உடைக்கப்பட்ட அலங்கங்களையும், ஜனங்களின்
வாழ்வையும் கட்டின இராஜப்பிரதிநிதி.
சுருக்கமான குறிப்புகள்
v
நெகேமியா
பெர்சிய இராஜாவாகிய அர்தசஸ்டாவுக்குப் பானபாத்திரக்காரன்.
v
அவனுடைய
ஜனங்கள், தேசம் இவைகளின் மேல் உள்ள அன்பு தேவையான சமயத்தில் உதவி செய்ய
ஏவினது.
v
கி.மு. 445ல். இராஜப்பிரதிநிதியாக
நியமிக்கப்பட்டு நாசமான அலங்கத்தைத் திரும்பக் கட்ட உதவி செய்தான்.
v
எஸ்றாவின்
வருகைக்கு ஜனங்களுக்கு வழி வகுத்தான்.
1. அறிமுகவுரை
நாம்
பெரிய வெற்றியை வாக்குத்தம்பண்ணின மிக உத்தமமான புத்தகங்கள் விற்கப்படும் காலத்தில்
வாழ்கிறோம். நெகேமியாவின்
கதை சிறந்த விற்பனையாயிருக்கிறது. அவன் கர்த்தருடைய
வார்த்தையின் மனிதன் மட்டும் அல்ல. ஆனால் செய்கையின்
மனிதனாகவும் இருந்தான். ஜெப மனிதனாக இருந்ததால் கர்த்தரோடு பயணம் செய்தபோது அவனுடைய
உண்மையான நினைவுகளையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டான். அவன் வாழ்க்கையின் மூலம், கர்த்தர்
எருசலேமின் அலங்கத்தைத் திரும்பக் கட்டினது மாத்திரமல்ல, அவருடைய
வழிகளை ஜனங்களுக்குப் போதித்தார். ( விவரம், ஒவ்வெரு நாளும் இயேசுவோடு, வாசிக்க. ஜூலை – ஆகஸ்டு 2007 வெளியீடு.)
1. நெகேமியா எந்தக் காலத்திலும் நமது வாழ்க்கைக்காக நமக்கு ஆவியின் கொள்கைகளைக்
கொடுத்தான். அவன் இராஜாவுக்கு
ஒரு பானபாத்திரக்காரனாக பெரிய முக்கியமான பொறுப்பில் இருந்தான். ஏனென்றால்
அவன்தான் திராட்சரசம் விஷம் கலக்காமல் இருக்கவும், எப்போதும்
இராஜாவின் சமூகத்தில் இருக்கவும் தன்னை ஒப்புக்கொடுத்தான். அவன் ஒரு
பாதுகாவல் அதிகாரி.
2. நெகேமியாவுக்கு ஆவியின் வீழ்ச்சியைப்பற்றியும், எருசலேமின்
பொதுவான அக்கறையின்மை பற்றியும் அறிவிக்கப்பட்டது. ( 1: 1-2) கர்த்தரின் நகரம் பரிதாபகரமான நிலையில் உள்ளது. அவன் அவரின்
பரிசுத்த நகரத்திற்காக உள்ள கர்த்தரின் நோக்கத்தை நிறைவேற்ற விரும்பினான். நெகேமியா முதலாவதாகக் கர்த்தரை வைத்தான். தனது பதவியை அல்ல. அவன் உட்கார்ந்து அழுதான். அவன் ஒப்புக்கொண்டான். (1: 4)
3. எருசலேமின் நாசமான நிலையினால் அவன் முதலாவது அவன் உணர்வினால்
அழுதான். பிறகு தான்
அதின் மீட்புப் பணியைச் செயல்படுத்த ஆயத்தமானான். பாதுகாப்பு,
பெருமை, நன்மை இவைகளுக்கு அலங்கங்கள் மிகவும் முக்கியமானது.
4. அவன் உபவாசமிருந்து ஜெபம் பண்ணினான். அவன் கர்த்தரின்
வார்த்தையினால் மட்டும் வாழவில்லை. ஆனால் கர்த்தரின்
வழிகாட்டுதலைச் சார்ந்திருந்தான். மரியாதையான
நடத்தை, கீழ்ப்படிதல் அவனுடையது. (1: 4) அவன் ஜெபத்தில் உறுதியாயிருந்தான். (1: 8 -11) கர்த்தர் நம்பிக்கையான, முக்கியமான
மனிதனை உபயோகித்தார். வித்தியாசத்தைக்
காட்டினது ஜெபத்தில் உறுதி. ஆனாலும் நெகேமியா காத்திருக்கும் சோதனையைப் பின்பற்றினான். அவன் அழுதான், கவலைப்பட்டான், ஜெபித்தான். தொடக்கம்
நெகேமியாவின் கையில் இல்லை. அது கர்த்தரின் கையில் இருக்கிறது. கர்த்தரின் நேரம் எப்போதும் பூரணமானது. சரியான நேரத்தில் பகுத்துணர்ந்துகொள்.
5. யோசேப்பில் இருந்தபடி, கர்த்தரின்
கிருபையின் கரம் அவன் மேல் இருந்ததால்,
இராஜா நெகேமியாவின் வேண்டுதல்களை அனுமதித்தார். (2: 8) நெகேமியா எருசலேமுக்குப் பிரயாணம் செய்ய ஏற்பாடுபண்ணி, இராஜாவால்
அனுப்பப்படுகிறோம் என்று அறிந்து மிகவும் இருதயத்தின் நிறைவோடு இருந்தான். பாதுகாப்பான பிரயாணம் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அவனுடைய எல்லா தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டது. அனுப்பப்படுதல், பாதுகாப்பு, பூர்த்தி
செய்தல் இந்த மூன்று காரியங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு தேவைக்காகக் கொடுக்கப்பட்டது
அடையாளமாயிருக்கிறது. என்றாலும்
நெகேமியா, சமாரியாவின் தேசாதிபதி சன்பல்லாத், தொபியா
என்னும் ஊழியக்காரனாலும் அநேக எதிர்ப்புகளை எதிர்கொண்டான். கிறிஸ்தவ சரித்திரத்தைப் படிப்பதிலிருந்து எப்போதாவது யாராவது
ஒருவர் கட்ட ஆரம்பிக்கும்போது எதிர்ப்புகள் ஏற்படும் என்பதைக் கற்றுக்கொள்ளலாம்.
6. மற்றவர்கள் தூங்கும்போது நெகேமியா வேலை செய்தான். மேலும், எருசலேமுக்காக தேவன் தன் மனதிலே வைத்த திட்டத்தை அவன் ஒருவருக்கும்
சொல்லவில்லை. (2: 12) காரியங்களை
முழுவதுமாக தகுந்த தைரியமாகக் கவனித்துக்கொள்ளவும், என்ன செய்ய
வேண்டும் என்பதைப் பகுத்தறியவும், பிறகு வேலை செய்ய எழும்பவும், தேவனின்
உயர்ந்த இயக்கம் நெகேமியாவைப் போன்ற ஒருவரிடம் ஆரம்பமானது.
7. நெகேமியா அலங்கத்தைக் கட்ட ஜனங்களை அழைத்தான். நாம் ”இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு, எருசலேமின்
அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள்.” (2
: 17) நமது சொந்த வாழ்க்கையிலும் சில அலங்கங்கள் இருக்கலாம். அவைகள் திரும்பக் கட்டப்பட தேவை உள்ளது. காத்துக்கொண்டிராமல் திரும்பக்கட்ட ஆரம்பிப்பது நல்லது. இன்னும் அவன் அநேக சவால்களின் மத்தியிலும் எங்கள் காரியத்தைக்
கைகூடி வரப்பண்ணுவோமே தவிர விட்டு விலகமாட்டோம் என்று சொன்னான். (2 : 20) சன்பல்லாத்,
தொபியா, அரபியனான கேஷேம் இவர்கள் அவனை எதிர்த்தார்கள். நெகேமியாவைப் போல், சாத்தானையும்
அவன் வேலைகளையும் எதிர்த்துப் போராடக்கூடிய ஆண்களும், பெண்களும்
நமக்குத் தேவை. நெகேமியாவின்
நம்பிக்கை அர்தசஷ்டா இராஜாமேல் இல்லை. தேவன் மேல்
இருந்தது.
8. தேவன் (இம்மானுவேல்)
நம்மோடிருந்தாலும், முதலாவது
ஒழுங்கான தலைமைத்துவம் இணைந்திருப்பதுதான் ஒற்றுமை என்று நிர்வாக நிபுணர்கள் கூறுகிறார்கள். (3 : 1 – 2) இது ஜனங்கள் ஒன்று சேர்ந்து, எவர்கள்
செயல்பாடுகளும் ஒன்றிணைந்து இருந்தால்,
வெற்றிகரமாக முழுமை பெற ஒத்துழைக்க சம்பந்தப்பட்டிருக்கும். அங்கே இணைந்து செயல்படவில்லையென்றால், அங்கே ஒன்றுபடுதல்
இராது, அல்லது தனிப்பட்ட விருத்தி, வளர்ச்சி
இராது. அவர் வித்தியாசமான
வரம் பெற்ற பலவிதமான ஜனங்களைத் திரட்ட முடியும். (3 : 3 – 4) இந்த வரங்களைப் பயன்படுத்தி குறைவான சோர்வோடு நிறைவான திறமைகளை
அடைய முடியும். இங்கே முக்கியமானது
குழுவாக ஒத்துழைப்பது. (3 : 7) நாம் கிறிஸ்துவைச்
சேர்ந்தவர்களாயிருந்தால், பிறகு அவருடைய இராஜ்யத்தைக் கட்டுவதற்கு எல்லா தனிப்பட்ட
எண்ணங்களும், அக்கறைகளும் இரண்டாவது நிலைக்குப் போய்விடும்.
9. நெகேமியா எல்லா நிலைமையிலும் வாழும் ஆண்கள், பெண்கள்
ஒன்று சேர்ந்து எருசலேமிலுள்ள அலங்கங்களைக் கட்ட ஒத்துழைக்க திறமைசாலியாயிருந்தான். (3 : 8 –
12) அரசியல் அதிகாரிகள் மேற்பார்வையாளர்களாக வேலை செய்ய வற்புறுத்தலாம். ஆனால் அதற்குப்
பதிலாக மற்றவர்களோடு சேர்ந்து தோளுக்குத் தோளாக இணைந்து வேலை செய்தார்கள். இது தலைமைத்துவத்துக்கு உதாரணம்.
10. நெகேமியா எல்லாரையும் மெச்சி, புகழ்ந்து
சிபாரிசு செய்தான். (3 : 13 –
14) நெகேமியாவின் கண்களில் ஒவ்வொருவரும் திறமையற்றவர்களாகவும், சுயநலமுள்ளவர்களாகவும்
இல்லாமல் ஒரே மதிப்புள்ளவர்களாகக் காணப்பட்டார்கள். நெகேமியாவுக்கு அவன் எல்லா வேலைக்காரர்களும் பெயரால் தெரியும். (3 : 14) மார்க் டுவெய்ன், அவர் மாதம்
முழுவதும் புகழுரையினால் வாழ முடியும் என்று கருத்துரைத்தார். பொதுவாக நாம் புகழ்வதைவிட அதிகமாக குறைகூறத்தான் ஆயத்தமாயிருக்கிறோம்
என்பது எவ்வளவு மனவருத்தம்.
11. நெகேமியாவின் அடுத்த பொறுப்பு வீடு. – அதற்காக
அவர்கள் நகரத்தையும் அலங்கங்களையும் கட்டினதுபோல் குடும்ப நெருக்கத்தையும், சொந்தத்தையும்
ஆழமான கருத்துள்ளவர்களாயிருந்தார்கள் நாம் நமது வீடுகளை ஜெபம், நேர்மை, நம்பிக்கை, திறந்த
மனம் இன்னும் பலவகைகளினால் உள்ள அலங்கங்களோடு நமது வீடுகள் கட்டப்படுவது தேவை. ( 3 : 28)
12. முக்கியமான ஒழுங்கு முறை தொடர்பு கொள்ளுதல். இது அதிகாரத்திலுள்ள பிரதிநிதிக்குழு உத்தரவு சம்பந்தப்பட்டது. ஆனதால் அந்த முடிவு தலைமையிடம் உண்மையாக ஆலோசிக்க வேண்டிய
தேவையில்லை. ( 3 : 32) ஒரு கடினமான வேலை துண்டு துண்டாய்க் கையாளப்பட்டால் முக்கிய
நிர்வாகமாக மாறுபடும். சுருக்கமாக
அந்த நான்கு கொள்கைகள் இணைதல், கூட்டுறவு,
சிபாரிசு செய்தல், தொடர்பு
கொள்ளுதல்.
13. நெகேமியா ஒரு ஜெபம் செய்யும் மனிதன். ( 4: 5) அவன் குறை கூறலை எதிர்கொள்ளும்போது ஜெபத்தில் கர்த்தரிடம்
தன் இருதயத்தின் கவலையை ஊற்றினான். அவனை எதிர்த்தவர்களுக்கு
விரோதமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதற்குப் பதிலாக தவறைத் திருத்துவதற்குக் கர்த்தரை
வரவழைத்தான். ஆம். மற்றவர்களுக்காக ஜெபம் செய்வதற்கு ஒருவர் ஆவியில் நிறைந்தவராக
இருக்கவேண்டும்.
14. ஜனங்கள் இருதயத்தின் நிறைவினால் வேலை செய்ய ஆவலாயிருந்தார்கள். ( 4 : 6) நெகேமியா கர்த்தரிடம் ஜெபம்பண்ணியது மட்டுமல்ல, பயத்தை
எதிர்கொள்ள இரவும், பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தான். ( 4 : 9) வேலையோடு நம்பிக்கை இணைய வேண்டும். பயத்தை நம்பிக்கையினால் மட்டும்தான் எதிர்கொள்ள முடியும். ஒருவர்
மேல் உள்ள நம்பிக்கை அல்ல. ஆனால் கர்த்தரின்
மேல் உள்ள நம்பிக்கை. அவன் யுத்தம்
செய்ய ஆயுதம் தரித்தான். அவனுடைய
மூன்று கூர்மையான எதிர்ப்பு, ஜெபம், விழிப்புள்ள ஜாமங்காக்கிரவர்கள், தொடர்ந்து
தேவனைப் பார்க்கும் பொறுப்பு. கட்டடம் கட்ட பொருட்களைக் கொண்டு வந்தவர்கள் ஒரு கையினாலே
வேலை செய்து, மறுகையினாலே ஆயுதம் பிடித்திருந்தார்கள். ( 4: 17) நாம் யுத்தம் செய்வது தேவையானது. ஆனால் கட்டுவதற்குத் தைரியம் வேண்டும்.
15. நெகேமியா ஜனங்களோடு சேர்ந்து வேலை செய்தான். ( 4: 21) அவன் ஜனங்களில்
ஒருவனாக இருந்தான். டெரக் கிட்னர்
நெகேமியாவைப் பற்றி அவர் விளக்கத்தில் கூறியிருப்பது, அவன் ஒரு
தற்பெருமைக்காரனல்ல. ஆனால் அவன்
பங்களிப்பு மிகுந்த பயனுடையதாக அமைய அவனுடைய விசேஷமான திறமைகளை உபயோகித்தான். கஷ்டமான நிலைமைகள் எழும்பும்போது குறிக்கோளோடும், நம்பிக்கையோடும்
எதிர்கொண்டான். அவன் அவனுடைய
ஜனங்களின் தேவைகளுக்காக உணர்ச்சி உள்ளவனாயிருந்தான். நாம் சிதைந்த பாதையில் இருக்கக்கூடாது. சிதைந்த பாதைக்கும், பிரேதக்
குழிக்கும் இடையில் உள்ள ஒரே வித்தியாசம் அதன் ஆழம்தான்.
16. நெகேமியா எப்படி பிரச்சனையை நிவிர்த்தி செய்தான்? (5 : 1) முதலாவது ஒப்புக்கொண்டான். (5: 6) பிறகு அவன் ஆலோசனைபண்ணி சந்தர்ப்பத்தை மதிப்பிட்டான். (5 : 7) பிறகு அவன் சரியான தந்திரத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. நாம் சந்தர்ப்பத்திற்கேற்றபடி
சிறந்த வழியைக் கடைப்பிடிக்க கவனமாகவும்,
ஜெபத்தோடும் சிந்திக்க வேண்டும். நாம் எது
சரி, எப்படி செய்வது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் நமது தேவனுக்குப் பயந்து நடக்க வேண்டும்.( 5: 9) நெகேமியா தன் சொந்த உதாரணத்தின் மூலம் அவனுடைய முன்மாதிரியான
வாழ்க்கையை ஜனங்கள் ஏற்றுக்கொள்ள அவர்களைச் சம்மதிக்க வைத்தான். ( 5: 13) அதிபதிகள் ஜனங்களிடம் அவர்களுடைய நிலங்களையும், சொத்துக்களையும்
திரும்பக் கொடுத்துவிடவும், அவர்களிடமிருந்து இனிமேல் உயர்ந்த வட்டியை எதிர்பார்க்க மாட்டோம்
என்று வாக்குத்தத்தம் பண்ணினார்கள். அவனுடைய
சொந்த உதாரணம் மிகுந்த உதவியாய் இருந்தது. ( 5: 15) ஒருவருக்குத் தேவை தேவபயம். ஒருவர் வெற்றி பெற வேண்டுமானால் தவறுக்கு `இல்லை’ என்றும்
சரியானவற்றிற்கு `ஆம்’ என்றும் சொல்லத் தேவை. மற்றொரு முக்கியமான கருத்து தனிப்பட்ட சிந்தனையுள்ள மனம்
தோன்றியிருக்கிறது. (6 : 3) அவன் `நான் பெரிய வேலையைச் செய்கிறேன். நான் ஏன்
அதை விட்டு உங்களிடம் வந்து, உங்களைச்சந்திக்க வேண்டும்’ என்று சொன்னான். (6:3)
17 நெகேமியா எப்படி அவனுடைய போராட்டத்தை சமாளித்தான்? (6:9) அவன் ஜெபம் செய்தான். நாம் தேவனின்
மேல் நம்பிக்கை கொள்ளத் தேவையாய் இருக்கிறது. நெகேமியா
செமாயாவைச் சந்தித்த போது ஜெபத்தில் கர்த்தரிடம் திரும்பினான். 52 நாட்களுக்குள்ளே அலங்கங்கள் கட்டி முடிக்கப்பட்டது. (6 : 14) அவன் பெரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேர்ந்தாலும் அவன் வெற்றி
பெற்றான். ஒரு மனிதன்
அவன் நெருக்கடியில் இருக்கும்போது அவனுடைய அளவான குணம் வெளியரங்கமாகும்.
18. முதல் ஆறு அத்தியாயங்கள் எருசலேமின் அலங்கங்கள் கட்டப்படுவதைப்பற்றி
சம்பந்தப்பட்டது. அடுத்த ஏழு அத்தியாயங்கள் ஜனங்களின் மறு ஆலோசனையின் மேல்
கருத்து சொல்லப்பட்டிருக்கிறது. அவன் முக்கியமான
பொறுப்புகளை யாரிடம் ஒப்படைக்க முடியுமோ அப்படிப்பட்ட தகுதியான மனிதர்களைத் தேர்ந்தெடுத்தான். ( 7 : 1 – 3) அத்தியாயங்கள்
8லிருந்து 13வரை சமாதானம்
அளிக்கும் வேலையாயிருந்தது. ஜனங்களில்
போதகர்களின் வம்சாவளியின் புனிதத்தைத் தீர்மானிக்க முதலாவது ஜனக்கணக்கு எடுக்கப்பட்டது.
19. கற்பித்தலிலும் போதிப்பதிலும் புனிதத்தன்மை இருக்கவேண்டும். ( 7 : 64)
20. அங்கே நம்பிக்கை இல்லையென்றால் தியாகம் தேவை. ( 7 : 70 ) அலங்கம்
திரும்பக் கட்டப்பட்டு குடும்பங்களும் பதிவு செய்யப்பட்ட பிறகு நெகேமியா கொஞ்ச காலத்திற்குப்
பின்னால் மறைந்திருந்தான். எஸ்றா, லேவியர்கள் இவர்களால் மீதி நாளில் உபவாசம்பண்ணவும், ஒன்றும்
தயாரிக்காதவர்களுக்கு அவர்களுடைய உணவைப் பங்கிட்டுக் கொடுக்கவும், நேரத்தைச்
செலவழிக்கவும் உற்சாகப்படுத்தப்பட்டார்கள். ( 8 : 10) பிறகு
நெகேமியா தேவனின் மகிழ்ச்சி அவர்களுடைய பலம் என்று ஜனங்களுக்கு ஞாபகப்படுத்தினான்.
21. நெகேமியா அவன் பொறுப்பை நிரூபித்தான். (10 : 1) நெகேமியாவும்
எஸ்றாவும் தேவன் உள்ள கூடாரம் (உடன்படிக்கையின் படி) கூடாரத்தினுள்
நுழைவதின் மூலம் ஆவியின் லாபத்தைப் பாதுகாக்கலாம் என்று தீர்மானித்தார்கள். நெகேமியா
மற்றவர்கள் வாழ்க்கை குற்றத்திற்காக வருந்துதல் பொறுப்பைப் புதுப்பிக்க வழி வகுத்தது. (உதா: நெகேமியா 10:8) கீழ்ப்படியாமை ஜனங்களின் மேல் தண்டனையைக் கொண்டுவந்தது. நெகேமியா
நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளைக் கடைப்பிடித்தான். ( 10 : 29) நெகேமியாவின் புஸ்தகம் ஆராதனையின் முக்கியத்துவத்தைக் கோடிட்டு
காட்டியிருக்கிறது. ( 10 : 39)
22. நெகேமியா நகரத்தாரின் புதுப்பித்தலை அறிமுகப்படுத்தினான். ( 11 : 1 – 19)
நெகேமியா எந்தக் குடும்பத்தார்
புது குடியிருப்பில் வசிக்கமுடியும் என்பதைக் கணக்கெடுத்தான். எருசலேம் நகரம் வேதாகமக் கொள்கைப்படி ஸ்தாபிக்கப்பட்டது. நெகேமியா போதக,
லேவிய முறைப்படி உள்ள குடும்பங்களின் சரித்திரத்தை விளக்கப்படுத்தினான். ஜனங்களும்,
தலைவர்களும் மறக்கப்படவில்லை. ( 12 : 1) நெகேமியா ஸ்தோத்திர ஆராதனைக்கு ஒழுங்குபண்ணினான். ( 12 : 43) உற்சாகமும், பக்தியும்
ஆராதனையின் பங்காயிருந்தது.
23. நெகேமியா பொதுவாக எருசலேமில் 12 வருடங்கள் (கி.மு. 457 – 445) தேசாதிபதியாக
இருந்தான். பிறகு பெர்சியா
ராஜசபைக்குத் திரும்பினான். அவன் திரும்பி வரும்பொழுது ஆலயம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. ( 13 : 14) வழி விலகிப்போன உயர்ந்த போதகர் எலியாசிப் ஒரு காரணமாயிருந்தார். நெகேமியா
பிரபுக்களிடம் சவால் விட்டு நிலைமையைச் சீர்திருத்தம் செய்ய முயற்சி செய்தான். ( 13 : 21) நமது
காலத்தில் நல் நடத்தையின் வீழ்ச்சியைப்பற்றி எப்படி அறிமுகப்படுத்துவோம்? அவனுடைய
கடைசி சீர்திருத்தம் கலப்பு திருமணங்கள் சம்பந்தப்பட்டது. ( 13 : 31) ஒரு கிறிஸ்தவர் ஒரு கிறிஸ்தவரல்லாதவரைத் திருமணம் செய்வதை
ஒப்பிட்டுப் பார்.
24. அவன் ஒரு ஜெப மனிதன். ( நெகே. 2 : 4)
2. அவன் பலமும் நிறைவேற்றுதலும்.
a. அவன் குணம், உறுதி, ஜெபம் கொண்ட மனிதனாயிருந்தான்.
b. அவன் புத்திகூர்மையுள்ள திட்டமிடுபவர்,
ஏற்பாட்டாளர், இயக்குநர்.
c. அவன் தலைமைத்துவத்தின் கீழ் எருசலேமைச் சுற்றியுள்ள அலங்கம் 52 நாட்களில் திரும்பக் கட்டி முடிக்கப்பட்டது.
d. அரசியல் தலைவராக அவன் தேசத்தை மத சம்பந்தமான சீர்திருத்தத்திலும், ஆவியின் எழுச்சியிலும் வழிநடத்தினான்.
e. அவன் எதிர்ப்பு சமயங்களிலும் அமைதியாக இருந்தான்.
f. அவர்கள் பாவம் செய்யும்போது, அவன்
ஜனங்களிடம் நேரிடையாக உண்மையாயிருக்க தகுதி பெற்றவனாயிருந்தான்.
3. அவன் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்.
a. எந்தத் துணிகரமான செயலுக்கும் முதல் படி ஜெபம்பண்ணுவது.
b. தேவனின் வழியைப் பின்பற்றும் ஜனங்கள் செய்ய முடியாத கடமைகளையும் நிறைவேற்ற முடியும்.
c. தேவனுக்காக உண்மையான சேவை செய்வதில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று அவரோடு பேசுவது,
அடுத்தது அவரோடு நடப்பது.
4. வேதாகமக் குறிப்புகள்:
நெகேமியாவின்
கதை நெகேமியா புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
5. விவாதத்திற்குரிய கேள்விகள்.
a. எருசலேமின் பயங்கரமான தேவையைப் பார்க்கும்போது அவன் எப்படி எதிர்கொண்டான்?
b. இடிந்துபோன அலங்கங்களை அவன் எப்படி திரும்பக் கட்டினான்?
c. யார் அவனை எருசலேமின் தேசாதிபதியாக நியமித்தார்?
d. எருசலேமின் அலங்கங்களைக் கட்டும்போது அவன் எதிர்கொண்ட எதிர்ப்புகளை விளக்கப்படுத்து.
e. நெகேமியாவிடமிருந்து நாம் கற்கும் பாடம் என்ன?
மொழிபெயர்ப்பு:
திருமதி நாயகம் பட்டு,
பரி.யாக்கோபின் ஆலயம்.
No comments:
Post a Comment