Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Wednesday, June 27, 2012

69. ஒபதியா தீர்க்கதரிசி




முக்கியமான வசனம்: “எல்லா ஜாதிகளுக்கும் விரோதமான நாளாகிய கர்த்தருடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது. நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும். உன் செய்கையின் பலன் உன் தலையின் மேல் திரும்பும்.” (ஒபதியா 15)

சுருக்கமான குறிப்புகள்.
·       ஒபதியா ஏதோமின் அழிவைப்பற்றி செய்தி கொடுத்தான்.
·       ஏதோமின் தவறான செய்கைகள் வெளியரங்கமாக்கப்பட்டது.
·       அழிவு நேபுகாத்நேச்சார் காலத்தில் நடந்தது.
·       தீர்க்கதரிசி யூதாவின் கட்டுப்படுத்தப்பட்ட உத்தமமான காரியங்களில் கொடூரமாகப் படையெடுத்ததின் மத்தியில் புனிதமான உத்தமத்தை அறிவுறுத்தினான்.

1.      அறிமுகவுரை  - அவன் கதை.
ஒபதியா என்றால் `ஊழியக்காரன் அல்லது யெகோவாவைஆராதனை செய்கிறவர் என்று பொருள்படும்அவன் பெயர் கொண்ட ஒரு புஸ்தகம் இருக்கிறதுயோராமின் காலத்தில் ஆகாபின் சேவகர்கள் அல்லது ஐம்பது சேவகர்களின் மூன்றாவது தலைவன்தற்காலிகமானது. இவர்களோடு அடையாளம் காணப்பட்டதாக அவன் சரித்திரத்தில் ஒன்றும் காணப்படவில்லை. (2 இராஜா. 1:13) தால்மூத், ஒபதியா ஏதோமிலிருந்த புரோசெலிட் என்ற செய்தியைக் கவனித்தான்மற்ற விளக்கங்களை வெளிப்படுத்த நாம் முயற்சி செய்வோம்:
புஸ்தகத்தின் முக்கிய நோக்கம்: தேவன் அவருடைய ஜனங்களுக்குத் தீங்கு செய்தவர்களை நியாயந்தீர்ப்பார் எனக் காட்டுகிறது

இது யாருக்கு எழுதப்பட்டது?:  ஏதோமியர், யூதாவிலுள்ள யூதர்கள், எல்லா இடங்களிலுமுள்ள தேவனின் ஜனங்கள்.

எப்போது எழுதப்பட்டது?:  யூதாவில் யோகாராம் ஆட்சி செய்தகாலத்தில் சாத்தியமாகிறது, 853–841, அல்லது எரேமியாவின் ஊழியம் செய்த காலம் சாத்தியமாகிறது ( கி.மு. 627 – 586).

சரித்திரத்தின்படி அமைத்தல்:
               சரித்திரத்தின்படி ஏதோமியர்கள் இடைவிடாமல் யூதர்களைத் தொந்தரவு செய்தார்கள்.  இந்தப் புஸ்தகம் எழுதப்படுவதற்கு முந்தின காலத்திலே யூதர்களுக்கு எதிரான தாக்குதலில் அவர்கள் பங்கு கொண்டார்கள். மேலே கொடுக்கப்பட்ட தேதியின்படி, தரிசனம் வடக்கு, தெற்கு இராஜ்யங்களில் உள்ள இஸ்ரவேலின் பகுதிகளின் பிறகும் கி. மு. 586ல் நேபுகாத்நேச்சாரால் யூதாவைக் கைப்பற்றினதிற்கும் முன்னால் வந்தது

               தேவனுக்குக்கூட பிள்ளைகள் இருந்தார்கள்அவர் தேர்ந்தெடுத்த அவரது மிகச் சொந்தமான ஆண்கள், பெண்கள் அங்கே எப்போதும் தனிப்பட்டவர்களும் எப்போதும் அவருடையவர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தார்கள்ஆனால் ஆபிரகாமோடு அவர் ஒரு தேசத்தைக் கட்ட வாக்குத்தத்தம் பண்ணினார்.  இஸ்ரவேல் தேவனின் நாடாகவும், அதின் ஜனங்கள் யூதர்கள், அவரின் சொந்த குமாரர்கள், குமாரத்திகள் பின்தொடர்ந்த நூற்றாண்டுகள் மூலம் அங்கே கீழ்ப்படிதலும், தண்டனைகளும் இருந்தன. ஆனால் எப்போதும் அன்பும் இரக்கமும் இருந்ததுதேவன் அவருடைய பிள்ளைகளுக்கு நித்திய பிதாவாகவும், பாதுகாப்பாகவும், கவனிப்பவராகவும் இருந்தார்.

               ஒபதியா, பழைய ஏற்பாட்டிலுள்ள குறுகிய புஸ்தகம்யாராவது அவருடைய பிள்ளைகளுக்குத் தீங்கு ஏற்படுத்தியிருந்தால் தேவனின் பொறுப்பு ஒரு நாடக உதாரணம் போல் இருக்கிறதுஏதோம் மலைகளடர்ந்த தேசம், பெத்ராவோடு சேர்ந்த சவக்கடல் பிரதேசத்தை ஆக்கிரமித்திருந்தது, சில ஆண்டுகளுக்கு முன்பு தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயமான நகரம்ஏசாவின் சந்ததியார் போல (ஆதி. 25:19, 27, 45) ஏதோமியர் இஸ்ரவேலின் இரத்த சொந்தமானவர்கள், அவர்கள் தகப்பனாரைப் போல் அவர்கள் வெல்ல முடியாத மலை வீடுகள் காணப்படுவதுபோல் முரட்டுத்தனமாகவும், கொடுமையாகவும், பெருமையுள்ள போர்வீரர்களாகவும் காணப்பட்டார்கள்எல்லா ஜனங்களிலும் அவர்கள் வடக்கிலுள்ள சகோதரர்களுக்கு உதவிசெய்ய அவசரப்பட்டார்கள்என்றாலும் அதற்குப் பதிலாக இஸ்ரவேலின் பிரச்சனைகள் மேல் தவறான முறையில் சந்தோஷப்பட்டார்கள்ஓடிவந்தவர்களை எதிரிகளிடம் பிடித்துக் கொடுத்தார்கள்இன்னும் இஸ்ரவேல் நகரத்துப் பக்கம் கொள்ளையடித்தார்கள்.

               ஒபதியா ஏதோமுக்கு தேவனின் செய்தியைக் கொடுத்தான்அவர்களுடைய அலட்சியம், தேவனுக்குக் கீழ்ப்படியாதிருத்தல், அவர்களுடைய கோழைத்தனம், பெருமை, யூதாவிலுள்ள அவர்களுடைய சகோதரர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தல் இவைகளினால் அவர்கள் தண்டனையை எதிர்கொண்டு அழிக்கப்படுவார்கள்இந்தப் புஸ்தகம் ஏதோமுக்கு ஆபத்து வரப்போகிறது என்ற அறிவிப்போடு ஆரம்பிக்கிறது. (வசனங்கள்: 1 - 9)  அவர்களுடைய வெல்லக்கூடாத உயரமான பாறைகள், மலைகள் போன்ற வெறுப்புகளினால் தேவனின் நியாயத்தீர்ப்பிலிருந்து அவர்கள் தப்ப முடியாது.  ஒபதியா அவர்களுடைய அழிவுக்குரிய காரணத்தைத் தெரிவித்தான். (வசனங்கள்: 10 – 16) தேவனுக்கு நேராக தேவை இல்லாத அகங்காரம், தேவனின் பிள்ளைகளைத் துன்பப்படுத்தினது, தேவனின் பிள்ளைகளுக்குத் தீங்கு செய்தவர்களுக்கு நியாயத்தீர்ப்பு ஏற்படும்போது “தேவனின் நாள்என்ற விளக்கத்தோடு தீர்மானித்த தீர்க்கதரிசனம் முடிவுறும். (வசனங்கள்: 15 – 21)

பொருளடக்கம்:
               ஒபதியாவின் புஸ்தகத்தில் சக்தி வாய்ந்த கவிதை பாஷை உபயோகிக்கப்பட்டிருக்கிறது. தண்டனை விதிகளின் முறைப்படி எழுதப்பட்டிருக்கிறதுஇந்தப் புஸ்தகத்தில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசன தேதி, 11ம், வசனத்தில் குறிப்பிட்டபடி, எருசலேம் கைப்பற்றப்பட்டதின் அடையாளத்தின் மேல் அதிகமாக சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்இந்த சந்தர்ப்பங்கள் நேபுகாத்நேச்சாரின் கீழ் கால்டியன்சால் கைப்பற்றப்பட்டிருக்கிறது என்பதைக் குறிப்பிடுகிறது. ஏதோமியர்கள், தீர்க்கதரிசி யாருக்கு எதிராக வழிகாட்டினாரோ அவர்கள் இஸ்ரவேலரின் ஆதிகாலத்து விரோதிகளாக இருந்தார்கள்.  (எண். 20: 14-21)  கைப்பற்றப்பட்டாலும் அவர்களுடைய பழைய அதிகாரத்தில் சிலவற்றைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள். (2 இராஜா: 16:6) அவர்கள் பழைய எதிரிகளைப் பணிய வைக்க நேபுகாத்நேச்சாரோடு சேர்ந்தார்கள் என்பது தெளிவாகிறதுஒபதியா இந்தக் குற்றத்திற்காக ஏதோமைக் குற்றம் சாட்டினான்பொதுவாக கி.மு. 588 – 6 வருஷங்களில் ஏதோமைப் பற்றிய அவன் தரிசனம் முழுமையாக நிறைவேற்றப்பட்டது.

               இஸ்ரவேலுக்கு ஏதோமியரைவிட பெரிய விரோதிகள் கிடையாதுஅவர்கள் அவர்களுடைய ஞானத்தைப்பற்றியும் பெருமை கொண்டார்கள். (வசனம். 8)  அவர்களது கன்மலை வெடிப்புகளாகிய உயர்ந்த ஸ்தானத்தைப் பற்றியும் பெருமை கொண்டார்கள். (வசனம். 3) தீர்க்கதரிசி, அவர்களுடைய பொக்கிஷம் மூடப்படாமல் இருப்பதையும், யூதர்களை இதயமற்ற நடத்தையினால் கண்டித்ததையும், அவர்களுடைய உறவினர்கள், அவர்கள் ஆபத்து காலத்தில் சந்தோஷப்பட்டது, நேபுகாத்நேச்சார் அவர்களை முற்றிலுமாக அழிக்க உற்சாகப்படுத்தினதையும் முன்கூட்டியே அறிவித்தார். (சங்.137:7) எல்லாவற்றிற்கும் முன் நாளிலே பிரதிபலனாகிய தண்டனை வரும். “நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்.” (வசனம். 15)  ஆனால் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாக தாங்களாகவே கைதியாயுள்ள நிலைமைக்கு எடுத்துக்கொண்டு போகப்பட்டார்கள்பரிசுத்த நகரம் கைவிடப்பட்டது. ஏதோமியருக்கு எதிராக குற்றஞ்சாட்டி தண்டனை கொடுக்கும்போது யாக்கோபின் வம்சத்தின் மேல் ஏற்கனவே தண்டனை கிடைக்கப்பெற்றது போல் வித்தியாசமாகக் காணப்படவில்லை. ஆனபடியினால் தீர்க்கதரிசி, ஏதோம் முன் இருந்தது போல் இல்லாமல் சதாகாலங்களிலும் பட்சிக்கப்படும் என்று கூறிக்கொண்டே இருந்தார். (வசனம். 18) (ஒரு தீர்க்கதரிசனம் குறிப்பிடப்பட்டபடி நிறைவேற்றப்பட்டது.)  இஸ்ரவேல் தற்கால வீழ்ச்சியிலிருந்து திரும்ப எழும்பும்போது, சொந்தம் கொண்டாடி, சொந்த தேசம் மாத்திரமல்ல, ஆனால் பெலிஸ்தியா, ஏதோமிலும் கூட, முடிவாக வாக்குத்தத்தம் பண்ணின மேசியாவின் பரிசுத்தமான ஆட்சிகாலத்தில் சந்தோஷமடைந்தார்கள் ஒபதியாவின் தீர்க்கதரிசனத்தின்படி, பின்வரும் வார்த்தைகளை ஒப்பிட்டுப் பாருங்கள்எசேக்கியேல் 35 ; யோவேல் 3 : 19 – 20; ஆமோஸ் 1 : 11, 12.

2.    வேதாந்த சாஸ்திரத்தின் நிகழ்வுகள்.

a)        நேரங்களின் சீதோஷ்ண நிலை:
ஏதோம் யூதாவின் பக்கம் உண்மையாக இருந்தார்கள்ஏதோமியர்கள் மற்ற விரோதிகள் ஆரம்பித்த தாக்குதல்களில் அடிக்கடி பங்கு கொண்டார்கள்.

b)        முக்கிய செய்தி:
தேவனின் ஜனங்களுக்கு விரோதமாகச் செய்த தீமையான காரியங்களுக்காக நியாயத்தீர்ப்பு சொல்லப்படும்.

c)        செய்தியின் முக்கியத்துவம்:
ஏதோம் ஒரு தேசமாக அழிக்கப்பட்டு காணாமல் போனது போல் தேவனும் பெருமை, தீய குணமுள்ள ஜனங்களை அழித்துவிடுவார்.

d)        சமகாலத்திலுள்ள தீர்க்கதரிசிகள்:
எலியா ( 875 – 848) மீகா (865 – 853)  யெகூ (855 – 840)

e)        இஸ்ரவேலோடு இணைதல்:
இஸ்ரவேல் தேசம் யாக்கோபின் வம்சத்திலிருந்து வந்ததுஏதோம் தேசம் ஏசாவின் வம்சத்திலிருந்து வந்தது.

3.    உயர்ந்த விஷயங்கள்.

a)        நியாயத்தீர்ப்பு: ஒபதியா பாபிலோன் யூதாவில் படையெடுக்கும்போது, ஏதோம் ஒன்றும் செய்யாமல் நின்றுகொண்டிருந்ததற்காகத் தண்டனையாக தேவன் அதை அழிப்பார் என்று தரிசனமாகச் சொன்னான்.
b)        பெருமை: அவர்களுடைய வெல்லமுடியாத பாறைக்கோட்டை தோன்றியிருப்பதால் ஏதோமியர்கள் பெருமையோடும், தன்னம்பிக்கையோடும் இருந்தார்கள். ஆனால் தேவன் அவர்களைப் பணியவைத்து, அவர்கள் தேசம் பூமியின் பகுதியிலிருந்து காணாமல் போய்விட்டதுதேவனுக்கு எதிரானவர்கள் எல்லாரும் ஏதோமைப் போல் தண்டனையைச் சந்திப்பார்கள். ஒரு தேசம் தன் அதிகாரம், செல்வம், தொழில் அல்லது ஞானம் இவைகளை தேவனுக்கு மேல் அதிகமாக நம்பிக்கை வைத்தால் கீழாகக் கொண்டு வரப்படுவார்கள்பெருமை உள்ளவர்கள் எல்லாரும் ஒரு நாள் ஒருவரும் தேவனின் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை அறிந்து ஆச்சரியப்படுவார்கள்.

4.    வேதாகமக் குறிப்புகள்:
a)        வேதாகமம்: NIV Study Bible, pp 1554 – 1558.
b)        .ஆர். பக்லண்ட், The Universal Bible Dictionary, pp 343 – 344.
c)        The IDB, Vol. K-Q, pp 577 – 579.

5.    விவாதத்திற்குரிய கேள்விகள்

5.1      அவனுடைய முன் வரலாறு என்ன?
5.2    ஏன் ஒபதியா ஏதோமைக் கண்டனம் செய்தான்?
5.3    பிரதானமான  செய்தி என்ன?
5.4    செய்தியின் முக்கியத்துவம் என்ன?
5.5    ஒபதியா காலத்தில் உள்ள தீர்க்கதரிசிகள் யார்?

மொழிபெயர்ப்பு
திருமதி நாயகம் பட்டு
பரி.யாக்கோபின் ஆலயம், செந்தூல்.










              
              








No comments:

Post a Comment