1. பழைய ஏற்பாடு , புதிய ஏற்பாடு என்று பரிசுத்த வேதாகமம் பிரிக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்களும் புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் அடங்கியுள்ளன. வேதாகம்ம் ஒரு புத்தகசாலை. பழைய ஏறப்டு இயேசு கிறிஸ்து பிறப்புக்கு முன்பே எழுதப்பட்டது. புதிய ஏற்பாடு அவரின் பிறப்புக்குப் பின் எழுதப்பட்டது.
2. பழைய ஏற்பாட்டில் சட்ட திட்டம், வரலாறு, கவிதை (சங்கீதம்), ஞானோபதேசம், மற்றும் தீர்க்கதரிசன புத்தகங்கள் அடங்கியுள்ளன. பழைய ஏற்பாடு (இனி பஏ என்று குறிப்பிடப்படும்) ஒரு தலை சிறந்த பண்டைய இலக்கியம். இதற்கும் முந்திய புத்தகங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றைப் பெருமளவில் வாசிப்பவர்கள் கிடையாது.
3. வேதாகமத்தை ஒரு புத்தகம் என்று கூறவியலாது. 66 புத்தகங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு. ஆபிரகாம், மோசே, யோசுவா, தாவீது போன்ற நாயகர்களின் மகா புராணக் கதைகளில் இருந்து, இயல்புத் தன்மை வாய்ந்த யோபு, பிரசங்கி, போன்ற அனைவருக்கும் ஏற்றவை இப்புத்தகங்கள் இங்கு உண்டு.
4. பழைய ஏற்பாட்டு ஆசிரியர்களைப் பொறுத்த வரை, அவர்களுடைய சமுதாய, பொருளாதா, அரசியல் புரட்சியனால் மட்டும் அவர்களுடைய சமுதாயம் நிலைத்திருக்கவில்லை என்று நம்புகிறார்கள். அதற்கும் மேலாக, அவர்களுடைய தோற்றத்திற்கு கர்த்தரும் அவருடைய நடவடிக்கையும் காரணம். இவை ஒரு சமய புத்தகமும் கூட. இந்த உலகமும் அதன் நடவடிக்கையும் ஒரு தற்செயலான நடவடிக்கைத் தொடர்களால் ஏற்பட்டதாக இப்புத்தகங்கள் கருதவில்லை. அவை யாவும் மகா வல்லமை பொருந்திய கர்த்தரின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியுள்ளது. அவர் அறியப்படாத வெகு தொலைவில் உள்ள தேவன் அல்லர். மனிதர்களோடு உறவாடக் கூடிய வல்லவர் அவர். இந்தச் செய்தி ஆதியாகமத்தின் முதல் சில பத்திகளிலே காணப்படுகிறது. மேலும் பின்வரும் பத்திகளில் காணப்படுவது போல் பல முறை விளக்கப்பட்டுள்ளதோடு வலியுறுத்தவும் பட்டுள்ளது.
5. கர்த்தருடைய புராணம் (கதை) மனிதர்களிடம் அவர் வெளிப்படுத்தும் அன்பின் உறவாகும். மிக ஆழமான நுண்ணறிவினால் ஓசியா தீர்க்கதரிசி கர்த்தரை அன்பான தந்தையாகவும், இஸ்ரவேலர்கள் அவருடைய புத்திர்ர்களாகவும் (ஓசியா 11.1-4) குறிப்பிடுகிறார். இந்த உவமானத்தை கேட்டின் மகனுடைய உவமானத்தோடு ஒப்பிடவும்.
6. பழைய ஏற்பாடு ஆர்வத்தைத் தூண்டும் புத்தகங்களாகும். யுத்தங்களும் அனுபவங்களும் நிறைந்து காணப்படுகின்றன. மனிதனுக்கும் கர்த்தருக்கும் இடையிலான மாபெரும் உறவின் அடிப்படையில் அவை எழுதப்பட்டுள்ளன.
7. புராணங்களை (கதைகளைப்) புரிந்து கொள்ளுதல்:
a. பழைய ஏற்பாடு (ப.ஏ.) யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பொதுவான வேதமாகும். அவிற்றில் தமது ஜனங்களின் வளர்ச்சியையும் கர்த்தர் இஸ்ரவேலர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைகளையும் காண்கிறோம். இந்த உடன்படிக்கைகள் நிறைவேறுவது தொடர்பான புரிந்துணர்வுகளில்தான் கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் வித்தியாசம் காணப்படுகிறது.
b. கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை ப.ஏ. நமது வேதாகமத்தின் முதல் பாதி பகுதியாகும். கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் இவ்விரண்டு ஏற்பாடுகளும் ஒன்றுக்கொன்று ஊக்கப்படுத்துவதற்கு உதவுகின்றன.
8. ப.ஏ. எழுதப்பட்ட காலக்கட்டம் மிகவும் நெடுகலானது. பு.ஏ. எழுதி முடிக்கப்பட்ட காலக்கட்டம் 60-70 ஆண்டுகளாக குறுகியிருக்க ப.ஏ. நூற்றாண்டுகள் இடைவெளியைக் கொண்டிருக்கிறது.
9. பல உலக நாகரீகங்கள் தோன்றி முதிர்ந்த நிலையில்தான் இஸ்ரவேலர்களின் வரலாறு தொடங்கிற்று. யுப்ரத்தஸ் நதியோரத்தில் வாழ்ந்த பாபிலோனியர்களின் கலாச்சாரமும் நூல்களும் பழைய ஏற்பாட்டில் குறிக்கப்பட்டுள்ளன.
10. தேவன் எவ்வாறு மனித வர்க்கத்திற்குத் தம்மை வெளிப்படுத்தினார் என்பதை அறிவதற்கே யூதர்களுககும் கிறிஸ்தவர்களுக்கும் ப.ஏ.ஐ பயன்படுகிறார்கள். உலகம் முழுவதற்கும் இந்தச் செய்தி கூறப்படுகிறது. (யோவான் 3.16).
11. ஆனாலும், ப.ஏ. வாழ்க்கை முறை தற்காலத்தை விட மிகவும் மாறுபட்டிருக்கிறது. இந்த மாறுபாடுகளை நாம் உணர்ந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் இதை வாசிக்கிற அனைவரோடும் பொதுவான மனித தன்மையைப் பகிர்ந்து கொள்கிறோம்.
12. புராணமும் விசுவாசமும். ப.ஏ. புத்தகங்களைக் காண்போம்:
a. ஆகமங்கள்: ஆதியாகம்ம், யாத்திராகம்ம், லேவியராகம்ம், எண்ணாகம்ம், உபாகமம்.
b. வரலாறு: யோசுவா, நியாயாதிபதிகள், ரூத், சாமுவேல் 1, சா.2, ராஜாக்கள் 1, ரா2, நாளாகம்ம், எஸ்ரா, நெகேமியா, எஸ்தர்.
c. ஞானப் பாட்டுகள்: யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி, சாலேமனின் சங்கீதம்.
d. தீர்க்கதரிசிகள்: ஏசாயா, எரேமியா, புலம்பல், எசேக்கியேல், தானியேல், ஓசியா யோவேல், ஆமொஸ், ஓபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா.
13. வரலாற்றுக்கும் அப்பாற்பட்ட விஷயங்கள் ப.ஏ.இல் கூறப்பட்டுள்ளன. கற்பனை வளத்தோடு பாடப்பட்ட தங்கள் பேரானந்த்த்தையும் ஆராதனைப் பாடல்களையும் பற்றிய பதிப்புகள் இதில் காணப்படுகின்றன.
14. மேற்கோள் புத்தகங்கள்:
a. டேவின் எஃப் வின்சன், பழைய ஏறப்டு – அறிமுகம் (நீள்விரிக் கல்வி வழிகாட்டி 7), (எஸ்பிசிகே) 1973.
b. ஜான் டிரேன், பழைய ஏற்பாட்டைப் பற்றிய அறிமுகம் (லயன் புத்தகம்), 1987.
c. ஜெ.அல்பெர்த்தோ சொகின், பழைய ஏற்பாட்டைப் பற்றிய அறிமுகம், (எஸ்சிஎம், 1980).
15. நாம் பழைய ஏற்பாட்டில் விசுவாசத்திற்குத் தந்தையான ஆபிரகாமைப் பற்றி முதலில் கற்கப் போகிறோம்.
பேராயர் பத்துமலை
2010 அத்தியட்சாதீன நீள்விரிப் பயிற்சி
மொழி பெயர்ப்பு:
வி.பி.ஜான்சன் விக்டர்,
பரி.யாக்கோபின் ஆலயம்
03.02.2011

No comments:
Post a Comment