Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Wednesday, July 14, 2010

இயேசு கிறிஸ்து எப்படி சாதாரன மனிதர்களை வல்லமை நிறைந்த சீடர்களாக மாற்றினார்?

Click here to download in PDF.
“ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்” 2 கொரிந்தியர் 5:17-20

1. நமது தேவன் ஆக்கமும் ஆற்றலும் நிறைந்தவராய் உள்ளார்

a) தேவன் நம்மை சௌந்தரியத்தோடும் அற்புதத்தோடும் படைத்துள்ளார். (ஆதியாகமம்)

b) அவர் படைப்பின் ஆற்றலை தேவன் குறைத்து மதிப்பிடவில்லை.

c) ஓர் எளிய மற்றும் சாதாரன மீனவனை அவர் ஓர் அப்போஸ்தலனாக மாற்றினார்.

d) இஸ்ரவேலர்களின் விகாரமான 12 கோத்திரங்களில் தொடர்கிறது. அவர்கள் தேவனின் தரிசனத்தை நிறைவேற்ற அழைக்கப்பட்டிருந்தனர்.

e) அவர்கள் கலிலேயா எல்லையைக் கடந்து இந்தியாவிற்கும் பிர தேசங்களுக்கும் சுவிசேஷத்தைக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

f) பயந்த சுபாவங் கொண்ட சீடர்கள் முதிர்ச்சியடைந்து மரிக்கவும் தயாராகினர்.

2. அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் இயேசு ஜெபித்தார்.

a) தமது ஆவியை நம்முள் சுவாசித்து நம்மைப் படைத்தார். (நாம் அவர் சுவாசமாயிருக்கிறோம்).

b) அவர்களைத் தேவனிடத்தில் ஒப்புக் கொடுக்க சுமார் 10 மணி நேரம் ஜெபித்தார்.

c) நாம் வல்லமையோடு ஊழியம் செய்ய இடைவிடாத ஜெபம் அவசியம்.

d) அவருடைய பெலத்திலும் வல்லமையிலும் ஞானத்திலும் சார்ந்திராவிட்டால் நாம் வெற்றியை எட்டிப் பிடிக்க முடியாது.

e) இயேசுவின் ஆரம்ப கால சீடர்கள் யூத மார்க்கத்தாராய் இருந்தாலும், அந்த இனவாத எல்லையைக் கடக்குமளவும் இயேசு கிறிஸ்து மாற்றியமைத்தார்.

f) கல்விமான்களும் அப்போஸ்தலரானார்கள்.


3. இயேசு அவர்களுக்குப் பயிற்சியளித்தார் “தேவன் அழைத்தவர்களை அவர் ஆயத்தம் செய்தார்” (யாத்திராகமம் 2:1-10)

a) இயேசுவானவரின் பயிற்சி, ஒரு இறையியல் கல்லூரி வழங்கும் பயிற்சியில் இருந்து மாறுபட்டிருந்த்து.

b) அவர் ஒரு குடும்ப உறுப்பினராக அவர்களோடு வாசம் செய்தார். அவர் சுயமாகவே கண்கானித்து வந்தார். ஒரு சிலருக்கு பிரத்தியேக பயிற்சி அளிக்கப்பட்டது (பேதுரு, யாக்கோபு, யோவான்).

c) அவருடைய ஊழிய பாணியை அவர்கள் கவனித்தார்கள் (உம். சுகப்படுத்துதல்).

d) இறையியல் பயிற்சியின் தொடக்க காலத்தில் (சிங்கப்பூர் திரித்துவ கல்லூரியின் முதலாம் ஆண்டில்) நாம் குருவானவருக்குத் துணையாக மட்டும் செயல்பட வேண்டும். குருவானவர் செய்கிற காரியத்தைக் கவனித்து அனுபவமாக கற்றுக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அவரோடு உரையாட வேண்டும்.

e) வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை, என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன். (அப்போஸ்தலர் 3:6).

f) அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள். (அப்போஸ்தலர் 2:4). அப்போஸ்தலர்கள் 14 மொழிகளில் பேசினார்கள் (2.8) பலர் கலக்கமடைந்தனர். ஆயினும் அவர்கள் தங்கள் சொந்த ஜென்ம பாஷையில் அருளுரையைக் கேட்டனர். (அப்போஸ்தலர் 2.11).



4. அவர் அவர்களை வல்லமையினால் நிரப்பினார் (மலாக்காவின் மின்சார வாரியம், எங்களிடம் வல்லமை இருக்கிறது என்ற சுலோகத்தைக் கொண்டிருக்கிறது)

a) அவர் தமது ஞானத்தைத் தந்தார். ஞானம் ஆற்றல் நிறைந்தது. அவருடைய வார்த்தை சக்தி வாய்ந்த்து. பிற்காலத்தில், சீமோன் என்ற பேதுரு, எழுதப்படிக்கத் தெரியாதவனாய் இருந்தும் வல்லமை வாய்ந்த ஒரு நிருபத்தை எழுதினார்.

b) தேவன் அவர்களைப் பரிசுத்த ஆவியின் மூலம் வல்லமை வழங்கினார்.

c) பேதுரு, பெந்தெகொஸ்தே தொடங்கிய அன்று, தனது முதல் அருளுரையை மிகவும் வல்லமையோடு வழங்கினார்.

d) பேதுருவால் எப்படி 3,000 பேரை மதமாற்றம் செய்ய முடிந்தது?

e) அவர்கள் அச்செய்தியைக் கேட்டு, உள்ளத்தால் நொறுங்கிப் போனார்கள்.

f) “நாம் என்ன செய்வது?” அந்த அருளுரை அவர்களை மனந் திரும்பச் செய்த்து. (அப்.2.38). எங்கும் பதற்றம் காணப்பட்டதோடு, அப்போஸ்தலர்கள் பல அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தனர். (அப்போஸ்தலர் 2:43)

g) அந்த 3,000 பேர் அற்புதமான முறையில் மதமாற்றப்பட் பிறகு, அனுதினமும் புதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. (அப்போஸ்தல்ல் 2.47)

h) இயேசு கிறிஸ்து அவர்களுக்கு அதிகாரம் வழங்கினார்: அவருடைய அதிகாரத்தின் நிமித்தம் நாம் அவருக்கு சீடராகவும் அப்போஸ்தலராகவும் தெரிந்து கொள்ளப்பட்டோம்.

i) இயேசு எல்லா நேரத்திலும் அவர்களோடு வாசம் செய்தார் (நான் எல்லா நேரத்திலும் உங்களோடிருப்பேன் என்று அவர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார்).




5. நீங்கள் தேவனின் பிரதிநிதிகளாய் இருக்கிறீர்கள் (அல்லது ஏரோது)

a) நீங்களே தேவனின் நிரூபம் (கடிதம்) (2 கொரிந்தியர் 3:1-3)

b) நீங்களே தேவனின் விரிவாக்கம்

c) உங்களைப் பலப்படுத்துகிற தேவன் எல்லாவற்றையும் சாதகமாக்குவார் (பிலிப்பியர் 4.17) தேவன் உங்கள் எல்லா தேவைகளையும் சந்திப்பாராக.




6. நடவடிக்கை

a) தேவனுடைய வார்த்தையை அனுதினமும் அறிமுகப்படுத்து. – அவை வல்லமை வாய்ந்தவை. இடைவிடாத பயிற்சியில் ஈடுபடு.

b) பல வித பழக்கவழக்கங்களை உடைய ஜனங்களோடு நட்பு பாராட்டுவது, ஓர் அஸ்திவாரமான பாலத்தை அமைக்கும்.

c) ஒரு குடும்பத்தைத் தத்தெடுத்துக் கொள் (அவர்களுக்காக ஜெபிக்கலாம். அவர்களோடு உறவாடலாம். அவர்களை உன்னுடைய இணை குடும்பமாக ஏற்றுக் கொள்ளலாம்)

d) சீடத்துவமும் அப்போஸ்தலத்துவமும் தேவனின் அழைப்பாகும். ஒரு வேளை நாம் செம்மையாகச் செயல்படுவதற்கு நீண்ட காலம் தேவைப்படலாம். நம்பிக்கையோடு பின்தொடர்ந்து, தேவ வசனத்தை வாசித்து தேவனடைய ஞானத்திற்கும் பயணத்திற்கும் ஜெபித்துக் கொள்.





பேராயர் பத்துமலை 18/07/2010 (CCM)



மொழிபெயர்ப்பு- வி.பி. ஜான்சன் விக்டர் (rawangjohnson@yahoo.com)

No comments:

Post a Comment