Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Friday, May 7, 2010

பௌத்தர்களைப் பற்றி அறிந்து கொள்வோம்

Buddisem


அத்தியட்சாதீன நீள்விரி இறையியல் கல்வித் திட்டம்



மலேசியர்களின் சமய நம்பிக்கைகள் தொடர்பான ஓர் அறிமுகம்


முகவுரை
பௌத்தம் கோடிக்கணக்கான மக்களின் மார்க்கமாக இருக்கிறது – ஒரு வேளை 60 கோடியை எட்டலாம். கிறிஸ்தவம் இஸ்லாத்தைப் போன்று இதுவும் பிரச்சாரத்தின் மூலம் பரவியது. இன்று மேற்கத்திய நாடுகளையும் சென்றடைந்துள்ளது.

பௌத்தம் 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தோன்றியுள்ளது. ஆற்றல் வாய்ந்த நாகரீக உந்துதலாக செயல்பட்டு, கலை, இலக்கியம், மற்றும் பிற துறை நடவடிக்கைகளையும் எழுச்சியூட்டியுள்ளது. இன்று பர்மா, தாய்லாந்து, தீபெத்து, கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளின் தேசிய மதமாகத் திகழ்கிறது. இலங்கை, சீனா, ஜப்பான் மற்றும் கொரியாவின் பெரும்பான்மை மக்கள் பௌத்தர்கள்.

இரண்டாகப் பகுக்கப்படும் பௌத்த கொள்கையில் பல பிரிவுகளும் உள்ளன. அவை ஹினாயானா மற்றும் மஹாயனா என்றழைக்கப்படுகின்றன.

A. பொளத்த மதத்தை நிறுவியவர்
பௌத்தர் கௌதமன் குடும்பத்தைத்ச் சேர்ந்தவர். அவரின் இயல் பெயர் சித்தாத்தர். அவரின் தந்தையாரின் பெயர் சுத்தோஹோத்தனா. அவர் ஓர் இந்து பிரபுகுல தலைவர். தாயாரின் பெயர் மஹாமாயா. தம் மகன் எந்த வேதனையையும் அதிருப்தியையையும் அடையக்கூடாது என்று சித்தாத்தாவை மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டோர். ஆயினும் அந்தப் பிள்ளையான இளவரசர் வாழ்வின் கொடூர நிதரிசனங்களைக் காணும் நேரம் வந்தது: ஒரு நாள் கந்தலான துணியை மட்டும் இடுப்பில் கட்டித் திரிந்த தலைமயிர் நரைத்த முதியவரைக் கண்டார். இன்னொரு நாள் ஒருவர் மூச்சுத் திணரலால் வேதனையோடு தரையில் கதறித் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். மற்றுமொரு நாள், ஒரு கூட்டத்தார் ஒரு பிரேதத்தைச் சுமந்து செல்வதைக் கண்டார். இவற்றையெல்லாம் கண்ட அவர் சஞ்சலமும் வேதனையும் துக்கமும் அடைந்தார். எல்லா வேதனைகளுக்கும் அவர் பதில் காண முற்பட்டார். வியாகுலத்தின் மத்தியில் அவர் அமைதியான வாழ்வையும், அபாயத்தின் மத்தியில் பாதுகாப்பான வாழ்வையும் வாழ்ந்து வந்த்தை அவர் உணர்ந்தார். அவர் உலகத்தை வெறுத்து விட்டு, அழிந்துபோக்க் கூடிய வாழ்வின் பாடுகளின் மத்தியில் அமைதியையும் பாதுகாப்பையும் தேடப் புறப்பட்டார்.

ஒரு நாள் தம் குடும்பத்தையும் மகன் ராகுலாவையும் விட்டுவிட்டு தத்துவஞானிகளிடமும் துறவிமார்களிடம் ஞானத்தைத் தேடிச் சென்றார். அவர் ஒரு பதிலையும் காண்ட்டையவில்லை. தியானத்திற்குப் பிறகு அவர் வாழ்வின் புதிருக்கு தீர்வு கண்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு ஞானம் பெற்றவர் என்ற பொருளைச் சுமக்கும் புத்தர் என்ற பெயரோடு திகழ்ந்தார். அப்போது அவருக்கு வயது 35.


B. புத்த மதப் போதனைகள்

1. மேன்மை நிறைந்த நான்கு சத்தியங்கள்
a. உலக வாழ்வு வேதனை நிறைந்த்து; இது மேன்மை நிறைந்த சத்தியமாகும்
b. வேதனையின் பிறப்பிடத்தை எப்படி ஒழித்துக்கட்ட முடியும்
c. தீர்வானது ஒரு மனிதனுக்கு அமைதியைத் தரும்

2. வேதனையானது ஒரு பொதுவான உண்மையாகும். பாலி மொழியில் இதற்கு துக்கம் என்று பொருள்.

3. மேன்மை நிறைந்த இரண்டாவது சத்தியம் வேதனைக்கான காரணத்தை கூறுகிறது: உலகப் பற்றே அதற்குக் காரணம். அறியாமை பற்றுக்கு வழி வகுக்கிறது; அறியாமை ஆசையைத் தூண்டுகிறது, அது வேதனையை விளைவிக்கிறது.

4. 3வது மேன்மையான சத்தியம், வேதனையிலிருந்தும் அடிமைத்தனத்தில் இருந்தும் விடுதலையடையும் ஒரு நிலை உண்டு என்று பறை சாற்றுகிறது. அதன் இறுதி விளைவு நிர்வாணா (நிபானா) ஆகும். இதனை சமாதானம் என்றும் சந்தோஷம் என்றும் புரிந்து கொள்ளலாம்.

5. 4வது மேன்மையான சத்தியம், நிர்வாணா நிலைக்கு வழிவகுக்கும் பாதையைப் பறை சாற்றுகிறது. அது 8 முனைப் பாதை என்று அறியப்படுகிறது:

நீதி:
5.1 நேர்மையான பேச்சு
5.2 நேர்மையான செயல்
5.3 பிறருக்குத் தீங்கு விளைவிக்காக முறையில் பொருளீட்ட நேர்மையான முறையில் வாழ்தல்.

ஒருவந்தச் சிந்தனை:
5.4. நேர்மையான முயற்சி: உம். பொல்லாத சிந்தனையைத் தவிர்த்தல்
5.5. நேர்மையான சிந்தனை – உடல், உணர்வு, சிந்தையின் ஒவ்வொரு நிலையிலும் விளிப்பான கவனம் செலுத்துதல்
5.6. நேர்மையான ஒருவந்தம்: உம். தியானம்
5.7. நேர்மையான கருத்து: நான்கு சத்தியத்தைப் புரிந்து கொள்ளுதல்
5.8. நேர்மையான சிந்தனை (உம். இச்சை, கொடுமையில் இருந்து விடுதலை)

ஒருவன் வாழ்வின் வழியைப் பெற, தனக்குத் தானே ஆசானாகச் செயல்பட வேண்டும் என்று பௌத்தம் கூறுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் சொந்த கிரியைகளினாலே இரட்சிப்பைத் தேடிக் கொள்ள வேண்டும். தான் செய்ய வேண்டியதை பிற ஒருவனாலும் செய்ய இயலாது. இதனைச் சொந்த முயற்சி அல்லது சொந்த வெற்றி என்று கூறுவர். ஆனாலும், மஹாயானா கோட்பாட்டில் ஓர் இரட்சகரின் பங்கு செருக்கப்படுகிறது. தேர்வடா கோட்பாட்டில், நான் புத்தரில் சரணடைகிறேன் என்று ஓர் உபாசகன் கூறுகிறான்.

ஆன்ம மறுப்புச் சித்தாந்தம்:
மனிதனின் ஆன்மா நிலையானது என்று பொளத்தம் போதிக்கவில்லை. மாறாக, ஆன்ம மறுப்பை (அன்னாத்தா) வலியுறுத்துகிறது அனைத்தும துக்கத்தைச் (வேதனை, அழிவு, மரணம்) சார்ந்த்து என்று நம்ப்ப்படுகிறது.

கர்ம்மும் வினையும்: கர்மத்தை, வினையும் விளைவும் விதியாகக் காணலாம். மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். (கர்மம் – செயல், வினை, கிரியை)

இப்போராட்டத்தை எப்படி நிறுத்துவது: 8 முனைப் பாதையின் இறுதியிலக்கு நிர்வாணா ஆகும். நிர்வாணா என்பது பேராசை என்ற வளிமைத்தை நிர்மூலமாக்கும் நிலை வாழ்வு, இச்சை, பேராசை, சுயநலம், பசிதாகம் ஆகிய எல்லாவற்றையும் ஒருவன் நிர்மூலமாக்க வேண்டும்.

புனிதத்திற்கான பாதை: இந்த 8 முனைப் பாதையில் வெற்றி பெறுபவன், 4 புனித நிலைகளிலும் வெற்றி பெறுகிறான்:

a. முதல் நிலையில் ஒருவன் இந்த 3 தடங்கல்களில் இருந்து சுதாகரித்துக் கொள்கிறான்
i. உண்மையில் தனக்கு மாறாத ஆன்மா இருக்கிறது என்ற மூட நம்பிக்கை;
ii. புத்தர் மீதுள்ள ஐயம்
iii. வேதானைகளில் இருந்து விடுபட மேற்கொள்ளும் அதிகப்படியான சடங்குகள்

ஒருவனை எல்லா தடங்கல்களில் இருந்தும் விடுவிப்பதே இந்த எல்லா முயற்சிகளின் இலக்கு. நிர்வாண நிலையை அடைவதே அதன் இறுதி இலக்கு.



C. புத்த தர்ம சாஸ்திர நூல்கள்
புத்த சீடர்கள் முதலாவதாக, துறவறத்திற்காக தங்கள் எஜமானரின் தீர்க்கமான ஒவ்வொரு வார்த்தைகளின் மற்றும் கட்டளைகளின் ஆதாரங்களையும் தேடினர். இரண்டாவதாக, தலைமைக் கல்விமான்கள் அவருடைய போதனைகளுக்கு வழங்கிய விளங்கங்களைத் திரட்டினர். இவை தேர்வடா சாஸ்திரங்கள் என்றழைக்கப்படுகின்றன. இந்தத் தலைமைக் கல்விமான்கள் மூப்பர்களின் பண்டசாலை சட்ட அறிஞர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆனாலும், பல்வேறு தேசங்களின் பௌத்தர்கள், தங்கள் பண்டசாலைப் பெருக்கத்திற்காக சொந்த நூல்களைச் சேர்த்துக் கொண்டனர்.

தேர்வடா சாஸ்திரம்: இந்த விதி திரிப்தாக்கா (3 கூடைகள்) என்றும் அறியப்படுகிறது. இதில் மூன்று வெவ்றேறு நூல்கள் அடங்கியுள்ளன. அவை:

a. விநாய கூடை (கட்டொழுங்குக் கூடை) துறவிமார்கள் மற்றும் கன்னிகாஸ்திகளின் வாழ்வுக்குரியது
b. சுத்தா கூடை (பிரசங்கக் கூடை) பொளத்தரின் பிரசங்கங்களின் தொகுப்புகளோடு பழமொழிகளும் அவரின் ஏனைய போதனைகளும் அடங்கியுள்ளது.
c. அபிதம்மா கூடை (நுண்பொருள் தத்துவக் கூடை) பிந்திய கால வம்ச மரபு பண்டிதர்களின் தத்துவ நூல்களைக் கொண்டுள்ளது.



மஹாயானா சாஸ்திரம்
a. ஆரம்ப கால சாஸ்திரங்கள் கி.மு. 100 – 800ல் வடமொழியில் எழுதப்பட்டது.
b. ஒரு மஹாயானா கோட்பாடு உண்டு. ஒவ்வொரு தேசங்களும் தங்கள் சொந்த மொழிகளில் உரைகளைத் தொகுத்துக் கொண்டன. (உம் – சீனா, திபேத்து, நேப்பாளம், கொரியா, ஜப்பான்).

c. இந்த சாஸ்திரங்கள் 3 பெரிய குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன:
• விநயா: சமய முறைகளின் விதிகள்;
• சுத்ரா: பொதுவாக தேர்வடா சுத்தா கூடையில் அடங்கியுள்ள உபதேசம்
• சாஸ்திரங்கள்: தத்துவ விவாதங்கள்


D. முக்கிய பொளத்த பிரிவினைகள்

I. பௌத்த போதனைகள் பெரும்பாலும் தென்னக வளாகத்தில் நிலைத்திருக்கின்றன (இலங்கை, பர்மா, தாய்லாந்து)

II. மஹாயானா பௌத்தம்: (பெருஞ் சக்கரம்)
a. அவருடைய பிறப்புக்கும் வாழ்வுக்கும் 200 ஆண்டுகளுக்குப் பிறகு இது பிற நாடுகளில் வளர்ந்த்து.
b. இது ஒரு மிதவாத போதனை (உள்ளூர் கலாச்சாரத்தையும் தத்துவத்தையும் உள்வாங்கிக் கொள்ளும்).
c. இது, விசுவாசமும் தியானமும் ஒரு பௌத்தனை உச்சநிலை ஆன்மீக இலக்கைச் சென்றடையச் செய்யும் என்று போதிக்கிறது.
d. விசுவாசத்தின் மூலம் இரட்சிப்பைப் பெறுதல் என்பது மஹாயானா பௌத்த கோட்பாட்டின் முக்கிய போதனைகளில் ஒன்று.
e. தேர்வாடா பௌத்தத்தின் இறுதி இலக்கு நிர்வாண நிலை.
f. இப்போதனையின் இலக்கு போதி சாஸ்திரம். (கருணை நிறைந்த மனிதன்).
g. எல்லா நல்ல பௌத்தர்களும், துறவிகளும், சராசரி மனிதர்களும் இந்த சுவர்க்கத்திற்குப் போக முடியும்.
h. ஜெபம், வழிபாடு, ஆராதனை – இவை மஹாயானா தியானத்திற்கு முக்கிய ஆதாரங்கள்.


III. ஷென் பௌத்தம்: சீனாவில் தொடங்கி ஜப்பானில் பரவியது

a. ஷென் என்றால் ஜப்பானிய மொழியில் ஆழ்ந்த சிந்தனை என்று பொருள். (இது ஒரு ஞானம் பெரும் நிலை)

b. ஒழுக்கப்பூர்வமான தியானத்தில் மூழ்கியிருக்கும் போது ஒருவனுக்கு மின்னலைப் போன்று ஞானம் தோன்றும்.



IV. தாய்லாந்தின் நவீன இயக்கம்

a. இது தியானத்தின் எழுச்சி நிலை. இரண்டு விதமான தியான நிலையங்கள் தோன்றியுள்ளன: 1). ஆழ்ந்து உற்றுநோக்கும் தியானம், 2). உள்நோக்கிப் பார்க்கும் தியானம்.

b. கல்வி: பௌத்தர் மற்றும் அவருடைய சீடர்களைப் பற்றிய தொடர்ச்சியான கல்வியும் உதவியுள்ளது. பௌத்தர்களும் தங்கள் சொந்த பல்கலைக் கழகங்களை நடத்துகின்றனர்.



E. வழிபடும் முறைகள்
a. நடத்தையில் தியானமும் கவனமும் செலுத்துவதோடு, நல்ல சிந்தனையும் பௌத்தர்களின் ஜீவியத்தில் இடம் பெறுகிறது. இது பௌத்த துறவரத்தில் காணப்படுகிறது.

b. தேர்வாடா தேசங்களில் சராசரி பௌத்தர்கள் தங்கள் எஜமானரை மனிதனுக்கும் அப்பாற் பட்டவராகக் கருதுகிறார்கள். அவரை வாழ்ந்துணர்ந்து அன்பு காட்டிய தேவாதி தேவனாகவும் எல்லா வணக்கத்துக்கும் பாத்திரராகவும் நம்புகிறார்கள்.

1. சரணாதிகதி உபதேசங்களும்

மூன்று சரணாதிகதி நிலைமை உள்ளன:

• நான் சரணடைய பௌத்தரை நாடுவேன்.
• நான் சரணடைய சித்தாந்த்த்தை நாடுவேன்.
• நான் சரணடைய துறவர சகோதரர்களை நாடுவேன்.


அவர்களுக்கு ஐந்து உபதேசங்களும் உள்ளன:

• உயிரைக் கொல்லக் கூடாது
• திருடக் கூடாது
• விபச்சாரம் செய்யக் கூடாது
• பொய்யுரைக்கக் கூடாது
• மது அருந்தக் கூடாது


2. காணிக்கை: வழிபடுபவர்கள் எல்லா வழிபாட்டு நிலையங்களிலும் காணிக்கை வழங்குகிறார்கள். (உம்- மெழுகுவர்த்தி, சாம்பிராணி, உணவு போன்றவை)

3. ஜெபங்களும் தூபமிடுதலும்: வழிபடுபவர்கள் சாம்பிராணி தூபமிட்டு மனித தேவைகளுக்கும் பொருளாதார ஆசீர்வாத்த்திற்கும் வேண்டுகிறார்கள்.

அவர்கள் மும்மூர்த்திகளின் சிந்தனை, சொல், வார்த்தைகளால் உண்டான பாவங்களுக்கும் மன்னிப்புண்டாக ஜெபிக்கிறார்கள் (பௌத்தர், சித்தாந்தம், துறவிமார்கள்).

4. பெலனீட்டு மாற்று: இந்தக் காணிக்கைகளால் உண்டான பெலனை மரித்தவர்களுக்காகவும், தெய்வங்களுக்காகவும், பிற உயிர்களுக்காகவும் ஈடுகொடுக்கிறார்கள்.



5. யாத்திரிகள் (பயணிகள்): பௌத்தர்

பௌத்தர், உணர்ச்சிப்பூர்வமாக நோக்க வேண்டிய 4 இடங்களைப் பிரகடனப் படுத்துகிறார். அவை, அவர் பிறந்த இடம், ஞானம் பெற்ற இடம், முதலாவது பிரசங்கித்த இடம், மற்றும் அவர் நிர்வாண நிலையில் மரித்த இடம் ஆகும்.

ஒவ்வொரு பௌத்த தேசங்களிலும் தியானத்திற்கான சிறப்புப் பீடங்கள் உள்ளன. (உதாரணத்திற்கு இலங்கையில் உள்ள அதாமின் அமைதி பீடத்தைக் குறிப்பிடலாம்).


F. சிறப்பு பௌத்த பீடங்கள்:

ஒவ்வொரு பௌத்தருக்கும் தனக்கென்று ஒரு சிறப்பு பீடம் இருக்கும். ஆயினும் ஒரு பௌத்த ஆலயத்தில், பௌத்தரோடு தொடர்புடைய 3 காரியங்கள் காணப்படும்.

a. பாதுகாக்கப்பட்ட அவருடைய உறுப்புகளின் ஆராதனை: கவனமுடன் பாதுகாக்கப்பட்ட அவருடைய பல், தலை முடிகள், கழுத்துப் பட்டை எழும்பு)
b. போதி மர மரபு. ஒவ்வொரு ஆலயத்திலும் மடாலயம் இருக்கும். ஒவ்வொரு போதி மரத்திலும் தேவன் குடியிருக்கிறார் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
c. புத்த உருவ ஆராதனை. ஆரம்ப காலத்தில் புத்த உருவம் கிடையாது. எந்த வகையிலும் தம்மை ஆராதிக்க வேண்டும் என்று அவர் விரும்பவில்லை. பாறைகளில் செதுக்கப்பட்ட சக்கர வடிவம், பாத வடிவம், தாம் அமர்ந்த இருக்கை போன்றவற்றின் மூலம் அவர் காட்டப்பட்டார். பௌத்தரின் உருவங்கள் மூன்று அங்க ஸ்திதி நிலைகளில் காட்டப்படுகின்றன: 1). நிற்றல், 2). அமர்தல் மற்றும்3). சாய்ந்து ஓய்வெடுத்தல்.



G. பௌத்தர்கள்
“வேதனைப்ப்டுதலும் வேதனையைத் தாங்குதலும்” இது எல்லா பௌத்த மத மற்றும் கோட்பாடுகளையும் தொகுத்து விடுகின்றது. ஒவ்வொரு பௌத்தரின் குறியிலக்கும் வேதனையில் இருந்து விடுதலை பெறுவது ஆகும். முழு விழிப்புணர்வோடு தனது பிறவி பலனை அடைவதற்கும் மறுபிறப்பில் சுகபோகங்களை அனுபவிக்கவும் அவன் கடுமையாக உழைக்கிறான்.

பெரும்பாலானோர், தங்கள் வாழ்வு நிறைவடைந்தவுடன் மீண்டும் வாழத் தொடங்குகிறார்கள் என்று நம்புகின்றனர். இது இறப்பு ஜெபங்களின் போது துக்கம் அணுசரிக்கிறவர்கள் மறுபிறப்பில் மீண்டும் தங்கள் அன்பானவர்களைச் சந்திக்கும்படி வேண்டிக் கொள்வதன் மூலம் தெள்ளந் தெளிவாக காணப்படுகிறது.

முடிவுரை
ஒரு மாணவர் பௌத்த ஆலயத்தைச் சென்று காண்பதும் அவர்களின் ஏதாவது ஒரு சாஸ்திர நூலை வாசிப்பதும், ஒரு பௌத்த சமையத்தவரோடு பேசுவதும் உதவியாக இருக்கும். அவர்களில் சிலர் தாவோ மார்க்கத்தார்.



பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை (ஏப்ரல் 2010)



Translated by: rawangjohnson@yahoo.com

No comments:

Post a Comment