சவுல் இராஜாவின் குமாரத்தி
முக்கிய வசனம்: “கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணி வழியாகப் பார்த்து, தாவீது இராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து நடனம் பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்.” (2 சாமு: 6:14)
சுருக்கமான குறிப்புகள்:
v மீகாள், சவுல் இராஜாவின் குமாரத்தி.
v மீகாள் தாவீதை விரும்பினாள்.
v அவள் தன் கணவனைக் காப்பாற்றினாள்.
v அவள் தாவீதின் மனைவியானாள்.
1. அறிமுகவுரை – அவள் கதை
அவள் பெயர் `யார் தேவனைப் போன்றவர் என்று பொருள்படும். அவள் சவுலின் இரண்டு குமாரத்திகளில் இளையவள். (1 சாமு. 14 : 49) கோலியாத்துக்கு எதிராக தாவீது நடத்திய தீரச்செயலுக்குப் பிறகு, சவுலின் மூத்த குமாரத்தியாகிய மேராப்போடு வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட திருமணம் நடைபெறவில்லை. மீகாள் தாவீதை நேசித்தாள். நூறு பாலஸ்தீனியர்களைக் கொன்றால், சவுல் இளைஞனான போர்வீரனுக்குக் கொடுப்பேன் என்று வாக்குத்தத்தம்பண்ணினான். இராஜா தாவீது இந்தக் கட்டளையை நிறைவேற்ற முயற்சி செய்யும்போது, தன் உயிரை இழந்துவிடுவான் என்று இரகசியமாக நம்பினான். ஆனால் தாவீது வெற்றி பெற்றான். மீகாள் அவன் மனைவியானாள். புத்தியுள்ள தந்திரம் வேலை செய்ததால் அவள் தகப்பனின் புத்தியீனமான கோபத்திலிருந்து அவள் கணவனின் உயிரைக் காப்பாற்றினாள். (1 சாமு. 19 : 11 – 17) அதற்குப் பிறகு அநேக வருடங்கள் அவனை விட்டுப் பிரிந்திருந்து, அந்த வேளையில் பல்த்தியேலை திருமணம் செய்தாள். (1 சாமு. 25 : 44 ; 2 சாமு. 3 : 14 – 15) அவள் தகப்பனும் சகோதரர்களும் இறந்த பிறகு, அவள் மீதியாயிருந்த சவுல் குடும்பத்தாரோடு யோர்தானுக்கு கிழக்கே ஓடிப்போனாள். ஆனால் தாவீது எப்ரோனில் பாதுகாப்பாக ஸ்தாபித்த பிற்பாடு, அவன் அவளுக்காக ஆள் அனுப்பி அவள் மனைவி ஸ்தானத்தை அவளுக்குக் கொடுத்து காப்பாற்றினான். ஆகவே 14 வருடங்கள் கடந்து போனாலும் தாவீதின் அன்பு இடைவேளையில் சிரத்தையற்றதாய்ப் போகவில்லை. ( சிலர் இது அன்பின் அடையாளத்தை விட அரசியல் நடவடிக்கை என்று சொல்கிறார்கள்) தாவீதின் செயல் கிர்காத் – ஜெரீமிலிருந்து எப்ரோனுக்கு தேவனுடைய பெட்டியைக் கொண்டு வரும்போது, மீகாளை வெறுப்படையச் செய்தது. யாருக்கும் இராஜாவுக்கும் இடையில் அங்கே கடைசி அழிவு ஏற்பட்டது. ( 2 சாமு. 6 : 14 – 23)
மீகாள் தாவீதின் மேல் செலுத்தின அன்பு, திருமணத்தின் உண்மைகளைச் சோதிப்பதற்கு நேரம் இல்லை. அதற்குப் பதிலாக அவள் தாவீதின் உயிரைக் காப்பாற்றுவதில் சம்பந்தப்பட்டிருந்தாள். அவளின் உடனடியான எண்ணம் அவள் தப்பிக்க வழி செய்தது. ஆனால் சவுலின் கோபத்திற்கும், தாவீதிடமிருந்து பிரிந்து செல்லவும் வழி வகுத்தது. அவள் தகப்பன் அவளை வேறொரு பல்த்தியேலுக்குக் கொடுத்தான். ஆனால் மேலே காட்டியபடி தாவீது கடைசியாக 14 வருடங்களுக்குப் பின் எடுத்துக் கொண்டான்.
அவளுக்காக வருத்தப்படுவதற்கும் மேலாக, நாம் மீகாளை நமது சொந்தப்போக்கைக் கண்ணாடி போல் காட்டும் ஒருவராக காணத் தேவைப்படுகிறது.
2. பலமும் நிறைவேறுதலும்
a) தாவீதை நேசித்து அவன் முதல் மனைவியாக ஆனாள்.
b) தாவீதின் உயிரைக் காப்பாற்றினாள்.
c) தேவைப்பட்டபோது யோசித்து, உடனடியாக நடத்த முடிகிறது.
3. பலவீனங்களும் தவறுகளும்.
a) நெருக்கத்தின் கீழ் பொய் சொன்னாள்.
b) அவள் சூழ்நிலைகளில் கசப்பாக இருக்க அவளாகவே இடங்கொடுத்தாள்.
c) அவள் கவலை நேரங்களில் அவள் தாவீது கர்த்தரின் மேல் அன்பு செலுத்துவதை வெறுத்தாள்.
4. அவள் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்.
a) எப்படி சீக்கிரமாக, சுலபமாக வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களால் நாம் கசப்பாகி விடுகிறோம். ஆனால் கசப்புத்தன்மை, நடந்து முடிந்த கெட்ட காரியங்களை நீக்கவோ, மாற்றவோ முடியாது. அடிக்கடி கசப்புத்தன்மை கெட்ட நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும். அடுத்த நிலையாக தேவனுக்குச் செவி கொடுத்து சம்மதித்தால் கஷ்டமான நிலைமைகளில் நல்லவைகளைக் கொண்டு வரச் சந்தர்ப்பம் கொடுப்பார். அந்தச் சம்மதத்தில் இரண்டு பாகங்கள் உண்டு. அவருடைய வழிகாட்டுதலுக்காகக் கர்த்தரிடம் கேட்டல். அவருடைய வர்த்தையில் அந்த வழிகாட்டுதலைக் கண்டு பிடிப்பது.
b) நாம் நமக்கு நேரிட்டவைகளுக்குப் பொறுப்பல்ல. நாம் எப்படி சந்தர்ப்பங்களை எதிர்கொள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.
c) தேவனுக்குக் கீழ்ப்படியாமை முழுவதுமாக நமக்கும், மற்றவர்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.
5. வேதாகமக் குறிப்புகள்: மீகாள் கதை 1 சாமு. 14 – 2 சாமு. 6ல். சொல்லப்பட்டிருக்கிறது. அவள் 1 நாளா. 15 : 29லும் குறிப்பிடப்பட்டிருக்கிறாள்.
6. விவாதத்திற்குரிய கேள்விகள்.
6.1 ஏன் மீகாள் தாவீதை அவமதித்தாள்? (2 சாமு. 6 : 16)
6.2 அவள் தாவீதை மணந்து கொள்ள ஏற்பட்ட நிபந்தனை என்ன?
6.3 எப்போது தாவீதும் மீகாளும் ஒன்று சேர்ந்தார்கள்?
6.4 எப்படி அவள் தாவீதின் உயிரைக் காப்பாற்றினாள்?
6.5 அவள் வாழ்க்கையிலிருந்து நாம் என்ன பாடங்கள் கற்க முடியும்?
மொழிபெயர்ப்பு
திருமதி நாயகம் பட்டு
பரி.யாக்கோபின் ஆலயம்.
No comments:
Post a Comment