Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Sunday, May 27, 2012

58. மீகா தீர்க்கதரிசி




முக்கிய வசனம்: 
“மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ் செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை  அலலாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.” (மீகா: 6:8)

சுருக்கமான குறிப்பு
 v    அசீரியனின் நெருக்கடி காலத்தில் அவன் தேசத்தில் ஊழியம் செய்தான்.
v    மீகா வடக்கு, தெற்கு இரண்டு இராஜ்யங்களுக்கும் தீர்க்கதரிசனம் சொன்னான்.
v    அவன் கர்த்தர் பாவத்தை வெறுத்தார், பாவிகளை நேசித்தார் என்று சொன்னான்.
v    அவன் நம்பிக்கையும், ஆறுதலும் சமர்ப்பித்தான்.

1.       அறிமுகவுரை – அவன் கதை.
அவன் எருசலேமுக்கு தென்மேற்கே 20 மைல்கள் தூரத்தில் காத் அருகில் உள்ள மொரேசா ஊரில் பிறந்தவன். அவன் இந்தப் புஸ்தகத்தை இஸ்ரவேல் ஜனங்களுக்காகவும் (வட இராஜ்யம்) யூத ஜனங்களுக்காகவும் (தென் இராஜ்யம்) எழுதினான். இது யோதாம், ஆகாஸ், எசேக்கியா (கி.மு. 742 – 687) என்னும் இராஜாக்களுடைய ஆட்சி காலத்தில் எழுதப்பட சாத்தியமானது.


இந்தப் புஸ்தகம் அமைக்கப்பட்டதன் நோக்கம் என்ன?

      அரசியல் சம்பந்தமாக நிலைமை 2 இராஜா: 15-20; 2 இராஜா: 26 – 30ல் விவரிக்கப்பட்டிருக்கிறது. மீகா ஏசாயாவின் காலத்தில் உள்ளவன். அவன் சமாரியா, எருசலேம், பெத்லெகேமிலுள்ள ஜனங்களின் மேல் மிகுந்த அக்கறை செலுத்தினான்.  ஆமோஸ், ஒசியா, ஏசாயா இவர்கள் ஊழியம் செய்ய ஆரம்பித்த, சில காலத்திலேயே மீகா அதில் பொறுப்புள்ளவனாகக் காணப்பட்டான்.  அவன் இஸ்ரவேல், யூதா இரண்டையும் தன் கண்டனத்திலும், எச்சரிக்கையிலும் சேர்த்துக் கொண்டான். (1:1)  சமாரியா, எருசலேம் இவ்விரு நாடுகள் சம்பந்தப்பட்ட தண்டனைக்குரிய தரிசனத்தின் இடையே ஆச்சரியமான ஒற்றுமை இருக்கிறது. (1:6 உடன் 3:12) கிரேக்க எழுத்தாளர்கள் (Epiphanius மற்றவர்கள்) அவன் ஆகாபின் குமாரன் யோராமினால் கொலை செய்யப்பட்டதாக இம்லாவின் குமாரன் மிகாயாவோடு திகைக்க வைத்ததாக சொல்லுகிறார்கள்.
(1 இராஜா: 22: 8 – 28). மீகா உயிர்த்தியாகத்தில்           கஷ்டப்பட்டதாகக் காணப்படவில்லை. ஆனால் எசேக்கியா காலத்தில் சமாதானத்தோடே மரணமடைந்தான். ( எரே: 26: 18 – 19ல் பார்க்கவும்) எரேமியா ஆலயத்தின் அழிவைப் பற்றி முன் அறிவித்ததால் அவன் கொலை செய்யபட வழி ஏற்பட்டதுபோல, நூறு வருடங்களுகு முன்பு மீகாவால் அதே காரியம் முன் அறிவிக்கப்பட்டபோது நடை பெறவில்லை.

     திர்க்க தரிசிகளின் வார்த்தைகள் அவ்வாறான தவறான எண்ணங்கள் பூரணமாக வித்தியாசப்படுகிறது. தேவனின் வெறுப்பு உண்மையாக எரிந்து கொண்டும், உருவாகிக்கொண்டும், அழிந்து கொண்டும் இருக்கிறது. அவர் பாவத்தை வெறுக்கிறார், நியாயமான நீதிபதியாக நிற்கிறார்.  அவருடைய ஆட்சியை எதிர்ப்பவர் எல்லாருக்கும் சரியான தண்டனையைக் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறார்.  கர்த்தரின் அன்பு உண்மையானது. அவர் தன்னுடைய குமாரன் மேசியாவை பாவிகளுடைய இடத்தில் அவர்களைப் பாதுகாக்கவும், நியாயத்தீர்ப்பை ஏற்றுக் கொள்ளவும் அனுப்பினது உண்மையானது. அன்பும், வெறுப்பும் சேர்ந்திருக்கிறது. இரண்டும் முடிவில்லாதது, தடுக்கமுடியாது, ஆழமில்லாதது.

இந்தப் புஸ்தகதின் பொருளடக்கம்.
     ஏழு அத்தியாயங்களிலும் மீகா பாவத்தை வெறுத்து, பாவிகளிடம் அன்பு செலுத்தும் சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனின் தன்மையை அறிமுகப்படுத்துகிறார்.  இந்தப் புஸ்தகம் அநேகமாக கர்த்தரின் இஸ்ரவேல் (வடக்கு இராஜ்யம்) யூதா (தெற்கு இராஜ்யம்) பூமியின் எல்லா இடங்களிலும் நியாயத்தீர்ப்பு அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நியாயத்தீர்ப்பு யாக்கோபின் மீறுதலினிமித்தமும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய வெறுக்கத்தக்க பாவங்கள், வஞ்சனை (2:2) திருடு (2:8) பேராசை (2:9) விபசாரம் (2:11) கொடுமை (3:3) கபடம் (3:5) அநியாயம் (3:9) கொள்ளை, பொய் சொல்லுதல் (6:12) கொலை செய்தல் (7:2) இன்னும் ம்ற்ற சட்ட விரோதமானக் குற்றங்களைப் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார். தேவனின் நியாயத்தீர்ப்பு ஏற்படும.

     அழிவைப்பற்றி வெற்றிகொண்ட முன்னறிவிப்பின் மத்தியில், மீகா நம்பிக்கையும், ஆறுதலும் கொடுத்தான். ஏனென்றால் அவனும் தேவனின் அன்பை விளக்கினான்.  உண்மை என்னவென்றால் நியாயத்தீர்ப்பு. செய்த குற்றத்திற்காக மன வருத்தப் படும் எண்ணிக்கையில்லா சந்தாப்பத்திற்குப் பிறகு, உண்மையான ஆராதனை, கீழ்ப்படிதலுக்குத் திரும்பி, நியாயாயமாய் நடந்து, இரக்கத்தை விரும்பி, தேவனோடு தாழ்மையாய் நடந்தால் வரும். (6:8) ஆனால் நியாயத்தீர்ப்பின் மத்தியிலும் கர்த்தர் அவரைத் தொடர்ந்து பின்பற்றின சிறிய அளவிலானவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணினார். அவர்கள் இராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார். கர்த்தர் அவர்கள் முன்னணியில், நடந்து போவார். (2 : 13) அந்த இராஜா உண்மையாக இயேசு. 5 : 2ல் தாவீதின் சொந்த நகரமாகிய பெத்லெகேமில் பிறப்பார் என்று நாம் வாசிக்கிறோம்.

2.       அவன் வாழ்க்கையிலிருந்து நாம் கற்கும் பாடங்கள்.
மீகாவை வாசிக்கும்போது, அவர் நியாயந்தீர்த்து, பாவங்களுக்காகத் தண்டனை கொடுக்கும்போது, கர்த்தரின் கோபம் நடைமுறைப் படுத்துவது அதிசீக்கிரத்தில் காட்டுவது போல் இருக்கிறது.  குற்றத்தை அறிக்கையிட்டு நம்பிக்கையுள்ளவர்களுக்கு அவர் நித்திய ஜீவனை அருளிச்செய்வது நடைமுறையில் கர்த்தரின் அன்பு காட்டப்படுகிறது. பிறகு அவர் விருப்பம் போல் நடக்கும் விசுவாசமுள்ள மிச்சமுள்ள கர்த்தரின் ஜனங்களோடு சேர்ந்து கொள்ளத் தீர்மானிக்கப்படுகிறது.
     மீகா கி.மு  742 -687ம் காலத்தில் யூதாவின் தீர்க்கதரிசியாக ஊழியம் செய்தான்.

3.       இந்தப் புஸ்தகத்தின் உயர்ந்த நோக்கம்.

a)   காலத்தின் நிலைமை :  ஆகாஸ் இராஜா ஆலயத்தில் அந்நிய விக்கிரகங்களை உண்டாக்கி கடைசியாக ஆலயத்தில் கதவுகளில் ஆணியடித்து மூடிப்போட்டான். நான்கு வித்தியாசமான தேசங்கள் யூதாவுக்குத் தொந்தரவு கொடுத்தன. எசேக்கியா இராஜாவான பிற்பாடு தேசம் பொருளாதார பலம், விடுதலைக்கு மெதுவான வழி ஆரம்பிக்கப்பட்டது. எசேக்கியாவுக்கு அதிகமாக மீகாவின் ஆலோசனை வாய்ப்பு தேவைப்பட்டது.
b)   பிரதான செய்தி :  வட இராஜ்யமான இஸ்ரவேல், தென் இராஜ்யமான யூதா இரண்டின் அழிவைப்பற்றி முன் தரிசனம். இது ஜனங்களின் மேல் ஏற்படுத்தின கர்த்தரின் ஒழுங்கு, உண்மையாக அவர்களுக்காக எவ்வளவு அதிகமாகக் கவலைப்படுகிறார் என்பதைக் காட்டுகிறது. எசேக்கியாவின் நல்ல அரசாட்சி யூதாவின் தண்டனையைத் தள்ளிப்போட உதவி செய்தது. 
c)   செய்தியின் முக்கியத்துவம்:  கர்த்தரை விட்டு விலகி வாழும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பது பாவத்தைப் பொறுப்பெடுக்க உண்டாக்குகிறது.  பாவம் நியாயத்தீர்ப்புக்கும், மரணத்திற்கும் வழி காட்டும்.  கர்த்தர் ஒருவரே நித்திய சமாதான வழியை நமக்குக் காட்டுகிறார். அவருடைய ஒழுங்கு முறை அடிக்கடி சரியான வழியைக் காப்பாற்றும்.
d)   ஒரே சமகாலத்தின் தீர்க்கதரிசிகள்: அவர்கள்
 i) ஓசியா (753-715)
 ii) ஏசாயா (740 – 681)

4.   மீகாவின் முன்தரிசனத்தில் அநீதி அடங்கியிருந்தது. அவன் ஜனங்களை அநேக விதங்களில் அநீதியான முறையில் குற்றம் சுமத்தினான்.


a)   பொல்லாப்பைத் திட்டம் தீட்டுதல் 2:1
b)   வஞ்சனை, பேராசை, கொடுமை. 2:2
c)   திருடுதல், பொய் பேசுதல். 2:8
d)   விதவைகளை அவர்கள் வீடுகளிலிருந்து விரட்டுதல். 2:9
e)   நன்மையை வெறுத்தல், தீமையை விரும்புதல்.  3:1,2
f)   நியாயத்தை அருவருத்தல், செம்மையானவைகளை கோணலாக்குதல்.  3:9
g)   கொலை.  3:10
h)   பரிதானம் வாங்குதல்.  3:11

5.  மிகுந்த விவாதத்திற்குரியவைகளைப் புரிந்து கொள்ளுதல்.


விவாதங்கள்
விளக்கவுரைகள்
a)   நெறிதவறிய நம்பிக்கை
கர்த்தர் இஸ்ரவேல், யூதாவிலுள்ள தீர்க்கதரிசிகள், பொய்யான உண்மையில்லாத தலைவர்கள், தன்னலமுள்ள போதகர்கள் இவர்களை நியாயந்தீர்ப்பார். அவர்கள் பொதுவாக மத சம்பந்தமான விசேஷங்களை நடத்தும்போது, எந்த மதம் நெறி தவறிய நம்பிக்கையுடையது என்பதை ஒன்றுமில்லாத விளம்பரத்தின் மூலம் தன்னலமுள்ள எண்ணத்திலிருந்து செயல்படுகிறார்கள். உங்கள் சொந்த தன்னலமுள்ள விருப்பங்களை கர்த்தரின் உண்மையான நம்பிக்கையோடு இணைக்காதீர்கள்.
b)   கொடுமை
மீகா, மற்றவர்களைக் கொடுமைப்படுத்தும் எல்லா தேசங்களுக்கும், தலைவர்களுக்கும் அழிவு உண்டு என்று தீர்க்கதரிசனம் சொன்னான். உயர்ந்த ஜாதிகளைக் கொடுமைப்படுத்தி, ஏழை மக்களைச் சுரண்டினார்கள். ஆனாலும் ஒருவராவது அவர்களுக்கு எதிராகப் பேசவில்லை, அல்லது அவர்களைத் தடுத்து நிறுத்த எதுவும் செய்யவில்லை. இப்படிப்பட்ட அநியாயத்தைக் கர்த்தர். ஏற்றுக்கொள்வதில்லை. நாம் தேவைப்பட்டவர்களுக்கு உதவி செய்யவில்லையென்றால் நமக்கு உதவி செய்ய கர்த்தரிடம் கேட்கத் துணிவு கொள்ளாதே.
c)   மேசியா – சமாதானத்தின் இராஜா
கர்த்தர் அவருடைய ஜனங்களுக்கு பலத்தையும், சமாதானத்தையும் கொடுக்கக்கூடிய ஒரு இராஜாவை ஏற்பாடு செய்ய வாக்குத்தத்தம் பண்ணினார். கிறிஸ்து பிறப்பதற்கு நூறு வருஷங்களுக்கு முன்பே, கர்த்தர் நித்திய ஜீவனுள்ள இராஜா பெத்லகேமில் பிறப்பார் என்று வாக்குத்தத்தம் பண்ணினார்.  இது தன் ஜனங்கள் மேசியாவின் மூலம் காப்பாற்றப்பட கர்த்தரின் பெரிய திட்டமாயிருந்தது.
d)   கர்த்தரைப் பிரியப்படுத்துதல்
கர்த்தருக்குப் பிரியமான தியாகங்களைச் செய்தல். கர்த்தரின் மேல் உண்மையான நம்பிக்கை, இவற்றில் அன்பு, இரக்கம், நியாயம் பணிவு இவைகளை உண்டாக்கும்.

6.  வேதாகமக் குறிப்புகள்.
a)    வேதாகமம், NIV ஆராயும் வேதாகமம், pp. (1566-1579)
b)   ஏ.ஆர். பக்லன்ட். (யூனிவர்சல் வேதாகம அகராதி,  p. 316
c)   The IDB, Vol. K-Q, pp. 369-371.
d)   Baker Encyclopedia of the Bible (vol. 2) pp. 1451 – 1453.

7.  விவாதத்திற்குரிய கேள்விகள்.
7.1      அவன் எங்கிருந்து வந்தான்?
7.2      எருசலேமை முற்றுகையிட்டது எந்தநாடு? ( ஏசா: 36:32)
7.3      என்ன விதமான அநியாயம் நிறைவேற்றப்பட்டது?
7.4      முக்கியமான செய்தி என்ன?
7.5      அவனுடைய காலத்தில் இருந்த தீர்க்கதரிசிகள் யார்?

மொழிபெயர்ப்பு
திருமதி நாயகம் பட்டு
பரி.யாக்கோபின் ஆலயம், செந்தூல்


     


No comments:

Post a Comment