Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Sunday, May 6, 2012

27. எஸ்றா

ஆசாரியனும் சதுசேயரும்  

முக்கிய வசனம்
கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.  ( எஸ்றா 7.10 )
 

சுருக்கத் திரட்டு
1.         எஸ்ரா ஓர் ஆசாரியனும், சதுசேயனும் சீர்திருத்தவாதியும் ஆவான்.
2.       எஸ்ரா பாரசீக ஆரசாங்கத்தில் யூதர்களின் சமூக நல காரியதரிசியாக இருந்தவன்.
3.       எஸ்ரா மன விலக்கு என்ற சமூக சீர்திருத்த்த்தைக் கொண்டு வந்தவன்.
4.       எஸ்றா கர்த்தருடைய வார்த்தையைக் கற்றதன் மூலம் அநேக ஆத்துமாக்களைத் தொட முடிந்த்து.


முன்னுரை – அவன் வரலாறு
‘உதவி’ என்பது எஸ்ரா என்ற மகனும் அல்லது பேரனுமானவன். லேவியனாகிய ஆரோனின் வம்சத்தான். பாபிலோனில் 5ம் நூற்றாண்டில் பிறந்தான். எஸ்ரா மோசேயின் ஆகமத்தில் சதுசேயனும் ஆசாரியனுமாக விளங்கினவன் ( எஸ்றா 7.6 ). எஸ்றா இஸ்ரவேல் சிறைபிடிக்கப்பட்ட பின் பிறந்தான். அக்காலக் கட்டத்தில் வேதாகமத்தைக் கருத்தாய் கேட்டு கற்றுத் தேறினான். மற்றும் நில பங்கீடும் முறைமையையும் ஆலயம் கட்டும் முறைமையையும் கற்று அறிந்தான். அதின் விளைவாக, தனக்குள் ஒரு பெரிய வைராக்கியமும் ஏவுதலும் எழும்ப, இஸ்ரவேல் ஜனங்களிடைய விளிப்புணர்ச்சியை ஏற்படுத்த எத்தனித்தான். 

அர்தசஷ்டா ராஜா ( 2வாது அர்தசஷ்டா லாங்கி மாறுஸ் ) அரசாண்ட ஏழாம் ஆண்டு, எஸ்றாவுக்கும் மற்ற யூதா ஜனங்களுக்கும் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல உத்தரவு கிடைத்தது. அவர்களோடு கூட ஆலயத்திற்குத் தேவையான பொருட்களையும் பணத்தையும் எடுத்துச் சென்றார்கள். அதிகாரம் 7ல், எஸ்றாவும் அவன் ஜனங்களும் உபவாசம் இருந்து, ஜெபித்துக் கடவுளின் பாதுகாப்பை நாடித் தேடினார்கள். இது அகாவா ஆற்றங்கரையண்டையில் நடைபெற்றது. மட்டுமல்லாமல், ராஜாவின் முழு ஒத்துழைப்பும் சம்மதமும் கிடைத்தது. 

எஸ்றாவுக்குப் பல சவால்கள் ஏற்பட்டன. எஸ்றா ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்த முற்பட்ட பொழுது பல முட்டுக்கட்டைகளும் எதிர்ப்புகளும் எழுந்தன. யூத குல ராஜ குமாரர்கள் வேற்று குல குமாரத்திகளை விவாகம் பண்ணியருந்தார்கள். இதை எஸ்றா கேள்விப்பட்ட போது, தன் வஸ்திரத்தை இரண்டாகக் கிழித்துக் கொண்டான். மற்றும் தன் தலை மயிரையும் தாடியையும் பிடிங்கியெடுத்தான். எஸ்றாவின் இந்தச் செயல் பாடுகள் தன் குல மக்களுக்கு ஏற்ப்பட்ட நிந்தையினிமித்தம் தாம் அவமானப்படுவதாக தெரிவித்துக் கொண்டான். இதினிமித்தம், எஸ்றா அழுது, பாவ அறிக்கையிட்டு, யேகோவாவின் சமூகத்தில் விழுந்து கிடந்து மன்றாடினான். இந்த மன்றாட்டினிமித்தம் அந்த அந்நிய ஸ்திரிகளை விவாகம் செய்த ராஜா குல குமாரர்கள், தங்கள் தங்கள் அந்திய ஸ்திரிகளை விவாக ரத்து செய்ய தாங்களாகவே இணங்கினார்கள். 

தொடர்ந்து பதின்மூன்று வருடங்கள் எஸ்றாவின் நடபடிகைகள் எழுதப்படவில்லை. பின்பு நெகேமியாவோடு கூட எஸ்றாவை எருசலேமில், மோசேயின் கற்பனைகளைக் கூடியிருக்கும் ஜனங்கள் மத்தியில் வாசிக்கக் காண்கிறோம். மற்றும் மோசேயின் கற்பனைகளைத் தொடர்ந்து ஆசரிப்பின் காலங்களில் வாசித்தான் ( நெகே.8 ). 

வேதாகமத்தில் எஸ்றா என்ற புத்கம் இருக்கிறது. இதில் சிறையிருப்பிலிருந்து நாடு திரும்பிய மக்களின் சரித்திரமும், கோரேஸ் ராஜா கிமு.536ல் கட்டளையிட்டபடியே எருசலேம் தேவாலயம் மறுபடியும் கட்டப்பட்டு தரியு ராஜாவின் ஆட்சிக் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் புத்தகத்தில் ராஜாவாகிய அர்தசஷ்டாவின் கட்டளையின்படி எஸ்றா கிமு.457ல் செய்த பயணத்தைப் பற்றியும் மக்களைச் சீர்திருத்தும்படி அவன் எடுத்த முயற்சி, கடின உழைப்பு பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது.
 

எஸ்றாவின் புஸ்தகத்தில் கீழ்கண்ட விவரங்கள் அடங்கியுள்ளன.
a.       அசீரியாவிலிருந்து யூதேயாவுக்குத் திரும்புதல்.
b.       செசோவா தேவனை ஆலயத்தைக் கட்டியெழுப்பி, ஆராதித்து, தொழுது கொண்டு வாழும் முறைமையை மறுசீரமைப்பு செய்தல்.
c.       சமாரியருக்கு விரோதமாக எதிர்ப்பு கிழம்புதல்.
d.       ஆலயம் கட்டி முடிக்கும் விவரங்கள் உள்ளடக்கியுள்ளன.



சுருங்க்க் கூறின், நேகேமியாவுக்கு ஈடு இணையாக, எஸ்றா தோள் கொடுக்கிறவனாய் இருந்தான். நெகேமியா ஆலயத்தின் மதில் சுவரைக் கட்டுகிற பணியைக் கண்ணும் கருத்துமாய் காத்துக்கொண்டான். ஆனால், எஸ்றாவோ சமூக சீரமைப்புப் பணியைச் செவ்வையாய் செய்தான்.

 ஆலயத்தை மறுபடியும் கட்டியெழுப்பிய 80 வருடங்களுக்குப் பிறகு செருபாபேலின் காலத்தில் எஸ்றாவும் மற்றும் 2000 பேர்கள் தங்கள் தங்கள் குடும்பத்தாரோடு யூதேயாவுக்குத் திரும்பினார்கள். எஸ்றா அர்தசஷ்டா ராஜாவின் சம்மதத்தோடும் ஆசீர்வாத்த்தோடும் ஜனங்களை மறுசீரமைக்கவும் அவர்களுடைய வாழ்வை புதுப்பிக்கவும் திரும்பினான். எஸ்றா, முதலில் தன்னை ஒரு சதுசேயனாக, முழுமையாய் வேதத்தைக் கற்று தேறினவனாக்கிக் கொண்டான். இரண்டாவது, வேத வசனத்தைத் தன் வாழ்க்கையில் கடைபிடிக்க எத்தனித்தான். எஸ்றா தேவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தான். மூன்றாவது, மற்றவர்களுக்கு வேத வசனத்தைக் கற்றுக் கொடுத்தான். மட்டுமல்லாமல் அவ்வசனத்தை எவ்வாறு தங்கள் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்துவது என்ற வழி முறைகளையும் கற்றுக் கொடுத்தான். 

எஸ்றா வல்லமையுள்ள பிரசங்கத்தைப் பிரசங்கித்தான். அவன் பிரசங்கத்தைக் கேட்டவர்கள் மனங்கசந்து, தன் தன் பாவங்களை அறிக்கை செய்தார்கள். மற்றும் திருந்தி வாழ திட்டங்களைத் தீட்டிப் புது வாழ்வு வாழ முற்பட்டார்கள். பின்பு, எஸ்றா நெகேமியாவுடன் சேர்ந்து தங்கள் ஊழியங்களைத் தொடர்ந்தார்கள். யெகோவா தேவன் அவ்விருவரையும் வல்லமையாய் பயன்படுத்தி, தேசம் முழுவதும் எழுப்புதலைக் கொண்டு வந்தார். 

எஸ்றா பல பெரிய காரிங்களைச் சாதித்தான். அவனின் சாதனைக்கு முக்கிய காரணம் அவன் தன் வாழ்க்கையை வேத வசனத்திலிருந்து தொடங்கியதுதான். வேத வசனத்தைக் கண்ணும் கருத்துமாய் கற்று, உத்தமும் உண்மையுமாய் வேத வசனத்துக்குக் கீழ்ப்படிந்தான். தான் கற்றதை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டான். எஸ்றாவோ எல்லா தேவ பிள்ளைகளுக்கும் உன்னதமான எடுத்துக் காட்டாக திகழ்கிறான். நாமும் அவனைப் பற்றி யேகோவா தேவனுக்காக வாழ்வோமா?



2.            எஸ்றாவின் வல்லமையும் அவன் சாதனைகளும்.
1.         தேவதத்தை ஆழமாகக் கற்று, அதின்படி கீழ்ப்படிந்து, மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்தான்.
2.       இரண்டாவது கட்ட ஜனங்களைப் பாபிலோனிலிருந்து, எருசலேமுக்கு வழி நடத்திச் சென்றவன்.
3.       எஸ்றா முதலாம் மற்றும் இரண்டாம் நாளாகமத்தை எழுதியவன் ஆவான்.
4.       தரியு ராஜா, எஸ்றாவை எருசலேமின் நிலவரங்களை அறித்து வர அனுப்பப்பட்டவன். அவன் எருசலேமுக்குச் சென்று, வேதாகமக் கல்வி முறைமைகளை நிறுவி, தரியு ராஜாவுக்கு விவரத்தை அறிவித்தான்.
5.       யெகோவா தேவனின் கட்டளைகளில் காணப்பட்ட நுணுக்கமான பத்திகளைக் கண்ணும் கருத்துமாய் கைக்கொள்ளுவதில் கவனமாயிருந்தான்.
6.       பழைய ஏற்பாட்டில், ஜனங்களில் ஆவிக்குரிய எழுப்புதல் காலங்களில் நெகேமியாவுடன கூட சேர்ந்து உழைத்தவன்.


3.            இவன் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொண்டவை
1.         ஒரு மனிதன் யெகோவா தேவனின் வார்த்தைகளை அறிந்த கொள்ளவும் அதின்படி கீழ்ப்படிந்து நடக்கவும் அவன் மனதில் வாஞ்சையுள்ளவனாயிருந்த்தால் அவனை வல்லமையாய் யெகோவா தேவன் பயன்படுத்துவார்.
2.       யெகோவா தேவனை சேவிக்க முதலில் யெகோவா தேவனின் சேவை என்ன என்பதை அறிந்து கொள்ளுவதற்கு முன்பே, தனிப்பட்ட முறையில் யெகோவா தேவனின் ஊழியம் செய்ய ஒப்புக் கொடுக்க வேண்டும். 


4.            வேதாகமக் குறிப்புகள்
1.         எஸ்றா 7.1-10, நெகேமியா 8.1-12, 36உம் எஸ்றாவைப் பற்றி வாசிக்கலாம். 

5.            விவாதத்திற்கான கேள்விகள்.
1.         ஒரு வேதபாரகனாக, சீர்திருத்தவாதியாக எஸ்றாவின் பங்கு என்ன?
2.       யாருடைய அனுகிரகத்துடன் எஸ்றா எருசலேம் ஆலயத்தைப் புதுப்பிக்க பிரயாசம் எடுத்துக் கொண்டான்?
3.       எஸ்றாவின் பலம் என்ன?
4.       என்ன என்ன பாடங்கள் எஸ்றாவின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ளலாம்?


மொழிபெயர்ப்பு
ஜே.ஜி.ராபின்சன் விக்டர்
சிலிம் ரிவர்

30. ஆகாப்

இஸ்ரவேலின் ராஜா, யேசபேலின் கணவன்


முக்கிய வசனம்
30 உம்ரியின் குமாரனாகிய ஆகாப், தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். 31 நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்தாற்போல் அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை விவாகம்பண்ணினதுமல்லாமல், அவன் போய் பாகாலையும் சேவித்து அதைப் பணிந்துகொண்டு, 32 தான் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலில் பாகாலுக்குப் பலிபீடத்தை எடுப்பித்தான். 33 ஆகாப் ஒரு விக்கிரகத்தோப்பையும் வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கும்படிக்கு தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்ததைப்பார்க்கிலும் அதிகமாய்ச் செய்துவந்தான்.  ( 1இராஜாக்கள் 16.30-33 )


சுருக்கமான குறிப்புகள்
·         பாகாலை வணங்கும் யேசபேலை மணந்து கொண்ட இஸ்ரவேலின் 9வது அரசன்.
·         இவன் பல யுத்தங்களில் வெற்றி பெற்றான்.
·         இவனுடைய மனைவி யேசபோல் பாகாலுக்கு ஒரு கோபில் கட்டினாள்.
·         ஆகாப், சட்டம், நீதியை நிலை நாட்டத் தவறி விட்டான் ( 1இராஜா.21.1-16 ).
·         நாபோத்தின் திராட்சத் தோட்டத்தைத் தவறான வழியில் எடுத்துக் கொண்டான். 



1.              இவனுடைய சரித்திரம்
ஆகாப் என்றால் ( தெய்வீக ) சகோதரன் தகப்பனாக இருக்கிறார் என்று பொருள் படும். இவன் உம்ரி என்ற எட்டாவது அரசனின் மகன். இவனுடைய சரித்திரம் 1இராஜா.16-22ம் அதிகாரங்களில் எழுதப்பட்டிருக்கிறது. பாகாலை வணங்கும் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தியாகிய யேசபேலை விவாகம் பண்ணினான். தன் சகோதரனிடமிருந்து சிங்காசனத்தைப் பறித்துக் கொண்டான். ஆகாபின் ஆட்சி காலத்தில் எலியா தீர்க்கதரிசியின் ஊழியம் சிறப்பாக இருந்தது. இஸ்ரவேலுக்குள் பாகால், அஸ்தரோத் வணக்கத்தை அறிமுகம் செய்து வைத்த தன் கணவனை தெய்வ வழிநடத்தி அவனை மிகக் கொடியவனாக்கினாள். நாபோத்தின் திராட்சத் தோட்டத்தை எழுத்துக கொள்ள ஆகாப் விரும்பியபோது, அந்த்த் திராட்சத் தோட்டம் தன் பிதாக்களின் சுதந்தரம் என்ற காரணத்தினால் மோசேயின் கட்டளையின்படி தான் அதை விற்க முடியாது என்று நாபோத் சொல்லி விட்டதினால் நாபோத்துக்கு விரோதமாகப் பொல்லாப்பு செய்யும்படி யேசபேல் ஆகாபைத் தூண்டினாள். நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று அவன் மேல் பொய் குற்றம் சாட்டி அவனைக் கல்லெறிந்து கொலை செய்யும்படி கடிதம் அனுப்பினாள். 1இராஜா.21ம் அதிகாரம் இந்தக் கொடிய செயலுக்குத் தண்டனையாக ஆகாபின் குடும்பம் முழுவதும் அழிந்து போகும் என்று எலியா அறிவித்தான். ( 2இராஜா.9.26 ) 

ஆகாபின் ஆட்சியின் பெரும் பகுதி தமஸ்குவின் ராஜாவாகிய பெனாதாத்துக்கு விரோதமாக 3 முறை போர் செய்வதில் கடந்து விட்டது. முதல் இரண்டு யுத்தங்களிலும் அவன் முழுமையான வெற்றி பெற்றான். இரண்டாவது போரின் முடிவில் பெனாதாத் ஆகாபிடம் அகப்பட்டுக் கொண்டான். ஆனால் பெனாதாத் தன் தகப்பன் பிடித்த பட்டணங்களைத் திரும்பிக் கொடுத்து விடுவதாகவும், ஆகாபும் தமஸ்குவிலே வீதிகளை உண்டாக்கிக் கொள்ளலாம் என்றும் ஆகாபுடன் உடன்படிக்கை செய்த்தினால் விடுதலை செய்யப்பட்டான். ஆனால் மூன்றாவது யுத்த்த்தில் தேவனுடைய ஆசீர்வாதம் அவனுக்குக் கிடைக்கவில்லை. மிகாயா தீர்க்கதரிசி ஆகாப் தோற்றுப் போவான் என்று எச்சரித்தான். ஆனாலும் மற்ற தீர்க்கதரிசிகள் அனைவரும் ஆகாப் யுத்த்த்திற்குப் போகும்படி வற்புறுத்தினார்கள். அவன் மாறு வேடத்தில் யுத்த்த்திற்குச் சென்றான். ஒருவன் தற்செயலாக வில்லை நானேற்றி எய்த போது அது இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைத் காயப்படுத்திற்று. சாயங்காலத்தில் அவன் இறந்து போனான். சமாரியாவில் அடக்கம் செய்வதற்காக அவன் சரீரம் கொண்டு வரப்பட்டபோது, கர்த்தர் சொல்லியிருந்தபடியே அவன் இரத்த்த்தை நாய்கள் நக்கினது. ( 1இராஜா.22.37-38 )


2.            அவனுடைய பலமும் சாதனைகளும் என்ன?
1.         நாத்தான் தாவீது ராஜாவுக்கு உண்மையுள்ள நண்பனாக இருந்தது போல், ஆகாப் எலியாவைத் தனக்கு உண்மையுள்ள நண்பனாகக் கொண்டிருந்திருக்கலாம். நாத்தான் கூறியதற்கு செவி கொடுத்துத் தாவீது தன் பாவங்களைக் குறித்து மனஸ்தாப்ப்பட ஆயத்தமாக இருந்தான். ஆனால் ஆகாப் எலியாவைத் தனக்கு எதிரியாகப் பார்த்தான். அவன் எலியாவுக்குக் கீழ்ப்படிந்திருக்கலாம். ஆனால் அவன் தேவனுக்கு விரோதமாகச் சென்றான்.
2.       ஆகாப் தன் இஷ்டத்திற்கு இணங்கி ஆபத்தில் மாட்டிக் கொண்டான். சரியான செயலைத் தெரிந்து கொள்ள அவனுக்கு விருப்பமில்லை. ராஜாவாக அவன் தேவனுக்கும் தீர்க்கதரிசியான எலியாவுக்கும் உத்தரவாதமுள்ளவனாக இருந்தான். ஆனால் அவன் தன்னை விக்கிரகாராதனைக்கு வழி நடத்தின ஒரு பொல்லாத மனுஷியை மணந்து கொண்டான். தன் மனைவியின் ஆலோசனைகளுக்குச் செவி சாய்த்தான். தன்னை சூழ்ந்திருந்தவர்களின் ஆலோசனைகளின்படி செய்து தன்னுடைய மரணத்தை எதிர்கொண்டான்.
3.       தேவனுடைய வார்த்தைகள் கூறும் ஆலோசனையை அவன் பின் பற்றத் தவறினான். தேவனுடைய வார்த்தையே நம்பத் தகுந்தது.
4.       அவன் ஒரு சிறந்த தலைவனும் யுத்த வீரனுமாக இருந்தான். 


3.            அவனுடைய பெலவீனங்களும் தவறுகளும்
1.         இஸ்ரவேலின் மிகப் பொல்லாத அரசனாக இருந்தான்.
2.       இவன் யேசபேல் என்ற நாத்திகப் பெண்ணை மணந்து கொண்டு இஸ்ரவேலில் அவள் பாகால் வணக்கத்தைப் பிரசாரம் செய்ய அனுமதித்தான். ( வாழ்க்கைத் துணைவன் அல்லது துணைவியைத் தெரிந்தெடுக்கும் விதமானது நமது வாழ்க்கையில் ஆத்துமப் பிரகாரமாகவும் சரீரப் பிரகாரமாகவும் நம்மைப் பாதிக்கும் ).
3.       ஒரு நிலம் கிடைக்காத்தினால் மணம் சலிப்படைந்தவனாக இருந்த சமயத்தில், அவன் மனைவி அந்த நிலத்தின் சொந்தக்காரனான நாபோத்தைக் கொலை செய்யும்படி ஆட்களை ஏவி விட்டாள்.
4.       அவன் தான் விரும்பியபடியே செய்யும் பழக்கமுள்ளவனான படியால்தான் விரும்பியது தனக்குக் கிடைக்காததால் மன உழைச்சலுக்குள்ளானான். சுயநலத்தைக் கட்டுப்படுத்தாமல் விடும் பட்சத்தில் அது மிகுந்த தீமையை விளைவிக்கும்.
5.       அவனுடைய இந்தப் புதிய உறவு, ஆஸ்தியுடன் அந்நிய தேவர்களின் வணக்கத்தையும் இஸ்ரவேலுக்குள் கொண்டு வந்தது.


4.            முடிவுரை
1இராஜா.22-39ம் அதிகாரங்கள் ஆகாபுடைய ஆட்சியின் காலத்தில் அவன் கட்டின பட்டணங்களைக் குறிப்பிடுகின்றன. எரிகோ மறுபடியும் சீராக்கிக் கட்டப்பட்டது. ராஜாவின் மனைவி முக்கிய ஸ்தானம் வகித்தாள். ஆகாப் பெலவீனமும் சஞ்சல புத்தியும் உடையவனாக இருந்தான்.


5.            விவாதத்திற்கான கேள்விகள்.
1.         ஆகாப் ராஜா யார்?
2.       அவனுடைய ஆட்சிக் காலத்தில் ஊழியம் செய்த தீர்க்கதரிசி யார்?
3.       பாகாலை வணங்கும் மதத்தை ஆதரித்த்து யார்?
4.       யேசபேலைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?
5.       பாகாலை வணங்கும் மதத்திற்கும் இஸ்ரவேலரின் மதத்திற்குமிடைய ஏற்பட்ட யுத்தத்தில் வெற்றி பெற்றது யார்?



மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்

28. எஸ்றா

 ஆசாரியனும் சதுசேயரும்

முக்கிய வசனம்கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.  ( எஸ்றா 7.10 )

[u]சுருக்கத் திரட்டு[/u]
1. எஸ்ரா ஓர் ஆசாரியனும், சதுசேயனும் சீர்திருத்தவாதியும் ஆவான்.
2. எஸ்ரா பாரசீக ஆரசாங்கத்தில் யூதர்களின் சமூக நல காரியதரிசியாக இருந்தவன்.
3. எஸ்ரா மன விலக்கு என்ற சமூக சீர்திருத்த்த்தைக் கொண்டு வந்தவன்.
4. எஸ்றா கர்த்தருடைய வார்த்தையைக் கற்றதன் மூலம் அநேக ஆத்துமாக்களைத் தொட முடிந்த்து.

[u]முன்னுரை – அவன் வரலாறு[/u]
‘உதவி’ என்பது எஸ்ரா என்ற மகனும் அல்லது பேரனுமானவன். லேவியனாகிய ஆரோனின் வம்சத்தான். பாபிலோனில் 5ம் நூற்றாண்டில் பிறந்தான். எஸ்ரா மோசேயின் ஆகமத்தில் சதுசேயனும் ஆசாரியனுமாக விளங்கினவன் ( எஸ்றா 7.6 ). எஸ்றா இஸ்ரவேல் சிறைபிடிக்கப்பட்ட பின் பிறந்தான். அக்காலக் கட்டத்தில் வேதாகமத்தைக் கருத்தாய் கேட்டு கற்றுத் தேறினான். மற்றும் நில பங்கீடும் முறைமையையும் ஆலயம் கட்டும் முறைமையையும் கற்று அறிந்தான். அதின் விளைவாக, தனக்குள் ஒரு பெரிய வைராக்கியமும் ஏவுதலும் எழும்ப, இஸ்ரவேல் ஜனங்களிடைய விளிப்புணர்ச்சியை ஏற்படுத்த எத்தனித்தான்.
அர்தசஷ்டா ராஜா ( 2வாது அர்தசஷ்டா லாங்கி மாறுஸ் ) அரசாண்ட ஏழாம் ஆண்டு, எஸ்றாவுக்கும் மற்ற யூதா ஜனங்களுக்கும் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல உத்தரவு கிடைத்தது. அவர்களோடு கூட ஆலயத்திற்குத் தேவையான பொருட்களையும் பணத்தையும் எடுத்துச் சென்றார்கள். அதிகாரம் 7ல், எஸ்றாவும் அவன் ஜனங்களும் உபவாசம் இருந்து, ஜெபித்துக் கடவுளின் பாதுகாப்பை நாடித் தேடினார்கள். இது அகாவா ஆற்றங்கரையண்டையில் நடைபெற்றது. மட்டுமல்லாமல், ராஜாவின் முழு ஒத்துழைப்பும் சம்மதமும் கிடைத்தது.
எஸ்றாவுக்குப் பல சவால்கள் ஏற்பட்டன. எஸ்றா ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்த முற்பட்ட பொழுது பல முட்டுக்கட்டைகளும் எதிர்ப்புகளும் எழுந்தன. யூத குல ராஜ குமாரர்கள் வேற்று குல குமாரத்திகளை விவாகம் பண்ணியருந்தார்கள். இதை எஸ்றா கேள்விப்பட்ட போது, தன் வஸ்திரத்தை இரண்டாகக் கிழித்துக் கொண்டான். மற்றும் தன் தலை மயிரையும் தாடியையும் பிடிங்கியெடுத்தான். எஸ்றாவின் இந்தச் செயல் பாடுகள் தன் குல மக்களுக்கு ஏற்ப்பட்ட நிந்தையினிமித்தம் தாம் அவமானப்படுவதாக தெரிவித்துக் கொண்டான். இதினிமித்தம், எஸ்றா அழுது, பாவ அறிக்கையிட்டு, யேகோவாவின் சமூகத்தில் விழுந்து கிடந்து மன்றாடினான். இந்த மன்றாட்டினிமித்தம் அந்த அந்நிய ஸ்திரிகளை விவாகம் செய்த ராஜா குல குமாரர்கள், தங்கள் தங்கள் அந்திய ஸ்திரிகளை விவாக ரத்து செய்ய தாங்களாகவே இணங்கினார்கள்.
தொடர்ந்து பதின்மூன்று வருடங்கள் எஸ்றாவின் நடபடிகைகள் எழுதப்படவில்லை. பின்பு நெகேமியாவோடு கூட எஸ்றாவை எருசலேமில், மோசேயின் கற்பனைகளைக் கூடியிருக்கும் ஜனங்கள் மத்தியில் வாசிக்கக் காண்கிறோம். மற்றும் மோசேயின் கற்பனைகளைத் தொடர்ந்து ஆசரிப்பின் காலங்களில் வாசித்தான் ( நெகே.8 ).
வேதாகமத்தில் எஸ்றா என்ற புத்கம் இருக்கிறது. இதில் சிறையிருப்பிலிருந்து நாடு திரும்பிய மக்களின் சரித்திரமும், கோரேஸ் ராஜா கிமு.536ல் கட்டளையிட்டபடியே எருசலேம் தேவாலயம் மறுபடியும் கட்டப்பட்டு தரியு ராஜாவின் ஆட்சிக் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் புத்தகத்தில் ராஜாவாகிய அர்தசஷ்டாவின் கட்டளையின்படி எஸ்றா கிமு.457ல் செய்த பயணத்தைப் பற்றியும் மக்களைச் சீர்திருத்தும்படி அவன் எடுத்த முயற்சி, கடின உழைப்பு பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது.
[u]
எஸ்றாவின் புஸ்தகத்தில் கீழ்கண்ட விவரங்கள் அடங்கியுள்ளன.[/u]
a. அசீரியாவிலிருந்து யூதேயாவுக்குத் திரும்புதல்.
b. செசோவா தேவனை ஆலயத்தைக் கட்டியெழுப்பி, ஆராதித்து, தொழுது கொண்டு வாழும் முறைமையை மறுசீரமைப்பு செய்தல்.
c. சமாரியருக்கு விரோதமாக எதிர்ப்பு கிழம்புதல்.
d. ஆலயம் கட்டி முடிக்கும் விவரங்கள் உள்ளடக்கியுள்ளன.
சுருங்க்க் கூறின், நேகேமியாவுக்கு ஈடு இணையாக, எஸ்றா தோள் கொடுக்கிறவனாய் இருந்தான். நெகேமியா ஆலயத்தின் மதில் சுவரைக் கட்டுகிற பணியைக் கண்ணும் கருத்துமாய் காத்துக்கொண்டான். ஆனால், எஸ்றாவோ சமூக சீரமைப்புப் பணியைச் செவ்வையாய் செய்தான்.
ஆலயத்தை மறுபடியும் கட்டியெழுப்பிய 80 வருடங்களுக்குப் பிறகு செருபாபேலின் காலத்தில் எஸ்றாவும் மற்றும் 2000 பேர்கள் தங்கள் தங்கள் குடும்பத்தாரோடு யூதேயாவுக்குத் திரும்பினார்கள். எஸ்றா அர்தசஷ்டா ராஜாவின் சம்மதத்தோடும் ஆசீர்வாத்த்தோடும் ஜனங்களை மறுசீரமைக்கவும் அவர்களுடைய வாழ்வை புதுப்பிக்கவும் திரும்பினான். எஸ்றா, முதலில் தன்னை ஒரு சதுசேயனாக, முழுமையாய் வேதத்தைக் கற்று தேறினவனாக்கிக் கொண்டான். இரண்டாவது, வேத வசனத்தைத் தன் வாழ்க்கையில் கடைபிடிக்க எத்தனித்தான். எஸ்றா தேவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தான். மூன்றாவது, மற்றவர்களுக்கு வேத வசனத்தைக் கற்றுக் கொடுத்தான். மட்டுமல்லாமல் அவ்வசனத்தை எவ்வாறு தங்கள் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்துவது என்ற வழி முறைகளையும் கற்றுக் கொடுத்தான்.
எஸ்றா வல்லமையுள்ள பிரசங்கத்தைப் பிரசங்கித்தான். அவன் பிரசங்கத்தைக் கேட்டவர்கள் மனங்கசந்து, தன் தன் பாவங்களை அறிக்கை செய்தார்கள். மற்றும் திருந்தி வாழ திட்டங்களைத் தீட்டிப் புது வாழ்வு வாழ முற்பட்டார்கள். பின்பு, எஸ்றா நெகேமியாவுடன் சேர்ந்து தங்கள் ஊழியங்களைத் தொடர்ந்தார்கள். யெகோவா தேவன் அவ்விருவரையும் வல்லமையாய் பயன்படுத்தி, தேசம் முழுவதும் எழுப்புதலைக் கொண்டு வந்தார்.
எஸ்றா பல பெரிய காரிங்களைச் சாதித்தான். அவனின் சாதனைக்கு முக்கிய காரணம் அவன் தன் வாழ்க்கையை வேத வசனத்திலிருந்து தொடங்கியதுதான். வேத வசனத்தைக் கண்ணும் கருத்துமாய் கற்று, உத்தமும் உண்மையுமாய் வேத வசனத்துக்குக் கீழ்ப்படிந்தான். தான் கற்றதை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டான். எஸ்றாவோ எல்லா தேவ பிள்ளைகளுக்கும் உன்னதமான எடுத்துக் காட்டாக திகழ்கிறான். நாமும் அவனைப் பற்றி யேகோவா தேவனுக்காக வாழ்வோமா?
[u]
2. எஸ்றாவின் வல்லமையும் அவன் சாதனைகளும்.[/u]
1. தேவதத்தை ஆழமாகக் கற்று, அதின்படி கீழ்ப்படிந்து, மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்தான்.
2. இரண்டாவது கட்ட ஜனங்களைப் பாபிலோனிலிருந்து, எருசலேமுக்கு வழி நடத்திச் சென்றவன்.
3. எஸ்றா முதலாம் மற்றும் இரண்டாம் நாளாகமத்தை எழுதியவன் ஆவான்.
4. தரியு ராஜா, எஸ்றாவை எருசலேமின் நிலவரங்களை அறித்து வர அனுப்பப்பட்டவன். அவன் எருசலேமுக்குச் சென்று, வேதாகமக் கல்வி முறைமைகளை நிறுவி, தரியு ராஜாவுக்கு விவரத்தை அறிவித்தான்.
5. யெகோவா தேவனின் கட்டளைகளில் காணப்பட்ட நுணுக்கமான பத்திகளைக் கண்ணும் கருத்துமாய் கைக்கொள்ளுவதில் கவனமாயிருந்தான்.
6. பழைய ஏற்பாட்டில், ஜனங்களில் ஆவிக்குரிய எழுப்புதல் காலங்களில் நெகேமியாவுடன கூட சேர்ந்து உழைத்தவன்.

[u]
3. இவன் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொண்டவை[/u]
1. ஒரு மனிதன் யெகோவா தேவனின் வார்த்தைகளை அறிந்த கொள்ளவும் அதின்படி கீழ்ப்படிந்து நடக்கவும் அவன் மனதில் வாஞ்சையுள்ளவனாயிருந்த்தால் அவனை வல்லமையாய் யெகோவா தேவன் பயன்படுத்துவார்.
2. யெகோவா தேவனை சேவிக்க முதலில் யெகோவா தேவனின் சேவை என்ன என்பதை அறிந்து கொள்ளுவதற்கு முன்பே, தனிப்பட்ட முறையில் யெகோவா தேவனின் ஊழியம் செய்ய ஒப்புக் கொடுக்க வேண்டும்.

[u]4. வேதாகமக் குறிப்புகள்[/u]
1. எஸ்றா 7.1-10, நெகேமியா 8.1-12, 36உம் எஸ்றாவைப் பற்றி வாசிக்கலாம்.

[u]5. விவாதத்திற்கான கேள்விகள்.[/u]
1. ஒரு வேதபாரகனாக, சீர்திருத்தவாதியாக எஸ்றாவின் பங்கு என்ன?
2. யாருடைய அனுகிரகத்துடன் எஸ்றா எருசலேம் ஆலயத்தைப் புதுப்பிக்க பிரயாசம் எடுத்துக் கொண்டான்?
3. எஸ்றாவின் பலம் என்ன?
4. என்ன என்ன பாடங்கள் எஸ்றாவின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ளலாம்?

மொழிபெயர்ப்பு
ஜே.ஜி.ராபின்சன் விக்டர்
சிலிம் ரிவர்

96. யூதேயாவின் ஏரோது ராஜாவும் அவனது குடும்பமும்

96. யூதேயாவின் ஏரோத ராஜாவும் அவனது குடும்பமும் ( கி.மு.37.4 )


சுருக்கமான குறிப்புகள்
·         ஏரோது ஏதோமியர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
·         யூதேயாவை 30 ஆண்டுகாலம் அரசாண்டான்.
·         எருசலேம் தேவாலயத்தைக் கட்டினான்.
·         அவனுடைய சந்தேகம் அநேக சிறுவர்களைக் கொன்றது.

முகவுரை – இவனுடைய சரித்திரம்

சகரியா, எலிசபெத்து, மரியாள்,யோசேப்பு, மாற்கு, அந்தேனி, அகஸ்டஸ் ஆகியோர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவன். யூதருக்கு ராஜாவான ஏரோது 1 ( கிமு.40-4 ) . இவனது தகப்பன் யூத மார்க்கத்தைச் சேர்ந்தவனும், இதுமேயாவில் பிறந்தவனுமாயிருந்தான். கிமு.47ல் இவன் ஜூலியஸ் சீஸர் என்பரால் யூதேயா தேசத்தின் காரியஸ்தராக நியமிக்கப் பட்டான். சீஸருடைய மரணத்திற்குப் பின் ஏரோது அந்தோனியின் ஆதரவைப் பெற்று, யூதருடைய ராஜாவாக 33 ஆண்டுகள் ரோமருக்கு உண்மையாக அரசாண்டு வந்தான். அவன் தேவாலயத்துக்காக தாராளமாகச் செலவு செய்தும்கூட அவனை யூதமக்களுக்குப் பிரியமானவான ஆக முடியவில்லை. அவன் ஒரு யூதனாக இஸ்ரவேலின் தேவனுடைய தேவாலயத்தை எருசலேமில் மறுபடி கட்டிய போதிலும், மற்ற இடங்களில் அந்நிய தேவர்களுக்கும் கட்டிய போதிலும் மற்ற இடங்களில் அந்நிய தேவர்களுக்கும் விக்கிரகாராதனைக் காரருக்கும் ஆலயங்களைக் கட்டினான். ஏரோது கிமு.4ம் ஆண்டில் மரித்தான். 

சாஸ்திரிகள் மூவரின் விஜயமும் அதைத் தொடர்ந்து பெத்லெகேமிலள்ள 2 வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் ஏரோது கொலை செய்ததும், அவன் சந்தேக குணம் படைத்தவன்  என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது ( மத்.2ம் அதி. ) . இந்தச் சந்தேகம் பன்மடங்கு வளர்ந்து இதினால் ஏற்பட்ட விளைவுகளினால், ஏரோது அவனது கொலைபாதகமான செயல்களுக்காகவே நினைவு கூரப்பட்டு வருகிறான். அவனுடைய மரணத்திற்குப் பின் ராஜ்யம் அவனுடைய குமாரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது. ராஜா என்ற பட்டம் இல்லாமலே இவனுடைய மூத்த குமாரன் அர்கெலாயு கிமு4-கிபி.6ல் அரசாண்டான். இவனுடைய தாய் சமாரியப் பெண்ணாக இருந்ததினால் மற்ற குமாரர்களைக் காட்டிலும் குறைவாக மதிக்கப்பட்டாள். இவனுடைய அடக்கு முறையான ஆட்சியை மக்கள் ஏற்றுக் கொளள முடியவில்லை. ஜனங்களால் வெறுக்கப்பட்ட இவனை ரோம அரசாங்கம் பதவியிலிருந்து விலக்கி நாடு கடத்திவிட்டது. யூதேயா ரோமரின் ஆட்சியின் கீழ் வந்து விட்டது.

காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது, அந்திப்பா என்றும் அறியப்பட்டிருந்தான். இவன் ஏரோதின் இளைய குமாரன் கலிலேயா, பெரோயாவைத் தன்னுடைய தகப்பனாரின் ராஜ்யத்திலிருந்து சுதந்திரித்துக் கொண்டான். இவனே யோவான் ஸ்நானகனைச் சிறையில் அடைத்துக் கொலை செய்வித்தான் ( மாற்கு 6.14-28 ) . நியாய விசாரணைக்காக பிலாத்து இயேசுவை ஏரோதிடம் அனுப்பினபோது இவனுக்கு இயேசுவுடன் சந்திப்பு எற்பட்டது ( லூக்கா 23.7 ) .  இயேசு ஒரு தடவை ‘அந்த நரி’ என்று குறிபபிட்டது லூக்கா 13.31ல் கூறப்பட்டுள்ளது. தன்னுடைய சகோதரனின் மனைவியான ஏரோதியாளை விவாகம் செய்யும்படி இவன் தன் மனைவியை விவாக ரத்து செய்தான். இது சட்ட விரோதமானது என்று கண்டித்ததினால் யோவான் ஸ்நானகன் இவனுடைய கோபத்திற்கு ஆளானான். பின்னர் ஒரு யுத்தத்தில் அந்திப்பா தோல்வியுற்றான். அதனால் நாடும் கடத்தப்பட்டான்.

ஏரோது ராஜா ( அப்.12.1 )  அரிஸ்தொபூலுவின் மகன் . கிமு. 7ல் இவனது தகப்பனார் கொலை செய்யப்பட்ட பின்பு இவன் ரோமாபுரியில் வளர்க்கப்பட்டான். இவனது உறவினனான ஏரோது அந்திப்பா ஏரோதியாளை மணந்து கொண்டான். இவன் அப்போஸ்தலரைத் துன்பப்படுத்தினான். ( அப்.12.1 )  தனது 54வது வயதில் கிபி 44ல் இவன் மரித்தான் என்பதை லூக்கா எழுதியிருக்கிறார் ( அப்.12.20-23 ) . இவனுடைய மகன் அகிரிப்பா, ராஜா என்ற பட்டம் பெற்று தன் தகப்பனாரின் சிங்காசனத்தில் அமர்ந்தான். கிபி 48-66 வரை யூதருக்குப் பிரதான ஆசாரியனை நியமிக்கும் உரிமை பெற்றிருந்தான். கிபி 100ல் இவன் மரித்தான். இவனுக்குப் பிள்ளைகள் இல்லை. அப்.25.13-26ம் அதிகாரம் வரை அகிரிப்பா ராஜா பவுலைச் சந்தித்த விவரம், மற்றும் பவுல் அவனுக்குக் கூறிய விஷயங்கள் பற்றி நாம் வாசித்தறியலாம். 

யூதருடைய ராஜா என்ற பட்டம் ஏரோதுக்கும் ரோம அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டது. ஆனால், யூத மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் இவன் தாவீதின் வம்சத்தில் வந்தவன் அல்ல. முழுமையான யூதனும் அல்லன். எருசலேமின் தேவாலயத்தைத் திரும்பக் கட்டி, இஸ்ரவேலுக்கு நன்மை செய்த போதிலும் மக்கள் அவனைப் பெரிதும் பாராட்டவில்லை. ஏனென்றால் அவன் பல அந்நிய தேவர்களுக்கும் ஆலயங்களைக் கட்டினான். மக்களின் ராஜா விசுவாசத்தைப் பெறுவதற்காக அவன் எடுத்த விலையேறப் பெற்ற முயற்சியும் வீணாகி விட்டது. ஏனென்றால் அது வெறும் பார்வைக்காக மாத்திரம் மேலாகச் செய்யப்பட்ட காரியமாக இருந்தது.

அவனுடைய ராஜ பதவி ஆபத்தானதாகவும் நிலையற்றதாகவும் இருந்ததினால், அதை இழந்து போகும் சாத்தியம் உள்ளதென்று அவன் எப்போதும் கவலையுற்றிருந்தான். சாஸ்திரிகள் வந்து, வரப்போகும் புதிய ராஜாவைத் தேடுவதாகக் கூறியதைக் கேட்ட பின் அவனுடைய செயல்கள், நாம் அவனைப் பற்றி அறிந்தவற்றை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றன. அந்தக் குழந்தை தனக்கு அச்சுறுத்தலாக வருவதற்கு முன்பே அதைக் கண்டுபிடித்துக் கொலை செய்யத் திட்டமிட்டான். இதைத் தொடர்ந்து குற்றமில்லாப் பாலகர்கள் பலர் கொலை செய்யட்டது, மனிதனின் செயல்கள் சுயநலத்தினால் தூண்டப்படும்போது என்ன விளைவு ஏற்படும் என்பதற்கு ஒரு துக்ககரமான பாடமாக இருக்கிறது. ஏரோதுவின் சந்தேகம் அவனது சொந்தக் குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை. அவனுடைய பிள்ளைகளில் பலரும் அவனுடைய மனைவியும் கூடக் கொலை செய்யப்பட்டனர். தன்னுடைய வாழ்க்கையையும் தானே கெடுத்துக் கொண்டான்.



பலமும் சாதனைகளும்
1.         யூதரின் ராஜா என்ற பட்டம் ரோமரால் கொடுக்கப்பட்டது.
2.       30 வருடங்களுக்கு மேலாக அதிகாரம் வகித்தான்.
3.       தயவு இரக்கம் இல்லாவனாக இருந்த போதிலும் தனது ஆட்சியில் சக்தி வாய்ந்த அரசனாக இருந்தான.
4.       பல வகைப்பட்ட மிகப் பெரிய கட்டடங்களைக் கட்டுவதற்குப் பணம் கொடுத்து உதவினான்.


பெலவீனமும் தவறுகளும்
1.         தன்னைச் சுற்றிலுமுள்ளவர்களிடம் பயம், சந்தேகம், பொறாமையுடன் நடந்து கொண்டான்.
2.       அவனுடைய பிள்ளைகளில் பலரும் ஒரு மனைவியும் கொலை செய்யப்பட்டனர்.
3.       பெத்லெகேமிலுள்ள குழந்தைகளைக் கொலை செய்யும் படி கட்டளை கொடுத்தான்.
4.       தான் தேவனை வணங்குவதாகச் சொல்லிக் கொண்ட போதிலும் தெய்வ நம்பிக்கையற்ற புற ஜாதியாரின் மதச் சடங்குகளில் ஈடுபட்டு வந்தான். 

இவன் வாழ்க்கையிலிருந்து படிக்கும் பாடங்கள்
1.         பெரிய அதிகாரம் சமாதானத்தையோ பாதுகாப்பையோ கொடுக்க முடியாது.
2.       தேவனுடைய சித்தம் சிறைவேற்றப்பட முடியாதபடி தடை செய்ய எவராலும் கூடாது.
3.       வெளியோட்டமான பக்தி, விசுவாசம் தேவனுடைய மக்களுக்குப் பிரியமானதாக இருக்காது.


தலைமைத்துவ ஒப்பீடு
ஏரோது
இயேசு
சுயநலமுள்ளவன்
மன உருக்கமுள்ளவர்
கொலை பாதகன்
சொஸ்தமாக்குபவர்
ஒழுக்கமற்றவன், பாவச் செயல் புரிபவன்
நீதியுள்ளவர், நல்லவர்
சுயநல அரசியல்வாதி
ஊழியம், பணி செய்பவர்
சிறிய ராஜ்யத்தின் அரசன்
எல்லா சிருஷ்டிகளையும் ஆட்சிகளையும் ஆட்சி செய்பவர்.


தேவாகம ஆதாரங்கள்
மத்தேயு 2.1-22, லூக்கா 1.5 

விவாதிக்க வேண்டிய கேள்விகள்
1.         அவனுடைய குடும்பப் பிண்ணனி என்ன?
2.       யூதேயாவை எவ்வளவு காலம் அரசாண்டான்?
3.       யோவான் ஸ்நாகனை சிரச் சேதம் பண்ணினது யார்? ( மாற்கு 6.14 )
4.       ஏரோது ராஜா யார்? ( அப்.12.1 )
5.       யூதேயாவின் ராஜாவான ஏரோதினுடைய பெலவீனங்களை எடுத்துக் கூறு.


மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்.