Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Thursday, February 25, 2010

24. எஸ்தர்: பெரிஷாவின் மஹாராணி

 

 

 
கரு வசனம்: நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும்; அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள். நான் இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே; யாருக்குத் தெரியும், என்று சொல்லச் சொன்னார். எஸ்தர் 4:14

 

 

 
கதைச் சுருக்கம்

 
  •  பெர்சியாவில் நாடு துறைந்து பிறந்த யூத பெண்
  • அனாதையான அவளை, மொர்தேக்காய் என்ற மாமனாரிடம் (எஸ்தர் 2.7ல் சிறிய தகப்பன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது) வளர்ந்து வந்தார்.
  • மஹாராணியாக அவள் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.
  •  தனது உக்கத்தினாலும், ஞானத்தினாலும் தேவ உதவினாலும யூதர்களைக் காப்பாற்றினாள்.

 

 
1. முன்னுரை – அவள் வரலாறு

 
எஸ்தர் என்றால் நட்சத்திரம் என்று பொருள். தாங்கள் மதிக்கின்ற நபர்களின் பெயர்களை மாற்றுவது கிழக்கத்திய அரண்மனையின் வழக்கமாயிருந்த்து. (ஆதியாகம்ம் 41:45). அவ்வகையில் எஸ்தர் என்ற இப்பெயர் ராணியாராக உயர்த்தப்பட்டபோது இந்த யூதக் கன்னிகைக்கு வழங்கப்பட்டது. நாடு கடந்து பெர்சியாவில் பிறந்தாள். அபிஹெய்ல் என்பது அவள் தந்தையின் பெயர். சிறு வயதிலேயே தனது பெற்றோரை இழந்த நிலையில் அவளுடைய சிற்றப்பனாகிய மொர்டேக்காயின் ஆதரவில் வளர்ந்தாள். வஸ்தி ராணியார் மரித்த பிறகு, சௌந்தரியமான எல்லா கன்னிகைகளும் அஸாசுரஸ் ராஜா முன் நிறுத்தப்பட்ட போது, அவர் எஸ்தரை சிங்கார ராணியாக முடி சூட்டினார். ராணியாராக உயர்த்தப்பட்டவுடனேயே, மொர்தேகாயிடம் இருந்து, ராஜ பிரபுக்கள் இருவர் தன்னைக் கொன்று போடுவதற்கு சதிதிட்டம் தீட்டுகிறார்கள் என்று செய்த்தி அறிவிக்கப்பட்டது. பெர்சிய மேன்மக்கள் பொறாமை கொள்ளக் கூடும் என்ற அச்சத்தினால், புதிய அரசியாரின் குடியுரிமை இன்னும் மறைக்கப்பட்டு இருந்த்து. எஸ்தரின் இனத்தை அறிந்திராத அரசன், கவனக் குறைவால், தனது தயாளத்தைக் காட்டும் பொருட்டு, ஹாமானின் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தான். மொத்தேக்காய் தனக்குப் பணிந்து மரியாதை செலுத்தாதது ஹாமானுக்கு எரிச்சலைத் தந்த்து. அரசனும் குழந்தைகள் முதல் வயோதிகர் வரை எல்லா யூத ஜனங்களைக் கொன்றுபோட்டு அவர்களின் சொத்துகளை அபகரிக்க உத்தரவு கொடுத்தான். ஓய்வாக இருந்த எஸ்தருக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால், மொத்தேக்காய் தனது இனத்தாருக்குச் சார்பாக எஸ்தரிடம் உதவி நாடினான். அறிவிக்காமலும் அழைப்பு இல்லாமலும் ஆசுரஸை எதிர்கொண்டு சந்திக்கும்போது எஸ்தர் ராணியார் பெரும் அபாயத்தைச் சந்தித்தார். பெர்சிய சட்டத்தின்படி, அரசர் தனது செங்கோலை அந்நபரின் சார்பாக தூக்காத பட்சத்தில், அப்படிப்பட்ட செயல் மரணத்தை விளைவிக்க்க் கூடும். மூன்று நாட்கள் அவமானத்தை ஜெபத்தோடு தாங்கிய பிறகு, அரசரின் தயவு கிடைத்த பிறகு, அவருக்கு முன்பாக நின்றாள். ஓர் விருந்துக்கு அரசரை அழைத்து, எஸ்தர் ஹாமானின் திட்டத்தைத் தெரிவித்தாள். அப்போது ஹாமானும் உடன் இருந்தான். ஹாமானின் பதவி பரிக்கப்பட்டு, யூதர்கள் தாக்கப்படும் பட்சத்தில் தங்களைத் தற்காக்கும் அதிகாரத்தையும் அரசர் வழங்கினார்.

 

 

 
2. இந்த புத்தகத்தின் பின்னணி என்ன?

 
வேதாகமத்தில் எஸ்தர் வரலாறு நெகேமியாவிற்குப் பின் தோன்றினாலும், உண்மையில் 30 ஆண்டுகளுக்கு முன்பாக எஸ்தரின் காலம் அமைந்துள்ளது. இக்கதை பெர்சிய பேராட்சியில் நடைபெற்ற சம்பவத்தைக் குறிக்கிறது. அதிலும் பெர்சியாவின் தலைநகரான சுசாவில் அமைந்துள்ள அரசரின் அரண்மனையில் இடம் பெற்றிருக்கிறது.

 

 

 
3. இந்த புத்தகத்தின் அடக்கம் பின்வருமாறு:

 
வாஷியின் இடத்திற்கு எஸ்தர் ராணியாக உயர்த்தப்படுதல் (1:2). யூதர்களைக் கொன்று போடுவதற்கான ஹாமானின் சதித்திட்டம் புலப்படுதல். அதன் விளைவில் ஏற்படும் துக்கங்கள் புலப்படுத்தப்படுகின்றன. இந்தக் கதை எதிரிகளை யூதர்கள் வெற்றி கொண்டாடியதைக் காட்டுவதோடு, பூரிம் எனும் தங்கள் விடுதலையை நினைவு கூறும் பண்டிகையையும் மொர்தேக்காயின் வளர்ச்சியையும் காட்டுகிறது. (4:10)

 

 

 
4. சிறப்பு அம்சங்கள்

 
பெண்களின் பெயரில் சூட்டப்பட்ட வேத புத்தகங்கள் இரண்டில் எஸ்தரும் ஒன்று. (மற்றொன்று ரூத்) வ4.14ல் குறிப்பிட்டது போல் தேவனின் உண்மையான தோற்றம் இப்புத்தகத்தில் வெளிப்படாமல் இருப்பது ஓர் அசாத்தியமான காரியம். எனவே, சில சபை மூப்பர்கள் இப்புத்தகம் வேதாகமத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டதைக் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் தேவனின் பிரசன்னம் இப்புத்தகம் முழுவதும் வெளிச்சமாய் உள்ளது. தேவனின் அதிகாரத்தையும் தம் ஜனங்கள் மீது அவர் கொண்ட அன்பு நிறைந்த அக்கறையையும் வெளிப்படுத்துவதே அதன் நோக்கமாகும்.

 

 

 
5. பெலனும் நிறைவேற்றிய காரியங்களும்

 
a) அவளின் அழகும் குணாதிசயமும் பெர்சிய அரசரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.

 
b) தனது ஜனங்களைக் காப்பாற்றுவதற்கு ஊக்கத்தோடும் எச்சரிக்கையான திட்டத்தோடும் செயல்பட்டாள்.

 
c) ஆலோசனைகளுக்குச் செவி கொடுப்பதோடு இக்கட்டான நேரத்தில் செயல்படவும் துணிந்தாள்.

 
d) தனது பாதுகாப்பைவிட பிறரின் நலனில் அதிக அக்கறையுடையவளாய் இருந்தாள்.

 

 

 
6. அவள் வாழ்க்கையின் மூலம் நாம் கற்றுக் கொள்ளக் கூடிய பாடங்கள்

 
a) தேவனை ஆராதிப்பது பல சமயங்களில் நமது சொந்த பாதுகாப்பிற்கே மருட்டலாக அமைந்துவிடும்.

 
b) நம்மில் நியமித்துள்ள சூழ்நிலைகளுக்கு தேவன் நோக்கம் உடையவராய் இருக்கிறார்.

 
c) மனவூக்கம் தெள்ளந் தெளிவாக வெளிப்பட்டாலும், ஜாக்கிரதையான திட்டமிடலுக்கு ஈடுபெறாது.

 
d) தீர்க்கதரிசனப்பூர்வமான சாட்சியைப் பகிர்ந்து கொள்ளும்போது நாமும் எஸ்தரைப் போல் அபாயத்தைச் சந்திக்க நேரிடும்.

 
e) நம்முடைய கிறிஸ்தவப் பயணத்திலும், யூத ஜனங்களுக்கு நடந்த்துபோல், தேவன் பின்னணியில் செயல்படுகிறார் என்பதை விசுவாசிக்க வேண்டும்.

 

 

 
7. வேதாகம மேற்கோள்கள்:
எஸ்தர் புஸ்தகத்தில் கூறப்பட்டுள்ளதுபோல் அவளின் வரலாறு.


 
8. கலந்துரையாடுவதற்கான கேள்விகள்

 
8.1 அவளின் குடும்ப உறுப்பினர்கள் யாவர்?

 
8.2 மொர்தேக்காய் யார்?

 
8.3 ஹாமான் யார்?

 
8.4 அவள் சந்திக்க நேர்ந்த அபாயம் யாது?

 
8.5 தேவனின் நிமித்தம் மலேசியாவில் நமக்கு உண்டாயிருக்கும் சூழ்நிலையில் சந்திக்க வேண்டிய அபாயம் யாது?

 

 

 

Monday, February 22, 2010

1:2 ஆபிரகாம் – விசுவாசத்திற்குத் தந்தையும் தேவனுக்குத் தோழனும் ஆனவர்

1:2 ஆபிரகாம் – விசுவாசத்திற்குத் தந்தையும் தேவனுக்குத் தோழனும் ஆனவர்
(ஸ்தாபகர்களின் தந்தையில் ஒருவர்)


ஆவணத்தைஎம்.எஸ்.வோர்ட் வடிவில் பதிவிறக்கம் செய்ய
ஆவணத்தை டிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய


1. ஆபிரகாம்: ‘தந்தை உயர்த்தப்படுகிறார்’ என்ற அடைமொழியைக் கொண்டு வருகிறது. ‘பெருஞ் ஜனங்களின் தந்தை’ என்ற பொருளையும் சுமந்து வருகிறது. (ஆதி. 17:5).
2. யூத ஜனங்களுக்கு அவரே தந்தை (யோசுவா 24.2, 1ராஜா 18.36, ஏசாயா 29.22, நெகே.9.7, மத்.1.1). He was the founder of the Jewish nation (Josh.24:2; 1King18:36; Is.29:22; Neh.9:7; Mt.1:1). யூத மார்க்கம், கிறிஸ்தவம், இஸ்லாம் மார்க்கம் அனைத்துமே அவரையே தங்கள் விசுவாசத்தின் தந்தையாக ஏற்றுக் கொள்கின்றனர்.
3. அவரைப் பற்றிய புராணம் ஆதி.11:26:25:10ல் அடங்கியுள்ளது
4. தேரா அவருடைய தந்தை. ஷியாம் வம்சாவளியினர். ஊர் என்ற இடத்தில் இருந்து தம் மனைவி சாராய், மருமகன் ஹாரான் (நவீன சீரியா) புலம் பெயர்ந்தவர். இங்கிருந்து கானான் தேசத்திற்கு வந்தவர். தமது கால்நடைகளுக்காக பசுஞ் சோலையையும் நீராகாரத்தையும் தேடி நாடோடியாகவே திரிந்தார்.
5. ஆபிரகாம் ஓர் தெய்வீக அழைப்பைப் பெற்றார் (ஆதி.12:1-3) “நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உன்க்குள் ஆசீர்வதிக்கப்படும்.”. (இப்படியொரு வாக்குத்த்த்தைத்தை உன்னால் அறிவிக்க முடியுமா?)
6. அபிமலேக் என்ற கேரார் அரசனிடம் அவர் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டதாக்க் காணப்படுகிறது. அதன் மூலம் தான் விரும்பும் இடத்திற்குப் பயணம் செய்யும் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. (ஆதி.20:15) மேலும் அத்தேசத்தில் உள்ள நீரூற்றையும் பயன்படுத்தும் உரிமையும் கிடைத்திருக்கிறது
7. லோத்து பிரச்சனையில் சிக்கியிருந்த போது ஆபிரகாம் அவனுக்கு உதவி ஜெபித்தும் இருக்கிறார் (ஆதி.14.14). பஞ்ச காலத்தில் ஒரு முறை எகிப்திற்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஆனால், பாரோவாயையும் அவன் மனைவியையும் நிந்தித்தற்காக தொல்லையைச் சந்தித்த்தோடு, அத்தேசத்தில் இருந்தும் துரத்தப்பட்டார். (ஆதி.12.10-20).
8. லோத்து மோவாப்பியர்களுக்கும் பென்னம்மியர்களுக்கும் தகப்பன் ஆவான். இஸ்ரவேலர்களுக்கு அல்ல (ஆதி.19:36-38).
9. பண்டை கால வழக்கப்படி, பிள்ளைகள் இல்லாத ஒருவன் தனது வாரிசை, விருப்பமான அடிமைப் பெண் மூலம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இப்படியொரு காரிம் அவன் குடும்பத்தில் நடக்க்க் கூடாது என்று கட்டளையிடப்பட்டது (ஆதி.15.3-6) அதே வேளையில், வழக்க முறைப்படி, சாராள் ஆபிரகாமிற்கு ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் பொருட்டு ஓர் அடிமைப் பெண்ணை வழங்கினாள். (ஆதி.16:1f) ஆனால், இது தேவனுடைய திட்டமாக அமையவில்லை (ஆதி.17:15-19). இறுதியில் மிகவும் கிழட்டு நிலையில் சாராள் ஆபிரகாமிற்கு ஈசாக்கு என்ற குமாரனை ஈன்றெடுத்தாள்.
10. அக்கால வழக்கத்தின் படி ஈசாக்கு பலி கொடுக்கும் பொருட்டு தயாராக்கப்பட்டான். அச்செயலைத் தடுத்த தேவன், ஈசாக்குப் பதிலாக மாற்று பலி பொருளை வழங்கினார். (ஆதி. 22:9-14).
11. சாராள் மரித்த பிறகு ஆபிரகாம் கெத்தூராள் என்ற பெண்ணை மறுமனையாக்கி மேலும் பல பிள்ளைகளைப் பெற்றான். அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களை அப்பால் அனுப்பி விட்டான் (ஆதி.25:5f) சாராள் எப்ரோன் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டாள்.
12. மரிப்பதற்கு முன்பாக தேவன் வாக்கருளின தேசத்தை ஆபிரகாம் கண்டதோடு, தனது சந்த்தியை பெருக்குவதற்குப் பாத்திரனான மகனையும் கண்டான்.
13. தேவன் விசுவாசிகளை அழைக்கும் பாதை பெரும்பாலும் சரீரத் தன்மையாக மாறி விடுகிறது.
14. ஆபிரகாமின் தகன பீடம் அவனை தேவ வணக்கத்திற்குரியவனாக்க் காட்டுகிறது. அவனின் கூடாரம் அந்நிய தேசத்தின் வழிப் பயணியாக்க் காட்டுகிறது. இதுவே எல்லா விசுவாசிகளின் தனிதன்மையாகவும் அமைகிறது.
15. பொருளாதார ஆசீர்வாதங்கள் சன்மார்க்கச் சவால்களைத் தொடர்ந்து வருகிறது. அவன் பல பிரச்சனைகளை எதிர்நோக்கினான்: a) ஈசாக்கின் பிறப்பிற்காக அவன் காத்திருக்க வேண்டியதாயிற்று. b) ஈசாக்கின் பிறப்பிற்குப் பிறகு இஸ்மவேலைத் துரத்தியடிக்க வேண்டியதாயிற்று.
16. புதிய ஏற்பாட்டில், விசுவாசத்தின் அடிப்படையிலும் (ரோமர் 4.16), கிரியைகளின் அடிப்படையிலும் (யாக்கோபு 2.21-23).
17. அவன் தேவனின் தோழன் என்றும் அழைக்கப்பட்டான்” (ஏசா.41:8, 2 நாளாகம்ம் 20:7)
18. நமது பயணமும் சேத்திரமும்: எப்படிப்பட்ட சவால்களையும் பிரச்சனைகளையும் நாம் சந்திக்கிறோம்? நாம் எப்படி தேவனிடத்தில் விசுவாசமாக இருக்கலாம்? நாம் தேவனுக்கும் மனிதருக்கும் தோழராக வாழ வேண்டும். தேவனின் நம்பிக்கையான நண்பனாக இருந்து கொண்டே கிறிஸ்தவரல்லாதவரோடு நட்பு பாராட்டுக. பல மார்க்க தேசமாகிய இந்த மலேசியாவில் இது எப்படி சாத்தியமாகும்?

Thursday, February 18, 2010

112. பவுல் – உன்னதமான சுவிசேஷகரும் நிருபங்கள் எழுதியவரும் ஆவார்

கரு வசனம்:

“கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன். ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன். தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும். அப்படிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.”
பிலிப்பியர் 1.21-24



வரலாற்றுச் சுருக்கம்

  • தலைசிறந்த சுவிசேஷகரும் புறஜாதியாரின் அப்போஸ்தலருமாவார்.
  • பல சபைகளை நிறுவியவர்.
  • பல நிருபங்களை எழுதியவர்.
  • சுவிசேஷகத்திற்காக பல பாடுகளையும் ஒடுக்கப்படுதலையும் நரபலியையும் சந்தித்தவர்.
  • டமாஸ்கஸ் சாலையில் தேவனை சந்தித்தவர். – அதன் மூலம் அவருடைய வாழ்க்கை மாற்றியமைக்கப்பட்டு சுவிசேஷத்தின் மூலம் பலருடைய வாழ்க்கையைத் தொட்டுள்ளார்.


1. முன்னுரை – அவர் வரலாறு


சவுல் என்றால் வினவு (கேள்) என்று அர்த்தமாம். பவுல் என்றால் சிறிய என்று அர்த்தமாம். இது ரோமாபுரியர் நாமம். கிறிஸ்துவுக்குப் பிறகு பவுலைப் போன்று கிறிஸ்தவ வரலாற்றை மாற்றியமைத்தவர் யாரும் கிடையாது. விசுவாசிப்பதற்கு முன்னாள் கூட அவருடைய நடவடிக்கை தீவிரமாக முரண்பட்டிருந்த்து. ஸ்தேவானைக் கொன்று போட்ட பிறகு அவனின் புத்தி பேதலித்த செயலினால் சபைகள் நற்செய்தியை உலகம் முழுவதும் பகிர்ந்துகொள்ளும் கிறிஸ்துவின் கடைசி கட்டளையைப் பின்பற்றச் செய்த்து. கிறிஸ்துவை நேருக்கு நேராகச் சந்தித்த பிறகு பவுலின் வாழ்க்கை முற்றிலும் மாறிய்து. அவன் தனது கொடும் போக்கை விட்டுவிட வில்லை. ஆனால், அதற்குப் பிறகு அக்குணாதிசயத்தை சுவிசேஷம் பரப்புவதற்குப் பயன்படுத்திக் கொண்டான்.


பவுல் ஒரு சிறந்த சமயவாதி. வேறு எங்கும் கிடைக்கப் பெறாத கிம்லியேலின் மிகச் சிறந்த பயிற்சியைப் பெற்றான். அவனின் நோக்கங்களும் முயற்சிகளும் நேர்மையானவை. அவன் ஒரு நல்ல பரிசேயனாகத் திகழ்ந்தான். கிறிஸ்தவ வளர்ச்சி யூத மார்க்கத்திற்கு ஆபத்தானது என்று நம்பினான். அதனால் கிறிஸ்தவ விசுவாசத்தை வெறுத்து, கிறிஸ்தவர்களை இரக்கமில்லாமல் கொன்று போட்டான்.


டமாஸ்கஸில் உள்ள கிறிஸ்தவர்களைச் சிறை பிடித்து அவர்களை எருசலேமிற்குக் கைதிகளாக்க் கொண்டுவர பவுலுக்கு அனுமதி கிடைத்த்து. ஆனால் தேவன் டமாஸ்கஸ் சாலையில் தடுத்து நிறுத்தினார். பவுல் நேருக்கு நேராக இயேசுவைச் சந்தித்தான். இச்சம்பவம் அவனுடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றிப் போட்டது.


பவுலின் மன மாற்றத்திற்கு முன்பு புற ஜாதியாருக்கு நற்செய்தியைப் பரப்புவது கடினமான காரியமாய் இருந்த்து. பிலிப்பு சமாரியாவிலும் ஓர் எத்தியோப்பியருக்கும் பிரசங்கம் செய்தான். கொர்னலியு என்று ஒரு புற ஜாதியான் பேதுருவின் கீழ் மதமாறினான். சீரியாவில் உள்ள அந்தியோக்கியாவில் சில கிரேக்கர்கள் விசுவாசிகளோடு சேர்ந்து கொண்டனர். இந்த நிலமையைக் கண்டறிவதற்கு பர்னபாஸ் எருசலேமிற்கு அனுப்பப் பட்டபோது, தர்சுவிற்குச் சென்று பவுலை அழைத்து வந்து, தன்னோடு அந்தியோக்கியர்களுக்கு நற்செய்தி கூற சேர்த்துக் கொண்டான். ரோமாபுரிய காலணித்துவத்திற்கு வெளியே நற்செய்தியைப் பரப்ப மேற்கொள்ளப்பட்ட மூன்று பயணங்களில் முதலாவதை மேற்கொண்டான்.


புற ஜாதியார்கள் கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு முன்பு நியாயப் பிரமாணங்களை நிறைவேற்ற வேண்டுமா என்ற சர்ச்சை ஆதிசபைகளில் பெரிய பிரச்சனையாக எழுந்த்து. புற ஜாதியாரும் தேவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் என்பதை யூதர்கள் ஏற்றுக் கொள்ள பவுல் கடினமாக உழைத்தான். அதற்கும் மேலாக புற ஜாதியாரை தேவனண்டை கொண்டு சேர்க்க அதிக நேரத்தைச் செலவழித்தான். பவுல் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கை மாற்றப்பட்டதோடு, கிறிஸ்துவைச் சந்திக்கவும் ஏவப்பட்டார்கள்.


பவுலுடைய எந்த்த் திறமையையும் தேவன் வீணடிக்கவில்லை – அவனுடைய பிறப்புப் பின்னணி, பயிற்சி, குடிமைத் தகுதி, சிந்தை, பெலவீனங்கள் – எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொண்டார். நீயும் இவ்விதமாய் உன்னுடைய வாழ்க்கையை தேவன் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பாயா? அவர் உன் வாழ்க்கையை ஆள அனுமதிக்கும் வரை, தேவன் என்ன செய்ய முடியும் என்பதை உன்னால் அறிய முடியாது!



2. பெலன்களும் நிறைவேற்றிய காரியங்களும்

a) கிறிஸ்தவர்களை ஒடுக்குவதில் இருந்து கிறிஸ்துவை அறிவிக்கும் நிலை வரை உயர்த்தப்பட்டான்.

b) ரோமாபுரிய காலணித்துவம் முழுவதும் மூன்று சுவிசேஷப் பயணங்கள் மூலம் கிறிஸ்துவை அறிவித்தான்.

c) தனக்கு முன்னால் எழும் எந்த பிரச்சனையையும் துணிவுடன் எதிர்கொண்டு தீர்த்து வைத்தான்.

d) பல நிருபங்களை எழுதி, அவை புதிய ஏற்பாட்டில் சேர்த்துக கொள்ளப்பட வழி வகுத்தான்.

e) துணிச்சல் நிறைந்தவனாக இருந்தாலும் தேவனுடைய தலைமைத்துவத்தை பயபக்தியுடன் நிறைவேற்றினான்.

f) புற ஜாதியாரின் அப்போஸ்தலன் என்ற அடைமொழி பவுலுக்கு வழங்கப்பட்டது.



3. பெலவீனங்களும் தவறுகளும்


a) ஸ்தேவான் கல்லெறியப்பட்டு கொல்லப்படுவதற்கு சாட்சியாய் இருந்து அதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டான். அதற்குப் பிந்திய சம்பவம்தான் அவனை மனமாறச் செய்த்து.

b) கிறிஸ்தவர்களை ஒடுக்குவதன் மூலம் கிறிஸ்தவத்தை அழிப்பதற்கு பொறுப்பேற்றுக் கொண்டான்



4. அவன் வாழ்க்கை அனுபவங்கள் மூலம் நாம் கற்றுக் கொள்ளக் கூடியவை


a) தேவனுடைய கிருபையால் மன்னிப்பும் நித்திய வாழ்வின் ஈவும் வழங்கப்படுகிறது. கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் யாவரும் அதைப் பெறத் தகுதியானவர்கள்.

b) தேவனோடு உருவாகின்ற உறவு கீழ்ப்படிதலைத் தருவிக்கிறது. ஆனால் கீழ்ப்படிதல் ஒருபோதும் தேவ உறவை உருவாக்க முடியாது.

c) நமது சுதந்திரத்துவத்தை நிரூபிக்க நினைப்பதை விட்டுவிட்டால்தான் நித்திய சுதந்திரம் கிடைக்கும்.

d) தேவன் நமது நேரத்தை வீணடிப்பதில்லை – நம்முடைய கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வார்.

e) சுவிசேஷத்திற்காகப் பவுலைப் போல் பாடனுபவித்தவர்கள் ஒரு சிலரே.



5. வேதாகம மேற்கோள்கள்:

அப்போஸ்தலர் 7.58 முதல் 28.31 வரை கூறப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டு நிருபங்களிலும் காணலாம்.


6. கலந்துரையாடலுக்கான கேள்விகள்

6.1. அவனுடைய யூதகுல பிறப்பின் பின்னணியைப் பற்றி நீ என்ன அறிவாய்?

6.2. அவன் எப்படி தேவனை சந்தித்தான்?

6.3. அவனுடைய பெலவீனம் யாவை?

6.4. புற ஜாதியாரின் அப்போஸ்தலன் என்று ஏன் அவன் அழைக்கப்பட்டான்?

6.5. அவன் வாழ்வின் மூலம் நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும்?

106. மார்த்தாள், பெத்தனியில் வாழ்ந்த மரியாளுக்கும் லாசருவிற்கும் சகோதரி

கரு வசனம்:
“மாத்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து, ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்!” (லூக்கா 10:40)


வரலாற்றுச் சுருக்கம்

  • பெத்தனியில் வாழ்ந்த மரியாளுக்கும் லாசருவிற்கும் சகோதரி
  • பொறுப்பு நிறைந்த குடும்பப் பெண்ணாகத் திகழ்ந்தாள்.
  • இயேசு மீது படிப்படியான விசுவாசத்தில் வளர்ந்தாள்.
  • எல்லாவற்றையும் மிக நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்ற ஊக்கம் கொண்டவள்.
  • தனது கருத்தை பிறர் முதன்மையாக ஆதரிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்தாள்.
  • இயேசு அவள் வீட்டுக்கு வரும்போது, அவர் பேசுவதைக் கேட்க அதிக நேரமிராது.
  • தன் சகோதரி மீது பொறுமை கொள்ளாத்தால் இயேசு அவளைக் கடிந்து கொண்டார்.



1. முன்னுரை – அவளின் வரலாறு

அரமிய மொழியில் ஐயை அல்லது ஸ்திரி என்று அவள் பெயர் பொருள் படுகிறது. இப்பெயரின் பொருளை எபிரேய மொழியில் காணமுடிவதில்லை. மூத்த சகோதர சகோதரிகள் தங்கள் இளைய சகோதர்ர்களுக்காக பணிவிடை செய்யும் மனப்போக்கு உடையவர்களாய்க் காணப்படுவர். இதைத்தான் மாத்தாளின் வாழ்க்கையிலும் காண முடிந்த்து. மரியாளுக்கும் லாசருவிற்கும் மூத்த சகோதரியாகத் திகழ்ந்த மார்த்தாள் தனது கட்டுப்பாட்டிற்குள் குடும்பத்தைக் கொண்டு வர முயன்றாள்.

மார்த்தாள், மரியாள் மற்றும் லாசரு வெளிப்படுத்திய தயாளம் அவர்களைத் தனித்து உயர்த்திக் காட்டுகிறது. இந்த்த் தயாள உபசரணை அவர்களுடைய சமுதாய எதிர்ப்பார்ப்பாகத் திகழ்ந்த்து. ஒருவரை வீட்டுக்குள் அனுமதிக்காமல் அனுப்பிவிடுவது அவமானமாகக் கருதப்பட்டது. மார்த்தாளின் குடும்பத்தார் இந்த உபசரிக்கும் பண்பை உடையவர்களாகத் தெளிவாகக் காணப்பட்டனர்.

மார்த்தாள் வாழ்க்கைக் கணக்கில் நாட்டமுடையவளாய் இருந்தாள். பிறரைப் பிரியப்படுத்துவதிலும் பணிவிடை செய்வதிலும் நியாயம் என்று நினைக்கும் காரியங்களைச் செய்வதிலும் கவனமாய் இருந்தாள். ஆனால் அது அனைவருக்கும் அசௌகரியத்தைக் கொண்டு வந்த்து. உண்மையில், குடும்பத்தின் மூத்தப் பெண் என்ற முறையில் தங்களைக் குறித்த காரியங்கள் நேர்த்தியாக இல்லாமல் போகுமோ என்ற அவமான உணர்வில் ஆழ்ந்திருந்தாள். தவறு நடந்துவிடாதபடிக்குத் தன்னால் ஆன எல்லா நன்மையான காரியங்களை செய்ய முயன்றாள். அதன் விளைவாக ஓய்வு எடுப்பதற்கும் விருந்தினரை மகிழ்விப்பதற்கும் அவளால் இயலாமல் போனது. அதனிலும் மேலாக, மரியாள் தன்னுடைய ஆயத்தங்களில் ஒத்துழைக்காமல் போனதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மார்த்தாளின் ஏமாற்றம் உச்சவரம்பை அடைந்து, இயேசுவையே பிரச்சனையைத் தீர்த்து வைக்க்க் கேட்குமளவுக்குச் சென்றது. அவர் பக்குவமாக, அவளுடைய அக்கறை நியாயமாக இருந்தாலும் மிகச் சிறந்த்தாக இருக்க வாய்ப்பில்லை என்று திருத்துகிறார். விருந்தாளிகளுக்கு வசதிகளைச் செய்து கொடுப்பதைவிட அவர்களைத் தனிப்பட்ட முறையில் கவனித்துக் கொள்வது இன்னும் முக்கியமானதாகத் திகழவேண்டும்.

இறுதியாக, லாசரு மரித்த போது, தன்னைத் தேற்றிக் கொள்வதற்குக்கூட பெலனில்லாமல் போனாள். இயேசுவின் வரவைக் கேள்விப்பட்ட அவள், விரைந்து ஓடி அவரைச் சந்தித்து, தனது ஆள் மனக் குழப்பத்தையும், ஏமாற்றத்தையும் நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்துகிறாள். இயேசு அவளுடைய மட்டுறுத்தல் நிறைந்த நம்பிக்கையைச் சுட்டிக் காட்டுகிறார். அவர் மரணத்திற்கு அப்பாற்பட்டவர் மட்டும் அல்லர். மரணத்தை ஜெயங் கொண்டு, உயிர்த்தெழுந்து ஜீவன் தருகிற தேவனுமாயிருக்கிறார்! சில விநாடிகளுக்குள் மார்த்தாள் மீண்டும் தனது அறியாமையைப் புலப்படுத்துகிறாள். நான்கு நாட்களுக்கு முன்னர் (லாசருவின்) பூதவுடல் அழுகாமல் இருந்த்து என்று சுட்டிக் காட்டுகிறாள். தகவல் தரவுகளில் அவளுடைய அக்கறை ஒட்டு மொத்தமான முழு தோற்றத்தையும் காணவிடாமல் தடுத்த்து. ஆனால் இயேசு எப்பொழுதும் அவளிடம் பொறுமையாய் இருந்தார்.

அவளைப் பற்றி எழுதப்பட்ட இறுதிப் பகுதியில், மார்த்தாள் இயேசுவுக்கும் அவருடைய சீடர்களுக்கும் உணவு பரிமாறுவது காட்டப்படுகிறது. அவள் பரிமாறுவதை நிறுத்தவில்லை. ஆனால், வேதம் அவளின் மௌனத்தை வெளிப்படுத்துகிறது. தன் இளைய சகோதரி பெற்றுக் கொண்ட அனுபவத்தை அவள் அறியத் தொடங்குகிறாள் – மௌனமாயிருந்து செவி மடுப்பதில்தான் ஆராதனை தொடங்குகிறது.


2. பெலனும் நிறைவேறிய காரியங்களும்

பொறுப்பு நிறைந்த குடும்பப் பெண் என அறியப்படுகிறாள்.
வளர்ந்து வரும் விசுவாசத்தில் இயேசுவை அறிந்து கொண்டாள்.
எல்லா காரியங்களையும் சரியாக செய்ய வேண்டும் என்ற உறுதியான ஊக்கம் கொண்டவள்.
யோவான் 11.27 அவளுடைய விசுவாசத்தின் கதறல் இடம் பெறுகிறது – உதவி வேண்டும்.


3. அவளுடைய பெலவீனமும் தவறுகளும்

தன்னை முதன்மைப்படுத்தி உடன்பட்டு வரவேண்டும் என்று எதிர்ப்பார்த்தாள்.
தகவல் தரவுகளை அதிக கவனம் செலுத்தினாள்.
தன்னுடைய உழைப்பு அங்கீகரிக்கப்படாத போது தனக்குத்தானே பரிதாப்ப்பட்டுக் கொண்டாள்.
தனது வாழ்க்கையில் இயேசுவின் ஆற்றலைக் குறைத்து மதிப்ப்ட்டுக் கொண்டாள்.


4. அவள் வாழ்க்கையில் நாம் கற்றுக் கொள்ளக் கூடிய பாடங்கள்

தகவல் தரவு வட்டத்திற்குள் சிக்கிக் கொள்வது நமது நடவடிக்கையின் பிரதான நோக்கத்தை அறிய முடியாமல் செய்து விடும்.
இயேசுவின் சத்த்த்தைக் கேட்பதற்கும் அவருக்குப் பணிவிடை செய்வதற்கும் என்று தனித்தனியாக கால நேரம் உண்டு.


5. வேதாகம மேற்கோள்கள்: 
லூக்கா 10.38-42ல் மற்றும் யோவான் 11.17-45ல் சொல்லப்பட்டுள்ள மார்த்தாவின் கதை.


6. கலந்துரையாடுவதற்கான கேள்விகள்

அவளுடைய சகோதரனும் சகோதரியும் யாவர்?
அவளுடைய சிறப்பாற்றல்கள் யாவை?
அவளுடைய பெலவீனங்களைச் சுட்டிக் காட்டவும்.
முக்கியத்துவம் வாய்ந்த காரியங்களை அடையாளம் காண தேவன் எப்படி அவளுக்கு உதவினார்?
தேவனை ஆராதிப்பதற்கும் அவருடைய வார்த்தைகளை அறிவதற்கும் நீ எப்படி உன்னுடைய முக்கியத்துவத்தை வகுத்திடுவாய்?

Wednesday, February 17, 2010

93. எலிசபெத்

எலிசபெத் – சகரியாவின் மனைவியும் ஞானஸ்நானகனான யோவானின் தாயாரும் ஆவாள்

கரு வசனம்: 
“இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று. விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள். அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது!” (லூக்கா 1:43-45) என்றாள்.

கதைச் சுருக்கம்
  • அவளும் அவள் கணவரும் ஆச்சாரமான (லேவியர்???) குடும்பத்தில் தோன்றியவர்கள்
  • ஞானஸ்நானகனான யோவன் என்ற பிள்ளையை ஈன்றெடுத்தவர்கள்.
  • தேவன் இத்தம்பதியாரிடத்தில் உண்மையுள்ளவராய் இருந்தார்.
  • பல உள்ளங்களை ஆயத்தம் பண்ணும் பொருட்டு இவர்கள் இருவரும் ஒரு தீர்க்கதரிசியைத் தருவித்தவர்கள்.
  • தேவனுடைய சித்தம் நிறைவேறும் காலம் நம்மில் இருந்து வேறுபட்டுள்ளது.



1. முன்னுரை – அவள் வரலாறு

‘தேவனுக்கு நான் கட்டுப்பட்டு இருக்கிறேன் ’ என்பது இவள் பெயரின் பொருள். இஸ்ரவேலர் சமூகத்தில் ஒரு பெண்ணின் கௌரவம் அவளின் குழந்தைப்பேற்றில் உள்ளது. குழந்தை இல்லாமல் பருவம் கடந்து செல்வது மன வேதனையையும் அவமானத்தையும் தேடித் தரும். எலிசபெத்திற்கு ஏற்பட்ட நெடுநாள் மலட்டுத் தன்மை வேதனையையும் தனிமையையும் ஏற்படுத்தினாலும் அவள் தேவனிடத்தில் விசுவாசத்தோடு நிலைத்திருந்தாள்.

எலிசபெத்தும் சகரியாவும் ஆச்சாரமான (லேவியர்???) குடும்பத்தைச் சார்ந்தவர்கள். ஒவ்வொரு வருடமும் இரண்டு வாரத்திற்கு எருசலேமில் உள்ள ஆலயத்திற்குச் சென்று தனது குருத்துவக் கடமையை நிறைவேற்ற வேண்டும். இப்படிப் பயணித்துத் திரும்பும்போது பேரானந்தத்தின் நிமித்தம் சகரியா வாயடைத்துப் போனான்ன். வேறு வழியில்லாமல் தனது நற்செய்தியை எழுத்து மூலமாகக் கொடுக்க வேண்டியதாயிற்று. தன் மனைவிக்கு அவன் பேரானந்தம் மிகுந்த அதிசயமான செய்தியைக் கொடுத்தான் – கரைந்து போன அவர்களின் கனவுகள் நிதரிசணமாகப் போகிறது! விரைவில் கர்ப்பவதியான எலிசபெத், தேவனிடத்தில் வெகு காலம் எதிர்பார்த்துக் காத்திருந்த குழந்தையைப் பெற்றாள்.

குடும்பத்தார் மத்தியில் அச்செய்தி விரைவாகப் பரவியது. எழுபது மைல் தூரம் வாழ்ந்த எலிசபெத்தின் உறவுக்காரியும் நாசரேத் ஊராளாகிய மரியாளும் ஆச்சரியமான பிரகாரம் கர்ப்பவதியானாள். ஓர் இரட்சகரை (மேசியா) மரியாள் ஈன்றெடுக்கப் போகும் செய்தியை தேவதூதன் அறிவித்த பிறகு, அவள் எலிசபெத்தைக் காணச் சென்றாள். தேவன் வழங்கிய உன்னதமான பரிசைக் குறித்து அவர்கள் இருவரும் துள்ளிக் குதித்தனர். மரியாளின் குழந்தை தன்னதைவிட மகத்துவமானது என்றும் மரியாளின் மகனுக்காக தன் மகன் (யோவான்) தூது சொல்லுவான் என்றும் எலிசபெத் அறிந்திருந்தாள்.

குழந்தை பிறந்தவுடன் தேவன் கொடுத்த யோவான் என்ற பெயரைச் சூட்டவேண்டும் என்று எலிசபெத் வலியுறுத்தினாள். சகரியாவின் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் அவனின் நாவைத் திறந்து விட்டதோடு, நகரில் உள்ள அனைவருக்கும் இந்த அற்புதமான குழந்தையின் மூலம் என்ன நடக்கப்போகிறது என்ற வியப்பும் உண்டாயிற்று.

தேவன் அருளிய ஈவை வளர்த்து வரும் ஒவ்வொரு தருணமும் மனதுக்குள் அவரைத் துதித்தாள். தேவ சித்தத்தின்படி மரியாள் தன்னை மகிமைப்படுத்தி உள்ளாள் என்பதை அவள் அறிந்திருந்தாள். தனது திட்டத்தை விட தேவனுடைய சித்தம் வல்லமையோடு செயல்பட்டது. நாமும், தேவன் எல்லா நிலமைகளையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். தேவன் தமக்கு சித்தமான நேரத்தில் செயல்பட்டதை எப்போது நீ கடைசியாக நினைவு கூர்ந்தாய்?

2. பெலனும் நிறைவேறிய காரியங்களும்
a) ஆன்மீகத்தில் மிகவும் பெலப்பெட்ட பெண்ணாக அறியட்டிருந்தாள்.
b) தேவன் தமது வாக்குதத்த்த்தை நிறைவேற்றுவார் என்பதைச் சற்றும் சந்தேகங் கொள்ளவில்லை.
c) ஞானஸ்நானகனான யோவானின் தாயார்.
d) மரியாளுக்கு அடுத்து இரட்சகரின் வருகையைக் குறித்து அறிந்திருந்த முதல் பெண்ணாவாள்.

3. அவள் வாழ்வின் மூலம் நாம் கற்றுக் கொள்ளக் கூடியது
a) தம்மிடத்தில் விசுவாசமாக இருப்பர்களைத் தேவன் மறப்பதில்லை.
b) தேவனின் செயல் திட்டமும் அணுகுமுறையும் நமது எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை.


4. வேதாகம மேற்கோள்கள்:
லூக்கா 1.5-80 வரை கூறப்பட்ட எலிசபெத்தின் வரலாறு.


5. நமது கலந்துரையாடலுக்கான கேள்விகள்
5.1 எலிசபெத் என்ற சொல்லின் பெயர் என்ன?
5.2 அவள் தேவ வாக்குதத்தத்தில் நம்பிக்கை வைத்தாளா?
5.3 அவளுடைய மகன் யார்?
5.4 யோவானின் வருகையைக் குறித்து கேள்விப்பட்ட பெண் யார்?
5.5 தனது வாழ்வில் ஏற்பட்ட அவமானத்தை தேவன் எப்படிப் போக்கினார்?

Sunday, February 7, 2010

89. பர்னபாஸ் – ஊக்கம் நிறைந்தவன், பலரின் வாழ்வை மாற்றியமைத்தவன்

பர்னபாஸ் – ஊக்கம் நிறைந்தவன், பலரின் வாழ்வை மாற்றியமைத்தவன்


கரு வசனம்: அவன் நல்லவனும், பரிசுத் ஆவியினாலும் பரிசத்த விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான். அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய் சேர்க்கப்பட்டார்கள்.


வரலாற்றுச் சுருக்கம்

v பொது மக்களை முக்கியமான பொறுப்பிற்கு உயர்த்தினான்;
v ஆதித் திருச்சபையை புதிய சுவிசேஷ நிலையமாக மாற்றினான் (உம் – அந்தியோக்);
v சுவிசேஷகர்களுக்கு ஊக்கமூட்டினான் (பவுல், ஜான் மார்க).
v தங்களை உடைமைகள தானம் செய்ய பலரை ஊக்குவித்தான். (உம் – அன்னியாய்). கேட்கப்படாமலேயே தனது உடைமைகளை ஆலயத்திற்கு வழங்கினான்;
v சுய விருப்பத்தோடு பவுலின் தலைமைத்துவத்தை ஊக்குவித்து, சுவிசேஷப் பணிகளுக்கும் சபை சந்திப்புகளுக்கும் துணைத் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டான்;
v பவுலைத் தேடிக் கண்டுபிடித்து அவனைப் பாத்திரனாக்கி தனிச்சிறந்த காணிக்கையையும் அவனுக்குச் செலுத்தினான்.




1. முன்னுரை – அவனின் வராலாறு

ஒரு சில வேதாகமப் பாத்திரங்களே ஊக்கமும் ஆறுதலும் நிறைந்தவன் என்று வர்ணிக்கப்படுகிறார்கள். (அப்.4.36) அவனின் மறுபெயர் யோசேப்பு. கேட்கப்படாமலேயே தனது பெரும் சொத்துகளை காணிக்கை செலுத்தினான். அவன்தான் சவுலைப் பவுலாக (ரோமாபுரியப் பெயர்) ஜான் மார்க் போன்ற சபைகளின் தலையாய சுவிசேஷகனாக மாற்றினான். அவன் விவாகம் செய்து கொண்டானா இல்லையா என்று கூறப்படவில்லை (1கொரி.9.5-6). ஆதித் திருச்சபைகளுக்கும் சுவிசேஷப் பணிக்கும் பர்னபாவை மாணிக்கமாகவும் முத்தாகவும் உவமானமாகக் கூறலாம்.


2. குடும்ப்ப் பின்னணி

அவன் சைப்பிரஸில் தோன்றிய லேவியன். அவனுடைய குடும்பம் சைப்பிஸிற்கு மாறியதால் பர்னபாஸ் ஆலயத்தில் பணிவிடை செய்யவில்லை. அவன் நற்செய்தியை சைப்பிரஸ் மக்களுக்கே முதலில் வழங்கினான் – இதன் மூலம் ரோமாபூரிய நகர்களில் சைப்ரஸ் மக்களே முதலில் கிறிஸ்துவை அறிந்த மக்களாகத் தோன்றினர். கிறிஸ்து உயிர்த்தெழுந்த்தை விசுவாசித்த முதல் ஜனங்களில் இவனும் ஒருவன். மக்களுக்கு உற்றாசத்தையும் ஆறுதலும் வழங்கும் தனித் திறன் இவனிடம் காணப்பட்டது. சுவிசேஷத்தை அவன் சாதாரண மக்களுக்கு வழங்கினான். அதனைப் பெற்றுக் கொண்ட மக்கள் சுவிசேஷகர்களாக எழுந்தனர். நல்லவன் என்று புதிய ஏற்பாட்டில் முதன் முதலாகபு புகழப்பட்டதாக அறியப்படுகிறது. (அப்.11.24). பவுலுடன் ஆதரவாக இருந்த பரி.லூக்கா, பர்னபாஸை பரிசுத்த ஆவியாலும் விசுவாசத்தாலும் நிறைந்தவன் என்று வர்ணித்தான். பலரைக் கிறிஸ்துவுக்குள் கொண்டு வந்து சேர்த்தான். (அப்.12.24-25) கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய பவுலை மன்னித்த்தோடு சபைகளுக்கு அவனை ஏற்றுக்கொள்ளப்படும் பொருட்டு அறிமுகமும் செய்து வைத்தான். பின்னர் பவுல் தலையாய சுவிசேஷகராக எழுந்து, பல நிருபங்களை எழுதி நற்செய்தி கூறும் சபைகளை நிறுவினார். பர்னபாஸைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ள முடியவில்லை. அவன் துன்பம் நிறைந்த இரத்த பலியாக மரித்தான் என்று கருதப்படுகிறது. (மூலம்: A.R. Buckland, The Universal Bible Dictionary, Morrison & Gibbs, London, 1963, p. 56).


3. ஊக்கம் நிறைந்த அந்த மனிதன் என்ன வழங்கினான்?

a) தனது உடைமைகளை வழங்கியது மூலம் ஊக்கம் கொடுத்தன். அவன் வாழ்வு முழுவதும் தேவ நன்மையும், பரிசுத்த ஆவியும் ஊக்கமும் நிறைந்திருந்த்து. தள்ளப்பட்டவர்களையும் சாதாரன மக்களையும் தனது சுவிசேஷப் பணியில் சேர்த்துக் கொண்டான்
b) பிறரை முந்திக் கொண்டு தனது சொத்துடைமைகளை வழங்கி, பிறரையும் உற்சாகப்படுத்தி இருக்கிறான். “செல்வம் நிறைந்த அவன் தனது சொத்துகளை விற்று அதன் கிரயத்தை அப்போஸ்தலரின் பாத்த்தண்டை வைத்தான்” (அப்.4.36-37) கேட்டுக் கொள்ளப்படாமலேயே கொடுத்தான். பிறரையும் சுவிசேஷப் பணியின் நிமித்தம் ஆலயங்களுக்கு வழங்க உற்சாகப் படுத்தினான். அனநியாவும் சப்பீராவும் தங்கள் சொத்துகளை விற்றனர். ஆனால் அனநியா பரிசுத்த ஆவிக்கும் சீமோன் பேதுருவிற்கும் விரோதமாக பொய் சொல்லி தனக்கென்று ஒரு தொகையை வைத்துக் கொள்ள முயன்றான். (அப். 5: 1-4).
c) தனது சொந்த தேசமாகிய சைப்ரஸுக்கு நற்செய்தி வழங்கினான். தங்கள் சொந்த வசிப்பிடத்திற்குத் திரும்பி பலர் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ள முன்வர மாட்டார்கள். சிலிம் ரிவரில் உள்ள குளுனி தோட்டத்தில் முதல் பேராக இரட்சிக்கப் பட்ட நான் 1959ம் ஆண்டில் அதே தோட்டத்தில் ஒரு சிறுவர் ஞானப் பள்ளியை (சண்டே ஸ்கூல்) தொடக்கி நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள தேவன் எனக்கும் உதவி செய்தார். நமது கிராமத்திற்கோ வீட்டிற்கோ சென்று மீட்பின் வெகுமதியைப் பகிர்ந்து கொள்வது இயேசுவின் சித்தமாயிருக்கிறது. (மத். 8:20-34; மாற். 5: 1-20; லூக். 8:26-39). கெர்சியாவில் பிசாசு பிடிக்கப்பட்ட புத்திய சுவாதீனம் இல்லாம மனிதனும் சுகமடைந்தான். சுகமானதற்கு வெகுமதியாக அந்த மனிதன் இயேசுவைப் பின்தொடர்ந்து அவருக்குத் துணையாக இருக்க முடியுமா என்று கேட்டான். ஆனால் “வீட்டுக்குத் திரும்பி, தேவன் உனக்குச் செய்த்தைச் சொல்” (லூக். 8.39) என்றார். அவனும் நகர் வழியாகச் சென்று இயேசு தனக்குச் செய்த்தைக் கூறினான்.
d) பர்னபாஸ் சபைகளுக்குச் சிறந்த சுவிசேஷகர் ஆவான். யூத மார்க்கம் வந்த பவுல் ஒரு சிறந்த கல்விமானும் Gamaliel ஆவான். அவன் கிறிஸ்தவ சபைகளை மிக மோசமாகத் தாக்கி வந்த்தால், துன்பப்பட்ட மக்கள் அவனை ஆலயத்திற்குள் வரவேற்பதில் தயக்கம் காட்டினர். (அப். 9:27). தொடக்கத்தில் பர்னபாஸ்தான் அந்த சுவிசேஷக் குழுவை வழிநடத்தினான். (அப்.13.1-3) பின்னர் பர்னபாசின் அனுமதியோடு பவுல் அக்குழுவை வழிநடத்தியதாக்க் காணப்படுகிறது. புதிதாக இரட்சிக்கப்பட்ட பவுல் பின்னர் பர்னபாஸின் தலைமைத்துவத்தை ஏற்றத் தயாராக்கப்பட்டான். மிகச் சிலரே தங்கள் தலைமைத்துவப் பொறுப்பைப் பிறருக்கு வழங்க முன்வருவார்கள்.

சபைகளைத் துன்பப்படுத்திய பவுலைக் குறிந்து மக்கள் பயந்த்தால், அவனின் சீடத்துவத்தை நம்ப மறுத்தனர். பர்னபாஸ் சவுலைத் தேடி தர்சுவிற்குச் சென்றான். அவனை அந்தியோக்குவிற்குக் கொண்டு வந்தான் (அப்.12.24) பர்னபாஸ் பவுலுக்கு உதவி செய்ய முன்வந்து அவனை அப்போஸ்தலர்களிடத்தில் கொண்டு வந்தான். தமாஸ்குஸ் செல்லும் சாலையில் சவுல் எப்படி தேவனைப் பார்த்தான் என்றும் தேவன் அவனோடு பேசினார் என்பதையும் பர்னபாஸ் அவர்களுக்கு விளக்கினான். சவுல் எவ்வளவு உறுதியாக தமாஸ்குஸ் மக்களுக்கு போதித்தான் என்றும் பர்னபாஸ் விளக்கினான். (அப்.9.26-27) பவுலை சபைக்கு அறிமுகப்படுத்துவதில் அவன் அபாயத்தைச் சந்தித்திருக்க்க்கூடும் என்று காணப்படுகிறது.
e) பர்னபாஸ் ஒரு சிறந்த சுவிசேஷ சபையை வழங்கினான்
அந்தியோகிய சபை ஒரு சிறந்த சுவிசேஷ சபை ஆகும். (சுவிசேஷகர்களை) அனுப்பும் சபையாகத் திகழ்ந்த்து (அப். 13:1-3). “அவர்கள் உபவாசித்து தேவனைத் துதித்துக் கொண்டிருக்கும் போது, பரிசுத்த ஆவியானவர், “பர்னபாஸுக்கும் சவுலுக்கும் என் திட்டமிட்டுள்ள பணிக்காக அவர்களைத் தாருங்கள். தேவன் அவனை நேரடியாக அபிஷேகம் செய்யாவிட்டாலும், சபைகள் அவனை அப்போஸ்தலர் என்றழைத்தன. அந்தியோகியாவே சுவிசேஷகர்களை அனுப்பிய முதல் சபையாகும்.
f) பர்னபாஸ் பவுலோடு ஒரு சுவிசேஷ இயக்கத்தை அருளியுள்ளான். அவன் இரண்டாவது சுவிசேஷ இயக்கத்தையும் தொடக்கினான். பர்னபாஸின் மாமன் மகனாகிய யோவான் மாற்கு தனது முதல் சுவிசேஷப் பணியை முடிக்காத நிலையில் திரும்பிய பிறகு, அவனை இணைந்து கொள்ள வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை. இருப்பினும் பர்னபாஸ் அவனுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்க கேட்டுக் கொண்டான். இதில் உடன்பாடு ஏற்படாத்தால் இரண்டு வெவ்வேறு சுவிசேஷப் பணிகள் தொடக்கப்பட்டன. சீலாஸைப் பவுலும் யோவான் மாற்குவை பர்னபாஸும் தெரிந்து கொண்டார்கள். பர்னபாஸ் பொறுமையும் மூலாதாரமும் நிறைந்தவன். ஒருமுறை யோவான் மாற்று பயனற்றவன் என்று கூறியிருக்கிறான். பிறகோ, யோவான் மாற்று பயன் நிறைந்தவன் என்று கூறியதோடு தனது உழைப்பில் யோவான் மாற்குவையும் இணைத்துக் கொண்டார். பயனற்ற மனிதனை தேவன் பயன் நிறைந்தவனாக மாற்றியமைத்தார். இவனே மாற்கு சுவிசேஷத்தை எழுதியவன் ஆவான்.


முடிவு

எல்லோரும் பாவிகள் (ரோமர். 3:23) பர்னபாவுக்கும் விதிவிலக்கு இல்லை (கலா. 2), பேதுருவோடு பர்னபாசும் புறஜாதி விசுவாசிகளை விட்டு தனித்து வாழ்ந்தான். பவுல்தான் அவன் மனதை மாற்றினான். நமக்கு நாமே கேட்டுக் கொள்கிறோம்: நமது சபை சுவிசேஷத்திற்காக (அனுப்புதல்) என்ன செய்த்து? நமது சபையின் சுவிசேஷப் பணிக்காக நாம் தனிப்பட்ட முறையில் என்ன செய்திருக்கிறோம்? கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்தவர் அல்லாதவருக்கும் உதவி செய்ய ஊக்கம் மிகவும் பயனுள்ள வழியாகும். மல்லிகையைப் போன்று தனது மனத்தால் மக்களை ஈர்ப்பது போல, நாமும் நமது ஊக்கத்தால் மக்களை இயேசுவண்டைக் கவர வேண்டும். “உன் ஒளி பிரகாசித்து மக்கள் முன் தேவனை மகிமைப்படுத்தட்டும்” என்று இயேசு சொன்னார். பர்னபாசிட்ம் காணப்பட்ட ஊக்கவுணர்வு கிறிஸ்தவர்களை ஆக்கப்பூர்வமான சுவிசேஷகர்களாக்கட்டும்.

உலகப் பிரகாரமனா நெருக்குதல் குருமார்களையும் சபையாரையும் அதிகமாகத் தாக்கம் செய்து வருகிறது. இது அவர்களின் ஆக்கத்தைக் கெடுத்துப் போடக் கூடும். இரு தரப்புக்கும் ஊக்கமும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன. எனது 35 ஆண்டு கால ஆங்கிலிக்கன் உழியத்தில் ஏற்றத்தையும் இரக்கத்தையும் கண்டு வந்திருக்கிறேன். ஒரு சிலரே தேவ அழைப்பிற்கு உண்மையுள்ளவர்களாக பணியாற்ற உற்சாகப்படுத்தி இருந்தாலும் அவர்களுக்கு நன்றி பாராட்டுகிறோம். குருமார்களுக்கும் சபை மூப்பர்களுக்கும். சபையார் பொருத்தமான ஊக்கத்தைத் தர வேண்டும். இது தேவனோடு நாம் கொண்டுள்ள இணையான பங்காளித்துவம் ஆகும்.


4. வேதாகம மேற்கோள்கள்: The Gospel of Luke and Acts of Apostles, 1 Corinthians, Galatians and 1 Peter are helpful.


5. கலந்துரையாடலுக்கான கேள்விகள்

5.1 அவனின் தாய்நாடு எது?
5.2 அவன் பவுலுக்கு எப்படி உதவினான்?
5.3 அவன் யோவான் மாற்குவிற்கு எப்படி உதவினான்?
5.4 தேவ ஊழியத்தில் பங்கு பெற நீ எப்படி பிறரை ஊக்குவிக்கலாம்?
5.5 யோவான் மாற்குவின் விவகாரத்தில் பவுல் எப்படி பர்னபாசைப் பாராட்டினான்?