Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Monday, August 29, 2011

116. பொந்தியு பிலாத்து - யுதேயாவின ரோம ஆளுநர்





கரு வசனம்
38 அதற்குப் பிலாத்து: சத்தியமாவது என்ன எனறான். மறுபடியும் அவன் யுதர்ளிடத்தில் வௌயே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்.
39 பஸ்கா பணடிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலை பண்ணுகிற வழக்கமுண்டே: ஆகையால் யுதருடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலை பண்ண உங்களுக்கு மனதுண்டா என்றான்.    யோவான் 18: 38-39


சுருக்கத் திரட்டு
·       நம்முடைய விசுவாசப் பிரமாணத்தில் இவனுடைய பெயரை நாம் குறிப்பிடுகிறோம்.
·       இயேசுவை சிலுவையில் அறைவதில் இவனுக்கும் பங்கிருந்தது.
·       இவன் ஒரு கொடூரமான மனிதன்.
·       இவன் யுதரகளை பிரியப்படுத்த விரும்பினான்.
·       இவன் காவலுக்கு வௌயேற்றப் பட்டான.


1     அறிமுக உரை 
அவனது கதை: இவன் தேவாலயங்களில் அதிகமாக அறியப்பட்டவன். எப்பொழுதெல்லாம் நாம் விசுவாசப் பிரமாணத்தைச் சொல்லுகிறோமோ அப்பொழுதெல்லாம் இவனுடைய பெயரையும் நாம் குறிப்பிடுகிறோம். இவன யார்? ரோம டைபெரயஸ் (கி.பி 26-36) ன்றவனின் கீழ் இவன் ஒரு நிர்வாக அலுவலர் அல்லது யுதேயாவின் ஆளுநர். இவன் பிறந்த இடம் தெரியவில்லை. வரலாறு இவனுக்கு பொதுப்பணித் துணைவர் என்கிற வருத்தத்திற்குரிய கதாப்பாத்திரத்தை இவனுக்கு வழங்கியிருக்கிறது. இயேசுவின சிலுவைப்பாட்டில் இவனுக்கு பங்கு இருந்ததனால்  அவனுடைய பலவீனத்தை மிகைப்படுத்தி அவனை குற்றப்படுத்தி இவ்வாறு கூறியிருக்கலாம் என சிலர் தங்களது கருத்துக்களைத் தொவிக்கினறனர். இத்தருணத்தில் பிலாத்து சிந்திக்காமல் செயல்படும் ஒரு மனநிலையில் நியாயமற்ற நீதிபதியாயிருந்து தங்கத்திற்காக நீதியை விற்கவும் தயாராயிருந்தான் என தோன்றுகிறது. சமுதாயத்திலும் சரி; தனிப்பட்ட வாழ்விலும் சரி இவன் மிகக் கொடூரமானவனாக  காணப்பட்டான் (எ.கா லுக்கா 13:1). இவனுடைய மொத்த 10 வருட ஆட்சியிலும்  தொடர்ச்சியான கலகங்களுக்கும் சிக்கல்களுக்கும் தலையாய காரணமாய் இவன் காணப்பட்டான். ஜனங்களின பகைமை உணர்வு இவனுக்கு தெரந்திருந்ததினிமித்தமும் மற்றும் இவனுடைய மனைவி கனவில் வேதனைப் பட்டதினிமித்தமும் இவன் நமது தேவனை விடுவிக்க சில முயற்சிகளை செய்தான் (மத்தேயு 27:18). இவன் யூத ஜனங்களின பொது அமைதியை காப்பதற்காகவும் யுதர்களை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் இயேசுவை குற்றப்படுத்தி ஒப்புக்கொடுத்தான் (27:26: யோவான 19:1). அதே நேரத்தில் பஸ்கா பண்டிகையின் போது இவரை விடுதலை செய்ய முன்வருவதாகவும் அறிவித்தான். தன்னைப் பாதுகாத்துக் கொளளும் படியாக இயேசுவை ஏரோதினிடத்திற்கு அனுப்புகிறான். அவன் சிறந்த தீர்ப்பு வழங்குவான் என பிலாத்து  நம்பினான் (லுக்கா 23:7-8). இந்த அனைத்து முயற்சிகளும் வீணானதிநிமித்தமும் இந்த காரியம்  யூதரையும்  பேரரசரையும் புண்படுத்தக் கூடும்  என பயந்து இயேசுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்தான் (யோவான19:12-15). இயேசுவின சிலுவை மரணத்தில் தனக்குப் பங்கில்லை என காண்பிப்பதற்காக   முதலாவது தனது கரங்களை அனைவர் முன்பாகவும் கழுவினான் (மத்தேயு27: 23-24). பினனர் யுதர்களை அவமதிக்கும் விதமாக வாசகம் ஒன்று எழுதி (இராஜாவுக்கு நீங்கள கொடுக்கும் சிறப்பு இதுவா?) அவர் சிரசிற்கு மேலாக வைத்தார்கன். பின்னர் பிரதான ஆசாரயனுடைய வேணடுதலுக்கேற்ப காவலர்கள ஏற்படுத்தப் பட்டனர்.
பிலாத்து 10 வருடங்களும் யூதேயாவில் தொந்தரவு கொடுத்தவனாகவே காணப்பட்டான். பின்னர் விட்டாலியஸ் என்ற சீரிய நாட்டு கவானரால் கி.பி 36ல் பதவியிலிருந்து இறக்கப்பட்டான. இவனுடைய ஆட்சியில் இவனது நடத்தையை குறித்து மகாராஜாவுக்கு அறிவிக்கும் படியாக ரோமாபுரிக்கு அனுப்பப்பட்டான. இவன் ரோமாபுரிக்குச் செல்லும் வழியில் திபேரயஸ் என்பவன்ரிக்கிறான். ஆனால் இவனுடைய வாரிசான கலிகுலா என்பவன் பிலாத்துவைக் காவலுக்கு வௌயேற்றினான். அங்கே மிகுந்த மனக் கலக்கத்தினிமித்தம் தனனைத்தானே அழித்துக்கொண்டான். பிலாத்துவின் நடவடிக்கைகளில் ஓர் அழகான புராணக் கதை உள்ளது (நிக்கோதேமுவின சுவிசேஷம்) இவன நம்முடைய தேவனுக்குச் சொந்தமான தையலில்லாத மேலங்கி ஒன்றை அணிந்திருந்தான்.

இந்த ஆடையை இவன் அணிந்திருந்த மட்டும் சீசருடைய கடுங்கோபம் தணிந்த நிலையில் அவனைத் தணடிக்க முடியாமலேயே இருந்தது.

பிலாத்து சில நல்ல காரியங்கள மாத்திரமே செய்திருக்கிறான்ன்பதை அறிய முடிகிறது. கொசீம் எனற மலையிலே கூடியிருந்த அநேக சமாரிர்ள் கொல்லப்படுவதற்கு காரணமாயிருந்தான். சமாரியர்ள் இவனுடைய இந்த கொடூரமான செயலைச் சீரியாவின் அந்நாள் ஆளுநரான விட்டீலியஸ் என்பவனுக்குத் தெரியப்படுத்தினர். இயற்கையாகவே கண்டிப்பான மற்றும் பிடிவாதமான கடின குணமுள்ளவன் மேலும் பகை உணர்வுள்ள கெடுக்கும் எண்ணமும் கொண்டவன் மற்றும் லஞ்சம் பெருமை  ன்முறை அட்டூழியம் கெடுக்கும் எண்ணம் விசாரணை இல்லாத தொடாச்சியான கொலைகள இடைவிடாத மிகவும் துன்புறுத்துகின்ற மிருகத்தனமுள்ளவன். ஆதலால் யூர்ள் இவனைக் குற்றம் சாட்டி இருக்கலாம் என பிலோ என்பவன் இவனைக் குறித்துக் கூறுகிறான். புதிய ஏற்பாடு இவனை ஒரு பெலவீனன்ன்று தீர்ப்பளிக்கிறது. கொள்கைகளை விட சூழ்நிலைகளுக்குச் சேவை செய்ய தயாராக இருந்தான். யூத அதிகாரகளைத் திருப்தி படுத்துவதைப் பார்க்கிலும் யூதேயாவில் அமைதியில்லை என்ற செய்தியைத் திபோயஸ் கேள்வியுற்று அதன் காரணமாக பேரரசில் அதிருப்த்தி ஏற்பட்டுவிடும் என பயந்து நீதி மன்றத்துக்கு உகந்த சட்டப்பூர்வமான அதிகாரம் வழங்கி நமது இரட்சகரை கொலைசெய்ய அனுமதித்தான். இவன் எழுதிய மேலெழுத்திலிருந்து யூதர்களை அவமதிக்கும் விதமாக இப்படிச்செய்தான்ன்பதை இது மிகவும் அதிகமாக தெளிவாக்குகிறது (யோவான் 14:19-22).

1961ல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கணடெடுத்த முதலாவது கல்வெட்டு பிலாத்து சிசேரியாவில் வாழ்ந்ததற்கான ஓர் ஆதாரமாக அமைகிறது (புதிய வேதாகம அகராதி IVF, பக்.997).

இவன மக்களோடு கொண்டிருந்த உறவு பாராட்டுதற்குரியதாக அமையவில்லை
பிலாத்துவின  உறவு யூர்களோடு எப்பொழுதும் அமைதியற்ற நிலையிலேயே காணப்பட்டது. இவனுடைய வெறுப்பு மனப்பான்மை இரண்டுங்கெட்ட நிலை மற்றும் தவறுகள இவனுடைய ரோமனுக்கேற்ற கடினத் தன்மையையும் நேர்மை குணத்தையும் பெலவீனப்படுத்தியது.  பல வேளைகளில் இவனுடைய செயல்கள மதத் தலைவாகளிடையே ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் விளைவாக ஏற்பட்ட குழப்பங்களும் கலவரங்களும் இவன் எங்கு சிக்கியிருக்கிறான் எனற புரியாத நிலையை  அவனுக்கே ஏற்படுத்தியிருக்கக்கூடும். இவன் ரோம ஆட்சியாளர்களை மதிக்கத் தவறிய ஜனங்களைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தான். இயேசுவின் வழக்கு விசாரணை இவனுடைய பிரச்சனைகளின மத்தியில் மற்றொரு அத்தியாயமானது.

மூன்று வெவ்வேறு சமயங்களில் இவன் இயேசுவைக் குற்றவாளி அல்லர் என அறிவிக்கிறான். இயேசுவைக் கொலை செய்ய வேணடும் என எதனால் இந்த மக்கள கேட்கிறார்கன்ன்பதை  இவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் யூதர்களுக்குப் பயந்ததினால் இயேசுவை சிலுவையில் அறைய அனுமதித்தான். ரோமாபுரிக்கு எதிரான கிளரச்சிக்கார்களை இவன் அகற்றவில்லை என  பேரரசருக்கு அறிவிப்பதாக கூறி ஜனங்கள் அவனை பயமுறுத்தினர். இவன் பதற்றத்தின் காரணமாக சரி என தெரந்திருந்தும் உண்மைக்கு எதிராக செயல்பட்டு தவறான தீர்ப்பைத் தேரந்தெடுத்தான்.


2. ஆற்றலும் நிறைவேற்றலும் 
2:1      யுதேயாவின் ரோம ஆளுநர்
2.2      இயேசு குற்றமற்றவர் என அறிவிக்க ஆரம்பத்தில் இவனிடத்தில் தைரியம்  இருந்தது.
                                                                                                                

3. பெலவீனமும் தவறுகளும்
3:1 ரோமர்களால் ஆதிக்கம் செய்ய முடியாத ஆனால் இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்ட மக்களைக் கூட ஆளும் முயற்சியில் இவன் தோல்வியுற்றான்.
3:2 இவனுடைய  தொடரந்த அரசியல் போராட்டமானது இவனை ஒரு நன்மையை விரும்பி ஏற்காத கவலையற்ற சமரசக்காரனாக மற்றும் எளிதில் அழுத்தம் கொள்பவனாக உருவாக்கியது.
3:3 இயேசு குற்றமற்றவர் எனறு அறிந்திருந்த போதிலும் இவன் ஜனங்களைப் பிரியப்படுத்த அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுகிறான்.


4.   இவனுடைய வாழ்க்கையிலிருந்து பாடங்கள்
4.1.     ண்மையானது அரசியல் அழுத்தத்தின் தயவில் நிற்கும்போது பெரிய தீய காரியங்கள் நேரிட முடியும்.
4.2.     ஒரு மனிதன்ண்மையை எதிர்ப்பானானால் அவன் நோக்கமற்ற திசைக்கு நேராக தள்ளப்படுவான்.


5.   வேதாகமக் குறிப்புகள்
பிலாத்துவின கதை சுவிசேஷப் பகுதிகளில் கூறப்பட்டுள்ளது. இவனைக் குறித்து அப் 3:13 4:27 13:28 ஐ தீமோத்தேயு 6:13ஆகிய இடங்களில் காணலாம்.


6. கலந்துரையாடலுக்கான கேள்விகள்
6:1      பிலாத்துவின வாழ்க்கையைக் குறித்த செய்தி விவரங்களை நிசாயா விசுவாசப்    பிரமாணத்திலிருந்து எடுத்துக்கூறு.
6:2      பிலாத்து இயேசுவிடம் என்ன கேட்டான்?
6:3      பிலாத்து இயேசு குற்றமற்றவர் என அறிக்கைச்செய்தும் இயேசுவுக்கு எதிராக ஏன் தீரப்பளிக்கிறான்?
6:4      இவனுடைய பெலவீனம் எனன?
6:5      ன்ன பாடங்கள் நாம் இவனுடைய வாழ்க்கையிலிருந்து கற்கலாம்?

மொழிபெயர்ப்பு
ஜான் ஆரோக்கியசாமி 

Sunday, August 28, 2011

7. ஆகாப் – இஸ்ரவேலின் ராஜா, யேசபேலின் கணவன்



1.   முக்கிய வசனங்கள்:
30 உம்ரியின் குமாரனாகிய ஆகாப், தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். 31 நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்தாற்போல் அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை விவாகம்பண்ணினதுமல்லாமல், அவன் போய் பாகாலையும் சேவித்து அதைப் பணிந்துகொண்டு, 32 தான் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலில் பாகாலுக்குப் பலிபீடத்தை எடுப்பித்தான். 33 ஆகாப் ஒரு விக்கிரகத்தோப்பையும் வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கும்படிக்கு தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்ததைப்பார்க்கிலும் அதிகமாய்ச் செய்துவந்தான். (1 இராஜாக்கள் 16:30-33)

2.   சுருக்கமான குறிப்புகள்
·       பாகாலை வணங்கும் யேசபேலை மணந்து கொண்ட இஸ்ரவேலின் ஒன்பதாவது அரசன்.
·       இவன் பல யுத்தங்களில் வெற்றி பெற்றான்.
·       இவனுடைய மனைவி யேசபோல் பாகாலுக்கு ஒரு கோவில் கட்டினாள்.
·       ஆகாப், சட்டம், நீதியை நிலை நாட்டத் தவறி விட்டான் (1இராஜா.21:1-16).
·       நாபோத்தின் திராட்சத் தோட்டத்தைத் தவறான வழியில் எடுத்துக் கொண்டான்.

3.   இவனுடைய சரித்திரம்
ஆகாப் என்றால் (தெய்வீக) சகோதரன் தகப்பனாக இருக்கிறார் என்று பொருள்படும். இவன் உம்ரி என்ற எட்டாவது அரசனின் குமாரன். அவனுடைய குடும்பத்தில் சிம்மாசனத்தில் அமரும் இரண்டாவது மகன். இவனுடைய சரித்திரம் 1இராஜா:16-22ம் அதிகாரங்களில் எழுதப்பட்டிருக்கிறது. பாகாலை வணங்கும் சீதோனியரின் ராசாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தியாகிய யேசபேலை விவாகம் பண்ணினான். தன் சகோதரனிடமிருந்து சிங்காசனத்தைப் பறித்துக் கொண்டான். ஆகாபின் ஆட்சி காலத்தில் எலியா தீர்க்கதரிசியின் ஊழியம் சிறப்பாக இருந்தது. இஸ்ரவேலுக்குள் பாகால், அஸ்தரோத் வணக்கத்தை அறிமுகம் செய்து வைத்த யேசபேலை எலியா தீர்க்கதரிசி பலமாக எதிர்த்தார். யேசபேல் தன் கணவனை தெய்வ நம்பிக்கையற்றவனாகவும், விக்கிரகாராதனைக் காரனாகவும் வழிநடத்தி அவனை மிகக் கொடியவனாக்கினாள். நாபாத்தின் திராட்சத் தோட்டத்தை எடுத்துக கொள்ள ஆகாப் விரும்பியபோது, அந்தத் திராட்சத் தோட்டம் தன் பிதாக்களின் சுதந்திரம் என்ற காரணத்தினால் மோசேயின் கட்டளையின்படி தான் அதை விற்க முடியாது என்று நாபோத் சொல்லி விட்டதினால் நாபோத்துக்கு விரோதமாகப் பொல்லாப்பு செய்யும்படி யேசபேல் ஆகாபைத் தூண்டினாள். நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்ற அவன்மேல் பொய் குற்றம் சாட்டி அவனைக் கல்லெறிந்து கொலை செய்யும் படி கடிதம் அனுப்பினாள். 1இராஜா.21ம் அதிகாரம் இந்தக் கொடிய செயலுக்குத் தண்டனையாக ஆகாபின் குடும்பம் முழுவதும் அழிந்து போகும் என்று எலியா அறிவித்தான். (2இராஜா.9.26).

ஆகாபின் ஆட்சியின் பெரும்பகுதி தமஸ்குவின் ராஜாவாகிய பெனாதாத்துக்கு விரோதமாக 3 முறை போர் செய்வதில் கடந்து விட்டது. முதல் இரண்டு யுத்தங்களிலும் அவன் முழுமையான வெற்றி பெற்றான். இரண்டாவது போரின் முடிவில் பெனாதாத் ஆகாபிடம் அகப்பட்டுக் கொண்டான். ஆனால், பெனாதாத் தன் தகப்பன் பிடித்த பட்டணங்களைத் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும், ஆகாபும் தமஸ்குவிலே வீதிகளை உண்டாக்கிக் கொள்ளலாம் என்றும் ஆகாபுடன் உடன்படிக்கை செய்த்தினால் விடுதலை செய்யப்பட்டான். ஆனால், மூன்றவது யுத்தத்தில் தேவனுடைய ஆசீர்வாதம் அவனுக்குக் கிடைக்கவில்லை. மிகாயா தீர்க்கதரிசி, ஆகாப் தோற்றுப் போவான் என்று எச்சரித்தான். ஆனாலும் மற்ற தீர்க்கதரிசிகள் அனைவரும் ஆகாப் யுத்தத்திற்குப் போகும்படி வற்புறுத்தினார்கள். அவன் வேஷம் மாறி யுத்தத்திற்குச் சென்றான். ஒருவன் தற்செயலாக வில்லை நானேற்றி எய்தபோது அது இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைக் காயப்படுத்திற்று. சாயங்காலத்தில் அவன் இறந்து போனான். சமாரியாவில் அடக்கம் செய்வதற்காக அவன் சரீரம் கொண்டு வரப்பட்ட போது கர்த்தர் சொல்லியிருந்தபடியே அவன் இரத்த்த்தை நாய்கள் நக்கினது. (1இராஜா.22.37-38).


4.   அவனுடைய பலமும் சாதனைகளும் என்ன?
a.     நாத்தான் தாவீது ராஜாவுக்கு உண்மையுள்ள நண்பனாக இருந்ததுபோல், ஆகாப் எலியாவைத் தனக்கு உண்மையுள்ள நண்பனாகக் கொண்டிருந்திருக்கலாம். நாத்தான் கூறியதற்கு செவிகொடுத்துத் தாவீது தன் பாவங்களைக் குறித்து மனஸ்தாப்ப்பட ஆயத்தமாக இருந்தான். ஆனால், ஆகாப் எலியாவைத் தனக்கு எதிரியாகப் பார்த்தான். அவன் எலியாவுக்குக் கீழ்ப்படிந்திருக்கலாம். ஆனால், அவன் தேவனுக்கு விரோதமாகச் சென்றான்.
b.     ஆகாப் தன் இஷ்டத்திற்கு இணங்கி ஆபத்தில் மாட்டிக் கொண்டான். சரியான செயலைத் தெரிந்து கொள்ள அவனுக்கு விருப்பமில்லை. ராஜாவாக அவன் தேவனுக்குத் தீர்க்கதரிசியான எலியாவுக்கும் உத்தரவாதமுள்ளவனாக இருந்தான். ஆனால், அவன் தன்னை விக்கிரகாரதனைக்கு வழி நடத்தின ஒரு பொல்லாத மனுஷியை மணந்து கொண்டான். தன் மனைவியின் ஆலோசனைகளுக்குச் செவி சாய்த்தான். தன்னைச் சூழ்ந்திருந்தவர்களின் ஆலோசனைகளின்படி செய்து தன்னுடைய மரணத்தை எதிர்கொண்டான்.
c.     தேவனுடைய வார்த்தைகள் கூறும் ஆலோசனையை அவன் பின்பற்றத் தவறினான். தேவனுடைய வார்த்தையே நம்பத் தகுந்தது.
d.     அவன் ஒரு சிறந்த தலைவனும் யுத்த வீரனுமாக இருந்தான்.

5.   அவனது பெலவீனங்களும் தவறுகளும்
a.     இஸ்ரவேலின் மிகப் பொல்லாத அரசனாக இருந்தான்.
b.     இவன் யேசபேல் என்ற தெய்வ நம்பிக்கையற்ற ஒரு பெண்ணை மணந்து கொண்டு இஸ்ரவேலில் அவள் பாகால் வணக்கத்தைப் பிரசாரம் செய்ய அனுமதித்தான் (வாழ்க்கைத் துணைவன் அல்லது துணைவியைத் தெரிந்தெடுக்கும் விதமானது நமது வாழ்க்கையில் ஆத்துமப் பிரகாரமாகவும் சரீரப் பிரகாரமாகவும் நம்மைப் பாதிக்கும்.)
c.     ஒரு நிலம் கிடைக்காததினால் மனம் சலிப்படைந்தவனாக இந்த சமயத்தில், அவன் மனைவி அந்த நிலத்தின் சொந்தக்காரனான நாபோத்தைக் கொலை செய்யும்படி ஆட்களை ஏவி விட்டாள்.
d.     அவன் தான் விரும்பியபடியே செய்யும் பழக்கமுள்ளவனானபடியால் தான் விரும்பியது தனக்குக் கிடைக்காததால் மன உழைச்சலுக்கு ஆளானான். சுயநலத்தைக் கட்டுப்படுத்தாமல் விடும் பட்சத்தில் அது மிகுந்த தீமையை விளைவிக்கும்.
e.     அவனுடைய இந்தப் புதிய உறவு, ஆஸ்தியுடன், அந்நிய தேவர்களின் வணக்கத்தையும் இஸ்ரவேலுக்குள் கொண்டு வந்தது.

6.   முடிவுரை
a.     1இராஜா.22-39ம் ஆகாபுடைய ஆட்சியின் காலத்தில் அவன் கட்டின பட்டணங்களைக் குறிப்பிடுகின்றன. எரிகோ மறுபடியும் சீராக்கிக் கட்டப்பட்டது. ராஜாவின் மனைவி முக்கிய ஸ்தானம் வகித்தாள். ஆகாப் பெலவீனமும் சஞ்சல புத்தியும் உடையவனாக இருந்தான்.

7.   விவாதத்திற்கான கேள்விகள்
a.     ஆகாப் ராஜா யார்?
b.     அவனுடைய ஆட்சிக் காலத்தில் ஊழியம் செய்த தீர்க்கதரிசி யார்?
c.     பாகாலை வணங்கும் மதத்தை ஆதரித்தது யார்?
d.     யேசபேலைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?
e.     பாகாலை வணங்கும் மதத்திற்கும் இஸ்ரவேலரின் மத்த்திற்கும் இடையே ஏற்பட்ட யுத்தத்தில் வெற்றி பெற்றது யார்?

மொழிபெயர்ப்பு:
திருமதி டப்னி ஜோசப்