Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Thursday, February 3, 2011

62. மோசே - தேவ ஜனங்களை விடுவித்தவன்

அவனின் வாழ்க்கைக் குறிப்புகள்

1.     அவனின் பூர்வீகம் - அடிமையின் மகன்
a)    இஸ்ரவேலர் குழந்தைகளைக் கொன்று போட எகிப்தின் அரசனான பாரோன் கட்டளையிட்ட அதே நேரத்தில் பிறந்தான் (யாத்2.1-4).
b)     எகிப்து தேச சட்டத்தின் படி, இஸ்ரவேலர் அடிமைகளின் புத்திரன்.
c)     அவனுடைய முன்னோர்கள் யோசேப்பின் காலத்தில் மேய்ப்பர்களாக வந்து கோசேன் என்ற ஊரில் தங்கினார்கள். 400 வருடமாக அங்கே பாடு பட்டனர். அவர்கள் எகிப்தில் வாழ்ந்த முற்பகுதியில் பாடுகள் அனுபவிக்கவில்லை. யோசேப்பை அறியாத ஓர் அரசன் ஆட்சிக்கு வந்த பிறகே அவர்கள் பாடுகள் அனுபவித்தனர்.


2.     தேவனின் திட்டத்தால் ஓர் இளவரசான வளர்தல்
a)     பாரோனின் மகள் தனது குழந்தையாகத் தத்தெடுத்து, அவனுக்குத் தேவையான உதவிகளை வழங்குதல்.
b)     தேவனின் திட்டத்தின்படி பாரோனின் மகள் மோசேயின் தாயாரிடமே பாலூட்டக் கேட்டுக் கொண்டாள். அவன் மொத்தமாக தனது தாய்மை அன்பை இழக்கவில்லை (யாத்2.10)
c)     எகிப்தியரின் எல்லா ஞானத்திலும் அவன் பயிற்சி பெற்றான்.
(யாத்.2.5-10, அப்7.21-22).
d)     ஓவிய எழுத்துக் கல்வி, இசைக் கல்வி போன்றவை எகிப்தியர் கல்வியில் அடங்கியுள்ளன. மறநிலையின்பம் (ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டு), உடல் வலிமைப் பயிற்சி போன்ற ஆற்றல்களையும் அவன் பெற்றிருக்கக் கூடும். (JD டோக்ளஸ், புதிய வேதாகம அகராதி),  (IVF, லண்டன், 1962, பக். 844 ff).


3.     தன் ஜனங்களுடனான மோசேயின் எபிரேய இன உணர்வு
a)     பாரோனின் அரண்மனையில் வளர்க்கப்பட்டாலும், தன் சொந்த ஜனங்களின் பாடுகளில் பரிதாபப்பட்டான்.
b)     ஓர் எபிரேயன் எகிப்தியனிடம் வதைக்கு ஆளான போது மோசேயின் முதல் அழைப்பு ஏற்பட்டது. எபிரேயனை வதைத்துக் கொண்டிருந்த எகிப்தியனை மோசே கொன்று, அவன் உடலை மண்ணில் புதைத்தான். (யாத்2.13).
c)     சிறைப்படுத்தப்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்ள மீடியன் என்ற ஊருக்குத் தப்பிச் சென்றான்.


4.     தேவன் அழைப்பதோடு நில்லாமல் இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்கும் பொருட்டு மோசேக்குப் பொருத்தமான பயிற்சியையும் வழங்கினார்.
a)     தனிமையும் எளிமையும் மோசே இஸ்ரவேலர்களை விடுவிப்பதற்கு ஏதுவான கட்டளையைப் பெற வழிவகுத்தது. 
b)     தன் ஜனங்களின் பாடுகளைக் குறித்து மோசே அனுதாபங் கொண்டாலும் பாலைவனத்தில் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருக்கும் போதுதான் அவர்களை விடுவிக்க அழைப்பு கிடைத்தது. எந்த இடத்திலும் அழைப்பு கிடைக்கலாம். ஆமொஸ் விவசாயியாக இருக்கும்போது அழைப்பைப் பெற்றான். விழித்திருப்பதோடு எதிர்பார்த்தும் வாழ வேண்டும்.
c)     தொடக்கத்தில் தனது ஜனத்தை விடுவிப்பதற்கான அழைப்பை மோசே ஏற்கமறுத்தான் (யாத்3.11). தன் குடும்பத்தை விட்டு எகிப்திற்குச் செல்ல நேர்ந்தது. எகிப்திற்குத் திரும்பும்போது, யாரும் அந்தக் கொலையை அறியாததுபோல் காணப்பட்டது.


5.     தேவன் சக்திவாய்ந்த நிலையில் மோசேயை அழைத்தார் (வெளி3.7-10)
a)     என் ஜனங்கள் எகிப்தில் படும் துன்பங்களை மெய்யாகவே நான் கண்டேன்.
b)     அடிமைத் தனத்தால் அவர்கள் கூக்குரல் என் காதுக்கு எட்டிற்று. அவர்கள் துன்பத்தில் எனக்குக் கருத்துண்டு.
c)     அவர்களை இரட்சித்து, இத்தேசத்தில் இருந்து விடுவித்து பாலும் தேனும் ஓடுகிற கானானியர்களின் தேசத்திற்குள் கொண்டு வந்து சேர்ப்பேன்.
d)    இப்போது அவர்களின் கூக்குரல் என் காதுக்கு எட்டிற்று.
e)     எகிப்தியர்கள் அவர்களை அடிமைப்படுத்தும் விதத்தைக் கண்டேன் (யாத்3.9)
f)     என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களை எகிப்தில் இருந்து விடுவிப்பதற்கு நான் உன்னை பாரோனிடத்தில் அனுப்புகிறேன்.
g)     நான் உன்னோடு இருப்பேன் (யாத்3.12)


6.     பல வலிமைப் பயிற்சி பெற்றிருந்தாலும் மோசேயிடம் சில ஊனங்கள் காணப்பட்டன (யாத்4.18-31)
a)     சில நேரங்களில் சிலர் தடங்கல்களையும் சிரமங்களையும் கூறி, அழைப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள முயல்வர். (உம் - மோசேயின் நாவூனம்).
b)     என் நாவூனத்தினால் பாரோன் எனக்கு செவி சாய்க்காமல் போகக் கூடும்? ஆரோன் மோசேயைப் பிரதிநிதித்துப் பேசினான். (யாத்5.30)
c)     அவருடைய பெரும் பணிக்காக என்ன பேச வேண்டும், எப்போது பேச வேண்டும், அதன்  நோக்கத்தை வெளிப்படுத்த தேவன் நமக்கு ஒரு தேற்றவாளனை வழங்குவார்.

7.    தேவனால் அழைக்கப்பட்ட மனிதரும் குற்றம் புரியலாம் (எண்20.1-13)
a.    மோசே மெர்பியாவில் மும்முனை குற்றங்களில் ஈடுபட்டான்:
b.    வெறுமனே கட்டளையிடுவதினால் மாத்திரம் பாறையில் நீர் கசியுமா? என்று மோசே சந்தேகங் கொண்டான்;
c.    அவன் தேவையில்லாமல் பாறையை இரண்டு முறை தட்டினான். இது தேவையில்லாத பொறுமையிழப்பைக் காட்டுகிறது. தேவன் அவன் மீது கடும் சினம் கொண்டார்.
d    தான் செய்த அற்புதங்களை தேவ மகிமைக்குப் பயன்படுத்தவில்லை. மாறாக தன்னையும் தன் சகோதரனையும் பெருமைப்படுத்திக் கொண்டான்.



8.     தயக்கம் காட்டிய தேவ விடுதலையாளன்
a.    தேவன் அவனை ஆண்டுகொண்டார் (யாத்4.1-7)
b.    தேவன் மோசேக்கு அற்புதம் செய்யும் ஆற்றலை வழங்கினார். - தேவன் அவனுக்கு வல்லமையையும் அதிகாரத்தையும் வழங்கினார்.
c.    சராசரி மனிதனான மோசே மாபெரும் வல்லமையோடு எழுந்தான்.
d.    தேவன் அவனுக்கும்  அவன் சகோதரனுக்கும் ஆதாரப் பொருள்களையும், கரத்தையும் நீரையும் வழங்கினார்.
e.    மோசே ஆரோனோடு பங்காளித்துவ ஆதாயத்தைப் பெற்றான்.


எப்படி துலங்குவது?
மோசேயைப் போல் நாமும் அழைப்பை ஏற்கலாம், தேவன் தேவையான ஆதாரப் பொருள்களையும், ஆற்றலையும், ஆதரவையும் வெற்றி பெறும் பொருட்டு வழங்குவார்.


9.     மோசே பல சவால்களை எதிர்கொண்டான் (யாத்5.1-23)
a)     முதலில் பாரோனோடு வாக்குவாதம் உருவானது (யாத்5.1)
b)     ஆராதனை செய்யும் பொருட்டு ஜனங்களை வனாந்திரத்திற்குப் போகச் சொன்னது பெருமளவில் பொருளாதாரத்தையும் மனித வளத்தையும் சீர்குலைக்கும் (வ3,5, 7)
c)    எகிப்திய ஆட்சியாளர்களிடம் இருந்து ஜனங்கள் கொடுமையான உழைப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.
d)    சுதந்திரத்திற்கான கிரயம் - ஊக்கம், பொறுமை, விடாமுயற்சி, மனப்பூர்வமான சம்மதம் தேவ மீட்புக்கான திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஆற்றலில் நம்பிக்கை வேண்டும். (Hugh, R. Page Jr. Exodus: The People's Bible Commentary BRF, London, 2006).
e)    இயற்கையின் சீற்றம் (யாத்7.25-8.13) வாதகைளால் பல தொல்லைகள் (8:16-32) . தேவனுடைய கரங்களை அவர்களை வழிநடத்திற்று.


10.     வனாந்திரத்தில் ஒரு விஷேச பயணம் (13.17-14.4)
a)     செங்கடலைக் கடத்தல் (அதி15)
b)     மேகம், அக்கினி மூலம் தேவன் அவர்களை வழிநடத்தினார்.
c)     பத்துக் கட்டளைகள் (அதி20)
d)    ஜனங்கள் அந்நிய தெய்வங்களை வணங்கத் தூண்டப்பட்டனர் (அதி33)  - தங்கத்தில்     செய்யப்பட்ட கன்றுக்குட்டி


11. தேவன் முழுமையான மாற்றத்தைக் கொண்டு வந்தார் (34.29-35)
a)     மோசேயின் முகம் பிரகாசித்தது.
b)    அவன் நற்செய்தியில் சார்ந்திருந்தான்.
c)    அவனின் புனித கடமைக்குத் தேவையான ஆதாரங்கள் வழங்கப்பட்டன (35-36.7)


12.    முடிவுரை
    மோசேயின் மூலமும் யோசுவாவின் மூலமும் தேவன் தமது நோக்கத்தை நிறைவேற்றினார். அவர்கள் இருவதும் வெவ்வேறு காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


13.    விவாதத்திற்கான கேள்விகள்
v    மோசேக்குப் பாலூட்டியது யாரு?
v    எகிப்தியர்களின் கல்வி தேவ ஜனங்களை விடுவிப்பதற்கு எவ்வாறு அவனுக்கு உதவிற்று?
v    40 ஆண்டுகால வனாந்திரப் பயணத்தில் அவன் எதிர்நோக்கிய சவால்கள் என்ன?
v    அவனால் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்க முடிந்ததா?
v    பத்துக் கட்டளைகளை எழுதுக.
v    அனுதாபத்தையும் ஜெப மன்றாட்டையும் தவிர்த்து நாம் எப்படி துன்பப்படும் மக்களுக்காக கடமையாற்றலாம்?

No comments:

Post a Comment