Empower Women For Gods Mission
2020க்குள் அற்புதமான காரியங்கள் நடக்கப் போகின்றன என்பதை அறிவதில் நாம் களி கூறுகிறோம். மேற்கு மலேசிய மாகாணம் நமது இலட்சியம். இது எப்படி ஆகக் கூடும்?
மகளீர்களும் அதிகரம் பெறவுள்ளனர்
1. தேவனின் செய்தியைக் கூறுவதில் புதிய ஏற்பாட்டுப் பெண்கள் விஷேசமான முறையில் பங்காற்றியுள்ளார்கள். இயேசு சிலுவையில் அறையப்படும்போதும் (லூக்கா 23.27), உயிர்த்தெழுத போதும் (லூக்கா 24.9-10) அவர்கள் அங்கே இருந்திருக்கிறார்கள். புருஷர்மார்கள் பின்வாங்கியபோது ஸ்த்தீர்மார்கள் துணிகரமாக கல்லறைக்குச் சென்றிருக்கிறார்கள். தேவனின் இரட்சிப்புண்டாக்கும் உண்மையை பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு நாம் அனுமதி வழங்க வேண்டும் – மேலும் அதிகமான ஆடவர்களும் மகளீர்களும் இரட்சிக்கப்பட இந்த அங்கீகாரம் அவர்களுக்குத் தேவை. உயிர்த்தெழுதலின் முக்கிய சாட்சியாகத் திகழ தேவன் ஒரு சாதாரண பெண்ணையே தேர்ந்தெடுத்தார். அதே போல், பின்னர் மகதலேனாளாகிய மரியாளுக்கும் கட்டளையிட்டார். அவளே தேவனின் முதலாவது தூதுவள். இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற செய்தியைத் தனது சகோதரர்களுக்கு அவளே முதலாவது அறிவித்திருக்கிறாள். நம்பிக்கைக்கும் ஜீவனுக்கும் உண்டான செய்தியை அறிவிக்க அவளே பொறுப்பாக்கப் பட்டாள். நான் கர்த்தரைக் கண்டேன் (யோவான் 20.18) அவளே முதலாவது அறிவித்திருக்கிறாள்.
2. இறையியல் பயிற்சிகளில் மகளீர்களே முதன்மையாய் நிற்கிறார்கள்
மலேசிய இறையியல் பயிற்சியிலும், அத்தியட்சாதீன நீளவிரி இறையியல் பயிற்சியிலும் மகளீர்கள் வந்து கலந்து கொள்வதில் நாம் நன்றியுடையவர்களாய் உள்ளோம். மொத்தம் 68 மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மகளீர்கள். இது ஓர் அர்த்தம் வாய்ந்த எண்ணிக்கை. அங்கீகாரம் தரும் பயிற்சியை மேற்கொள்வதில் அவர்கள் தேவனின் அழைப்புக்கு இணங்கியுள்ளனர். அவர்கள் மேலும் கனம் பண்ணப்பட்டு ஊக்கப்படுத்தப் பட வேண்டும். இந்த அங்கீகாரம் மேலும் அதிகமான மகளீர்களை நீளவிரி இறையியல் பயிற்சிக்கு வழி நடத்தும். அத்தியட்சாதீன ஆலோசனா சபா, அதன் துணைக் குழுக்கள், மற்றும் மாகாண ஆலோசனா சபாவின் பல்வேறு பகுதிகளுக்கு அவர்கள் அனுப்ப்ப்பட வேண்டும். ஆயர்மார்களாகவும், குருமார்களாகவும், உபதேசகர்களாகவும் சுகமளிப்பவர்களாகவும் அவர்களை உயர்த்த வேண்டும். ஒவ்வொருவரையும் சீர்படுத்தி மாற்ற மகளீர்களுக்கு நியாயமான உரிமை வழங்கப்பட வேண்டும். கிறிஸ்துவின் சாயலுக்கு ஒவ்வொருவரையும் சீர்படுத்தி மாற்றுவது நமது கடமையாய் இருக்கிறது. பல அபலைகள் தங்கள் நாவுகள் கட்டப்பட்டுள்ளதாக உணர்கிறார்கள். 2020க்குள் 200 பேர் லே பாஸ்டர்களாகவும் லே ரீடர்களாகவும் அமர்த்தப்படுவதோடு 50 மகளீர் டீக்கன்மார்களும் தேவைப்படுகிறார்கள். மகளீர்கள் மத்தியில் உபாசகர்கள் மற்றும் சட்ட நிபுணர்களைப் பற்றி நினைத்துப் பார்க்க முடிகிறதா?
3. நம் நாட்டில் அதிக அளவிலான மகளீர்கள் உயர்க் கல்வியைப் பெற்று வருகிறார்கள். ஆடவர்கள் தேவ அழைப்புக்கு இணங்க இது இன்னும் அதிகமான சவாலாக அமையக் கூடும். மகளீர்களும் ஆடவர்களுக்கு நிகராக கடின உழைப்பிலும் அர்ப்பனிப்பிலும் ஈடானவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். உலகப் பிரகாரமான தலைமைத்துவத்திலும் மகளீர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் தேவனின் ஒளியாகவும் உப்பாகவும் திகழ சபை அவர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். பல்வேறு நிலைகளில் அவர்கள் தேவனின் காரியஸ்தராகவும் தூதுவராகவும் திகழ சபை அங்கீகாரம் வழங்க வேண்டும்.
4. நற்செய்தியான - சுவிசேஷப் பணிகளை நிறைவேற்றுவதில் பெண்கள் ஆற்றல் மிக்கவர்கள்.
1970ம் ஆண்டுகளில் நான் ஈப்போவில் பணியாற்றிய காலத்தில், பரிசுத்த ஆவியானவர் சபையின் மகளீர்கள் தோட்டப் புறங்களில் சுவிசேஷப் பணிகளை மேற்கொள்ள அமர்த்தப்பட்டனர். ஆடவர்கள் முன் வாசலில் அழைக்கப் பட்ட நேரத்தில், மகளீர்கள் பின்னால் உள்ள சமையலறை வாசலில் தேவனுடைய பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு விட்டனர். சுவிசேஷப் பணியைத் தொடங்குவதற்குச் சமயலறை சிறந்த இடமாகும். அவர்கள் மகளீர்களின் உள்ளத்தை நன்கு அறிவர். உணவு பறிமாறி, மகளீர்களின் பிரச்சனைகளுக்குச் செவி கொடுப்பதன் மூலம் அவர்களின் உள்ளத்தைத் தொட்டு விடுவர். சரீர ஆன்மீகத் தேவைகளைச் சந்திப்பதன் மூலம் பல மகளீர்களைக் கிறிஸ்துவண்டை அழைந்து வந்து விடுவர்.
மகளீர்களுக்கு அதிகாரத்தை வழங்குவோம்:
• நற்செய்தியைக் கூறி ஆடவர்களின் உள்ளத்தைத் தொட....
• இறையியல் பயிற்சியைப் பெற....
• உலகப்பிரகாரமான துறைகளைத் தலைமைத் தாங்க...
பேராயர் டத்தோ பத்துமலை.
ஏப்ரல், 2010
Translated by: rawangjohnson@yahoo.com
Diocesan TEE Programme- Empower our women for God’s Mission in the Diocese

No comments:
Post a Comment