Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Thursday, October 27, 2011

124. சகேயு


124. சகேயு
எரிகோவிலிருந்த வரி வசூலிப்பவன்

கரு வசனம்;:
5 இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.
6 அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான். (லூக்கா 19:5-6)

சுருக்கத் திரட்டு
·                இயேசு சகேயுவின் குடும்பத்தைச் சந்திக்க விரும்பினார்.
·                இயேசுவின் அழைப்பு இவனை முற்றிலுமாக மாற்றியது.
·                இவன் தனது ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்கு கொடுக்க ஆயத்தமானான்.
·                இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்ச்சிப்பு வந்தது என்று இயேசு சொன்னார்.


அறிமுக உரை- இவனது கதை

சகேயு என்ற பெயர்; எபிரேயம் மற்றும் அராமிக் மொழியிலிருந்து வந்ததாகும். தூய்மை என்பது இதன் பொருள். அல்லது சகரியா  என்பதின் குருகிய வடிவமாக இருக்கலாம். இவன் எரிகோவில் தலைமை வரி வசூலிக்கும் அதிகாரியாக இருந்தான். பின்னர் கிறிஸ்துவின் சீடனாக மாறினான்(லூக்கா19:1-10). இவன் ஒரு வரி கட்டண குத்தகை உரிமையாளனாக  எரிகோவில் இருந்திருக்கக் கூடும். சந்தேகத்திற்கு இடமின்றி இவனுடைய பதவியை தகாத வழியில் அவ்வப்போது உபயோகித்து தனக்கென்று செல்வங்களைப் பெருகச் செய்திருந்தான். இவன் இயேசுவிடம் ஆண்டவரே என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன்என்றான் (லூக்கா19:8). இதைப் பார்க்கும்போது இவன் பெரிய ஏமாற்றுக்காரன் என யாரெல்லாம் நினைத்தார்களோ அவர்களுக்கெல்லாம் சவால்விடுவது போல தோன்றுகிறது. இவன் ரோம அதிகாரியின் கீழ், வரி சேகரிப்பவர்களின் கண்காணிப்பாளனாக பணியாற்றினான். இவன் உண்மையிலேயே ஒரு யூதன். நம்முடைய தேவன் சொன்னபடி ஆபிரகாமின் குமாரன். இந்த ஆலோசனைக்கு மதிப்பு வழங்க முடியாத வண்ணம் இவனுடைய பதவியும் கூட இஸ்ரவேல் சமூகத்தில் மங்கிப்போன நிலையையும் தாண்டி காணப்பட்டது. இயேசுவைக் காணவேண்டும் என்ற சகேயுவின் துடிப்பு வெறும் ஆர்வம் மட்டுமல்ல அதைவிட மேலானது. இல்லையென்றால் இவன் இயேசுவின் அழைப்பிற்கு உடனடியாக தயக்கமின்றி பதிலளித்திருக்க மாட்டான்.  பஸ்கா பண்டிகையை ஆசரிக்கும்படியாக இயேசு எருசலேமுக்கு செல்லும் வழியில் எரிகோவை வந்தடைந்தார். பனை தோப்புக்கள் மற்றும் பாலாம் தோட்டங்களினால் அந்நாட்களிலே எரிகோ ஒரு மிளுருகின்ற பட்டணமாக காணப்பட்டது. இதன் காரணமாக சகேயு ஒரு பணக்காரனாக இருந்தான்.

யார் இந்த வரி வசூலிப்பவர்கள்? அவர்கள் பிரபலமாகாதது ஏன்?
மிகப்பெரிய உலக பேரரசு நாட்டின் நிதிக்காக, ரோமானியர்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் இருந்த நாடுகளுக்கு அதிக வரி விதித்தனா. யூதர்கள் இந்த வரியை எதிர்த்தனர். காரணம் இவர்கள் மதச் சார்பற்ற இயக்கத்தையும் புறச்சமய தேவர்களையும் ஆதரித்தவர்களாக காணப்பட்டனர். அப்படி இருந்த போதிலும் அவர்கள் வரியைச் செலுத்த கட்டாயப் படுத்தப்பட்டனர். இந்த வரி வசூலிப்பவர்கள் இஸ்ரவேல் மக்களால் மிகவும் வெறுக்கப்பட்டனர். பிறப்பில் இவர்கள் யூதர்களானாலும் ரோமர்களுக்கு வேலை செய்யவதை தேர்ந்தெடுத்தனர். ஆதலால் இவர்கள் துரோகிகளாக கருதப்பட்டனர். மேலும் இவர்கள் தங்கள் சக இனத்தினரான யூதர்களையே பயமுறுத்தி செல்வங்களைச் சேர்த்து பணக்காரர்களாக மாறினர் என்ற பொது கருத்து நிலவியது. வரி வசூலிக்கும் சகேயுவின் வீட்டில் தங்கப் போவதாக இயேசு கூறின போது இந்த ஐனங்கள் முறுமுறுத்ததில் ஆச்சரியம் இல்லையே. மக்களில் அநேகருடைய பார்வையில் இவன் ஒரு ஏமாற்றுக்காரனாகவும், சந்தர்ப்பவாதியாகவும் காணப்பட்டான். அதுமட்டுமல்லாது அரசியல் பார்வையில் இவன் ஒரு தீண்டத்தகாதவனாகவும் காணப்பட்டான்.

சகேயுவை நாம் எப்படி கணிக்கிறோம்?
இவன் இயேசுவைப் பார்க்க ஆவல்கொண்டவனாய் ஒரு காட்டத்திமரத்தில் ஏறினான், இயேசுவைக் கண்டான். ஐனங்களுடைய குற்றச் சாட்டையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய வீட்டில் தங்கும்படி அவரை அழைத்துக்கொண்டு போகிறான். இவன் தனது ஆஸ்தியில் பாதியை ஏழைகளுக்குக் கொடுப்பதாகவும், அநியாயமாய் எதையாகிலும் வாங்கினதுண்டானால் நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துவதாகவும் கூறினது மட்டுமின்றி அதை  செயலில் காட்டி தனது மன மாற்றத்தைக் காண்பிக்கிறான். இவனது இந்த மன மாற்றமானது ஐனங்களிடமிருந்து இவன் அநியாயமாய் பெற்ற அனைத்தையும் அவர்களுக்கே திரும்பக் கொடுக்க வழி வகுத்தது. மற்றவர்களுக்குச் சொந்தமான அனைத்தையும் திரும்ப கொடுக்க ஆயத்தமுள்ளவனாயிருந்தான் இவன். இயேசு அவனை நோக்கி இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது: இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே என்றார். அந்த கூட்டத்தில் இருந்த சுய நீதிமான்கள் (தங்களைப் பரிசுத்தர்களாக எண்ணுபவர்கள்) இயேசுவின் இந்த செயலினால் நெருக்கடியான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆனால் இயேசுவோ அவரது நோக்கமான இழந்து போனதை தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரனாகிய அவர் பூமிக்கு வந்தார் என்கின்ற முன்னதாக கூறிய அவரது நோக்கத்தை நிறைவேற்றினார்.

2.        இவனுடைய வாழ்க்கையிலிருந்து பாடங்கள்
1.     கூட்டத்தினருடைய கருத்தை  நாம் கணிக்கும்போது இவன் ஒரு நேர்மையற்ற வரி வசூலிப்பவனாக இருந்திருக்க வேண்டும் என உணர முடிகிறது. ஆனால் இயேசுவைச் சந்தித்த பின்னர், வாழ்க்கை சீர்படுத்தப்பட வேண்டும் என்பதை இவன் உணர்ந்தான். அவன் ஏமாற்றி வாங்கிய அனைத்துப் பணத்தையும் ஏழைகள் மற்றும் உரியவருக்கும் கொடுத்து தனது உள்ளான மாற்றத்தை செயல்முறையில் மெய்ப்பித்துக் காட்டினான். இயேசுவைப் பின்தொடருவது என்பது நமது தலையை அல்லது இதயத்தை மட்டும் கொடுத்து விட்டால் போதாது. உங்கள் நம்பிக்கையையின் விளைவாக நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்திக் காண்பிக்க வேண்டும். நமது நம்பிக்கை செயல்களில் வெளிப்பட்டது உண்டா? எப்படிப் பட்டதான மாற்றங்களை நாம் செய்ய வேண்டும்?
2.     சகேயுவின் மன மாற்றத்தைக் கண்ட இயேசு எப்படி பதிலளித்தார்? அவனை அவர் ஆபிரகாமின் குமாரன் என்று அழைக்கிறார். இது அங்கே கேட்டுக் கொண்டிருந்தவர்களைக் குறைந்தது இரண்டு வழிகளில் அதிர்ச்சியடைய செய்திருக்கக் கூடும். முதலாவது இந்த பிரபலமில்லாத வரி வசூலிப்பவனை ஆபிரகாமின் மகன் என ஒப்புக்கொண்டிருக்க முடியாது என்பதும், இரண்டாவதாக  ஆபிரகாமின் மகன்கள் எப்படி தொலைந்து இருக்க முடியும்? என்பதே. இயேசு இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே பூமிக்கு வந்தார் (லூக்கா19:10). இயேசுவின் கருத்துப்படி விசுவாசத்தினால் காணாமல் போனவனை மன்னித்து புதிதாக்கக் கூடும்.
3.     இழந்து போனதைத் தேடும் படியாகவே இயேசு பூமிக்கு வந்தார்( எ.கா. கெட்ட குமாரன், காணாமல் போன நாணயம், காணாமல் போன ஆடு) இயேசுவை முன்மாதிரியாக வைத்து அவரை பின்செல்வதே சபைகளின் கடமை ஆகும்.
4.     ஒவ்வொருவரையும் மருரூபப் படுத்துவதே இயேசுவின் நோக்கமும் அவருடைய சுவிசேஷத்தின் நோக்கமுமாகும். சுவிசேஷத்தினாலோ அல்லது கிறிஸ்துவாலோ தொடப்பட்ட நபர் மட்டுமே புதிய மனிதனாக வாழ முயற்சி செய்வார். சுவிசேஷத்திற்காக அதிக அளவு மக்கள் சமூகத்தில் காத்திருக்கின்றனர்.
4.
5.     இயேசு நம் ஒவ்வொருவருடைய இல்லங்களில் வந்து வாசம்பண்ண விரும்புகிறார்! (லூக்கா19:5)


3.     வேதாகமக் குறிப்புக்கள்.
லூக்கா 19:1-10 வரை வாசிக்கவும்;.


4.     கலந்தாலோசனைக்கான கேள்விகள்
  1. சமுதாயத்தில் தீண்டத்தகாத மக்கள் யார்? இயேசுவாலும் சபையினராலும் சந்திக்கப் படவேண்டியவர்கள் யார்?
  2. இந்த பார்வையிடல் எப்படி நிகழ முடியும்?
  3. நம்மில் அநேகர் பணத்தைக்  கண்காணிக்கும் முறையில்; தவறுகிறோம், எப்படி நாம் சகேயுவைப்போல உரியவர்களிடம் அவர்களது பணத்தைத் திரும்ப நாம் எப்படிச் செலுத்தப் போகிறோம்?
  4. எது அவனது பலமாக இருந்தது?
  5. இவனது வாழ்க்கையிலிருந்து நாம் கற்கும் பாடங்கள் என்ன?

மொழிபெயர்ப்பு: திரு. ஜான் ஆரோக்கியசாமி, பரி.பர்னபாவின் ஆலயம், கிள்ளான். 

Friday, October 21, 2011

123 தீத்து


123 தீத்து
பவுலால் மனம் மாறினவன்; பிரயாணத்தில் கூட்டாளி

கருவசனம்:
நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்கு படுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னை கிரேத்தா தீவிலே விட்டுவந்தேனே. (தீத்து 1:5)

கதைச்சுருக்கம்:
·           தீத்து ஒரு கிரேக்க விசுவாசி
·           பவுலால் பயிற்றுவிக்கப்பட்டு பேணி வளர்க்கப்பட்டவன். கிறிஸ்துவுக்கு ஒரு ஜீவனுள்ள சாட்சியாக நின்று கிறிஸ்து புறமதஸ்தரிடம் செய்தது போல இவன் எருசலேமில் தேவாலய தலைவர்கள் மத்தியில் செய்தான். (கலாத்தியர்2:1-3)
·           தீமோத்தேயுவைப்போல இவனும் பவுலின் பயணத்தில் உடனிருந்த நம்பிக்கையான  நெருங்கிய நண்பன்.
·           பின்னர் பவுலின் சிறப்பு தூதனாக மாறியவன் (2கொரிந்தியர்7:5)
·           பிற்காலத்தில் இவன் கிரேத்தா தீவிலுள்ள சபைகளுக்கு மேற்பார்வையாளன் ஆனான் (தீத்து1:5).
·           இது தீத்துவுக்கு ஒரு போதகரது கடிதமாகும்.

அறிமுக உரை - இவனது கதை
தீத்து ஒரு கிரேக்க விசுவாசி, பவுலால் பயிற்றுவிக்கப்பட்டு பேணி வளர்க்கப்பட்டவன். இவன் ஒரு நல்ல தலைவனுக்கு, பிரகாசிக்கும் உதாரணமாகக் காணப்பட்டான். தீமோத்தேயு வைப்போல, இவனும் பவுலின் பயணத்தில் உதவிய ஒரு நம்பிக்கையான நெருங்கிய நண்பன். பின்னர் பவுலின் சிறப்பு தூதராகவும் கூடவே பயணிக்கும் கூட்டாளியாகவும்  மாறினான் (2கொரிந்தியர்7:5). இவன் கிரேத்தா தீவிலுள்ள சபைகளுக்கு மேற்பார்வையாளனாக அழைக்கப்பட்டான். பவுல் தீத்துவை ஒரு முழு வளர்ச்சியுற்ற கிறிஸ்தவனாகவும் பொறுப்பான தலைவனாகவும் உருவாக்கியிருந்தார். தீத்துவுக்கு எழுதப்பட்ட இந்த கடிதமானது அவனுக்கு சீஷத்துவ செயல் முறையின் ஒரு படியாக அமைந்தது. சபைகளை எப்படி ஒழுங்குபடுத்துவது, எப்படி நடத்துவது என தீமோத்தேயுவுக்கு கற்பித்தது போல தீத்துவுக்கும் கற்பிக்கிறார். கிரேத்தாவிலே தீத்துவுக்கு பொறுப்புக்கள் இருந்தன (தீத்து1:4-5). கிறிஸ்தவ வாழ்க்கையில் நற்செயல்கள் எவ்வளவு முக்கியமானது என பவுல் தீத்துவுக்கு வலியுருத்திக் கூறுகிறார். சபையிலே காணப்படும் பல்வேறு வயதினார்கள் மத்தியில் எப்படி ஐக்கிய உறவு கொள்வது என்பது குறித்தும் அவனுக்கு கூறுகிறார்(2:2-6). வளர்ச்சியுற்ற கிறிஸ்தவனுக்கு ஒரு நல்ல உதாரணமாக  இருந்து (2:7-8). தைரியத்தோடு பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள் என அறிவுரை கூறி அவனுக்கு உற்சாகமளிக்கிறார் (2-9-15). பின்னர் பவுல் கிறிஸ்தவ சமுதாயத்தில் இருக்கவேண்டிய பொதுவான பொறுப்புக்கள் குறித்து விவாதிக்கிறார். தீத்து இந்த காரியங்களை மக்களுக்கு நினைவுருத்தவேண்டும் (3:1-8) என்றும் புத்தியீனமான தாக்கங்களையும் வம்ச வரலாறுகளையும், சண்டைகளையும் விட்டு விலகுமாறும் (3:9-11) இன்னும் சில பயணத்திற்குத் தேவையான வழிகாட்டுதலையும் விவரங்களையும் கூறி சில விஷயங்களில் தனிப்பட்ட வாழ்த்துதலைக் கூறி முடிக்கிறார். 

2.     செயற்பாடு
பவுல் தீத்துவை கிரேத்தாவிலுள்ள சபைகளை ஒழுங்குபடுத்தவும் கண்காணிக்கவும் அனுப்பினார். அந்த வேலைகளை எப்படி செய்ய வேண்டும் என்று பவுல் இந்த கடிதத்தில் கூறுகிறார். குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தவும், பட்டணங்கள் தோறும் மூப்பரை ற்படுத்தும் படிக்கும் பவுல் கட்டளையிடுகிறார்(1:5).  இந்த நிருபமானது 1தீமோத்தேயுவில் கூறப்பட்டிருக்கிறதைப் போன்று சபைத் தலைவர்களுக்கு வழிமுறைகளைக் கூறுகிறதாய் காணப்படுகிறது. இந்த கடிதமானது கி.பி 64ல் எழுதப்பட்டிருக்கலாம். கிரேத்தா தீவிலுள்ள சபைகளை மேற்பார்வையிடும் தீத்துவுக்கு அவனுடைய பொறுப்புக்களைக் குறித்து ஆலோசனை வழங்குவதே இந்த நிருபத்தின் நோக்கமாகும்.

3. ஆற்றல் மிக்க ஒரு கடிதத்தை பவுலிடமிருந்து பெற்றவன்.
1.     திருச்சபையின் தலைமைத்தவம் (1:1-16).
2.     கிரேத்தா தீவார் ஓயாப்பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகளாக (1:12) இருந்தபடியினால் பவுல் ஆலயத்திலுள்ளவர்களை ஒழுங்கான மற்றும் சரியான வாழ்க்கை வாழ அழைக்கிறார்.
3.     ஆலயங்களில் செவ்வையான வாழ்வு வாழுதல் (2:1-15).
4.     சமுதாயத்தில் சரியான வாழ்வு வாழுதல் (3:1-15).

முக்கிய கருத்துக்கள்
கருப்பொருள் விளக்கம் முக்கியத்துவம்  
நல்ல வாழ்க்கை - நல்ல வாழ்க்கை வாழ்வதனால் மட்டும் இரட்ச்சிப்படைய முடியாது. நாம் விசுவாசத்தினால் மாத்திரமே இரட்ச்சிப்படைய முடியும். சுவிசேஷமானது மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக அவர்கள் நற்செயல்கள் செய்கின்றனர். நாம் சேவை செய்ய இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். நல்ல வாழ்க்கை என்பது சுவிசேஷத்தின் வல்லமைக்கு ஒரு சாட்சியாகும். நமக்கு கட்டுப்பாடும் பொறுப்பும் மிக அவசியமாக இருக்க வேண்டும்.       

கதாபாத்திரம்            - கிரேத்தா தீவில் தீத்துவுடைய பொறுப்பானது தலைவர்களை ஏற்படுத்துவதும் நிலையான நிர்வாகத்தையும் ஒழுக்கத்தையும் ஏற்படுத்துவதாகும். தலைவர்களுக்கு தேவையான குணங்களை பவுல் இங்கே பட்டியலிட்டுக் காட்டுகிறார்.     ஒருவர் சுய கட்டுப்பாடு, ஆவிக்குரிய ஒழுக்கம், கிறிஸ்தவ குணநலன்கள் கொண்டவராகவும் இருக்க வேண்டும். நீங்கள் யார் என்பது எவ்வளவு முக்கியமோ அதே போன்று  உங்களால் என்ன செய்ய முடியும் என்பதும் மிகவும் முக்கியமாகும்.

சரியான வாழ்க்கை    - சபையின் போதனையானது பல இனத்தினருக்கும் ஒத்திருக்க வேண்டும். மூத்த கிறிஸ்தவர்கள், இளம் தலைமுறையான வாலிப ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். பல்வேறு வயதினருக்கும் பிரிவினருக்கும் வ்வொருவரும் கற்றுக்கொள்ளும் படியான பாடங்களும், நாம் நிகழ்த்த வேண்டிய பங்கும் உண்டு.     சரியான வாழ்க்கை சரியான உறவு இரண்டும் சரியான போதனையில் செல்ல வேண்டும். மற்ற விசுவாசிகளோடு கொள்ளும் உறவு விசுவாச வளர்ச்சிக்கு உதவும்.

குடியுரிமை     - கிறிஸ்தவர்கள் நல்ல குடிமக்களாக தேவாலயத்தில் மட்டுமல்லாது சமுதாயத்திலும்; இருக்க வேண்டும். அரசாங்கத்துக்குக் கீழ்ப்படிகிறவர்களாகவும் தங்கள் வேலைகளை நேர்மையாக செய்கிறவர்களாயும் இருக்க வேண்டும்.  உங்கள் குடியுரிமைக் கடமைகளை நீங்கள் எப்படி நிறைவேற்றுகிறீர்கள் என்பது உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிற உலகத்திற்கு ஒரு சாட்சியாகும். தேவாலயங்களில் எப்படி நடக்கிறீர்களோ அது போல கிறிஸ்துவின் அன்பை சமூக வாழ்க்கையிலும் பிரதிபலிக்க வேண்டும்.        

4.     வேதாகமக் குறிப்புக்கள்.
 தீத்துவுக்கு எழுதின நிருபத்தை படிக்கவும்.

5.     கலந்தாலோசனைக்கான கேள்விகள்
1.1.         பவுல் பயிற்றுவித்த இரண்டு சபைத்தலைவர்களின் பெயர்கள் என்ன?
1.2.         தீத்து பவுலோடும் பர்னபாவோடும் எருசலேமுக்கு உடன் சென்றது ஏன்? (கலாத்தியர் 2:1)
1.3.         இவன் விருத்த சேதனம் ஏன் செய்துகொள்ளவில்லை?
1.4.         தீமோத்தேயுவைவிட இவன் அதிக வலுவான தனித்தன்மை வாய்ந்த நபர் என    ஒப்புக்கொளகிறீர்களா? (1கொரிந்தியர்16:10)
1.5.         மக்கெதோனியாவிலே தீத்து பவுலுக்கு எங்ஙனம் உதவி செய்தான்?

மொழிபெயர்ப்பு:
ஜான் ஆரோக்கியசாமி
பரி.பர்னபாவின் ஆலயம்