Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Tuesday, November 22, 2011

72. ராகாப் என்ற விலைமாது


72.   ராகாப் என்ற விலைமாது
தன் விசுவாசத்தினால் யோசுவாவின் இரு ஒற்றர்களையும் காப்பாற்றினாள்.
 

சுருக்கம்
·       விலைமகள் ராகாப் எரிகோவில் வாழ்ந்து வந்தாள்.
·       யோசுவாவின் இரு ஒற்றர்கள் அவள் வீட்டில் தங்கி இருந்தனர். அவளோ, அவர்களை ஒளித்து வைத்து அரசாங்க ஊழியர்களிடம் இருந்து காப்பாற்றினாள். வீட்டு மாடியில் ஏற்றி அங்கிருந்த சன்னல் தட்டைகளுள் அவர்களை மறைத்து வைத்தாள்.
·       தன் எதிர்காலத்திற்காக அவர்களோடு ஓர் உடன்படிக்கை செய்து கொண்டாள்.
·       அவள் ஒரு கயிற்றின் மூலமாக அவர்களைச் சன்னல் வழியே இறக்கி விட்டாள்.
·       எரிக்கோ நகர் வீழ்ச்சி அடைந்தது. அவளும் அவள் குடும்பத்தினரும் காப்பாற்றப்பட்டனர். பிறகு அவர்களை இஸ்ரவேல் குடிமக்களாக மாற்றினர்.
·       புதிய ஏற்பாட்டில் அவள் ஒரு முன்மாதிரியானவள்.
·       விலைமாதான ராகாப் ஒற்றர்களை உபசரித்து ஏற்று அவிசுவாசிகளுடன் அழியாமல் தப்பித்துக் கொண்டது விசுவாசத்தினாலேயே.
 

அவளின் கதை
இராக்கா என்றால், மிகவும் கொடுமையாக நடந்து கொள்பவள். அவள் எரிக்கோ நகரில் வசிக்கும் ஒரு விலைமாது. அவள் மக்களிடம் இருந்து ஒதுங்கி வாழ்ந்து வந்தாள்,, வெறுக்கப்பட்டவள். அவளுடைய வீடோ நகரமதிலோடு ஒட்டி இருந்தது. வழி போக்கர்களுக்குத் தங்கும் வசதியும் உதவியும் செய்து வந்தாள். இஸ்ரவேல் ஒற்றவர்களுக்கு நல்ல ஒதுங்கும் இடமாக அமைந்திருந்தது.
இஸ்ரவேலரின் கதைகள் ஊரெங்கும் பரவி வந்தது. இப்பொழுது அவர்கள் நாட்டைத் தாக்க முற்பட்டனர். இராக்க மதிப்பிற்குரியவளாக இருந்தாள். அவள் தன் பயத்தை எரிக்கோ மக்களுடன் பகிர்ந்து கொண்டாள். அவள் தனியாக இறைவனின் மீட்பை அடைய விரும்பினாள். அவள் இறைவன் மீது வைத்த விசுவாசத்தினால் அந்த இரு ஒற்றர்களையும் பொய் சொல்லி அதிகாரியிடம் இருந்து காப்பாற்றினாள். அவளுக்கு வரவிருக்கும் ஆபத்தை நன்கு புரிந்திருந்தாள். ஒற்றறர்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தால் அவள் கண்டிப்பாக கொள்ளப்படுவாள் என்பதையும் அறிந்திருந்தாள். அதே சமயத்தில் கடவுள் அறுளையும் இஸ்ரவேலர்களையும் கண்டிப்பாகக் காப்பாற்றுவார் என்பதையும் புரிந்திருந்தாள். அவளின் அசைக்க முடியாத விசுவாசத்தினால் அவளும் அவள் சார்ந்த உறவினர்களையும் இறைவன் பாதுகாப்பாக மீட்டார்.
இறைவன் மானிடர் மூலம் செயல்படுவார். உதாரணம் ராகாப். கடவுள் அவளை நினைவு கூர்ந்தார். காரணம், அவளுடைய விசுவாசம் அவள் செய்யும் தொழில் அல்ல. நீயும் அப்படி ஒரு சில நேரத்தில் சோதிக்கப்படலாம். ராகாப் உயர்த்தப்பட்டாள். காரணம், அவள் கடவுளின் மீது வைத்த நம்பிக்கையே. நீயும் முடிந்தால் அவ்வாறு செயல்படு.


2.      உறுதியும் அதன் வெளிப்பாடும்
1.1.   போசாவின் மூதாதையாள் தாவீதும் இயேசுவும்.
1.2.   இரு பெண்கள் மட்டும் விசுவாசத்தில் கூறப்பட்டுள்ளது.
1.3.   ஆய்வில், மற்றவர்களுக்குத் தானே உதவ முன்வந்தவர்கள்.
 
3.      பெலவீனமும் தவறும்
3.1.       அவள் ஒரு விலைமாது.

 நாம் கற்றுக் கொள்வது
4.1.      அவளுடைய பயம் இறை மீட்பில் தன் விசுவாசத்தைப் பாதிக்கவில்லை.
 
வேதாகம மேற்கோள்கள்
ராகாபைப் பற்றி யோசுவா 2, 6..22-23,, மத்தேயு 1..5, எபிரேயர் 11..31, யாக்கோபு, யோசுவா பழைமை???? ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது.

 6.       கலந்துரையாடலுக்கான கேள்விகள்
1)     ஏன் ராகாப் இஸ்ரவேலர் வரலாற்றில் முக்கியமானவள்?
2)     அவள் எந்த வகையான சிரமத்தைத் துணிந்து ஏற்றுக் கொண்டாள்?
3)     அவள் யோசுவாவுக்கு என்ன உறவு?
4)     இஸ்ரவேலர் கடவுளைப் பற்றி என்ன அறிந்திருந்தாள்?
5)     ராகாபைப் போல் நாம் எவ்வாறு திருச்சபையில் உதவு முடியும்?
6)     கடவுளுடைய பணியை எவ்வாறு நிறைவேற்றினாள்?

மொழிபெயர்ப்பு..
எஸ்.அல்பி, தைப்பிங்
45.   ரூபன்
யாக்கோபு லீயான் இவர்களின் மூத்த மகன்

முக்கிய வசனம்:
3 ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்.
 4 தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய மஞ்சத்தின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே. (ஆதியாகமம் 49:3-4)        


சுருக்கமான குறிப்புகள்:
·       ரூபன் யாக்போபு லீயான் இவர்களுடைய மூத்த புதல்வன்.
·       அவனிடம் சில பெருமைப்படக்கூடிய குணாதிசயங்கள் உண்டு.
·       யோசேப்பைக் கொல்ல வேண்டாம் என்று தன் சகோதர்ர்களிடம் கூறினான்.
·       பெஞ்சுமெனை விடுதலை செய்வதற்காக தன் சொந்த 2 மகன்களை அடமானம் வைக்கவும் தயங்கவில்லை.
·       தன் தந்தையின் வைப்பாட்டியுடன் உறவு கொண்டான்.
·       நீயே, தண்ணீரைப் போல் வடிந்து போனாய், நீ ஒருகாலும் மேன்மை அடைய மாட்டாய்.



1.  முன்னுரை:
அவன் பெயருக்குப் பொருள், ‘நீ என் வலிமையும் என் துயரத்தின் அடிப்படையுமானவன். பெற்றோர்களே பிள்ளைகளின் செயல்களுக்கு முதல் நீதிபதிகள். யாக்கோபு தன் மகன் ரூபனின் குணாதிசயங்களை நீருடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார். உரைந்த நீருக்குத் தனிப்பட்ட சுயமான வடிவம் கிடையாது. அது எப்பொருள் இருக்கும் திடப்பொருளைப் போல் காட்சி அளிக்கும். ரூபன் எப்பொழுதும் நல்ல குணங்களை உடையவன். ஆனால், அவன் மக்கள் மத்தியில் எதிர்த்துப் போராடும் தன்மை இல்லாதவனாக இருந்தான். அவனின் உறுதியற்ற குணத்தினால் அவனை நம்புவது சிரமம். அவனிடம் இருவகையான குணங்களைக் காணலாம். ஒன்று, தனிப்பட்ட பொது நிலை. இது ஒன்றை ஒன்று பேறுப்பட்டு இருந்தது யோசேப்புக்கு எதிராக முடிவெடுக்கும் போது தன் சகோதரர்களுடன் ஒத்துப் போனான்.

தன் சகோதரர்களின் விருப்பத்தைக் கேட்டதனால் தன் சொந்த கருத்தைச் செயலாக்கம் செய்ய முடியவில்லை.      



2.  பலமும் சாதனைகளும்:
1.     மற்ற சகோதர்ர்கள் யோசேப்பைக் கொலை செய்வதிலிருந்து பாதுகாத்தான்.
2.     பெஞ்சுமெனைப் பாதுகாக்க தன் சொந்த மகன்களை அடமானம் வைத்துத் தன் தந்தையின் மீது அவன் கொண்ட அன்பை வெளிப்படுத்துகிறான்.



3.  பலவீனங்களும் தவறுகளும்:
1.     தன் தந்தையின் வைப்பாட்டியுடன் உறவு கொண்டான்.


4.  அவன் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்:
1)     பொது வாழ்விலும் சொந்த வாழ்விலும் செயல்பாடு சமமாக இருக்க வேண்டும். இல்லையேல் ஒன்று மற்றொன்றை அழித்துவிடும்.
2)     பாவத்திற்கான தண்டனை உடனடியாக இல்லை. ஆனால் நிச்சயம் உண்டு. (தப்பிக்க முடியாது)
 

5.  வேத ஆதாரங்கள்:
ரூபனின் கதை / சரித்திரம் ஆதியாகமம் 29-50ல் சொல்லப்பட்டுள்ளது.



6.  விவாதத்துக்குரிய கேள்விகள்:
1.        ரூபனின் பின்னணியைக் கூறு.
2.        அவனுடைய பலமும் பலவீனமும் யாவை?
3.        அவனுடைய வாழ்க்கையிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்கிறோம்?
4.        எவ்வாறு ரூபனின் தந்தை அவனை ஆசீர்வதித்தார்? (ஆதி.49:4)
5.        யோசேப்பை ஏன் தந் சகோதர்ர்களிடமிருந்து பாதுகாக்க முடியவில்லை?



மொழி பெயர்ப்பு:
எஸ்.அல்பி, தைப்பிங்.

Saturday, November 19, 2011

47. யோவேல் தீர்க்கதரிசி

 பெத்துவேலின் குமாரன்.

முக்கிய வசனம்:
          " ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாய் இருக்கிறார்".  (யோவேல் 2:12–13).




சுருக்கமான கதை:
.  யோவேல் நியாயத்தீர்ப்பைப்பற்றியும் பரிசுத்தாவியின் அபிஷேகத்தைப்பற்றியும் தீர்க்கதரிசனம் உரைத்தார்.
.  அவர் மக்களுக்கு சொன்ன கருணையான அறிவுரைஆண்டவரிடத்தில் திரும்புங்கள்.
.  அவருடைய செய்திஆண்டவரின் நாமத்தை அழைத்த ஒவ்வொருவரும் காப்பாற்றப்படுவார்கள்.
.  அவர் மக்களை மனம் திருந்தச்சொன்னார்.

  

1.  முன்னுரை:
       யோவேலைப்பற்றி நமக்கு மிகச் சிறிய அளவே தெரியும். அவர், "யோவேல், பெத்துவேலின் குமாரன்" என்று மட்டுமே நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்.(யோவேல் 1:1). யோவேல் என்ற பெயருக்கு "யெஹோவாவே ஆண்டவர்" என்று பொருள். யோவேலின் கவலை தெற்கு தேசத்தைப்பற்றியே இருந்தது. யூதேயாவில் ராஜாவே இல்லாதபோதுதான் யோவேலின் புத்தகம் எழுதப்பட்டது என்று சொல்லப்படுகிறது. ஆண்டவருடைய ஆலயம் யோவேலின் காலத்தில் மீண்டும் கட்டப்பட்டது {யோவேல் 1:14; 2:17). 520 ஆம் வருடத்துக்குப்பின் ஆகாயும் சகரியாவும் ஆலயத்தைக் கட்டி முடித்ததாகவும் சொல்லப்படுகிறது. கிரேக்கரோடு தொடர்புகொண்டிருந்ததற்காக யோவேல் தீருவையும், சிதோனியரையும், பிலிஸ்தியரையும் கண்டித்தார். யோவேல் தன் தீர்க்கதரிசனத்தை யூதேயா யாராலோ ஆக்கிரமிக்கப்பட்டபோது எழுதினார் என்று சொல்லப்படுகிறது. யோவேல் இந்த நிகழ்ச்சிகளைச் சரித்திரத்தில் எழுதி வைக்கவும், இதின் செய்திகளை தம் பிள்ளைகளுக்கு தெரிவிக்கவும் தம் மக்களுக்கு சொன்னார்(யோவேல் 1:3).

    யோவேலுடைய கவலைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.



2.  இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்ன?
   இந்தப் புத்தகம் யூதாவின் பாவத்தையும் அதனால் கிடைக்கப்போகும் நியாயத்தீர்ப்பையும் குறித்து யூதாவை எச்சரிக்கவே எழுதப்பட்டது. எழுதியவர் யோவேல், பெத்துவேலின் குமாரன்.


3.  இந்தப் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?
    யூதாவின் மக்கள் மிகவும் செழிப்புள்ளவர்களாகி, ஆண்டவரை மறந்தார்கள். சுயனலமுள்ளவர்களாகவும், விக்கிரக ஆராத்னைக்காரர்களாகவும், பாவிகளாகவும் மாறினார்கள். இந்த மாதிரியான பாவ வாழ்க்கை ஆண்டவருடைய நியாயத்தீர்ப்பை நிச்சயமாக அவர்கள் மேல் கொண்டு வரும் என்று யோவேல் அவர்களை எச்சரித்தார்.


4. கருப்பொருள்: ஆண்டவரிடம் திரும்புதல்.
    வெட்டுக்கிளிகளால் ஏற்பட்ட நாசத்தின்மூலம் நாட்டிற்கு கிடைத்த தண்டனை காட்டப்பட்டுள்ளது. எல்லோரும் மனம் திருந்தி ஆண்டவரிடம் திரும்பவேண்டும். ஆண்டவருடைய செய்தியை நாம் கவனிக்க வேண்டும் அல்லது பின்னால் அவருடைய கோபத்தை சந்திக்க வேண்டியிருக்கும். அவர் மன்னிக்கிற ஆண்டவர். பாவத்திலிருந்து திருந்தி ஆண்டவரை நோக்கி திரும்பும்போது மன்னிப்பு கிடைக்கிறது. ஆண்டவரிடம் நாம் வருவதெ அவருடைய மிகப்பெரிய ஆவலாயிருக்கிறது.  மீண்டும் ஒரு பெரிய நியாயத்தீர்ப்பு ஏற்படும் முன் ஆண்டவரிடம் திரும்ப மக்களுக்கு விடும் அழைப்பே யோவேல் புத்தகத்தின் முக்கியமான செய்தியாகும்.


5.  பரிசுத்தாவியின் வாக்குத்தத்தம்:
    இது ஒரு முக்கியமான தீர்க்கதரிசனம்.
    ஆண்டவர் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறார். நீதியும், புதுப்பித்தலும் அவர் கையில் இருக்கிறது. முதல் கிறிஸ்தவர்கள்மேல் ஆண்டவருடைய அன்பு எவ்வளவு அதிகமாக இருந்ததோ அதேபோல் நம்மேலும் இருக்கிறது என்பதை பரிசுத்த ஆவி உறுதி செய்கிறது (அப்போஸ்தலருடைய நடபடிகள் 2). நாம் ஆண்டவர்மேல் விசுவாசமாக இருந்து நம் வாழ்க்கையை பரிசுத்த ஆவியின் பலத்துக்கும் நடத்துதலுக்கும் அடியில் வைக்கவேண்டும்.



6.  யோவேலின் காலத்தில் வாழ்ந்த மற்ற தீர்க்கதரிசிகள் யார்?
   ஆகாய், சகரியா, மல்கியா போன்றோர் அவர் காலத்துக்கு சிறிது முன்னால் வாழ்ந்த தீர்க்கதரிசிகள்.

  

7.  முடிவுரை:
   புதிதாக்குதல்:
   தேசத்தின் அழிவைக் குறித்த ஒரு தீர்க்கதரிசனத்துடன் ஆரம்பித்த யோவேலின் புத்தகம் அதன் புதுப்பித்தலைக் குறித்த ஒரு தீர்க்கதரிசனத்துடன் முடிந்தது. ஆச்சரியங்களின் ஆண்டவரை அவர் நமக்கு அறிமுகப்படுத்துகிறார் (யோவேல் 2:12–17). மனம் திரும்புதலின் வற்புறுத்தலோடு தொடங்கிய அவர், அந்த மனம் திரும்புதல் கொண்டுவரும் மன்னிப்பின் வாக்குத்தத்தத்தோடு முடித்தார். யோவேல் மக்களை விழித்து எழுந்து, சோம்பேறித்தனத்தை விரட்டியடித்து, ஆண்டவரிடமிருந்து விலகி வாழ்வதின் ஆபத்தை உணர்ந்து கொள்ளச்சொல்ல முயன்றார்(யோவேல் 1:5). ஆண்டவரின் நாமத்தை கூப்பிடும் யாவரும் காப்பாற்றப்படுவர் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 2 12–14; 32). ஆண்டவரிடம் திரும்புவோர் ஆசீர்வதிக்கப்படுவர். அவரை மறுதலிக்கும் யாவரும் அழிக்கப்படுவர்.

     ஆண்டவர் நம் மத்தியில் இருக்கிறார் (யோவேல் 2:18–27). அவர் தன் பரிசுத்த ஆவியை எல்லோர் மேலும் ஊற்றுவார் (யோவேல் 2:28–32). இவ்வுலகம் புதிதாக்கப்படும். எல்லா தேசங்களும் அவரிடம் சேர்க்கப்படும் (யோவேல் 3:1–8).



8.  வேத ஆதாரங்கள்:
  யோவேலின் புத்தகம், 1 சாமுவேல், 1 நாளாகமம், 2 நாளாகமம் 29:12,  
புதிய சர்வதேச வேதாகமம் பக்கம் 1526–1535, ..பக்லாண்ட்.



9.  விவாதத்துக்குரிய கேள்விகள்:
9.1  யோவேல் யார்?
9.2  அவருடைய தந்தை யார்?
9.3  அவர் எங்கே தீர்க்கதரிசியாக இருந்தார்? ( நாட்டின் தெற்கு பகுதியிலா வடக்கு பகுதியிலா?)
9.4  பரிசுத்த ஆவியின் வருகையைக் குறித்து யோவேல் முன்கூட்டியே உரைத்தார். சரியா? தவறா? (அப்போஸ்தலருடைய நடபடிகளைப் பார்க்கவும்.)
9.5  யோவேலின் புத்தகத்தின் நோக்கம் என்ன?


மொழி பெயர்ப்பு:
திருமதி. கிரேஸ் ஜட்சன்,
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.