கரு வசனம்:
“கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன். ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன். தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும். அப்படிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.”
பிலிப்பியர் 1.21-24
வரலாற்றுச் சுருக்கம்
- தலைசிறந்த சுவிசேஷகரும் புறஜாதியாரின் அப்போஸ்தலருமாவார்.
- பல சபைகளை நிறுவியவர்.
- பல நிருபங்களை எழுதியவர்.
- சுவிசேஷகத்திற்காக பல பாடுகளையும் ஒடுக்கப்படுதலையும் நரபலியையும் சந்தித்தவர்.
- டமாஸ்கஸ் சாலையில் தேவனை சந்தித்தவர். – அதன் மூலம் அவருடைய வாழ்க்கை மாற்றியமைக்கப்பட்டு சுவிசேஷத்தின் மூலம் பலருடைய வாழ்க்கையைத் தொட்டுள்ளார்.
1. முன்னுரை – அவர் வரலாறு
சவுல் என்றால் வினவு (கேள்) என்று அர்த்தமாம். பவுல் என்றால் சிறிய என்று அர்த்தமாம். இது ரோமாபுரியர் நாமம். கிறிஸ்துவுக்குப் பிறகு பவுலைப் போன்று கிறிஸ்தவ வரலாற்றை மாற்றியமைத்தவர் யாரும் கிடையாது. விசுவாசிப்பதற்கு முன்னாள் கூட அவருடைய நடவடிக்கை தீவிரமாக முரண்பட்டிருந்த்து. ஸ்தேவானைக் கொன்று போட்ட பிறகு அவனின் புத்தி பேதலித்த செயலினால் சபைகள் நற்செய்தியை உலகம் முழுவதும் பகிர்ந்துகொள்ளும் கிறிஸ்துவின் கடைசி கட்டளையைப் பின்பற்றச் செய்த்து. கிறிஸ்துவை நேருக்கு நேராகச் சந்தித்த பிறகு பவுலின் வாழ்க்கை முற்றிலும் மாறிய்து. அவன் தனது கொடும் போக்கை விட்டுவிட வில்லை. ஆனால், அதற்குப் பிறகு அக்குணாதிசயத்தை சுவிசேஷம் பரப்புவதற்குப் பயன்படுத்திக் கொண்டான்.
பவுல் ஒரு சிறந்த சமயவாதி. வேறு எங்கும் கிடைக்கப் பெறாத கிம்லியேலின் மிகச் சிறந்த பயிற்சியைப் பெற்றான். அவனின் நோக்கங்களும் முயற்சிகளும் நேர்மையானவை. அவன் ஒரு நல்ல பரிசேயனாகத் திகழ்ந்தான். கிறிஸ்தவ வளர்ச்சி யூத மார்க்கத்திற்கு ஆபத்தானது என்று நம்பினான். அதனால் கிறிஸ்தவ விசுவாசத்தை வெறுத்து, கிறிஸ்தவர்களை இரக்கமில்லாமல் கொன்று போட்டான்.
டமாஸ்கஸில் உள்ள கிறிஸ்தவர்களைச் சிறை பிடித்து அவர்களை எருசலேமிற்குக் கைதிகளாக்க் கொண்டுவர பவுலுக்கு அனுமதி கிடைத்த்து. ஆனால் தேவன் டமாஸ்கஸ் சாலையில் தடுத்து நிறுத்தினார். பவுல் நேருக்கு நேராக இயேசுவைச் சந்தித்தான். இச்சம்பவம் அவனுடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றிப் போட்டது.
பவுலின் மன மாற்றத்திற்கு முன்பு புற ஜாதியாருக்கு நற்செய்தியைப் பரப்புவது கடினமான காரியமாய் இருந்த்து. பிலிப்பு சமாரியாவிலும் ஓர் எத்தியோப்பியருக்கும் பிரசங்கம் செய்தான். கொர்னலியு என்று ஒரு புற ஜாதியான் பேதுருவின் கீழ் மதமாறினான். சீரியாவில் உள்ள அந்தியோக்கியாவில் சில கிரேக்கர்கள் விசுவாசிகளோடு சேர்ந்து கொண்டனர். இந்த நிலமையைக் கண்டறிவதற்கு பர்னபாஸ் எருசலேமிற்கு அனுப்பப் பட்டபோது, தர்சுவிற்குச் சென்று பவுலை அழைத்து வந்து, தன்னோடு அந்தியோக்கியர்களுக்கு நற்செய்தி கூற சேர்த்துக் கொண்டான். ரோமாபுரிய காலணித்துவத்திற்கு வெளியே நற்செய்தியைப் பரப்ப மேற்கொள்ளப்பட்ட மூன்று பயணங்களில் முதலாவதை மேற்கொண்டான்.
புற ஜாதியார்கள் கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு முன்பு நியாயப் பிரமாணங்களை நிறைவேற்ற வேண்டுமா என்ற சர்ச்சை ஆதிசபைகளில் பெரிய பிரச்சனையாக எழுந்த்து. புற ஜாதியாரும் தேவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் என்பதை யூதர்கள் ஏற்றுக் கொள்ள பவுல் கடினமாக உழைத்தான். அதற்கும் மேலாக புற ஜாதியாரை தேவனண்டை கொண்டு சேர்க்க அதிக நேரத்தைச் செலவழித்தான். பவுல் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கை மாற்றப்பட்டதோடு, கிறிஸ்துவைச் சந்திக்கவும் ஏவப்பட்டார்கள்.
பவுலுடைய எந்த்த் திறமையையும் தேவன் வீணடிக்கவில்லை – அவனுடைய பிறப்புப் பின்னணி, பயிற்சி, குடிமைத் தகுதி, சிந்தை, பெலவீனங்கள் – எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொண்டார். நீயும் இவ்விதமாய் உன்னுடைய வாழ்க்கையை தேவன் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பாயா? அவர் உன் வாழ்க்கையை ஆள அனுமதிக்கும் வரை, தேவன் என்ன செய்ய முடியும் என்பதை உன்னால் அறிய முடியாது!
2. பெலன்களும் நிறைவேற்றிய காரியங்களும்
a) கிறிஸ்தவர்களை ஒடுக்குவதில் இருந்து கிறிஸ்துவை அறிவிக்கும் நிலை வரை உயர்த்தப்பட்டான்.
b) ரோமாபுரிய காலணித்துவம் முழுவதும் மூன்று சுவிசேஷப் பயணங்கள் மூலம் கிறிஸ்துவை அறிவித்தான்.
c) தனக்கு முன்னால் எழும் எந்த பிரச்சனையையும் துணிவுடன் எதிர்கொண்டு தீர்த்து வைத்தான்.
d) பல நிருபங்களை எழுதி, அவை புதிய ஏற்பாட்டில் சேர்த்துக கொள்ளப்பட வழி வகுத்தான்.
e) துணிச்சல் நிறைந்தவனாக இருந்தாலும் தேவனுடைய தலைமைத்துவத்தை பயபக்தியுடன் நிறைவேற்றினான்.
f) புற ஜாதியாரின் அப்போஸ்தலன் என்ற அடைமொழி பவுலுக்கு வழங்கப்பட்டது.
3. பெலவீனங்களும் தவறுகளும்
a) ஸ்தேவான் கல்லெறியப்பட்டு கொல்லப்படுவதற்கு சாட்சியாய் இருந்து அதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டான். அதற்குப் பிந்திய சம்பவம்தான் அவனை மனமாறச் செய்த்து.
b) கிறிஸ்தவர்களை ஒடுக்குவதன் மூலம் கிறிஸ்தவத்தை அழிப்பதற்கு பொறுப்பேற்றுக் கொண்டான்
4. அவன் வாழ்க்கை அனுபவங்கள் மூலம் நாம் கற்றுக் கொள்ளக் கூடியவை
a) தேவனுடைய கிருபையால் மன்னிப்பும் நித்திய வாழ்வின் ஈவும் வழங்கப்படுகிறது. கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் யாவரும் அதைப் பெறத் தகுதியானவர்கள்.
b) தேவனோடு உருவாகின்ற உறவு கீழ்ப்படிதலைத் தருவிக்கிறது. ஆனால் கீழ்ப்படிதல் ஒருபோதும் தேவ உறவை உருவாக்க முடியாது.
c) நமது சுதந்திரத்துவத்தை நிரூபிக்க நினைப்பதை விட்டுவிட்டால்தான் நித்திய சுதந்திரம் கிடைக்கும்.
d) தேவன் நமது நேரத்தை வீணடிப்பதில்லை – நம்முடைய கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வார்.
e) சுவிசேஷத்திற்காகப் பவுலைப் போல் பாடனுபவித்தவர்கள் ஒரு சிலரே.
5. வேதாகம மேற்கோள்கள்:
அப்போஸ்தலர் 7.58 முதல் 28.31 வரை கூறப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டு நிருபங்களிலும் காணலாம்.
6. கலந்துரையாடலுக்கான கேள்விகள்
6.1. அவனுடைய யூதகுல பிறப்பின் பின்னணியைப் பற்றி நீ என்ன அறிவாய்?
6.2. அவன் எப்படி தேவனை சந்தித்தான்?
6.3. அவனுடைய பெலவீனம் யாவை?
6.4. புற ஜாதியாரின் அப்போஸ்தலன் என்று ஏன் அவன் அழைக்கப்பட்டான்?
6.5. அவன் வாழ்வின் மூலம் நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும்?
No comments:
Post a Comment