கரு வசனங்கள் - தேவன் கட்டளையிட்டபடி மோசே செய்தான்.
நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம் (யோசுவா 24.15)
வரலாற்றுக் குறிப்பு
v மோசேயின் பொறுப்பையேற்று யோசுவா தேவ ஜனங்களை வாக்குத் தத்தம் செய்யப்பட்ட நாட்டிற்கு அழைத்துச் சென்றான்.
v வனாந்திரப் பயணத்தை மேற்கொண்டு, வாக்குத்தத்தம் செய்யப்பட்ட நாட்டை யோசுவா சென்றடைந்தான்.
v நானும் என் வீட்டாருமோவென்றால் ஆண்டவரையே சேவிப்போம் என்று கூறி தனது மக்களை விசுவாசத்திற்குள் கொண்டு வந்தவன்.
1. முன்னுரை
ஆரம்பத்தில் அவர் (ஹோசியா) ஓசியா அல்லது இரட்சிப்பு அல்லது குசலன் என்றழைக்கப்பட்டான். (நெகேமியா 8.17, அப்7.45, எபி8.8). யோசுவா என்றால் யேகோவா அல்லது இரட்சிப்பு என்பதாகும்.
மோசேயின் பொறுப்பை ஏற்ற யோசுவா, எகிப்தை விட்டு வெளியேறும் பயணத்தில் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளார். இஸ்ரவேல் சேனைத் தளபதி என்று அறிமுகப்படுத்தப் பட்ட அவன் ஒருவன் மாத்திரம், மோசே பிரமாணத்தைப் பெரும் பொருட்டு மலையேறியபோது பாதி வழி வரைக்கும் அனுமதிக்கப்பட்டான். வாக்குதத்தம் பண்ணப்பட்ட நிலத்தை விசாரிப்பதற்கு ஒற்றனாக காளேப்புடன் அனுப்பி வைக்கப்பட்டான். பிற ஆதாரங்கள், அவன் மோசேக்கு நிலையாக பாதுகாப்பு கொடுத்து வந்தான் என்று கூறுகின்றன. தேவ ஜனங்களை வழிநடத்துவதற்குத் தேவையான அடிப்படைப் பயிற்சிகளை முதன்மை நிலையில் பெற்றுக் கொண்டான்.
தலைமைத்துவத்திற்குத் தேவையான அடிப்படைத் தகுதி, தனது பொறுப்பிற்குத் தகுதியானவரைத் தயார்படுத்தி விட்டுக் கொடுப்பதாகும். தனது பொறுப்பை ஒப்படைப்பதற்கத் தகுதியானவரைத் தேர்ந்தெடுப்பதில் மோசே மிகச் சிறந்த முடிவை எடுத்துள்ளான். (எண்27.15-23). தனது ஆளுமையை யோசுவா எப்படி வெளிப்படுத்தினான்?
மோசேயின் தலைமைத்துவத்தை யோசுவா உண்மையோடு பயின்றதோடு, வனாந்திரப் பயணத்திலும் சேர்ந்து கொண்டான். எகிப்தின் அடிமைத்தனத்தை அனுபவித்து, பின்னர் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட நாட்டை நோக்கி பயணித்த இரண்டு முதியவர்களில் அவனும் ஒருவன்.
மோசேயின் பொறுப்பை ஏற்பதற்கு நீண்ட காலம் பிடித்தது. 80 வயதில்தான் அந்தப் பொறுப்பு கிடைத்திருக்கிறது. எகிப்தை விட்டுப் புறப்படும்போது அவனுக்கு வயது 40. இஸ்ரவேலர்கள் அமலேக்கரோடே யுத்தம் பண்ண வேண்டும் என்பதை அறிந்து கொண்ட முதல் மனிதன் (யாத்17.9)
யோசுவா மோசேயோடு காட்டில் அலைந்து திரிந்தான். பின்னர் ஜனங்கள் மீது முழு அதிகாரம் வழங்கப்பட்டது. (எண்.27.18-23, உபா.31.14). ஆறு வருடங்களாக தேவ சேனையை வழிநடத்தி, ஆறு தேசங்களையும் முப்பத்தோரு அரசர்களையும் தன் ஆதிக்கத்தில் கொண்டு வந்தான். 110 வயதில் மரித்தான்.
விசுவாசம், நம்பகத் தன்மை நிறைந்த நடுநிலை, தெளிவான சிந்தனை ஆகியவை யோசுவாவின் குணாதிசயங்களில் வெளிப்படுகிறது. ஆவியானவர் அவரோடிருந்தார் (யோசுவா 27.18). மோசேயின் கட்டளைக்கு இணங்கி அவன் கானான் தேசத்தைத் தாக்கினான். தாக்குதலுக்கு முன்பாக தனது ஜனங்களுடனான உறவைப் புதுப்பித்துக் கொண்டான். சங்கடம் நிறைந்த நிலையில் சிறப்பு விண்ணப்பம் மூலம் உதவிக்காக மன்றாடினான் (யோசுவா 10.12-14). அவனுடைய விசுவாசமும் தெய்வ பக்தியும் தனது ஜெனங்களுக்கு வழங்கிய இறுதி செய்தியில் காணப்படுகின்றன. இவை, அவன் மீது உள்ள நமது மரியாதையை அதிகரித்துக் காட்டுகிறது.
2. முடிவுரை
மோசே எகிப்திய கலாச்சாரத்தில் பயிற்சி பெற்றவன். தான் எதிர்நோக்கிய சவாலில் தேவனின் வழிநடத்துதலில் விசுவாசமாய் இருந்தான். தேவனின் மூலம் உண்டாகும் ஆயத்தமும் ஊக்கமும் செம்மையான தலைமைத்துவத்தை உருவாக்குகிறது. யோசுவாவின் செயலாக்கத்தில் மோசேயின் ஆதிக்கம் அதிகளவில் வெளிப்பட்டது. மோசேயே யோசுவாவிற்கு முன்னதராணத் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார். தேவனிடத்தில் தனது கீழ்ப்படிதல் மூலம் அவருடைய ஜனங்களுக்கு மீட்பையும் சமூக நலனையும வழங்கினான். மோசேயின் தலைமைத்துவத்தை ஏற்பதற்கு யோசுவா பொறுத்தமானவனாக தேவனிடத்தில் காணப்பட்டான்.
3. வேத மேற்கோள்கள் - யாத்17.9-14, 24.13, 32.17, எண்11.28, உபா1.38, யோசுவாவின் புத்தகம், யூதா2.6-9, 1ராஜா16.34 ஆகிய வேத பகுதிகளிலும் யோசுவாவைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
4. விவாதத்திற்கான வினாக்கள்
v யோசுவா யாருக்குப் பதிலாக பொறுப்பேற்றான்?
v வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்குள் நுழைய அவன் எப்படி தகுதியுடையவன் ஆனான்?
v தலைமைத்துவத் தகுதியை யோசுவா யாரிடம் இருந்து கற்றுக் கொண்டான்?
v யோசுவா 25.15ல் இடம் பெறும் வசனத்தை விளக்குக.
v யோசுவாவிடம் இருந்து நமது திருப்பணிக்கு என்ன கற்றுக் கொள்ளலாம்?
v இஸ்ரவேல் ஜனங்களுக்கு அவேன் எப்படி மீட்பைக் கொண்டு வந்தான்?