1. தற்காலத்தில் வாலிபர்கள் முழுநேர குருத்துவப் பயிற்சிக்கு ஒரு சிலரே முன்வருவதாகக் காணப்படுகிறது.
2. 60களிலும் 70களிலும் போலல்லாமல் தற்போது அதிகமான வெளி வேலை வாய்ப்புகள் மலிந்து கிடக்கின்றன.
3. உண்மையில், முழுநேர குருமார்களாகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்வதற்கு முன்னுதாரணமாக வாழ்ந்து சபையாரை ஏவிவிடும் குருமார்களும் குறைந்து விட்டனர்.
4. எல்லா நிலையிலும் உலக சிந்தனையும் லௌகீக இன்பங்களும் மலிந்து விட்டன.
5. முழுநேரக் குருத்துவ விழிப்புணர்ச்சிக்காக எல்லா நிலையிலும் சபைகள் இதைப் பற்றி உபதேசிக்க வேண்டும். ஏனென்றால், (பவுலைப் போன்று) தேவ அழைப்புக்கு தியாகவுள்ளம் தேவைப்படுகிறது.
6. தங்கள் பிள்ளைகள் முழுநேரக் குருத்துவ பயிற்சியில் ஈடுபட, பெற்றோர்கள் ஆக்க்கரமான முறையில் செயல்பட வேண்டும். சாமுவேலின் பெற்றோர்களைப் போல், நாமும் பிள்ளைகளை அர்ப்பணிப்புக்கு வழிநடத்த வேண்டும்.
7. தகுதியான மாணவர்களை லிட்சிபீல்ட் போன்ற இடங்களுக்கு 6 மாதங்களாவது அனுப்பி வைப்பதைப் பற்றி அத்தியட்சாதீனம் சிந்தித்துப் பார்க்கலாம்.
8. சபையில் பணியாற்றும் குருமார்களை, பீசிசி அதிகமாகக் குறைகாணாமல், அவர்களின் சிறப்பம்சங்களைப் பாராட்ட வேண்டும். வருடாந்திர குருமார் பாராட்டு விழா நடத்துவதைப் பற்றி சிந்தித்துப பார்க்கவும்.
9. எல்லா சபைகளும், சுவிசேஷ வட்டங்களும் அத்தியட்சாதீனமும் இறையியல் கல்லூரியும் நடத்தும் நீள்விரி இறையியல் பயிற்சியில் கலந்து கொள்ள தங்கள் சபையாரை ஈடுபடுத்த வேண்டும். இதன் மூலம் பயிற்சியில் ஈடுபடுகிறவர்கள் தன்னார்வ குருமார்களாக (LOM / NSM) பிற்காலத்தில் தங்களை ஒப்புவிக்க முடியும். இவ்வண்ணமாக அவர்களுக்கு தன்னம்பிக்கையைப் பிறப்பிக்கலாம்.
10. கிளை அத்தியட்சாதீனங்கள், அத்தியட்சாதீனத்தில் இருந்தும் பிற ஊழிய நிலைகளில் இருந்தும் பேச்சாளர்களை வரவழைத்து, குருமார்களின் பற்றாக்குறையை விளக்கும் வகையில் உரை நிகழ்த்தலாம்.
11. தற்போது குருமார்களும் பிற ஊழியர்களும் பெறுகின்ற ஊதியத்தையும் பிற உதவிகளையும் விளக்கும் வகையில் கையேடுகள் வெளியிடலாம். சுமார் 40 ஆண்டுகளாக ஆங்கிலிக்கன் திருமண்டலத்தில் பணியாற்றிய காலத்தில், குருமார்களும் பிற முழுநேர ஊழியர்களும் படிப்படியாக ஆவியின் பிரகாரமாகவும் உலகப் பிரகாரமாகவும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளேன்.
12. குருமார்களும் டீக்கன்மார்களும் தாங்கள் அடைந்த ஆனந்தத்தையும் நிறைவையும் சாட்சியாகப் பகர்ந்து வருகின்றனர்.
13. பேராயர் எங் மூன் ஹிங், சீடத்துவப் பயிற்சியைக் குறித்த தேவ கட்டளையின் தரிசணத்தைத் தெளிவாக புரிந்து கொள்வது, சபைகளைத் தனது திட்டத்தை நிறைவடையச் செய்யும், என்று கூறியுள்ளார்.
14. பெற்றோர்கள் பிள்ளைகள் வளர்ப்பதை ஒரு முக்கியக் கடமையாகக் கருத வேண்டும். நீதிமொழிகள் 22.6ல், பிள்ளையானவர் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான், என்று கூறப்பட்டுள்ளது.
Thursday, September 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment