அத்தியட்சாதீன நீள்விரி இறையியல் கல்வி (TEE) 2010
Click here to download in PDF
தேவன் நமக்குள்ளே வாசம் பண்ண வந்தார் (யோவான் 1.14), நாம் தேவனின் பரிசுத்தமுள்ள குடும்பமாக இருக்கிறோம்.
அருட்பணிக்காக இல்லங்களை மாற்றியமைத்தல்
1. முன்னுரை
1.1. இல்லமானது தேவன் நம்மைப் பேணி வளர்த்து, தேவனுக்காக கனி தருவதாய் இருக்கிறது (சங்கீதம் 127.1,2???)
1.2. கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா. (சங்கீதம் 127.1,2)
1.3. அது மரியாள், யோசேப்பின் இல்லம் போல ஆன்மீக இல்லமாக இருக்க வேண்டும்.
1.4. இவ்வுலகில் நாம் மிகப் பெரிய அருட்பணி மேற்கொள்ள தேவன் நம்மோடு வாசம் செய்ய தேர்ந்தெடுத்துள்ளார். (1யோவான் 4.12)
1.5. மரியாள், மார்த்தாள், லாசரு தங்கள் இல்லத்தை இயேசு வாசம் செய்ய திறந்து விட்டனர். (லூக்கா 10.38)
1.6. சகரியா வீட்டுக்குள் பிரவேசிக்க இயேசு வாஞ்சையாய் இருந்தார். (லூக்.19)
1.7. 31ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட நமது அத்தியட்சாதீனத்தில் 10ஆயிரம் இல்லங்கள் திறக்கப்படலாம். பிறரிடம் சுவிசேஷம் சென்றடைய இது வல்லமை வாய்ந்த கூடமாக மாறும்.
2. கிறிஸ்தவ இல்லங்களில் நாம் தகுதி வாய்ந்தவர்களாக மாற நாம் எப்படி பயிற்சி பெறலாம்?
2.1. ஓர் அன்பார்ந்த குடும்பம் முதலில் தேவனையும் பின்னர் மற்றவர்களையும் நேசிக்கிறது. நாம் அதைச் செய்தால் இவ்வுலகு மாற்றத்தைக் காணும். இது என்ன சிலாக்கியம்!...
2.2. நாம் பிறர் நலனில் அக்கறை கொண்டால், இவ்வுலக நலனிலும் அக்கறை கொள்கிறோம்.
2.3. நாம் இடையர்களாய் இருக்கிறோம். ஒருவரை ஒருவர் கனம் பண்ணுகிறோம். காயினைப் போல் அல்ல. (ஆதியாகம்ம் 4)
2.4. நாம் பாவிகளாய் இருந்தாலும், தேவன் நம்மை நேசிக்கிறார் (யோவான் 3.16)
2.5. சாட்சி பகரும் குடும்பம் இல்லத்திலும் சபையிலும் குடும்பமாக ஆராதிக்க வேண்டும்.
2.6. நாம் தேவனின் வார்த்தையை தினமும் அறிய வேண்டும். இதன் மூலம் நாம் தேவனால் செப்பனிடப்படுகிறோம்.
2.7. நாம் பிறர் நலனுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். இது பிறர் தேவைக்காகப் பயணம் செல்ல உதவும்.
2.8. நாம் உண்மையோடு ஜெபிக்க வேண்டும். எப்போதும், இடைவிடாமல் அதி சீக்கிரத்தில் ஓர் இல்லத்திற்காக ஜெபிக்க வேண்டும். இது தேவனின் வல்லமை வாய்ந்த வெகுமதியாக இருக்கிறது.
3. குடும்ப சுவிசேஷ நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்ளலாம்?
3.1. ஒவ்வொருவரும் ஜெபித்து வணங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பேராயருக்காகவும், குருமார்களுக்காகவும், சபை மூப்பர்களுக்காகவும் ஜெபிக்கவும்.
3.2. சுவிசேஷக் கதைகளைப் பிள்ளைகளுக்கு வாசித்துக் காட்டுங்கள். (உம் – பவுல், பர்னபா, பிரான்சிஸ் சேவியர்)
3.3. அத்தியட்சாதீன சுவிசேஷ காணிக்கைப் பெட்டிகளைப் பயன்படுத்தவும். (உம் – RM30,000 x 10 x 12)
3.4. கிறிஸ்துவோடு சிநேகிதம் பாராட்டுங்கள். நம்மை நண்பர்களாக்க அவர் அழைக்கிறார். அதன் மூலம் அநேகர் நண்பர்களாகிறார்கள். அவரை அனைவருக்காகவும் மரித்தார். உன்னுடைய சுயநலத்திற்காக அவரைத் துக்கப்படுத்தாதிருப்பாயாக. நாம் நியாயந் தீர்க்கப்படுவோம்.
3.5. உங்கள் நண்பர்களை சிநேகிதத்திற்காகவும் ஆன்மீகத்திற்காகவும் இல்லத்திற்கு அழையுங்கள். பிற சபையாரோடு சேர்ந்து செய்வதன் மூலம் இதனை ஆக்கப்பூர்வமான ஐக்கியமாக்கலாம்.
3.6. பிள்ளைகளை ஆன்மீகத்திலும், சமூக உறவிலும், சரீரத்திலும், அறிவிலும் தேவ பக்தியில் வளர்க்கவும். அவர்களுக்கு தேவ பயம் உண்டாயிருக்கட்டும். (லூக்கா 2.52)
3.7. முன்மாதிரியாக வாழும் பிறரை உதாரணம் காட்டி பிற குடும்ப உறவுகளைப் பின்பற்ற செய்யுங்கள்.
3.8. ஒவ்வொரு கிறிஸ்தவக் குடும்பமும் கிறிஸ்தவரல்லாத ஒரு குடும்பத்தைத் த்ததெடுத்துக் கொள்ள வேண்டும். இது தேசத்திற்கும் தேவ சுவிஷேத்திற்கும் நல்லதாய் உள்ளது.
3.9. குடும்ப சுவிசேஷம் நமது கிறிஸ்தவ பராபத்தியமாக திகழ்கிறது. அதை ஆசீர்வதிக்க தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுங்கள். தேவனிடத்தில் ஜெபியுங்கள்.
பேராயர் டத்தோ டாக்டர் எஸ். பத்துமலை, பிஎச்டி
மொழிபெயர்ப்பு – வி.பி.ஜான்சன் விக்டர்
Monday, July 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment