கரு வசனம்: “இப்போதும் கர்த்தராகிய ஆண்டவரே, நீரே தேவன்; உம்முடைய வார்த்தைகள் சத்தியம்; தேவானே; உமது அடியானுக்கு இந்த நல்விசேஷங்களை வாக்குத்தத்தம் பண்ணினீர்;. இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கார்த்தரான ஆண்டவராகிய தேவானே; அதைச் சொன்னீர்; உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீh;வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்.” (2சாமு. 7:28-29)
முக்கியத் தகவல்கள்
· எட்டு சகோதரர்களில் இளையவன் (1சாமு17:12).
· தாவீது சவுலுக்குப் பதிலாகப் பதவியேற்றவர் (33 ஆண்டுகள்)
· பல வருடங்கள் சரணாகதனாக வாழ்ந்தவர்
· பத்க்ஷீபாவை தவறான முறையில் மனையாட்டி ஆக்கிக் கொண்டான்.
முன்னுரை - அரசனாக எழுந்த மேய்ப்பன்
அவன் வாழ்க்கையில் பல போதனைகளும், வழிகாட்டுதலும் எச்சரிக்கையும் அடங்கியுள்ளன. அன்பிற்குப் பாத்திரன் என்பது அவன் பெயரின் பொருள். இஸ்ரவேலர்களுக்கு இரண்டாவது அரசனாகப் பதவியேற்ற அவர் தலைசிறந்தவராவார். ஜெசி என்பவரின் மகன், ரூத்திற்கு நாலாம் தலைமுறை வாரிசு, பெத்தலேகெமில் பிறந்தவன், 10 சகோதரர்களின் இளைய மகன். தந்தை சொத்தும் செல்வாக்கும் நிறைந்தவராய் இருந்தாலும், தாவீது தனது வாலிப வயதில் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான் - கீழ் நாடுகளில் சிறப்பாக அடிமைகளிடமும் பெண்களிடமும் ஒடுக்கப்பட்ட குடும்பங்களிடமும் ஆட்டு இடையனாக சீவனம் பண்ணினான். அப்படியிருந்தும் சாமுவேல் அவனை இஸ்ரவேலின் எதிர்கால அரசனாகக் கொண்டுவரத் தயங்கவில்லை. யாழ் மீட்டுவதில் கைதேர்ந்த அவனை சவுல் துக்கம் அணுசரிக்கும் அரசர்களுக்கு ஆறுதலாக இசை வாசிக்கக் கட்டளையிட்டான். (1 சாமு.16). தாவீது கோலியாத்தைச் சந்தித்த இடம் எபேஸ் டமிம் (1சாமு.17) ஆகும்.
கலிபோவில் நடைபெற்ற மரண யுத்தத்திற்குப் பிறகு தாவீது சவுல் மற்றும் யோனதானின் மறைவுக்காகக் கதறி அழுதான். இஸ்ரவேல் அரசனான பின்பு எருசலேமைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். அந்தப் பெட்டி சகல மரியாதையோடும் எருசலேமிற்குள் கொண்டு வரப்பட்டது. அவனின் வெற்றியும் செல்வமும் பாவத்தில் விழச் செய்தது. விபச்சாரத்தோடு ஊரியாவின் மரணத்திற்கும் வழி வகுத்தான் (2சாமு11). தனது பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டான். மனந்திரும்பி மன்னிப்பு கேட்டான். ஆனால் எஞ்சிய தனது வேதனைகளையும் குடும்ப தகறாறுகளையும் சந்தித்தான். தனது நேசக் குமாரனாகிய அப்சலோம், அவனுக்கு விரோதமாக எழுந்து, நாடு கடத்தி பின்னர் சிறைப்படுத்தினான் (2சாமு15-18). அச்செயலைக் கண்டித்து தாவீது பதவி துறந்து, ஓர் ஆலயத்தை எழுப்பினான். பெத்தலேகேமில் உள்ள தாவீது நகரில் அவன் அடக்கம் செய்யப்பட்டான் (1ராஜா2.10)
தாவீதின் வரலாற்றில் நேசமும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டும் முரண்களும் காணப்படுகின்றன. அவனின் பலமும் பலவீனமும் வர்ணிக்கப்பட்டுள்ளன. தேவனின் உள்ளத்திற்குத் தோதுவானவன் என்று தாவீது வேதாகமத்தில் வர்ணிக்கப்படுகிறான்.
அவனின் ஆற்றல்களை முதலில் காண்போம்.
2. தாவீதின் ஆற்றலும் நடவடிக்கைகளும்
· இஸ்ரவேலரின் தலைசிறந்த ராஜா. தாவீதின் சாம்ராஜ்யத்தை நிறுவியவன்.
· இயேசு கிறிஸ்துவின் மூதாதையர்
· விசுவாசிகளின் சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டவன் (எபிரேயர் 11)
· பாவஞ்செய்தாலும் தமது இருதயத்திற்கு ஏற்ற மனிதன் என்று கர்த்தரால் வர்ணிக்கப்பட்டவன்.
· மிகச் சிலரிடமே இதுபோன்ற முரண்பாடான குணாதிசயங்கள் காணப்படும்.
ஸ்டேன்லி என்ற ஒரு பல்கலை வேந்தர், தாவீதின் குணாதிசயங்களை வர்ணிக்கும்போது, வாஞ்சை, கணிவு, தயாளம், கம்பீரம், ஆகிய குணாதிசயங்களுக்கு மத்தியில் தாவீது போர் வீரனாகவும், இடையனாகவும், கவிஞனாகவும், அரச வம்சகனாகவும், ஆசாரியனாகவும், தீர்க்கதரிசியாகவும், ராஜாவாகவும், நேசமிகுந்த நண்பனாகவும், செங்கோல் அரசனாகவும், பக்திவிநயமாக தந்தையாகவும் திகழ்ந்திருக்கிறார். பழைய ஏற்பாட்டில் அவனுக்கு நிகரான பாத்திரத்தைக் காணவியலாது. அவன் இயேசு கிறிஸ்துவின் சாயலைத் தரித்திருந்தான். அவன் ஆபிரகாமின் குமாரன் என்றழைக்கப்படாமல் தாவீதின் குமாரன் என்றழைக்கப் பட்டான்.
தாவீதின் பலவீனங்களும் குற்றங்களும்
v பெத்ஷெபாவோடு விபச்சாரத்தில் ஈடுபட்டான்
v பெத்ஷெபாவின் கணவனாகிய ஊரியாவைக் கொல்ல சதி செய்தான்
v மக்கள் கணக்கெடுப்புக்கு தேவன் சொன்ன கட்டளையை நேரடியாக மீறினான்
v தன் பிள்ளைகளின் பாவங்களைக் கண்டிக்கவில்லை
தாவீதின் வரலாற்றின் மூலம் நாம் பெற்றுக் கொள்ளக் கூடிய படிப்பினைகள்
தன் குற்றங்களை ஒப்புக் கொள்ள மனங் கொண்டான்
பாவமன்னிப்பு அதன் வினைகளை போக்க முடியாது
தேவன் நமது முழு விசுவாசத்தையும் ஆராதனையையும் எதிர்ப்பார்க்கிறார்.
5. வேதாகம மேற்கோள்கள் - 1சாமுவேல் 16, 1ராஜா 2. அவரைப் பற்றி அம்ப்? 6.5, மத்தேயு 1.1, 6.22, 43-45, லூக்கா 1.32, அப்போஸ்தலர் 13.22, ரோமர் 1.3, எபிரேயர் 11.32 ஆகிய பகுதிகளிலும் குறிக்கப்பட்டுள்ளது.
6. விவாதத்திற்கான கேள்விகள்
v அவன் ஏன் இஸ்ரவேலர்களின் தலைசிறந்த அரசன் என்று அழைக்கப்பட்டான்?
v பாவங்கள் நிமித்தமும், தேவன் ஏன் அவனை தமது உள்ளத்திற்குப் பிரியமானவன் என்று வர்ணித்தார்?
v அவனின் பிரபலமான மகன் யார்? யார் ஞானி என்று அழைக்கப்பட்டான்?
v அவனுடைய எந்தக் கவிதையை நாம் இன்றளவும் ஆராதனையில் பயன்படுத்தி வருகிறோம்?
v அவன் வாழ்வின் மூலம் நாம் கற்றுக் கொள்ளக் கூடியது என்ன?
No comments:
Post a Comment