Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Monday, May 17, 2010

நமது இந்து நண்பர்கள்

அத்தியட்சாதீன நீள்விரி இறையியல் கல்வித் திட்டம்

Click here to download in PDF

பேராயர் பத்துமலையால் தொகுக்கப்பட்டது

A. இந்து தர்ம்ம் என்றால் என்ன?

1. உலகில் அதிகமாக விசுவாசிக்கப்படுகிற சமயங்களில் இந்து மதமும் ஒன்று 8கோடி மக்கள் இந்து மார்க்கத்தார். இந்தியர்களில் 80 சதவிகித்த்தினர் இந்துக்கள். மலேசியாவின் இந்தியர்களில் சுமார் 7 சதவிகித்த்தினர் இந்துக்கள்.
கிறிஸ்தவம், பௌத்தம், இஸ்லாத்தைப் போலல்லாமல் இந்து சமயம் பிரச்சாரத்தால் பரவ்வினது கிடையாது. ஆனாலும், சமீப காலங்களில் மேற்கத்திய நகரங்களில் இந்து பிரச்சாரக் குழுக்கள் ஆன்மீக நிலையங்களைத் திறந்துள்ளனர். எல்லா சமயமும் ஒருவனை பரலோகத்திற்கு வழிநடத்திச் செல்கிறது என்பதால், யாரையும் மதமாற்றத் தேவையில்லை என்று இந்து இந்து மார்க்கம் சொல்ல விளைகிறது.
பல கிழக்காசிய நாடுகளில் இந்து சமய கலாச்சார அடையாளங்கள் தெள்ளந் தெளிவாகக் காணப்படுகிறது. பௌத்தம் இந்து சமயத்தின் வழி தோன்றியதாகும்.

2. நீடித்து வாழும் பழங்கால சமயம்
ஒரு வேளை இந்து சமயம்தான் உலகின் நீடித்து வாழும் பழய சமயமாகத் திகழலாம். இந்தியா என்ற சொல்லைப் போல் இந்து என்பது சிந்தி நதியின் பெயரில் இருந்து மறுவியிருக்கலாம். ஆனால், அந்த மார்க்கம் அதற்கும் முந்திய வரலாற்றைக் கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் அது ஆரிய தருமம் அல்லது ஆரிய மார்க்கம் என்று அறியப்பட்டது.
தர்மம் என்றால், கடமை, நியாயம், நற்குணம், நன்னெறி, சட்டம், சத்தியம், சன்மார்க்கம் ஆகிய கருப்பொருள்களைத் தாங்கி வருகிறது. தர்மம் ஒருவரை முக்திக்கும் (விடுதலை) மோட்ஷத்திற்கும் கொண்டு சேர்க்கிறது.

3. இந்து மார்க்கம் ஓர் இனம் சார்ந்த மதம்
a) இந்து மார்க்கத்துக்கு ஸ்தாபகர் கிடையாது. கிறிஸ்தவத்தைப் போன்று அவதார தேதி கிடையாது.
b) இந்து மார்க்கத்திற்குப் பொதுவான விசுவாசப் பிரமாணம் கிடையாது (கிறிஸ்தவர்களின் அப்போஸ்தல விசுவாசப் பிரமாணத்தைப் போன்று)
c) இந்து மார்க்கத்திற்கு என்று ஒரு ஸ்தபாகம் கிடையாது. பொதுவான ஆராதனை முறைமையைப் பின்பற்றுகிறவர்களுக்கோ அல்லது ஒரு பொதுவான வாழ்வு நெறியைப் பின்பற்றி வாழ்கிறவர்களுக்கென்றோ ஒரு ஸ்தாபகம் கிடையாது.


4. மார்க்கக் குடும்பம் 
இந்துத்துவம் நெகிழ் தன்மை வாய்ந்த விசுவாசம். அது உள்வாங்கிக் கொள்ளக் கூடிய, மற்றும் காலத்திற்கேற்ப புதிய கருத்துகளை ஜீரனித்துக் கொள்ளக் கூடிய தன்மை வாய்ந்த்து. இந்தியாவின் முதல் பிரதமாரான பண்டிதர் நேரு, இந்துத்துவத்தைப் பின்வருமாறு வர்ணிக்கிறார்:-
“இந்துத்துவம் தெளிவும் (அற்ற), நிச்சயமும் (அற்ற) வடிவமுமற்ற பல காட்சிகளைக் கொண்ட எல்லாருக்கும் பொருத்தமான அனைத்தையும் கொண்ட மார்க்கம் ஆகும். அதனை விளக்கப் படுத்தி பார்க்கலாகாது. தற்கால வடிவத்திலும் இறந்த காலத்திலும் பல விசுவாசங்களையும் செயல்முறைகளையும், அடி முதல் நுனி வரை முரண்பாடுகளையும் உடைய அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டுள்ளது. வாழ்வதையும் வாழ விடுவதையும் அதன் அடிப்படைக் கொள்கையாகக் காணலாம்.


B. இந்து மார்க்க ஆன்முக நூல்கள்


1. சுருதியும் சிமிர்தியும் (Sruti and Smriti)
சுருதி என்றால் கேட்கப்பட்டது என்று அர்த்தம். அவை முனிவர்களுக்கு வெளிப்படுத்தப் பட்ட சத்தியம். சுருதிக்கு 4 வேதங்கள் உள்ளன.
சிமிர்தி என்றால் ஞாபகத்தில் கொள்ளப்பட்டவை. சுருதியை கிறிஸ்தவ வேததிதிற்கு ஒப்பாக்கினால், சிமிர்தியையும் உபதேசங்களையும் வேதத்தில் இருந்து திரண்ட கலாச்சாரத்திற்கும் ஒப்பாக்க வேண்டும். வேதத்தைத் தவிர்த்து எல்லா ஆன்மீக நூல்களையும் சிமிர்திகளாகக் கருதப்பட வேண்டும். ராமாயணமும் மகாபாரதமும் இந்து தர்மத்தில் இருந்து தோன்றிய பரம்பரைச் சொத்தாகும்.

2. வேதங்களும் உப்பனிசாத்துகளும் (விளக்க நூல்கள்)
ரிக் வேதம், சாம வேதம், யாசுர் வேதம், அதர்வண வேதம் ஆகியவை இந்து தர்ம வேதங்கள். ஒவ்வொரு வேதத்தில் 4 பெரும் பகுதிகள் உள்ளன:-
a. மநதிரங்கள் (கடவுளைத் துதித்துப் பாடுகிற பாமாலைகளும் பாடல்களும்)
b. பிராமணா (உரை அல்லது சடங்கு வழிமுறைகள்)
c. அரண்யகா (காட்டில் வாழும் முனிவர்களின் உரை)
d. உபநிடங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்). இவை உலக இயல்பையும் மனிதய உறவையும் விவாதிக்கின்றன.

3. ராமாயனணமும் மகாபாரதமும்
ராமாயணம் என்பது அசூர்ர்களின் அரசனாகிய ராவனனைக் கொன்று, பூமியில் தர்மத்தை மறுபடியும் நிலைநாட்டியவரின் கதை. ராமரும் அவருடைய துணைவியார் சீதையும் சால்புடைய தம்பதிமாராகக் கருதப்படுகின்றனர். அவர் அவதாரமாக நம்பப்படுகிறார்.
மகாபாரத்த்தில் ஒரு மஹா யுத்தம் நடைபெறுகிறது. நூறு கௌரவ சகோதரர்கள் அசூர்ர்களாக, நல்வர்களாகிய பாண்டவ சகோதரர்களோடு போரிடுகிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணனின் உதவியோடு, கடவுள் அவதாரம் எடுத்து தீயவர்கள் பாண்டவர்கள் மீது ஜெயம் கொள்கிறார்கள்.
இந்தப் புராணம் மனித தரத்தையும் மனித நிலைமையையும் எடுத்துக் காட்டுகிறது. ஊக்கத்தையும், விசுவாசத்தையும், பக்தியையும் உண்மையையும், இணைபிரியாமையையும் இப்புராணம் உபதேசிக்கிறது.

4. பகவத் கீதை (கடவுளின் பாடல்) மிகவும் பிரபலமான இந்து புனித நுலாகும். இது மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும்.  ஒரு மஹா யுத்தத்தில், பாண்டவர்களின் சகோதரனான அஜ்ஜுணன் குழப்பத்தில் மூழ்கிப் போனான். நியாயமாக இருந்தாலும் எப்படி தன் சொந்த சகோதரர்களோடு போரிட முடியும்? அந்தப் போர் முனையில் கிருஷ்ணர் மனித செயலின் நெறியையும் தத்துவத்தையும் வெளிப்படுத்துகிறார். கீதையின் அடிப்படை உபதேசம், தன்னலமற்ற செய்கையின் அவசியத்தை உணர்த்துகிறது. இது மனிதன் தெய்வத்தின் மீது கொள்ள வேண்டிய பக்தியைக் காட்டுகிறது.


C. இந்து மார்க்கத்தின் வரலாறு

மெய்யான குறிக்கோளுக்கான தேடல் என்ற தேவ தேடல் ஒன்று உண்டு. ஒரே ஒரு மெய்யான நிலைமை மாத்திரமே உண்டு என்று கூறப்படுகிறது. பிரம்மம் என்பது இந்த உலகின் ஆவி. மனிதன் என்பது அதன் ஆன்மா.

வருணப் (ஜாதி) பிரிவு முறைமை: ரிக் வேதத்தில், குருமார்களாகிய பிராமணர்கள் படைப்பாளராகிய பிரம்மாவின் வாயில் இருந்து தோன்றியவர்கள் என்று கூறப்படுகிறது. சாஸ்திரியர்கள் அல்லது ஆட்சி செய்பவர்கள் பிரம்மாவின் கரத்தில் இருந்து தோன்றியவர்கள்.  வணிகப் பிரிவினர்கள் பிரம்மாவின் தொடையில் இருந்து தோன்றிவர்கள். சூத்திரர்கள் அல்லது வேலைக்காரர்கள் பிரம்மாவின் பாதத்தில் இருந்து தோன்றியவர்கள்.

ஆரம்பத்தில் ஒரு மனிதனின் வருணப் பிரிவினை அவனி தொழிலின் நிமித்தம் தீர்மானிக்கப் பட்டது. தனது தொழிலை மாற்றுவதன் மூலம் அவனது வருணப் பிரிவினையையும் மாற்றலாம். ஆனால், பிற்காலத்தில் அது குலமரபுக் கோத்திரமாகி விட்டது.

கரும வினைத் தத்துவம்: வருண முறையைச் சார்ந்துள்ள கரும வினைத் தத்துவம் இந்து விசுவாசத்தின் மையமாகத் திகழ்கிறது. ஆதிகால இந்து சமய போதனையின்படி மனித வாழ்வின் குறிக்கோள், மறைபொருளின் மெய்மையை உணர்வதாகும். கரும வினை தீருமட்டும் பிறவியும் மறுபிறவியும் சூழன்று கொண்டே வரும். கரும வினை தீரும் நிலையை மோக்ஷ்ச (முக்தி அல்லது பரலோகம்) என்றழைக்கிறார்கள். மனித வாழ்வின் மாற்றத்திற்கும் நல்ல தரத்திற்கும் கரும வினை ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

நவீன காலம்: கீபி 1750க்குப் பிறகு
பிற சமயங்களைப் போல இந்து மார்க்கமும் மறுமலர்ச்சியைக் கண்டு வருகிறது.  ஸ்ரீ ராமகிருஷ்ணன் பரமஷம்சர் தொடக்கி வைத்த மறுமலர்ச்சி கொள்கை மிகவும் பிரபலம் வாய்ந்தது. அவர் ராமகிருஷ்ணரின் போதனையைப் பரப்பி வந்தார். அவர் கிறிஸ்துவின் தரிசணத்தைக்கூட கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது. விவேகானந்தர் அவருடைய சீடர்களில் ஒருவர். தனது குருவானவரின் போதனையைப் பரப்புவதற்கு ராமகிருஷ்ணர் மடங்களை நிரூவினார். அது சிறந்த சமூக சேவை மையங்களாகவும் திகழ்ந்தன. தாகூர் என்பவரும் இந்து விசுவாசத்திற்குப் புண்துணர்ச்சியூட்டியுள்ளார். அவருடைய பாடல்களும் கவிதைகளும் கடவுள் – மனிதனைப் பற்றி உபதேசிக்கிறது.

இந்து மார்க்க விசுவாசத்தில் முக்கியமாகக் கருதப்படுவது மனிதன்தான் கடவுள் என்பதாகும். மனிதன்தான் கடவுள் என்றும் மனிதனின் மார்க்கம்தான் கடவுளின் மார்க்கம் என்றும் தாகூர் பாடியுள்ளார். தற்கால இந்து மார்க்கப் பிரதிநிதியாகக் காந்தியைக் கருதலாம். அவர் மார்க்க போதனையை வாழ்ந்து காட்டியவர். ஆனால், அவருடைய நடவடிக்கைகள் விசுவாசத்தின் விளைவுகள் ஆகும். அவர் தம்முடைய மார்க்கத்தை அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டார் – அதாவது இந்தியாவின் சுதந்திரத்திற்காக. டாக்டர் ராமகிருஷ்ணரும் ஸ்ரீ ஔரோபிந்தோவும் தற்கால இந்து உபதேசப் பிரதிநிதிகளாகக் கருதலம்.


D. இந்து விசுவாசங்கள்

1. வாழ்வின் நான்கு குறிக்கோள்கள்:
a) வாழ்வு தர்மம் ஆகும் (நியாயப்பூர்வமான செயல்)
b) வாழ்வு அர்த்தப்பூர்மானது ஆகும் (ஆஸ்திகளும் சுகபோகங்களும்)
c) வாழ்வு கர்மம் நிறைந்ததாகும் (காமமும் சுகமும்)
d) வாழ்வு மோஷ்சத்தை நாடியதாகும் (விடுதலை). வாழ்வின் இறுதி இலக்கு, இந்த மாம்சத்தில் இருந்தும் மரணம் சார்ந்த வாழ்வில் இருந்தும் விடுதலையடைவதாகும்.

வாழ்வின் நான்கு படிநிலைகள்:-
a) மாணவப் பிராயம்: ஒருவன் குருவின் இல்லத்தில் தங்கி வாழ்வது.
b) இரண்டாவது நிலை தலைவன் பருவமாகும். அவன் குடும்பத்தின் சொத்துடைமைகளை நிர்வாகிக்கிறான். அவன் தனது மனைவியோடு வாழ்கிறான்.
c) மூன்றாவது நிலையில் அவன் ஓய்வு பெற்று  தனது மனைவியோடு வாழ்வின் நெறிகைளை தியானிக்க காட்டுக்குச் செல்கிறான்.
d) நான்காவது (கடைசி) நிலை புனிதமானது. இந்நிலையில் அவன் உலகையும் அதில் அடங்கியுள்ள யாவற்றையும் துறந்து விடுகிறான். (ஹிந்து மார்க்கம் துறவறத்தை ஏற்கிறது).

2. மூன்று வழிகள்
a) முதலாவது - நற்கிரியை
b) இரண்டாவது - பக்தி
c) மூன்றாவது - ஞானம்
குறிப்பு: சிலர் யோகா என்ற தியான நிலையையும் சேர்த்துக் கொள்கிறார்கள்

3. கடவுளும் மனிதனும்
a) தேவன் பொதுவுடைமையும்  பூரணமுமானவர் என்று போதிக்கும் அதே வேளையில்,
b) தனி மனிதனுக்கும் சொந்தமானவர் என்றும் போதிக்கிறது. அவர் மனித நலனில் அக்கறை கொண்டு பூலோகத்திற்கு அவ்வப்போது வருகை தந்து தர்மத்தைக் காக்கவும் அதர்மத்தை அழித்துப் போடவும் கிரியை செய்கிறார். கடவுளே மனிதனின் இலக்கு. அந்தப் பரம பொருளில் ஐக்கியப்பட்டு (அனுபூதி அடைந்து) விடுதலை (முக்தி) பெற வேண்டும் என்பது இந்து தர்மத்தில் இலக்கு.

E. பிரபலமான இந்து தர்மங்கள்

1. வழிபாடு:
இந்துக்கள் தங்கள் இல்லங்களிலும் ஆலயங்களிலும் வழிபடுகின்றனர். வசதி படைத்த பலர் தங்கள் இல்லங்களில் ஒரு பூஜை அறையை ஒதுக்குகிறார்கள். பூஜிப்பது என்பது ஓர் இந்துவின் தனிமனித கிரியை. கிறிஸ்தவர்களைப் போன்று சபையாக ஒன்று கூடும் வழக்கு அவர்களிடம் கிடையாது. தெய்வீக நாமங்களை உச்சரிப்பதும் மந்திரங்களை ஓதுவதும் அவர்களின் ஜெபங்களில் அடங்கும். பாவம் நிறைந்த ஒரு மனிதன் மெய் மறந்து தெய்வ நாமத்தை உச்சரித்த்தின் நிமித்தம் எப்படி முக்தியடைந்தான் என்ற ஒரு புராணக் கதையும் உண்டு. அவருடைய மகனுக்கு இறை நாமமாகிக நாராயணன் என்ற பெயர் வழங்கப்பட்டிருந்த்து. அந்தப் பெயரை உச்சரித்ததால் அவன் முக்கியடைந்தான்.

2. ஆலய ஆராதனை
இந்திய புனித்த் தளங்களுக்குப் பெயர் பெற்றது. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. உருவத்திலும் உணர்விலும் ஆலயங்கள் பெருமளவில் மாறுபட்டிருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு ஆலயங்களும் ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணஞ்  செய்யப்பட்டுள்ளது. எனவே, வழிபாடுகளும் அந்த தெய்வத்தை (அல்லது தேவியை) சூழ்ந்தே அமைந்திருக்கும்.

3. பண்டிகைகளும் யாத்திரைகளும்
a) தீபாவளி – அசூரனை கிருஷ்ணன் என்ற கடவுள் ஜெயங் கொண்ட ஞாபகார்த்தத்தில் கொண்டாடப்படும் தீபத் திருநாள்.
b) பல பண்டிகைகள் பருவத்தின் அடிப்படையிலானது. (உம் – கேரளாவில் கொண்டாடப்படும் ஓனமும், தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் பொங்கலும்)

4. வேற்றுமையில் ஒற்றுமை
இந்து சமயம் (அக்குரோணியம் நிறைந்த) அளவற்ற சமய அனுபவங்களைத் தாங்கி வருகிறது. பல பிரபலமான இந்து தர்மம் இயற்கையான வழிபாட்டோடு இணங்கிப் போகிறது. அவர்களுடைய தத்துவஞானிகள் கடவுளை பூரணம் நிறைந்த உண்மைப் பொருளாகவும் அனைவருக்கும் அப்பாற்பட்ட ’உலக ஆன்மாவாகவும்’ கருதி அவரோடு இணைந்து முக்தி பெற நினைக்கிறார்கள். கல்வியறிவற்ற பாமரர்கள் கடவுளை சாந்தி தரும் அன்பிற்கும் வழிபாட்டுக்கும் உரியவராகக் கருதுகின்றனர். அனைவரும் இந்துக்கள்தாம்.
  
‘சிந்தனைகள் மாறுபடுவது போல, கருத்துகளும் மாறுபடும்’ இதுதான் பொதுவான இந்து பழமொழி. சத்தியம் ஒன்றே: ஞானமுள்ளவன் பல நாமங்களில் அழைக்கிறான் என்று ரிக் வேதம் கூறுகிறது. இதுதான் சர்ச்சைக்குரிய இந்து தர்மத்தின் தீர்மானம். கீதையில் கிருஷ்ணா அர்ஜுணனிடம்:
‘விசுவாசத்தால் எந்த வடிவத்தினாலும் என்னைத் தேடுகிற பக்தனை உறுதிபடுத்துவேன். என்னை நாடுகிற மனிதனை நான் ஏற்றுக் கொள்வேன். அவன் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணமும் என்னுடையதே. என்று கூறுகிறான்.

F. இந்து தர்மத்தின் எதிர்காலம்

இந்தியர்களின் மிகப் பரவலான சமயமாக இந்து தர்மம் என்றென்றும் திகழும். இந்நாட்டின் கலாச்சாரம் பெருமளவில் இந்து கலாச்சாரத்தால் தாக்கம் நிறைந்திருக்கிறது. மக்கள் மத்தியில் நிலவுகிற புராணக் கதைகள் இந்துப் புராணங்கள் ஆகும்.
  
மொழிகள் பலவாக இருக்கலாம். சமயங்களும் பலவாக இருக்கலாம். ஆனால், சுமார் 1 கோடி மக்கள் வறுமையில் வாடிகின்றனர். இது மிகவும் அதர்மம். இவற்றைச் சமாளிக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.
  
இந்து தர்மம் மிதவாதமானது என்று கூறப்படுகிறது. இந்த மிதவாதப் போக்கினால் அது தனது எதிரிகளை வெல்லக்கூடியது! வருண (ஜாதி) வேறுபாட்டுச் சிந்தனைகள் வலிந்து நிற்கிறது. கிறிஸ்தவர்களும் பல இடங்களில் வருண பேதத்தில் சிக்கிக் கிடப்பது அதன் வலிமையை வெளிப்படுத்துகிறது. இந்து தர்மத்தை நவீனப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிஜாத்தியா வித்திய பகவான் (இந்திய ஞான மடம்) போன்ற சஞ்சிகைகள் இந்து தர்மத்தையும் கலாச்சாரத்தையும் தாங்கி வருகின்றன.

G. மலேசியாவில் இந்து தர்மம்
    
இந்து தர்மத்தை நவீனப் படுத்தும் முயற்சிகள் இந்நாட்டிலும் மேள்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ  சுவிசேஷப் பணிகளால் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மலேசிய இந்தியர் காங்கிரஸ் (MIC) இந்து தர்மத்தையும், தமிழ் மொழியையும், இந்திய கலாச்சாரத்தையும் தார்மீக அளவில் பேணி வருகிறது.
    
மற்ற சமயங்களைப் போல் இந்து தர்மத்திற்கு இவற்றையெல்லாம் எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பல இந்துக்களுக்குத் தங்கள் சொந்த சமயத்தில் போதனை வழங்கப்படுகின்றன. தமிழ் மொழியும் மறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன் வளர்ச்சிக்கு இன்னும் அதிகமான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன.  சாய் பாபா உபதேசம் சிக்கனம் நிறைந்ததாகக் காணப்படுகிறது.
    
ஆனால், இந்திய மற்றும் இற்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. இந்நிலை துடைத்தொழிக்கப்பட வேண்டும்

மேற்கோள் நூல்கள்: 
1.   David Brown, A guide To Religions (TEE Study Guide – 12, SPCK-1995)
2.   T.M.P Mehadevan, Outlines of Hinduism

பேராயர் டத்தோ டாக்டர் எஸ். Batumalai (Ph.D)
ஏப்ரல் 2010


Translated by:
rawangjohnson@yahoo.com

No comments:

Post a Comment