Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Tuesday, March 30, 2010

இறையியலின் அஸ்திபாரம்

http://www.ziddu.com/download/9234785/FOUNDATIONOFTHEOLOGY.docx.html

http://www.ziddu.com/download/9234786/FOUNDATIONOFTHEOLOGYTamil.pdf.html



விசுவாசமும் வெளிப்படுத்துதலும் கிறிஸ்தவ இறையியலின் அஸ்திபாரங்கள். பிதாவே என்ற இயேசு கிறிஸ்துவின் அனுபவத்தோடு, தங்கள் தேவனையும் இரட்சிப்பையும் அவரில் கண்ட அவருடைய சீடர்களின் அனுபவத்தோடு தொடங்குகிறது. விசுவாசமும் வெளிப்பாடும் பிரித்தாள முடியாதபடி ஒன்றுக்கொன்று பிணைந்துள்ளன. அவை, ஒரே செயல்பாங்கின் இரண்டு முகங்கள். அவை இறையியலின் அஸ்திபாரங்கள்.



1. விசுவாசம்: விசுவாசத்தின் குணம் உலகளாவிய மனிதனின் தன்மையாயிருக்கிறது. அதில் ஒருவன் இருக்கமாகப் பற்றிக் கொண்டு தனது சொந்த வாழ்க்கைக்கும் நடவடிக்கைக்கும் வழிகாட்டியாகவும் உந்துதலாகவும் அமைத்துக் கொள்கிறான். ‘நம்பிக்கை’ என்றழைக்கப்படுகிற அந்தக் காரியத்தில் தனது மொத்த ஈடுபாட்டையும் செலுத்துகிறான். பவுல் திலிச் என்பவர் விசுவாசத்தின் வலிமை (1958) என்ற தனது புத்தகத்தில், தனது ‘ஒட்டுமொத்த கவனம்’ அல்லது ஒட்டுமொத்த கவனத்திற்கு வழிநடத்தும் காரியம் என்று குறிப்பிட்டுள்ளார்.



ஆபிரகாம் ‘விசுவாசத்தின் தந்தை’ ‘விசுவாசிக்கின்ற அனைவரின் தந்தை’ (ரோமர் 4.3) என்றழைக்கப்பட்டான். விசுவாசத்தின் நிமித்தம் ஆபிகரகாம் கீழ்ப்படிந்து தான் சுதந்திரமாகப் பெறப்போகும், அறியப்படாத ஓர் இடத்திற்குச் சென்றான். (எபி.11.8, ஆதி.12.1-4).



கிறிஸ்தவ விசுவாசத்திற்கு அதற்கேயுரிய பிரத்யேகமான சிறப்பம்சம் உள்ளது. அது கிறிஸ்துவுக்குள் உண்டான விசுவாசம். அவரில் தேவன் முழுமையாகவும் தெள்ளந் தெளிவாகவும் பேசியிருக்கிறார். இயேசுவின் மூலம் தேவன் தம்மை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், மனிதனும் அவனின் தன்மையும் யாதென்று தெளிவுபடுத்தியிருக்கிறார். இயேசு கிறிஸ்து ‘அவதாரம் எடுத்த தேவனின் வார்த்தை’ என்று கிறிஸ்தவம் விசுவாசிக்கிறது.



கிறிஸ்தவ விசுவாசம் என்பது, இயேசு கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்டது போல ஒரு மனிதன் தேவனுக்கு ஒட்டுமொத்தமாகத் துலங்கி முழுமையாகச் செயல்படுவது என்பதாகும். விசுவாசம் என்பது சித்தாந்தங்கள். அதில் அறிவிப்பூர்வமான மற்றும் மாறுபடா எண்ணம்-செயல்-நம்பிக்கை அளவுகளும் பொதுக் கருத்துகளைச் சார்ந்த விசுவாசப் பொருளும் அடங்கியிருக்கிறது. விசுவாசம் தேவனுக்கும் மனிதனுக்கும் உள்ள தனிப்பட்ட உறவு. இரண்டாவது, விசுவாச அடக்கத்திலும் புரிந்து கொள்ளுதலிலும் செயல்படுத்துவதிலும் காலம் – - வரலாறு - கலாச்சாரம் – வடிவம் ஆகியவற்றில் வேறுபாடுகள் உருவாகும். மூன்றாவதாக, விசுவாசம் என்பது விசுவாசம் – விசுவாசமின்மை மற்றும் நம்பிக்கை – நம்பிக்கையின்மை ஆகிய இரண்டிற்கும் இடையிலான அபாயகரமான பயணம் ஆகும். நான்காவதாக, விசுவாசம் என்பது ஒருவரின் தனிப்பட்ட உறவு அல்லது ஈடுபாடு என்றால், வம்சாவளி விசுவாசம் உண்மை நிறைந்த விசுவாசமாக மாற வேண்டும். பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடமும் சமுதாயத்திடமும் இருந்து விசுவாசத்தைப் பெறுகின்றனர். அது படிப்படியாக தங்கள் சொந்த விசுவாசமாக மாறவேண்டும். ஐரோப்பா மற்றும் பிற தேசங்களில் மக்கள் தங்கள் சொந்த விசுவாசத்தை இழந்தவர்களாக்க் காணப்படுவர்.



நமது கிறிஸ்தவ விசுவாசத்தை வாழ்க்கையிலும் செயலிலும் வாழ்வின் அச்சியிலும், வாழ்வின் நெறியிலும் வெளிப்படுத்த வேண்டும். தேவ அன்பு ஒருவரின் வாழ்வில் வெளிப்பட வேண்டும், வெறும் வார்த்தையில் மட்டும் அல்ல. சுதந்திரப்பூர்வமான இறையியல், மக்கள் அதன் செயல்பாட்டை அறிந்து கொள்ளாமலேயே மாற்றத்தையும் சீர்திருத்த்த்தையும் எதிர்பார்க்கிறது. ‘சத்தியத்தை அறிந்து கொள்ள சத்தியத்தைக் கடைபிடிக்க வேண்டும், இயேசுவை அறிந்து கொள்ள இயேசுவைப் பின்பற்ற வேண்டும்’ என்று ஜோன் சோப்ரினோ கூறிகிறார்.



விசுவாசத்தை தேவன் வெகுமதியாக வழங்குகிறார். யாரிடமும் அது வற்புறுத்தலாக திணிக்கப்படவில்லை. மனிதன் அதனை மனப்பூர்வமான தீர்மானமாக ஏற்றுக் கொள்ள வேண்டியவனாய் இருக்கிறான். தேவனின் வெகுமதியைப் பெற்றுக் கொள்ள மனிதனை யாரும் வற்புறுத்த வேண்டியதில்லை. விசுவாசத்தைக் குறித்த பகுத்தாய்வு தேவனின் சொந்த வெளிப்பாட்டைச் சுட்டிக் காட்டும்.



2. வெளிப்பாடு: விசுவாசமும் வெளிப்பாடும் தானாகத் தனித்திருந்தாலும் பிரித்தாள முடியாத அளவுக்கு ஐக்கியப்பட்டிருக்கின்றன. அவை ஒரே நிகழ்வின் இரு முகங்கள் ஆகும். ஒன்றை விட்டுவிட்டு மற்றொன்று தனியாக்க் காட்சியளிக்க முடியாது. தேவன் விசுவாசத்தின் பொருள் ஆவார். வெளிப்பாட்டின் மூலம் தேவன் நம்மோடு உறவாடுகிறார். அதேபோல் விசுவாசத்தின் மூலம் மனிதன் அந்த வெளிப்பாட்டிற்குத் துலங்குகிறான்.



வெளிப்பாட்டை நாம் பெற்று, கண்டுணர்ந்து, பற்றிக் கொண்டு அதற்குத் துலங்கவும் வேண்டும். தேவன் தமது நற்குணத்தினாலே தம்மை வெளிப்படுத்தி மனிதனுக்குத் தம்மைத் தாமே ஈந்தார். ஆபிரகாமை அழைப்பதின் மூலமும், இஸ்ரவேலர்களை எகிப்தில் இருந்து விடுவித்த்தன் மூலமும், மனிதர்களுக்கு ஓர் இரட்சகரை வாக்கருளினதன் மூலமும் தேவன் தம்மையும் தமது திட்டத்தையும் வெளிப்படுத்தினார். இயேசுவானவர் தமது அப்போஸ்தலர்களுக்கு இந்த வெளிப்பாட்டை சாட்சி கூறவும் அறிவிக்கவும் கட்டளையிட்டார். தேவனின் வெளிப்பாடு முழுக்க முழுக்க அவரின் மனப்பூர்வமான ஈவாகாகும். இயேசு கிறிஸ்துவே தேவனின் வெளிப்பாட்டின் பூரணமாகும். அதற்கு மேற்பட்ட வெளிப்பாடுகள் தேவைப்படவில்லை.



நம்முடைய இந்தப் பல இன சமுதாயத்தில் வரலாறு – கலாச்சாரம் – மார்க்கம் தொடர்பில் எப்படிப்பட்ட சவால்களை எதிர்நோக்குகிறோம். தேவன் கிறிஸ்துவில் வெளிப்பட்டது போல, மற்ற மார்க்கங்கள் சாட்சி பகர முடியுமா?



வெளிப்பாடு நமது கண்டுபிடிப்பு அல்ல, மாறாக தேவன் தம்மை வெளிப்படுத்திய செயல் ஆகும். கிறிஸ்தவ வெளிப்பாடு, இயேசு கிறிஸ்துவில் கண்டுகொள்ளப்பட்ட சொந்த அனுபவமாகும். அது வெறும் அறிவு சார்ந்த்து அல்ல.



எனவே, வெளிப்பாடு ஒரு நுணுக்கமான உண்மைப் பொருளும் தன்மைப் பொருளும் ஆகும். அதில் பல கூறுகள் அடங்கியுள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் நாம் முக்கியப்படுத்தி வெவ்வேறான வெளிப்பாட்டு தத்துவங்களை படைக்கின்றோம்.

a) ஒரு தரப்பு வெளிப்பாட்டை ஒரு சித்தாந்தமாக்க் கருதுகிறது.

b) இன்னொரு தரப்பு வெளிப்பாட்டை தேவனிடம் உள்ள தனிப்பட்ட அனுபவமாக வலியுறுத்துகிறது. அதில் எந்தவொறு அறிவுப்பூர்வமான கூறுகளும் கிடையாது. ஜீவிக்கின்ற மற்றும் ஜீவன் தருகிற தேவனோடு உள்ள வெளிப்பாடு மட்டும் ஆகும்.

c) மூன்றாவது தரப்பு வெளிப்பாட்டை ஓர் அனுபவமாகப் பார்க்கிறது.

d) நான்காவது தரப்பு வெளிப்பாட்டை ஒரு வரலாற்றுச் சம்பவமாகப் பார்க்கிறது. வெளிப்பாடு உலகில் எல்லாருக்காகவும் நடந்த ஒரு சம்பவம்.

No comments:

Post a Comment