அத்தியட்சாதீன நீள்விரி இறையியல் கல்வித் திட்டம் (TEE)
Click her to download in PDF
முன்னுரை
முகமது தீர்க்கதரி அரபியாவில் போதித்தது மூலம் தோன்றிய சமயம் இஸ்லாம். இஸ்லாத்தைச் செயல்முறைப் படுத்துவோர் முஸ்லீம்கள் என்றழைக்கப்படுகிறார்கள். இஸ்லாம் என்றால், இறைவனுக்குக் கீழ்ப்படிந்து சரணடைதல் என்று பொறுள். ஒரு முஸ்லீம் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து அவரிடத்தில் சரணடைகிறான்.
முகமது இந்த மார்க்கத்தை கிபி610ல் போதித்து வந்தார். முகமதுவின் மரணத்திற்குப் பிறகு அரபிய முஸ்லீம்கள் இந்த மார்க்கத்தை உலகின் பிற பகுதிகளுக்குக் கொண்டு சென்றனர். எல்லா முஸ்லீம்களும் முகமதுவை இறை தூதன் என்று மதிக்கிறார்கள். அவர்கள் குர்ஆனை ஏற்றுக் கொள்கிறார்கள்.
1. முகமது – இறை தூதர் (1)
முகமதுவின் காலத்துக்கு முன்பு, அரபியர்கள் பலவிதமான தெய்வங்களைத் தங்கள் வழிபாட்டு நிலையங்களில் வணங்கி வந்தனர்..
இறைவர் முகமதுவை அழைத்தல்: முகமது மெக்காவில் பிறந்தவர். மெக்காவின் மிகவும் பிரபலமான ஆலயம் காபா என்றழைக்கப் படுகிறது. (காபா என்றால் சதுக்க முகாம் அல்லது கட்டிடம் என்று பொறுள்) அதில் ஹூபால் என்ற விக்கிரகம் உள்ளது. அது சிவப்பு மணற்கல்லில் மனித வடிவமாக செதுக்கப்பட்டுள்ளது. காபாவைச் சுற்றி இன்னும் பல புனித விக்கிரகங்களும் உள்ளன. அவை யாவும் ஒன்றுக்கொன்று அருகருகில் அமைந்துள்ளன. அப்படிப்பட்ட ஒன்றில் விண்ணின் கருங்கல் உள்ளது. மெக்காவிற்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் இன்னும் அதனைத் தொட்டு (வணங்கி) வருகிறார்கள்.
குஷாய் குடும்பத்தினர் காபாவின் பொறுப்பதிகாரிகள் ஆவர். அவர்கள் குராய்ஸ் வம்ச வழியினர்.
முகமதுவின் இளம் பிராயம்: அவர் சுமார் கிபி570ல் பிறந்தார். அவர் குஷாய் குடும்ப வம்சத்தைச் சேர்ந்தவர். அவர் பிறப்பதற்கு முன்பே தகப்பனார் காலமாகி விட்டார். அவருக்கு ஆறு வயதாய் இருக்கும்போதோ தாயார் அமினாவும் மரித்து விட்டார். பின்னர், அவருடைய தாத்தாவாகிய அப்துல் ஐ-நுதாலிப் அவரைப் பேணி வந்தார். அவரும் மரித்தபிறகு, தாத்தாவின் சகோதரனாகிய அபு தாலிப் தமது பாதுகாப்பில் வைத்துக் கொண்டார். 25வது வயதில் கத்திஜா என்ற ஒரு செல்வந்தரான விதவைத் திருமணம் செய்து கொண்டார். கத்திஜா முகமதுவைவிட பல வயது மூத்தவர். உண்மையில் கத்திஜாவிற்காக முகமது வாணிபத்தைக் கவனித்துக் கொண்டார். கத்திஜாவோடு சேர்ந்து கொண்ட பிறகு முகமதுவிற்குத் தன்னம்பிக்கையும் அதிகமான ஓய்வும் கிடைத்த்து. அவருக்கு 4 பெண்களும் 2 ஆண்களுமாய் பிள்ளைகள் பிறந்தனர்.
அவருக்கு உண்டான பொறுப்பு: அவர் உண்மையும், நேர்மையும் நம்பிக்கைக்குப் பாத்திரருமாக்க் காணப்பட்டார். ஆன்மீகம் நிறைந்தவராகவும் காணப்பட்டார். குர்ஆன் 88.17-21 மற்றும் 80.24-32 ஆகிய வசனங்கள் அவருக்கு உண்டான பொறுப்பை அறிந்து கொள்ள உதவும்.
மாந்தர்: இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யத் தவறும் ஜனங்களை முகமது அடிக்கடி கடிந்து கொள்வார். (80.16-23). குர்ஆனில், இறைவன் தம்மை வணங்குவதற்கும் தமது தூதுவர்களை விசுவாசிப்பதற்கும் அழைத்திருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. நற்செய்கையுடையவர்களாகத் திகழவும் அழைத்த அவர், விதவைகளையும் எளியோர்களையும் உதாசீனப்படுத்துகிறவர்களையும் கடிந்து கொள்கிறார். (89:17-26)
முகமது தனது சீடர்களிடம், தங்கள் வாழ்வு முழுவதிலும் கடவுளின் வழிகாட்டலை நாடுமாறு கேட்டுக் கொண்டார். அனுதின ஜெபத்தின் மூலம் இதனைச் செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார். முஸ்லீம்களும் இந்த ஜெபத்தை (தொழுகை) ஒவ்வொரு நாளும் ஐந்து முறை மேற்கொள்கின்றனர். இந்த ஜெபம், குர்ஆனின் தொடக்க அதிகாரமாகிய அல்-ஃபாத்தியாவில் கூறப்பட்டுள்ளது.
முகமது – கடவுளின் தூதுவர்: அவர் கடவுளின் தூதுவராக அல்லது தீர்க்கதரிசியாக உபதேசித்து வந்தார். பலர் அவரை ஆட்சேபித்தனர் (46:7-9). தனது உபதேசத்தில் பல நிந்தனைகளைச் சந்தித்தார். அவருடைய உபதேசம், மெக்காவின் முக்கிய தலைவர்களுக்குத் திண்டாட்டத்தைத் தந்தது. செல்வந்தர்களும் பிரபுக்களும் அவரைப் புரக்கனித்தனர். மெக்கா மக்களில் முக்கிய தெய்வமாகிய லேசர் தெய்வத்திற்கு விரோதமாக அவர் பேசினார். மெக்கா ஜனங்கள் முஸ்லீம்களைச் சில வருடங்களாகத் துன்புறுத்தத் தொடங்கினர்.
2. முகமது – இறைவனின் தூதுவர் (2)
a. மதினாவில் முகமதுவின் ஆட்சி: 1394ல் முகமது மெக்காவில் இருந்து மதினாவிற்கு மேற்கொண்ட பயணத்தை ஹிஜ்ரா என்று அழைக்கிறார்கள். முஸ்லீம்களுக்கு இது ஒரு முக்கியமான வருடம் ஆகும். இதன் மூலம் முகமது ஒரு தீர்க்கதரிசியாகவும் தூதுவராகவும் வெளிப்பட்டார்.
b. குர்ஆனின் தொகுப்பு: உலகம் படைக்கப் படுவதற்கு முன்பே குர்ஆன் பரலோகத்தில் எழுதப்பட்டது என்றும் அது அரபிய மொழியில் இறக்கப் பட்டது என்றும் முஸ்லீம்கள் நம்புகின்றனர். ஆனால், குர்ஆன் ஏகோபத்திய நேரத்தில் முகமதுவிற்கு வழங்கப்படவில்லை. அது 20 வருட காலக் கட்டத்தில் (அல்லது அதற்கும் மேலான காலக்கட்டத்தில்) அவருடைய பெரும்பணியின் போதும், பல்வேறு சம்பவங்களின் போதும் வெளிப்படுத்தப் பட்டது.
குர்ஆனில் பல்வேறு உபதேசப் பொருள்கள் அடங்கியுள்ளன:-
a. சில பகுதிகளில் போர்களும் பயணங்களும் எழுதப்பட்டுள்ளன. வேறு சிலவற்றில் முகமது மற்றும் அவரின் சகாக்களின் சுகதுக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
b. சில பத்திகளில் பிற தீர்க்கதரிசிகளின் கதைகள் கூறப்பட்டுள்ளன. அவை, அரபியர்கள் முகமதுவிற்குச் செவி சாய்க்கும்படி எச்சரிக்கை விடுவனவாக அமைந்துள்ளன.
c. சில பத்திகளில் இஸ்லாத்திற்கும் யூதம் கிறிஸ்தவம் ஆகிய பிற சமயத்திற்கும் உள்ள தொடர்பை விளக்குகின்றன. கிறிஸ்தவர்களைப் பற்றியும் குர்ஆன் குறிப்பிடுகிறது.
d. சில பத்திகளில் முஸ்லீம்களுக்குத் தங்கள் நடத்தையைப் பற்றி வழிகாட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளன.
நிலை குலையாத முகமதுவின் கைபற்றல்:-
a. மதினா
b. மெக்கா, அரபிய ஆதிவாசி ஜனங்கள், அரபிய தேசத்திற்குள்ளும் அப்பாலும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். அவர் ஒரு மஹா வீரனானார். விக்கிரகங்களை அழிப்பதற்கும் அவர் கட்டளையிட்டார்
3. உலக சமயத்தின் அஸ்திபாரம்
அவர் கிபி632ல் மரித்தார். இஸ்லாம் என்று அறியப்படுகிற மாபெரும் சமயத்திற்கான அஸ்திபாரத்தை அப்பொழுது அமைத்து விட்டார். இதனைப் பல வழிகளில் நிறைவேற்றினார்:-
a. உலகின் அனைத்து மக்களும் புரிந்து கொண்டு விருப்பப்பட்டால் நிறைவேற்றக் கூடிய ஜெபத்தையும் தொழுகையையும் அவர் போதித்தார்.
b. குர்ஆன் எனப்படும் கடவுளின் வார்த்தையைத் தனது சீடர்கள் பெறத்தக்கதாக ஒரு கருவியாகச் செயல்பட்டார்.
c. தனது இறை தூதுவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரபிய இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தினார். அரபியாவை ஒரு முஸ்லீம் நாடாக மாற்றுவதற்கு ஒரு கருவியாகச் செயல்பட்டார்.
d. இஸ்லாமிய சமுதாயத்திற்காக ஒரு நடத்தை முறைமையைப் போதித்து, தானே அதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.
4. பன்னாட்டு அரங்கில் இஸ்லாம் – அரபிய வல்லரசுகள்
a. கிபி632ல் முகமது மரித்த பின்பு, அவருடைய தோழர் அபு பாக்கார் அவருடைய பொறுப்பை ஏற்றார். அபு பாக்கார் ஒரு தீர்க்கதரிசியும் அல்லர்; அப்போஸ்தலரும் அல்லர். குர்ஆனில் போதிக்கப்பட்ட படியும் முகமது கூறியபடியும் முஸ்லீம் மக்களை வழிநடத்துவதுதான் அவர் கடமையாய் இருந்தது.
b. இந்த மாபெரும் இஸ்லாமிய வல்லரசை ஆட்சிசெய்பவர் பின்னுரிமையாளர் என்றழைக்கப்பட்டனர். அதற்கு அரபியாவில் கலிஃபா என்ற சொல் வழங்கப்பட்டது. கலிஃபாக்கள் குர்ராஷ்ய வம்சாவழியினராகவும் முகமதுவின் ஞாதிகளாகவும் (உறவினர்) திகழ்ந்தனர்.
குறிப்பு: இஸ்லாமிய வல்லரசு பிற்காலத்தில் பல்வேறு காரணங்களுக்காகப் பிளவுபட்டது.
c. இஸ்லாமிய விரிவாக்கம்:-
i. வியாபாரிகளும் வணிகர்களும் பெருமளவில் உதவியுள்ளனர். கலப்புத் திருமணமும் கைகொடுத்துள்ளது.
ii. குருமார்களும் புனிதர்களும்: சட்டதிட்டத்தை உபதேசித்ததோடு சமய சடங்குகளையும் வழிநடத்தினர்.
iii. முஸ்லீம் ஆட்சியாளர்கள்: சிகாது (ஜிஹாட்) என்ற மரணயுத்தமும் தோள் கொடுத்துள்ளது.
iv. ஆப்ரிக்கா, கிழக்கு ஐரோப்பா, ஆசிய நாடுகளுள் வணிக வளர்ச்சியும் இஸ்லாத்தைப் பரப்ப உதவிற்று.
5. இஸ்லாமிய நாகரிகம்
3 அஸ்திபாரங்கள் மூலம் இஸ்லாமிய நாகரிகம் கட்டப்பட்டது:
a. அரபியாவில் இருந்து புறப்பட்ட இஸ்லாமிய மார்க்கம்.
b. அரபிய மொழியும் கவிதைகளும்.
c. அரபியர்கள் கைபற்றிய தேசங்களில் இயற்கையாக தோன்றியிருந்த நாகரிகங்கள்.
21ம் நூற்றாண்டு இஸ்லாமியர்கள்: உலகில் சுமார் 1 பில்லியன் (100 000 000) முஸ்லீம்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
6. இஸ்லாமிய உபதேசங்கள்
6.1 இறைவனைப் பற்றி முஸ்லீம் நம்பிக்கை
ஷஹாடா என்ற விசுவாசப் பிரமாணம், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று தொடங்குகிறது. அல்லாஹ் என்றால் வேறு ஒருவர் கிடையாது என்று பொருள். அரபிய பண்டிதர்கள் அல்-இல்லாஹ் என்ற அரபிய மொழியின் சுருக்கத்தைதான் அல்லாஹ் என்று கூறுகிறார்கள். அதாவது, மற்ற இறைவர்களையும் தெய்வங்களையும் வேறுபடுத்துகிற ஒரே ஒரு கடவுள் என்று பொறுள்.
a1 இறைவனின் தனிச் சிறப்பு: இறைவன் அபூர்வத் தன்மை மிக்கவர். படைக்கப்பட்டதில் இருந்தும் படைப்புகளில் இருந்தும் அவர் மாறுபட்டவர். முஸ்லீம் போதனையின்படி, வேறொன்றும் அவருக்கு இணையாக முடியாது, இணையாக்கவும் முடியாது; ஒப்பாக்கவும் முடியாது; ஈடாக்கவும் முடியாது. (குர்ஆன் 112). இறைவனோடு வேறு எதையும் ஒப்பாக்குது இஸ்லாத்தில் க்ஷிரிக் என்றழைக்கப்படும் மிகப் பெரிய பாவமாகும்.
a2. இறைவனின் குணாதிசயங்கள்: இறைவன் மற்ற எல்லா படைப்புகளிலிருந்தும் மாறுபட்டவர். ஆயினும், குர்ஆன் பின்வரும் வாக்குகளை ஆதரிக்கின்றது:-
i. இறைவன் பிறப்பும் இறப்பும் இல்லாமல் நீடித்து வாழ்பவர்.
ii. இறைவனால் எல்லா காரியத்தையும் செய்ய முடியும்.
iii. இறைவனின் சித்த்த்தின்படி எல்லா காரியங்களும் தோன்றியுள்ளன.
iv. இறந்த காலத்திலும், நிகழ் காலத்திலும், எதிர் காலத்திலும் உள்ள எல்லாவற்றையும் இறைவன் அறிந்திருக்கிறார்.
v. இறைவன் எல்லா ஓசைகளையும் செவிமடுக்கிறார்.
vi. இறைவன் எல்லா காரியங்களையும் காண்கிறார்.
vii. இறைவன் மனிதர்களோடு உறவாடுகிறார்
a3. மிகச் சௌந்தரியமான நாமங்கள் (அவருக்கு 99 நாமங்கள் உள்ளன)
6.2 வெளிப்படுத்தலைப் பற்றி முஸ்லீம்களின் நம்பிக்கை
i. இயற்கை உலகத்தின் மூலம் (30:46-50)
ii. அவருடைய தூதர்கள், தூதுவர்கள் மூலம்.
iii. வேதங்கள் மூலம்: ஷொராத் (தோரா), ஷாபுர் (சங்கீதம்), பைபிள் (சுவிசேஷம்).
iv. தீர்க்கதரிசிகள் மூலம்
6.3 தீர்ப்பைப் (விதி) பற்றிய முஸ்லீம்களின் நம்பிக்கை
ஒவ்வொரு விசுவாசியையும் இறைவன் நீயாயந் தீர்ப்பார். அவர்களுடைய செயல்கள் ஒரு துலாபாரத்தில் நிறுக்கப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் பரலோகத்தில் அனுமதிக்கப் படுவார்கள். தேறாதவர்கள் நரகத்திற்கு அனுப்பப் படுவார்கள் (18:49, 17:13-15). ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நடத்தைக்கும் தண்டனைக்குப் பொறுப்பாளிகள்.
7. இஸ்லாமிய நடைமுறை
7.1 இஸ்லாத்தில் குர்ஆனும் அதன் பாரம்பரியமும் பேணப்படுகின்றன. புதிய சூழ்நிலையின் படி முகமதுவின் தோழர்கள் இந்தப் பாரப்பரிய அப்பியாசத்தை செயல்படுத்துகிறார்கள். இதற்கு அரபிய மொழியில் சுன்னா என்று பெயர். இதனைப் பின்பற்றுகிறவர்கள் சன்னி முஸ்லீம்கள் என்றழைக்கப்படுகிறார்கள்.
7.2 ஷாரியா: இஸ்லாமிய சட்டம்: ஷாரியா என்றால் அரபிய மொழியில் நீரோடையின் பாதை என்று பொறுள். எல்லா முஸ்லீம்களும் பின்பற்ற வேண்டிய ஷாரியா சட்ட திட்டம் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
மற்ற விதமான சட்ட திட்டங்க்ளும் முஸ்லீம்களின் வாழ்வுக்கு வழிகாட்டுகின்றன:-
a. கலாச்சாரத்தை அணுசரிக்கும் சட்ட திட்டங்கள் (ஆப்ரிக்கா போன்ற தேசங்களில் உள்ளூர் பழக்க வழக்கங்களோடு ஷாரியா சட்ட திட்டம் அணுசரித்துப் போகிறது.
b. அரசாங்கத்தின் சமுதாய மற்றும் குற்றவியல் சட்டதிட்டங்கள்.
7.3 இஸ்லாத்தின் தூண்கள்:-
a) இஸ்லாமிய விசுவாசப் பிரமாண பிரகடனம்: ஷஹாடா
b) தொழுகை: சொலாத்
c) தானம்: ஷக்காத்
d) ரமதான் மாதத்தில் நோன்பு நூற்றல்
e) மக்காவிற்குப் புனித பயணம்: ஹாஜ்
பிரகடனம்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முகமது அவருடைய தூதுவர் என்றும் நான் சாட்சி பகர்கிறேன்.
தொழுகை: தொழுகை ஒரு மதுரமான பிரவாகம் என்று முகமது கூறுகிறார். ஒருவர் ஒவ்வொரு நாளும் 5 முறை தொழுகை நடத்த வேண்டும்.
8. இஸ்லாமியப் பிரிவினைகள்
8.1 சன்னி முஸ்லீம்கள்: சுமார் 90% பேர் இந்தப் பிரிவினையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் முதல் 4 கலிஃபாக்களை ஏற்றுக் கொள்கிறார்கள். முகமது பாரம்பரியமாக போதித்த சட்ட விதிகளைப் பின்பற்றுகிறார்கள்.
8.2 ஷியா முஸ்லீம்கள் மற்ற இஸ்லாத்தில் இருந்து மிகப் பெரிய அளவில் பிரிந்து வந்த மார்க்கம் இது. ஹுசேனுக்குப் பிந்திய பின்னுரிமையாளர்கள் தலைமறைவாகியிருக்கிறார்கள் என்றும் ஏற்ற காலத்தில் அவர்கள் தங்களை வெளிப்படுத்துவார்கள் என்றும் நம்புகிறார்கள். இவர்களை இமாம் என்று அழைக்கிறார்கள்; கலிஃபாக்கள் அல்ல. அவர்களுக்கென்று தனியான கலாச்சாரங்கள் உள்ளன. அவர்கள் 4 சன்னி விதிகளையும் புறக்கனிக்கின்றனர்.
8.3 ஷாபி முஸ்லீம்கள்: இவர்கள் மிகவும் சுதந்திர உணர்வைக் கொண்டவர்கள்.
முஸ்லீம்கள்: சராசரி முஸ்லீகளின் விசுவாசங்களையும் செயல்முறைகளையும் பின்வறுமாறு விவரிக்கலாம்:
i. முஸ்லீம்கள் தாங்கள் இறைவனின் சேவகர்கள் என்று அறிந்திருக்கிறார்கள். அவர்கள் இறைவனின் காரியஸ்தர்கள்.
ii. இறைவன் அவர்களுடைய ஒட்டு மொத்த வாழ்வையும் நிர்வாகிக்கிறார் என்று நம்புகின்றனர்.
iii. நியாயத் தீர்ப்பு நாளில் தங்கள் செய்கைகளின் கணக்குகளை இறைவனிடத்தில் வழங்க வேண்டும் என்று அறிவார்கள். முகமது அவர்களுக்காக பரிந்து பேசுவார் என்று நம்புகிறார்கள்.
iv. இறைவனுக்கு முன்பாக சில கடமைகள் உள்ளன என்று அறிவார்கள். (உம் – 5 விதி முறைகள்)
v. எளியோருக்கு தானம் செய்வதில் தயாளம் மிக்கவர்கள்.
vi. முகமது இறைவனின் சிறப்பு தூதுவராக நின்று தோற்றுவித்த மதமாகிய இஸ்லாத்தில் முஸ்லீம்களாக வாழ்வதில் பெருமையும் நன்றியும் உடையவர்களாக உள்ளனர்.
vii. திருமனம் மரபுரிமை விவகாரங்களில் ஆன மட்டும் ஷாரியா சட்டத்தைப் பின்பற்றுகிறார்கள்.
viii. தாங்கள் அறிந்து கொண்ட மட்டும் முகமதுவின் வாழ்க்கை முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள்.
ix. குர்ஆனில் காணப்படுகிற பழக்க வழக்கங்களையும் அவர்கள் பின்பற்றக் கூடும். உதாரணமாக வசீகரப்படுத்துவதற்கு குர்ஆனிய வசனங்களைப் பயன்படுதலைக் குறிப்பிடலாம்.
நிறைவுரை: மலேசிய இஸ்லாம்
மலாய்க் காரர்கள் எல்லா விததிலும இஸ்லாமியர்களாக்கப் பட்டுள்ளனர். மலேசியர்கள் அனைவரும் எல்லா வித்த்திலும் தங்களைப் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள். மலேசியா ஓர் இஸ்லாமிய நாடாக மாறக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. ஒவ்வொரு முஸ்லீம்களும் எப்படி முகமதுவின் குணாதிசயங்களைப் பின்பற்றப் போகிறார்கள் என்பதுதான் சவால். திறந்த மனம் கொண்ட மற்ற மார்க்கத்தார், குருஆன் மற்றும் இஸ்லாம் சமயத்தைக் கற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் நேசிப்பதோடு மதிக்கும் செயல் ஒரே மலேசியா கொள்கையை நிலைநாட்டுவதில் முக்கிய பங்காற்றும்.
பேராயர் டத்தோ டாக்டர் எஸ் பத்துமலை (Ph.D)
ஏப்ரல் 2010