாள் (1சாமு.1:11). அதன் பிறகு, சாமுவேல் என்ற பாலகன் பிறந்தான். வெகு விரைவாக அன்னாள் அவனைச் சிலோவிலுள்ள தேவாலயத்தில் யெகோவாவின் சேவைக்காக அர்ப்பணித்தாள். அவன் வாழ்நாள் முழுவதும், அவன் கடவுளுக்குச் சேவை செய்வான் (.28). அன்னாள் மேற்கொண்டு ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் கிடைக்கப் பெற்றாள் (2:21) (2:1-10)
அவள் ஒரு முன்மாதிரியான தாய். அவள் தன் சுயமரியாதையைக் குழந்தை பெற்றதன் மூலம் தக்க வைத்துக் கொண்டாள்.
அன்னாள் நமக்கு அதிகமான விஷயங்களைக் கற்பித்துள்ளாள்.

2.     அன்னாள்ஒரு ஜெப வீராங்கனை: கடவுள் அவளின் வேண்டுதலுக்குப் பதிலளித்த போது, அவள் செய்த சத்தியத்தின் படி சாமுவேலைக் கடவுளின் சேவைக்காக அர்ப்பணித்தாள். கடவுள் அன்னாளுக்குச் சாமுவேலைச் சேர்த்து மேற்கொண்டு 5 பிள்ளைகளைக் கொடுத்தார். அன்னாள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. அதுவும் முதிர்ந்த வயதில் தனக்குப்  அவளுக்குப் பிள்ளை கிடைக்குமென்றும், மேலும் 5 பிள்ளைகளுக்குத் தாயாவாள் என்றும் எதிர்ப்பார்க்கவில்லை.

3.     பிள்ளைகள் யெகோவா தேவனின் வரம்: அன்னாள் தன் பிள்ளைகளை யெகோவா தேவனுக்கு அர்ப்பணித்தாள். அன்னாள் கண்டுபிடித்த ஓர் உண்மை, மெய்யான சந்தோஷம் எப்பொழுதும் வருமென்றால், தன்னுடைய குழந்தையைத் திரும்பவும் கடவுளிடம் கொடுக்கும் பொழுதுதான். ஒரு தாய் தன்னுடைய குழந்தையை நாளடைவில் சுதந்திரமாக விட்டு விடவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் வளர்ந்து, முதிர்ச்சி அடைய முடியும். எப்படி சாமுவேல் வளர்ந்தான்? (1 சாமு.1:21). அவன் யெகோவா தேவனின் சந்நிதானத்தில் வளர்ந்தான். யெகோவா, தேவனின் வரம், குழந்தைகள் மிகவும் கவனமாக ஆயத்தப்படுத்தப்பட்டு, யெகோவா கடவுளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். பெற்றோர்கள் யெகோவா தேவனின் உக்கிரகார்ராயிருக்கிறார்கள்.

4.     அன்னாள் ஆராதிக்கிறவளும் ஜெபிக்கிறவளும் ஆனவள்: அன்னாள் மிகவும் உற்சாகமாக ஆராதித்து ஜெபிக்கிறவளாயிருந்தாள் (1 சாமு.1:26) அவளின் ஜெபம் அவளை மாற்றியது. அவள் தன் சிந்தையிலும், குணாதியசத்திலும் மாற்றம் கண்டாள்.

a.     அவள் உண்மையாய் ஜெபித்தாள் (1சாமு.1:11)
b.     ஏலி அவளை உற்சாகப்படுத்தினான் (1சாமு.1:17)
c.     அவள் தன்னுடைய பிரச்சனைகளைக் கடவுளிடம் ஒப்புவித்தாள் (1சாமு.1:18).
இவைதான் நம்முடைய மனச்சோர்வைப் போக்கும் தாரக மந்திரம். அன்னாள் முழுமையாய் இதைக் கடைப்பிடித்தாள்.

5.     பிள்ளைகள் யெகோவா தேவனின் கிருபை வரம்: யெகோவா தேவன் பிள்ளைகளை மற்றவர்களைப் பாவத்திலிருந்து மீட்கப் பயன்படுத்தக் கொடுக்கிறார். இயேசு ஒரு நல்ல உதாரணம். இப்படிப்பட்ட வரங்களைக் கடவுள் மற்றவர்களைப் பாவத்திலிருந்து இரட்சிக்க மற்றும் சேவை செய்யக் கொடுக்கிறார். இக்கதையில், சாமுவேலை யெகோவா கர்த்தர் ஒடுக்கப்பட்ட ஜனங்களை விடுவிக்கக் கொடுத்தார். சாமுவேல் யெகோவா கர்த்தருக்கு முன்பான ஊழியம் செய்தான் (1சாமு.1:11). ஏலி, சாமுவேலைக் கர்த்தரின் ஆலயத்தில் ஊழியத்திற்குப் பயிற்றுவித்தான். ஆகவே, தான், பிள்ளைகள் கர்த்தருடைய ஊழியத்திற்கும் சுவிசேஷ ஊழியத்திற்கம் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

6.     அன்னாள் தன் ஜெபத்திற்குக் கிடைத்த பதிலுக்கு யெகோவா தேவனைத் துதித்தாள் (1சாமு.2:1-10): அன்னாளின் இத்துதி, கன்னி மரியாளின் துதியோடு ஒப்பிடப்பட்டுள்ளது. அவளின் துதியில் தீர்க்கதரிசன தன்மை அடங்கியுள்ளது. அதன் கருப்பொருள், யெகோவா, தேவனின் மேலுள்ள நம்பிக்கை, அவரின் வல்லமை, அவளின் நன்றியுணர்வு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. அன்னாள் மற்றும் மரியாள் போல நாமும் யெகோவா தேவனின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். அவரே எல்லா சம்பவங்களையும் கண்கானிக்கிறார், நடப்பிக்கிறார். நாம் அவளின் வழிநடத்துதலுக்கு நன்றி சொல்ல வேண்டும். அப்படி செய்வதன் மூலம், நாம் யெகோவா தேவனின் அதிகாரத்திற்குள் நம்முடைய வாழ்க்கையை ஒப்படைக்கிறேன் என்று பொருள்படும்.



பரிசுத்த வேதாகமம்:

a.     அவளின் கதை 1 சாமுவேல் 1-2ல் கூறப்பட்டுள்ளது.



கேள்விகளைக் கலந்துரையாடுக

b.     ஏன் எல்கனா எப்ராமில் மகிழ்ச்சியாக இல்லை?
c.     எப்படி கடவுள் அவளின் வேண்டுதலுக்குப் பதிலளித்தார்?
d.     எப்படி ஆசாரியர் அவளை ஊக்குவித்தான்?
e.     என்ன சிறப்பான பரிசு அன்னாளின் குடும்பத்தின் மூலம் தீர்க்கதரிசன பள்ளிக்கு வழங்கப்பட்டது,
f.      என்ன படிப்பினையை நாம் அவளிடம் இருந்து கற்றுக் கொண்டோம்?





பி. கஸ்தூரி
P. KASTURI
c/o SMK Dato’ Zulkefli Muhamad, S.River, Perak, Selangor



26. எசேக்கியேல் தீர்க்கதரிசி

26.   எசேக்கியேல் தீர்க்கதரிசி

பின்னும் அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நான் உன்னுடனே சொல்லும் என் வார்த்தைகளையெல்லாம் நீ உன் செவிகளாலே கேட்டு, உன் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, நீ போய், சிறைப்பட்ட உன் ஜனத்தின் புத்திரரிடத்திலே சேர்ந்து, அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் அவர்களோடே பேசி, கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார். எசேக்கியேல் 3:10-11


கதைச் சுருக்கம்

1.     யெகோவா தேவனின் காவலாளி / காவல்காரன்.
2.     ஆசாரியனும் தீர்க்கதரிசியும் ஆவான்.
3.     இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் பாபிலோனியரின் அடிமைத் தனத்திலிருக்கும்போது ஊழியம் செய்தான்.
4.     ஜனங்களின் கடின இருதயத்தைத் திருத்தினான்.
5.     ஜனங்களை மனமாற்றி மருரூபமாக்கினான். 



முன்னுரை – சுய சரிதை
நான்கு மகத்தான தீர்க்கதரிசிகளின் ஒருவன் எசேக்கியேல் தீர்க்கதரிசி. ‘பெலப்படுத்துகிறவர் யெகோவா தேவன்’ என்பது அவன் பெயரின் பொருள். அவன் யூதர்களின் ஆசாரியனுமாய் இருந்தான் (எசே.1:3). இருப்பினும், தீர்க்கதரிசன அக்கினி அபிஷேகம் எப்பொழுதும் அவனுக்குள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது; அக்கினி மயமான யெகோவா தேவனின் சத்ததின்?? தரிசனமும் அவனுக்குக் கிடைத்தது. ஆசாரியனாகிய பூசி என்பவனின் மகனும் கூட. யூதாவின் ராஜாவாகிய யோயாக்கிமுடன் எசேக்கியேலும் அநேகரோடு அடிமைகளாக கேபார் நதி கரையோரம் உள்ள மேசபொட்டாமிஸ் என்ற இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். இங்குதான் எசேக்கியேலின் புத்தகத்தில் அவனுக்குக் கிடைத்த தெய்வாதீன வெளிப்பாடுகள் குறிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகள் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்ட பின்பு, அவன் தீர்க்கதரிசனம் உரைக்கத் தொடங்கி, தொடர்ந்து இருபத்திரண்டு ஆண்டுகள், விக்கிரக ஆராதனை மற்றும் துன்மார்க்கத்தனத்தைக் குறித்தும் தைரியமாய் தன் ஜனங்களிடம் எடுத்துக் கூறினான், அவர்களை விலகிடவும் செய்தான். இதினிமித்தம் எசேக்கியேல் தன் ஜீவனை இழந்தான். யூதர்கள் மேதியர்கள் மற்றும் பாரசீகர்கள் எசேக்கியேலின் நினைவுகளை பயபக்தியோடு போற்றி பேணுகிறார்கள். எசேக்கியேல் எரேமியா, யோயாயசின், யோயாகீம் மற்றும் நெபுகாத்நேச்சர் போன்றவர்கள் காலக்கட்டத்தில் வாழ்ந்தவன். பாபிலோனில் (கேபார் நதியண்டையில்) அடிமைத் தனத்திற்குள் இருந்த யூதா ஜனங்களுக்கு எசேக்கியேல் தீர்க்கதரிசியாக ஊழியம் செய்தான்.



எசேக்கியலின் எழுத்துக்ளிள் ஓர் உத்துவேகம் தெளிவாகத் தெரிகிறது. அவ்வெழுத்துகளில், அவன் இருதயத்தின், கீழ்ப்படியாமையை எதிர்ப்பதையும் அடிபனிந்து ஒரு தீர்க்கதசியாக யோசித்து, ஒரு தீர்க்கதரிசியாக உணர்ந்து தன் ஊழியத்தைச் செவ்வையாய் செய்து வந்தான். இது முற்றிலும் எரேமியா தீர்க்கதரிசியின் ஊழியத்தோடு ஒப்பிடுகையில் முற்றிலும் வேறுபட்டுள்ளது. எசேக்கியேல் மிகவும் உணர்ச்சி வயப்படக் கூடியவன் என்பதை அவன் மனைவியின் மரணத்தின் மூலம் அறியலாம் (எசே.14:15-18). எசேக்கியேலின் மையக் கருப்பொருள், எருசலேம் பட்டணம் நிர்மூலம் ஆகும் என்று முன் உரைத்ததாகும். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, எசேக்கியேலின் ஊழியங்கள் பாபிலோனில் அடிமையாயிருந்த இஸ்ரவேல் ஜனங்களைத் தேற்றும் நோக்கமாயிருந்தது. எசேக்கியேல், இன்னும் கொஞ்சம் காலத்தில் விடுதலை அடையப் போகிறீர்கள் என்று பாபிலோனில் இருந்த யூத ஜனங்களுக்கு ஆறுதலாக சொல்லித் தேற்றினான். மட்டும் அல்லாமல், பாழடைந்த எருசலேம் மறுபடியும் எடுத்துப் புதுப்பிக்கப்படும் என்று சொல்லி ஆற்றித் தேற்றினான். வரலாற்று வல்லுநர்கள் கூற்றின்படி, பக்தாத் நகரின் அருகில் உள்ள ஒரு கல்லறை போன்ற கட்டடம், எசேக்கியேலின் கல்லறை என்று கூறுகிறார்கள். எசேக்கியேல் தன்னுடைய ஜனங்களின் தலைவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளான் என்று வரலாற்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

எசேக்கியேல் புஸ்தகத்தில் உள்ள மற்ற விவரங்களைக் கவனிக்கும் முன், எசேக்கியேலின் மற்ற விவரங்களை அறிந்து கொள்ளுவோம். எசேக்கியேல் ஆயிரம் வாலிபர்களில் ஒருவனாய் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டான். நாடு கடத்த்தப்படுமுன், எசேக்கியேல் ஒரு ஆசாரியனாக பயிற்சிப் பெற்றான். இஸ்ரவேலின் இருண்ட காலக் கட்டத்தில் யேகோவா தேவன் எசேக்கியேலை ஒரு தீர்க்கதரிசியாக அழைத்தார். 

150 ஆண்டுகளுக்கு முன்பு, ஏசாயா எப்படி ஒரு மகா பயங்கரமான தரிசனத்தைக் கண்டானோ, அவ்வாறே எசேக்கியேலும் ஒரு தரிசனத்தைக் கண்டான். இத்தரிசனத்தின் மூலம் எசேக்கியேல் ஒரு ஆவிக்குரிய எழுப்புதல் அடைந்தான். எசேக்கியேல் தலை வணங்காத கழுத்துள்ள ஜனத்திற்குத் தீர்க்கதரிசியாக விளங்கினான். இந்நிகழ்வுக்குப் பிறகு எசேக்கியேல் மாறுபட்ட மனுஷனாக விளங்கினான். இருப்பினும், யெகோவா தேவனின் செய்திகள் மாறாமல் இருந்தாலும், எசேக்கியேல் மற்றும் ஏசாயா தீர்க்கதரிசிகளின் காலங்களில் உள்ள சூழ்நிலைகள் முற்றிலும் மாறுபட்டிருந்தன. உதாரணத்திற்கு, ஏசாயா, புயல் வரும் என்று முன் அறிவித்தான். எசேக்கியலோ, புயல் மத்தியில் இருந்து, தேசத்துக்கு வரும் தோல்வியையும் அழிவையும் அறிவித்தான். இக்காலக் கட்டத்தில்தான் எருசலேம் பட்டணம் அழிவிலிருந்து தப்பிப் போவதில்லை என்றும் அறிவித்தான். மற்றும் எசேக்கியேலின் மனைவியும் மரித்துப் போனதின் நிமித்தம் மன அழுத்தத்திற்குள்ளானான். 

எருசலேம் மதில்களுக்குள் களவாளியாக இருக்கும்படி யெகோவா தேவன் எசேக்கியலை அழைத்தார். இப்படிப்பட்ட ஒரு அழைப்பு மிகவும் ஆபத்து நிறைந்த ஓர் ஊழியமாயிருந்தது. எசேக்கியேல் தன் வேலையில் கவனக்குறைவு உள்ளவனாய் இருப்பானாகில், அவனும் அவன் பட்டினமும் கவிழ்ந்து போகும் அபாயம் இருந்தது. மற்றும் எசேக்கியேல் தன் ஊழியத்தில் தொடர்ந்து நீடிக்க பேண்டுமாகில், அவன் கண்ணும் கருத்துமாய் கொடுக்கப்பட்டுள்ள பணிகளைச் செவ்வையாய் செய்ய வேண்டும். எசேக்கியலின் செய்திகளின் மையக் கருத்து, ஒவ்வொரு தனி மனிதனும் யெகோவா தேவனக்குத் தன்னுடைய செய்கைக்குத் தக்க பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளான் என்பதாகும். மற்றும், யெகோவா தேவன் கீழ்ப்படிதலையும், ஆராதனைகளையும் ஒவ்வொரு இஸ்ரவேலரிடமிருந்து எதிர்ப்பார்க்கிறார்.


எசேக்கியேல் புஸ்தகத்தின் பொருளடக்கம்
பொதுவாக எல்லா அறிஞர்களாளும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து, இப்பத்தகத்தை எழுதியவர் எசேக்கியேல் என்றும், இவர் கி.மு.592ல் சிதேக்கியாவின் ஆட்சிக் காலங்களில் அல்லது யோயாக்கீம் சிறை பிடிக்கப்பட்ட பின்பு தீர்க்கதரிசனம் உரைக்கும் ஊழியம் செய்தார் என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இஸ்ரவேலரிடம் எசேக்கியேல் செல்வாக்கு பெற்றவராயும் விளங்கினார் (எசே.8:1, 14:1, 20:1)

எசேக்கியேலின் புஸ்தகம் ஒன்பது பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. இவை சம்பவங்களின் வரிசையின் படி பகுக்கப்பட்டுள்ளதன.
1.     எசேக்கியேல் தீர்க்கதரிசன ஊழியத்திற்கு அழைக்கப்படுதல் (எசே.1-3).
2.     எருசலேம் நிர்மூலம் ஆகும் என்று தீர்க்கதரிசனம் உரைத்தல் (எசே.3:15-17).
3.     இஸ்ரவேல் சிறைப்பட்டுப் போகும் தரிசனமும் ஒரு சிலரே தங்களுடைய விசுவாசத்தைக் காத்துக் கொள்வார்கள் என்று உரைக்கப்படுதலும்.
4.     தொடர்ச்சியான முன் எச்சரிக்கையும் கடிந்து கொள்ளுதலும் கொடுக்கப்படுதல் (எசே.12-19).
5.     தொடர்ச்சியாக வரும் ஆக்கினைத் தீர்ப்பு குறித்து முன் எச்சரிக்கை விடப்படுதல் (எசே.20-23).
6.     கடைசி கால நியாயத் தீர்ப்பு முன்னுரைக்கப்படுதல்.
7.     யூதர்கள் மனமாறவும் தங்களைத் தாங்களே மறுரூபமாக்க்கப்பட ஏவப்படுதல் (எசே.33-39).
8.     கடைசி காலத்தில் எழுப்பப்படப் போகும் பட்டணமும் அதின் ஆலயமும் தரிசனம் கொடுக்கப்படுதல்.

இப்புதகம் பொதுவாகக் கவிதை நடையில் எழுதப்பட்டுள்ளது.

 2.     சாதனைகளும் அவனின் வல்லமையும்.
2.1.          எசேக்கியேல் ஓர் ஆசாரியன். ஆனால் கடவுள் அவனை ஒரு தீர்க்கதரிசியாக அழைத்தார்.
2.2.          அவனுக்குத் தெளிவான தரிசனமும் வல்லமையான தேவ செய்திகளும் கொடுக்கப்பட்டது.
2.3.          பாபிலோனுக்குச் சிறைபட்டுப் போன இஸ்ரவேல் வம்சத்தாருக்கு யெகோவா தேவனின் செய்தியைக் கொண்டு வருகிறவனாய் திகழ்ந்தான்.
2.4.          யெகோவா தேவன் எசேக்கியேலை அவன் அழைக்கப்பட்ட ஊழியத்திற்கு ஏற்றவாறு உருமாற்றி அமைத்தார் – கடின இருதயமுள்ள இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஏற்றவாறு, எசேக்கியேலை தைரியசாலியாகவும் பெலவானாகவும் மாற்றினார்.



எசேக்கியேல் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்
1.1.          யேகோவா தேவன் நம் ஒவ்வொருவரின் மேலும் தனி அக்கறை உற்றவராயிருக்கிறார். ஆனால், நாம் அந்த இஸ்ரவேல் ஜனங்கள் போல வெகு விரைவில் அதை மறந்து போகிறோம். உலக சூழ்நிலைகளை கவனிக்கும் பொழுது நாம் ஒன்றும் இயலாதவர்கள் போலவும், நம்மை நாமே கருதுகிறோம். ஆனால், யெகோவா தேவன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டும், சகலத்தையும் தன்னுடைய அதிகாரத்திற்குள் அடக்கி ஆண்டுக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு யெகோவா தேவனை அறிவதன் மூலம் நாம் நம்முடைய வாழ்வில் புதியதோர் அர்த்தத்தை ஆண்டு கொள்ள முடியும். உங்களுடைய ஆன்மாவின் மதிப்பென்ன என்று தெரியுமா? உங்களுடைய கிரயம் உங்களிடம் இருக்கும் பணம், சொத்து, கல்வி, அந்தஸ்து போன்றவைகளால் ஈடுகட்ட முடியுமா? அல்லது உங்களுடைய ஆன்மாவின் மதிப்பை, யெகோவா தேவனே படைத்து அதைத் தெரிவிக்கிறாரா?

1.2.          யெகோவா தேவன் தம் திட்டத்தைத் திட்டமிட்டபடியே நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார். அவருடைய ஜனங்கள் பலமுறை தோல்வியுற்றபோதும், அது அவர் தன் திட்டத்தை நிறைவேற்றும் வேட்கையிலிருந்து பிரளச் செய்யாது.

1.3.          நீங்கள் எடுக்கும் முடிவே, உங்களின் நித்திய ஜீவனின் இலக்கை அடைவதா இல்லையா என்று தீர்மானிக்கும்.

1.4.          ஒவ்வொரு நம்பிக்கையற்ற சூழ்நிலையிலும் யெகோவா தேவன் தன்னுடைய திட்டத்தை நிறைவேற்ற ஜனங்களை ஏற்படுத்தியுள்ளார்; ஏற்படுத்துகிறார்.



வேதாகம ஆதாரம்
4.1.          எசேக்கியேலின் கதைகள் 2 இராஜாக்கள் 24:10-17ல் கூறப்பட்டுள்ளது.
4.2.          யூனிவர்சல் அகராதி, பக்கம் 158-159, ஏ,ஆர்.பக்லன்ட்ஸ்.
4.3.          என்.ஐ.வி ஆராய்ச்சி வேதாகமம், பக்கம் 1405
4.4.          IDB வரிசை E-J, பக்கம் 203-305



ஆராய்ச்சிக்கான கேள்விகள்
5.1.          ஏன் எசேக்கியேல் தன் ஜனங்களோடு சிறையிருப்பில் இருக்கும்போது கர்த்தரின் செய்தியை;r சொன்னான்?
5.2.          இஸ்ரவேல் சிறைபிடிக்கப்பட்ட போது எசேக்கியேல் எங்கு ஊழியம் செய்து வந்தான்?
5.3.          எசேக்கியேலை யெகோவா தேவன் எவ்வாறு பண்படுத்தினார்?
5.4.          எசேக்கியேலின் அழைப்பு என்ன?
5.5.          என்ன பாடம் நாம் கற்றுக் கொள்கிறோம்?



மொழிபெயர்ப்பு:
ஜே.ஜி.ராபின்சன் விக்டர்
சிலிம் ரிவர், பேராக்


Friday, September 9, 2011

117 ரோமபுரிய நூற்றுக்கதிபதி


117  ரோமபுரிய நூற்றுக்கதிபதி

ரோம அதிகாரி, நூறு பேருக்குப் பொறுப்பாளி



1.   கரு வசனம்
இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தனக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (லூக்கா 7:9)



2.   சுருக்கத் திரட்டு
2.1.      நூற்றுக்கதிபதி இயேசுவின் உதவியை நாடி யூதரில் சில மூப்பரை அவரிடம் அனுப்புகிறான்.

2.2.      இயேசு தேவனால் அனுப்பப் பட்டவர் என்று இவன் விசுவாசித்தான்.

2.3.      மனித இனத்திற்கென்று தேவனுடைய செய்தியை யூதர்கள் கொண்டிருப்பதாக நூற்றுக்கதிபதி அறிந்திருந்தான்.

2.4.      இவன் ஜனங்களை நேசித்தபடியால், அவர்களுக்கென்று ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டியிருந்தான், தேவைப்படும் நேரத்தில் இயற்கையாகவே இவன் இயேசுவிடம் திரும்ப வேண்டியதாயிற்று.

2.5.      இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப் பட்ட விசுவாசத்தைக் காணவில்லைஎன்று இயேசு இவனைப் பாராட்டிச் சொல்லுகிறார்.

                                                        

3.   அறிமுகம் - இவனது கதை
3.1.     மற்றவர்கள் இவனை எப்படிப் பார்த்தனர்?

3.1.1.   இவன் யூத ஜனங்களை நேசித்தபடியால், ஒரு ஜெப ஆலயத்தையும் அவர்களுக்கென்று கட்டியிருந்தான்.

3.1.2.   நம்பிகையின் நாயகன், தேவனை சரியான இடத்தில் தேடினவன்.

3.1.3.   யூதர்களின் பாரம்பரிய கோட்பாடுகளில் இவன் வைத்திருந்த நன்மதிப்பு இயேசுவிடம் இவன் வெளிப்படையாக இருந்திருக்க முடியும் என  

3.1.4.   அறியமுடிகிறது.

3.1.5.   தனது வேலைக்காரனையும் நேசித்தவன்.

3.1.6.   இயேசுவின் மேல் இவனுக்கு நம்பிக்கை இருந்தது.

3.1.7.   இயேசுவின் வல்லமையையும் அதிகாரத்தையும் தாழ்மையோடு

3.1.8.   விசுவாசித்தவன். ஒருவார்த்தை மாத்திரம் சொல்லும் என் வேலைக்காரன் சுத்தமாவான்என்று அவன் கூறினான்.

3.1.9.   வேலைக்காரன் மீது இவன் கொண்டிருந்த அன்பு இவனை இயேசுவின் சீஷனாக்க உதவியது.


3.2.     இயேசு இவனை எப்படிப் பார்த்தார்?

3.2.1.   இவனுடைய தன்னடக்கத்தை இயேசு கண்டார்.

3.2.2.   இவன் ஓர் உறுதியான தன் நம்பிக்கையுடையவன்.

3.2.3.   இரானணுவத்தில் அவன் உயர் பதவியில் இருந்ததனால் இயேசுவின் அதிகாரம் செயல்படும் விதத்தை ஆழமாக அறிந்திருந்தான்.

3.2.4.   இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப் பட்ட விசுவாசத்தைக் காணவில்லைஎன்று இயேசு சொல்கிறார் (லூக்கா7:9).

3.2.5.   நூற்றுக்கு அதிபதியினுடைய நம்பிக்கை அவனுடைய வேலைக்காரனைச் சுகப்படுத்தியது.





4.   நாம் கற்கும் பாடங்கள் என்ன?
4.1.       நாம் இயேசுவைத் தேடினால்; அவரைக் குறித்து அறிய முடிவது மட்டுமின்றி, அது அவர்மேல் உறுதியான நம்பிக்கையையும் கொடுக்கும்.

4.3.      இவன் நமக்கு கூறுவது என்னவென்றால் ஒரு நபர் இயேசுவோடு தொடர்பு கொண்டிருந்தால் நாம் எண்ணுவதை விட நெருக்கமாக பழகுபவராக இருக்கலாம்

4.3.      லூக்கா 7ம் அதிகாரத்தில், நூற்றுக்கு அதிபதிக்கும் யூத தலைவர்களுக்கும் இடையே நல்ல உறவு இருந்ததைக் காண முடிகிறது. எனினும் லூக்கா 8:5- 13 போன்ற வசனங்கள் இவனுடைய நம்பிக்கையை வலியுறுத்தி காண்பிக்கிறது.

4.4.      நூற்றுக்கு அதிபதியினுடைய நம்பிக்கை குறிப்பாக ஆச்சரியப்படத்தக்கது, ஏனெனில் இவன் ஒரு புற ஜாதியானாக இருந்தபோதிலும் அன்பான கடவுளை குறித்து அறிந்திருந்தான்.



5.   வேதாகமக் குறிப்புகள்
5.1.     மத்தேயு 8:5-13 மற்றும் லூக்கா 7:1-10



6.   கலந்துரையாடலுக்கான கேள்விகள் 
6.1.      நூற்றுக்கு அதிபதி யார்?

6.2.      யூதர்கள் இவனை ஏன் உயர்வாக மதித்தனர்?

6.3.    லூக்கா 7:1-10ன் படி இந்த நூற்றுக்கு அதிபதி ஏன் நேரடியாகச் சென்று இயேசுவை தன்னுடைய இல்லத்திற்கு அழைக்க வில்லை?

6.4.    இயேசு இவனை எவ்வண்ணம் பாராட்டினார்? (லூக்கா 7:9)

6.5.    நாம் இவனது வாழ்க்கையிலிருந்து கற்கும் பாடங்கள் என்ன?







மொழியாக்கம்:
ஜான் ஆரோக்கியசாமி,
கிள்ளான்.