Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Wednesday, July 14, 2010

இயேசு கிறிஸ்து எப்படி சாதாரன மனிதர்களை வல்லமை நிறைந்த சீடர்களாக மாற்றினார்?

Click here to download in PDF.
“ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்” 2 கொரிந்தியர் 5:17-20

1. நமது தேவன் ஆக்கமும் ஆற்றலும் நிறைந்தவராய் உள்ளார்

a) தேவன் நம்மை சௌந்தரியத்தோடும் அற்புதத்தோடும் படைத்துள்ளார். (ஆதியாகமம்)

b) அவர் படைப்பின் ஆற்றலை தேவன் குறைத்து மதிப்பிடவில்லை.

c) ஓர் எளிய மற்றும் சாதாரன மீனவனை அவர் ஓர் அப்போஸ்தலனாக மாற்றினார்.

d) இஸ்ரவேலர்களின் விகாரமான 12 கோத்திரங்களில் தொடர்கிறது. அவர்கள் தேவனின் தரிசனத்தை நிறைவேற்ற அழைக்கப்பட்டிருந்தனர்.

e) அவர்கள் கலிலேயா எல்லையைக் கடந்து இந்தியாவிற்கும் பிர தேசங்களுக்கும் சுவிசேஷத்தைக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

f) பயந்த சுபாவங் கொண்ட சீடர்கள் முதிர்ச்சியடைந்து மரிக்கவும் தயாராகினர்.

2. அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் இயேசு ஜெபித்தார்.

a) தமது ஆவியை நம்முள் சுவாசித்து நம்மைப் படைத்தார். (நாம் அவர் சுவாசமாயிருக்கிறோம்).

b) அவர்களைத் தேவனிடத்தில் ஒப்புக் கொடுக்க சுமார் 10 மணி நேரம் ஜெபித்தார்.

c) நாம் வல்லமையோடு ஊழியம் செய்ய இடைவிடாத ஜெபம் அவசியம்.

d) அவருடைய பெலத்திலும் வல்லமையிலும் ஞானத்திலும் சார்ந்திராவிட்டால் நாம் வெற்றியை எட்டிப் பிடிக்க முடியாது.

e) இயேசுவின் ஆரம்ப கால சீடர்கள் யூத மார்க்கத்தாராய் இருந்தாலும், அந்த இனவாத எல்லையைக் கடக்குமளவும் இயேசு கிறிஸ்து மாற்றியமைத்தார்.

f) கல்விமான்களும் அப்போஸ்தலரானார்கள்.


3. இயேசு அவர்களுக்குப் பயிற்சியளித்தார் “தேவன் அழைத்தவர்களை அவர் ஆயத்தம் செய்தார்” (யாத்திராகமம் 2:1-10)

a) இயேசுவானவரின் பயிற்சி, ஒரு இறையியல் கல்லூரி வழங்கும் பயிற்சியில் இருந்து மாறுபட்டிருந்த்து.

b) அவர் ஒரு குடும்ப உறுப்பினராக அவர்களோடு வாசம் செய்தார். அவர் சுயமாகவே கண்கானித்து வந்தார். ஒரு சிலருக்கு பிரத்தியேக பயிற்சி அளிக்கப்பட்டது (பேதுரு, யாக்கோபு, யோவான்).

c) அவருடைய ஊழிய பாணியை அவர்கள் கவனித்தார்கள் (உம். சுகப்படுத்துதல்).

d) இறையியல் பயிற்சியின் தொடக்க காலத்தில் (சிங்கப்பூர் திரித்துவ கல்லூரியின் முதலாம் ஆண்டில்) நாம் குருவானவருக்குத் துணையாக மட்டும் செயல்பட வேண்டும். குருவானவர் செய்கிற காரியத்தைக் கவனித்து அனுபவமாக கற்றுக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அவரோடு உரையாட வேண்டும்.

e) வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை, என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன். (அப்போஸ்தலர் 3:6).

f) அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள். (அப்போஸ்தலர் 2:4). அப்போஸ்தலர்கள் 14 மொழிகளில் பேசினார்கள் (2.8) பலர் கலக்கமடைந்தனர். ஆயினும் அவர்கள் தங்கள் சொந்த ஜென்ம பாஷையில் அருளுரையைக் கேட்டனர். (அப்போஸ்தலர் 2.11).



4. அவர் அவர்களை வல்லமையினால் நிரப்பினார் (மலாக்காவின் மின்சார வாரியம், எங்களிடம் வல்லமை இருக்கிறது என்ற சுலோகத்தைக் கொண்டிருக்கிறது)

a) அவர் தமது ஞானத்தைத் தந்தார். ஞானம் ஆற்றல் நிறைந்தது. அவருடைய வார்த்தை சக்தி வாய்ந்த்து. பிற்காலத்தில், சீமோன் என்ற பேதுரு, எழுதப்படிக்கத் தெரியாதவனாய் இருந்தும் வல்லமை வாய்ந்த ஒரு நிருபத்தை எழுதினார்.

b) தேவன் அவர்களைப் பரிசுத்த ஆவியின் மூலம் வல்லமை வழங்கினார்.

c) பேதுரு, பெந்தெகொஸ்தே தொடங்கிய அன்று, தனது முதல் அருளுரையை மிகவும் வல்லமையோடு வழங்கினார்.

d) பேதுருவால் எப்படி 3,000 பேரை மதமாற்றம் செய்ய முடிந்தது?

e) அவர்கள் அச்செய்தியைக் கேட்டு, உள்ளத்தால் நொறுங்கிப் போனார்கள்.

f) “நாம் என்ன செய்வது?” அந்த அருளுரை அவர்களை மனந் திரும்பச் செய்த்து. (அப்.2.38). எங்கும் பதற்றம் காணப்பட்டதோடு, அப்போஸ்தலர்கள் பல அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தனர். (அப்போஸ்தலர் 2:43)

g) அந்த 3,000 பேர் அற்புதமான முறையில் மதமாற்றப்பட் பிறகு, அனுதினமும் புதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. (அப்போஸ்தல்ல் 2.47)

h) இயேசு கிறிஸ்து அவர்களுக்கு அதிகாரம் வழங்கினார்: அவருடைய அதிகாரத்தின் நிமித்தம் நாம் அவருக்கு சீடராகவும் அப்போஸ்தலராகவும் தெரிந்து கொள்ளப்பட்டோம்.

i) இயேசு எல்லா நேரத்திலும் அவர்களோடு வாசம் செய்தார் (நான் எல்லா நேரத்திலும் உங்களோடிருப்பேன் என்று அவர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார்).




5. நீங்கள் தேவனின் பிரதிநிதிகளாய் இருக்கிறீர்கள் (அல்லது ஏரோது)

a) நீங்களே தேவனின் நிரூபம் (கடிதம்) (2 கொரிந்தியர் 3:1-3)

b) நீங்களே தேவனின் விரிவாக்கம்

c) உங்களைப் பலப்படுத்துகிற தேவன் எல்லாவற்றையும் சாதகமாக்குவார் (பிலிப்பியர் 4.17) தேவன் உங்கள் எல்லா தேவைகளையும் சந்திப்பாராக.




6. நடவடிக்கை

a) தேவனுடைய வார்த்தையை அனுதினமும் அறிமுகப்படுத்து. – அவை வல்லமை வாய்ந்தவை. இடைவிடாத பயிற்சியில் ஈடுபடு.

b) பல வித பழக்கவழக்கங்களை உடைய ஜனங்களோடு நட்பு பாராட்டுவது, ஓர் அஸ்திவாரமான பாலத்தை அமைக்கும்.

c) ஒரு குடும்பத்தைத் தத்தெடுத்துக் கொள் (அவர்களுக்காக ஜெபிக்கலாம். அவர்களோடு உறவாடலாம். அவர்களை உன்னுடைய இணை குடும்பமாக ஏற்றுக் கொள்ளலாம்)

d) சீடத்துவமும் அப்போஸ்தலத்துவமும் தேவனின் அழைப்பாகும். ஒரு வேளை நாம் செம்மையாகச் செயல்படுவதற்கு நீண்ட காலம் தேவைப்படலாம். நம்பிக்கையோடு பின்தொடர்ந்து, தேவ வசனத்தை வாசித்து தேவனடைய ஞானத்திற்கும் பயணத்திற்கும் ஜெபித்துக் கொள்.





பேராயர் பத்துமலை 18/07/2010 (CCM)



மொழிபெயர்ப்பு- வி.பி. ஜான்சன் விக்டர் (rawangjohnson@yahoo.com)

Monday, July 12, 2010

ஆராதனையைப் பற்றிப் புரிந்து கொள்ளுதல்

– பேராயர் பத்துமலை (2010)


புகழ் பாடுவதற்கான (ஸ்தோத்திர) இறையியல்



1. ஆராதனை என்றால் என்ன?

a) தேவனை பக்தி வினையத்தோடு வழிபடுதல்.

b) தேவனைக் கும்பிடுதல் (தானியேல்.2:46; 3:5), ஆதியாகம்ம் 24.26,26ஐக் காணவும்.

c) அது தேவனிடத்தில் நமது பயபக்தியை வெளிப்படுத்துவது ஆகும் (மாற்கு 5.6, அப்போஸ்தலர் 7.43)

d) தேவனிடத்தில் கீழ்ப்படிவதற்கு அது மிக உயரிய உழைப்பு ஆகும்.

e) நமது படைப்பாளராகய அவரைப் பிரியப்படுத்தும் செயல் ஆகும். நீ என் நேசத்துக்குரியவன் என்று சொல்ல வேண்டும். கெட்ட குமாரனாக அடையாளங் காணக் கூடாது.

f) அது தேவனுக்கு நறுமணமாய்க் காணப்படுகிறது (ஓசியா 14:6)

g) அனைவரும் தேவனைத் துதிக்க வேண்டும் (சங்கீதம் 150.6)



2. ஏன் ஆராதிக்க வேண்டும்?

a) படைக்கப்பட்டவர் படைத்தவரை ஆராதிப்பது கடமையாகும் (ஆதியாகம்ம் 22.5, யோபு 9.10)

b) இது தேவனைத் துதிக்கும் ஒரு செயல்படு

c) நமது இரட்சகராகிய தேவனை மதிப்பதும், பெருமைப்படுத்துவதும் ஆகும்

d) அவர் நமது தேவன். நாம் வேறு யாரையும் ஆராதிக்க்க் கூடாது. (உபாகம்ம் 6.15)

e) உண்மையான ஆராதனை தேவனை மேடையின் மையத்தில் வைக்கிறது. (சங்கீதம் 95.6)



3. எப்படி ஆராதிப்பது?

a) வார்த்தைகள், செயல்பள் (ஆதியாகம்ம் 26.46), பாடல், மௌனம், உள்ளத்தைச் சோதித்தல் ஆகியவற்றின் மூலம்

b) நாம் எங்கு வேண்டுமானாலும் ஆராதிக்கலாம். ஒரு பலிபீடத்தைக் கொண்டும் ஆராதிக்கலம். (2நாளாகம்ம் 7.10)

c) தேவனை சௌந்திரியத்தோடும் பரிசுத்த்த்தோடும் ஆராதிக்க வேண்டும் (சங்கீதம் 29.2) பொதுவான ஜெப நூலும் அமெரிக்க தகுதர வேதாகம்ம் (ஏஎஸ்பி) ஆகியவை இதற்கு உதவக்கூடும்.

d) அவர் முன் தலை வணங்கு (சங்கீதம் 95.6, மத்தேயு 4.9)

e) தேவ ஆவியானவரின் ஒத்தாசையோடு; (யோவான் 4:23-24)

f) உண்மையோடும் நேர்மையோடும் (ஓசியா 8:4-14); ஆமொஸ் 5:21-24

g) அவருடைய வார்த்தைகள் மூலம் (சுவிசேஷம்)

h) நமது தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் (வெளி 22:8; சங்:1.00:1"2, பாடல்கள் மூலம் (சங்கீதம் 98:1, சங்கீதம்96:1-3)



4. ஆங்கிலிக்கன் ஆராதனையின் மூலம் நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

a) பரிசுத்த்த்தின் சௌந்தரியத்தைப் புரிந்து கொள்ளுதல் முறைமை, நல்ல சுவை, சுய கட்டுப்பாடு ஆகியவை அதில் அடங்கலாம்.; அல்லது சங்கீத்த்தையும் பாடலாம்.

b) ஆங்கிலிக்கன் சித்தாந்த்த்தின் நோக்கமானது, கிறிஸ்துவின் சாயலில் பரிசுத்தத்தை தனி மனிதர்களுக்கும் சமுதாயத்திற்கும் ஊட்டுவதாகும். ஆங்கிலிக்கன் சித்தாந்தத்தின் ஜீவ நாடி பிரித்து ஆள முடியாதவை.

c) ஃபோர்ட்டும் ஹர்டியும்: தங்கள் வாழ்வில் முதல் இலக்கை தேவனை வணங்குவதும் தங்களை அர்ப்பணிப்பதிலும் ஈடுபடுகிற ஆத்துமாக்கள் மூலம்தான் புதுபிக்கும் தொடங்குகிறது, என்று எழுதியுள்ளனர். இதில் ஈடுபடாத யாவரும் அந்த அனுபவத்தை இழந்து விடுகிறார்கள். (ஏ.பார்ட்டியட், ப.170)

d) ஆங்கிலிக்கன் முக்காலியில் உட்கார்ந்திருக்கிறது – சுசிஷேசம், சாக்கிரமந்து மற்றும் ஆராதனை (உம்- காலை, மாலை. ஜெபமும் பரி.நற்கருணை ஆராதனையும்)

e) இறையியல் அடிப்படையில் ஆராதிக்கும் செயல் ஆகும் (லெக்சோராண்டி, இயக்ஸ் கிரெடெண்டி) ஒருவர் ஆராதிப்பதைப் பார்க்கும் மற்றவர் ஆராதிக்கத் தொடங்குகிறார். இது ஒரு சங்கிலித் தொடர் போல் வளரும்.

f) ஆங்கிலிக்கன் ஆராதனையை உயர்த்திக் காட்டுவதில் ஒன்று வாத்தியக் கருவி பாரம்பரியம் ஆகும்.

g) தேவனுக்குக் கீழ் ஒரு நல்ல சமூகத்தை உருவாக்குவதுதான் ஆங்கிலிக்கன் ஆராதனை.

h) ஆங்கிலிக்கன் சமூகத்தின் சுவிசேஷப் பணிக்காக முக்கியமாக திகழும் 5 காரியங்கள்

a) பரலோக ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்திய பறைசாற்றும் கடமை

b) உபதேசிப்பது;

c) ஞானஸ்நானம் கொடுப்பது;

d) புதிய விசுவாசிளுக்கு ஆன்ம பெலன் கொடுப்பது. அவர்களுக்குப் பின்வரும் காரியங்கள் செய்யப்படுகிறது; e) மனித தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கனிவாக உபசரிப்பது (ப.28, ஏலன் பெர்டியட்) மேலும் அதிகமான ஆத்துமாக்களை மதமாற்றி சமுதாயத்தின் புனித்த்தைப் பேணுதல். (மேல் விபரங்களுக்கு எலன் பார்ட்டியெ, ஒரு வாஞ்சிக்கும் சமநிலை, ஆங்கிலிக்கன் பாரம்பரியம், டிஎல்டி, லண்டன் 207)

முடிவுரை: வேதாகமும் ஜெப புத்தகமும் நாம் தேவனை ஆராதிப்பதற்கும் இயேசு கிறிஸ்துவைப் பறை சாற்றுவதற்கும் உதவுகிறது. இது நமது அயலாருக்குக் கனிவான சேவையை வழங்க வழியைத் திறந்து விடுகிறது. தேவனை ஆராதிப்பதற்குப் பல வழிகள் உள்ளன. ஆனால் ஒரே தேவனை மட்டும்தான் ஆராதிக்க வேண்டும் (யாத்திராகம்ம் 20.3)



பேராயர் டத்தோ டாக்டர் எஸ். பத்துமலை, பிஎச்டி


மொழிபெயர்ப்பு – வி.பி.ஜான்சன் விக்டர்

கிறிஸ்தவ இல்லங்கள் அருட்பணி மையமாகச் செயல்படுதல்

அத்தியட்சாதீன நீள்விரி இறையியல் கல்வி (TEE) 2010

Click here to download in PDF


தேவன் நமக்குள்ளே வாசம் பண்ண வந்தார் (யோவான் 1.14), நாம் தேவனின் பரிசுத்தமுள்ள குடும்பமாக இருக்கிறோம்.

அருட்பணிக்காக இல்லங்களை மாற்றியமைத்தல்



1. முன்னுரை

1.1. இல்லமானது தேவன் நம்மைப் பேணி வளர்த்து, தேவனுக்காக கனி தருவதாய் இருக்கிறது (சங்கீதம் 127.1,2???)

1.2. கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா. (சங்கீதம் 127.1,2)

1.3. அது மரியாள், யோசேப்பின் இல்லம் போல ஆன்மீக இல்லமாக இருக்க வேண்டும்.

1.4. இவ்வுலகில் நாம் மிகப் பெரிய அருட்பணி மேற்கொள்ள தேவன் நம்மோடு வாசம் செய்ய தேர்ந்தெடுத்துள்ளார். (1யோவான் 4.12)

1.5. மரியாள், மார்த்தாள், லாசரு தங்கள் இல்லத்தை இயேசு வாசம் செய்ய திறந்து விட்டனர். (லூக்கா 10.38)

1.6. சகரியா வீட்டுக்குள் பிரவேசிக்க இயேசு வாஞ்சையாய் இருந்தார். (லூக்.19)

1.7. 31ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட நமது அத்தியட்சாதீனத்தில் 10ஆயிரம் இல்லங்கள் திறக்கப்படலாம். பிறரிடம் சுவிசேஷம் சென்றடைய இது வல்லமை வாய்ந்த கூடமாக மாறும்.



2. கிறிஸ்தவ இல்லங்களில் நாம் தகுதி வாய்ந்தவர்களாக மாற நாம் எப்படி பயிற்சி பெறலாம்?

2.1. ஓர் அன்பார்ந்த குடும்பம் முதலில் தேவனையும் பின்னர் மற்றவர்களையும் நேசிக்கிறது. நாம் அதைச் செய்தால் இவ்வுலகு மாற்றத்தைக் காணும். இது என்ன சிலாக்கியம்!...

2.2. நாம் பிறர் நலனில் அக்கறை கொண்டால், இவ்வுலக நலனிலும் அக்கறை கொள்கிறோம்.

2.3. நாம் இடையர்களாய் இருக்கிறோம். ஒருவரை ஒருவர் கனம் பண்ணுகிறோம். காயினைப் போல் அல்ல. (ஆதியாகம்ம் 4)

2.4. நாம் பாவிகளாய் இருந்தாலும், தேவன் நம்மை நேசிக்கிறார் (யோவான் 3.16)

2.5. சாட்சி பகரும் குடும்பம் இல்லத்திலும் சபையிலும் குடும்பமாக ஆராதிக்க வேண்டும்.

2.6. நாம் தேவனின் வார்த்தையை தினமும் அறிய வேண்டும். இதன் மூலம் நாம் தேவனால் செப்பனிடப்படுகிறோம்.

2.7. நாம் பிறர் நலனுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். இது பிறர் தேவைக்காகப் பயணம் செல்ல உதவும்.

2.8. நாம் உண்மையோடு ஜெபிக்க வேண்டும். எப்போதும், இடைவிடாமல் அதி சீக்கிரத்தில் ஓர் இல்லத்திற்காக ஜெபிக்க வேண்டும். இது தேவனின் வல்லமை வாய்ந்த வெகுமதியாக இருக்கிறது.



3. குடும்ப சுவிசேஷ நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்ளலாம்?

3.1. ஒவ்வொருவரும் ஜெபித்து வணங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பேராயருக்காகவும், குருமார்களுக்காகவும், சபை மூப்பர்களுக்காகவும் ஜெபிக்கவும்.

3.2. சுவிசேஷக் கதைகளைப் பிள்ளைகளுக்கு வாசித்துக் காட்டுங்கள். (உம் – பவுல், பர்னபா, பிரான்சிஸ் சேவியர்)

3.3. அத்தியட்சாதீன சுவிசேஷ காணிக்கைப் பெட்டிகளைப் பயன்படுத்தவும். (உம் – RM30,000 x 10 x 12)

3.4. கிறிஸ்துவோடு சிநேகிதம் பாராட்டுங்கள். நம்மை நண்பர்களாக்க அவர் அழைக்கிறார். அதன் மூலம் அநேகர் நண்பர்களாகிறார்கள். அவரை அனைவருக்காகவும் மரித்தார். உன்னுடைய சுயநலத்திற்காக அவரைத் துக்கப்படுத்தாதிருப்பாயாக. நாம் நியாயந் தீர்க்கப்படுவோம்.

3.5. உங்கள் நண்பர்களை சிநேகிதத்திற்காகவும் ஆன்மீகத்திற்காகவும் இல்லத்திற்கு அழையுங்கள். பிற சபையாரோடு சேர்ந்து செய்வதன் மூலம் இதனை ஆக்கப்பூர்வமான ஐக்கியமாக்கலாம்.

3.6. பிள்ளைகளை ஆன்மீகத்திலும், சமூக உறவிலும், சரீரத்திலும், அறிவிலும் தேவ பக்தியில் வளர்க்கவும். அவர்களுக்கு தேவ பயம் உண்டாயிருக்கட்டும். (லூக்கா 2.52)

3.7. முன்மாதிரியாக வாழும் பிறரை உதாரணம் காட்டி பிற குடும்ப உறவுகளைப் பின்பற்ற செய்யுங்கள்.

3.8. ஒவ்வொரு கிறிஸ்தவக் குடும்பமும் கிறிஸ்தவரல்லாத ஒரு குடும்பத்தைத் த்ததெடுத்துக் கொள்ள வேண்டும். இது தேசத்திற்கும் தேவ சுவிஷேத்திற்கும் நல்லதாய் உள்ளது.

3.9. குடும்ப சுவிசேஷம் நமது கிறிஸ்தவ பராபத்தியமாக திகழ்கிறது. அதை ஆசீர்வதிக்க தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுங்கள். தேவனிடத்தில் ஜெபியுங்கள்.



பேராயர் டத்தோ டாக்டர் எஸ். பத்துமலை, பிஎச்டி


மொழிபெயர்ப்பு – வி.பி.ஜான்சன் விக்டர்