Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Wednesday, February 17, 2010

93. எலிசபெத்

எலிசபெத் – சகரியாவின் மனைவியும் ஞானஸ்நானகனான யோவானின் தாயாரும் ஆவாள்

கரு வசனம்: 
“இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று. விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள். அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது!” (லூக்கா 1:43-45) என்றாள்.

கதைச் சுருக்கம்
  • அவளும் அவள் கணவரும் ஆச்சாரமான (லேவியர்???) குடும்பத்தில் தோன்றியவர்கள்
  • ஞானஸ்நானகனான யோவன் என்ற பிள்ளையை ஈன்றெடுத்தவர்கள்.
  • தேவன் இத்தம்பதியாரிடத்தில் உண்மையுள்ளவராய் இருந்தார்.
  • பல உள்ளங்களை ஆயத்தம் பண்ணும் பொருட்டு இவர்கள் இருவரும் ஒரு தீர்க்கதரிசியைத் தருவித்தவர்கள்.
  • தேவனுடைய சித்தம் நிறைவேறும் காலம் நம்மில் இருந்து வேறுபட்டுள்ளது.



1. முன்னுரை – அவள் வரலாறு

‘தேவனுக்கு நான் கட்டுப்பட்டு இருக்கிறேன் ’ என்பது இவள் பெயரின் பொருள். இஸ்ரவேலர் சமூகத்தில் ஒரு பெண்ணின் கௌரவம் அவளின் குழந்தைப்பேற்றில் உள்ளது. குழந்தை இல்லாமல் பருவம் கடந்து செல்வது மன வேதனையையும் அவமானத்தையும் தேடித் தரும். எலிசபெத்திற்கு ஏற்பட்ட நெடுநாள் மலட்டுத் தன்மை வேதனையையும் தனிமையையும் ஏற்படுத்தினாலும் அவள் தேவனிடத்தில் விசுவாசத்தோடு நிலைத்திருந்தாள்.

எலிசபெத்தும் சகரியாவும் ஆச்சாரமான (லேவியர்???) குடும்பத்தைச் சார்ந்தவர்கள். ஒவ்வொரு வருடமும் இரண்டு வாரத்திற்கு எருசலேமில் உள்ள ஆலயத்திற்குச் சென்று தனது குருத்துவக் கடமையை நிறைவேற்ற வேண்டும். இப்படிப் பயணித்துத் திரும்பும்போது பேரானந்தத்தின் நிமித்தம் சகரியா வாயடைத்துப் போனான்ன். வேறு வழியில்லாமல் தனது நற்செய்தியை எழுத்து மூலமாகக் கொடுக்க வேண்டியதாயிற்று. தன் மனைவிக்கு அவன் பேரானந்தம் மிகுந்த அதிசயமான செய்தியைக் கொடுத்தான் – கரைந்து போன அவர்களின் கனவுகள் நிதரிசணமாகப் போகிறது! விரைவில் கர்ப்பவதியான எலிசபெத், தேவனிடத்தில் வெகு காலம் எதிர்பார்த்துக் காத்திருந்த குழந்தையைப் பெற்றாள்.

குடும்பத்தார் மத்தியில் அச்செய்தி விரைவாகப் பரவியது. எழுபது மைல் தூரம் வாழ்ந்த எலிசபெத்தின் உறவுக்காரியும் நாசரேத் ஊராளாகிய மரியாளும் ஆச்சரியமான பிரகாரம் கர்ப்பவதியானாள். ஓர் இரட்சகரை (மேசியா) மரியாள் ஈன்றெடுக்கப் போகும் செய்தியை தேவதூதன் அறிவித்த பிறகு, அவள் எலிசபெத்தைக் காணச் சென்றாள். தேவன் வழங்கிய உன்னதமான பரிசைக் குறித்து அவர்கள் இருவரும் துள்ளிக் குதித்தனர். மரியாளின் குழந்தை தன்னதைவிட மகத்துவமானது என்றும் மரியாளின் மகனுக்காக தன் மகன் (யோவான்) தூது சொல்லுவான் என்றும் எலிசபெத் அறிந்திருந்தாள்.

குழந்தை பிறந்தவுடன் தேவன் கொடுத்த யோவான் என்ற பெயரைச் சூட்டவேண்டும் என்று எலிசபெத் வலியுறுத்தினாள். சகரியாவின் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் அவனின் நாவைத் திறந்து விட்டதோடு, நகரில் உள்ள அனைவருக்கும் இந்த அற்புதமான குழந்தையின் மூலம் என்ன நடக்கப்போகிறது என்ற வியப்பும் உண்டாயிற்று.

தேவன் அருளிய ஈவை வளர்த்து வரும் ஒவ்வொரு தருணமும் மனதுக்குள் அவரைத் துதித்தாள். தேவ சித்தத்தின்படி மரியாள் தன்னை மகிமைப்படுத்தி உள்ளாள் என்பதை அவள் அறிந்திருந்தாள். தனது திட்டத்தை விட தேவனுடைய சித்தம் வல்லமையோடு செயல்பட்டது. நாமும், தேவன் எல்லா நிலமைகளையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். தேவன் தமக்கு சித்தமான நேரத்தில் செயல்பட்டதை எப்போது நீ கடைசியாக நினைவு கூர்ந்தாய்?

2. பெலனும் நிறைவேறிய காரியங்களும்
a) ஆன்மீகத்தில் மிகவும் பெலப்பெட்ட பெண்ணாக அறியட்டிருந்தாள்.
b) தேவன் தமது வாக்குதத்த்த்தை நிறைவேற்றுவார் என்பதைச் சற்றும் சந்தேகங் கொள்ளவில்லை.
c) ஞானஸ்நானகனான யோவானின் தாயார்.
d) மரியாளுக்கு அடுத்து இரட்சகரின் வருகையைக் குறித்து அறிந்திருந்த முதல் பெண்ணாவாள்.

3. அவள் வாழ்வின் மூலம் நாம் கற்றுக் கொள்ளக் கூடியது
a) தம்மிடத்தில் விசுவாசமாக இருப்பர்களைத் தேவன் மறப்பதில்லை.
b) தேவனின் செயல் திட்டமும் அணுகுமுறையும் நமது எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை.


4. வேதாகம மேற்கோள்கள்:
லூக்கா 1.5-80 வரை கூறப்பட்ட எலிசபெத்தின் வரலாறு.


5. நமது கலந்துரையாடலுக்கான கேள்விகள்
5.1 எலிசபெத் என்ற சொல்லின் பெயர் என்ன?
5.2 அவள் தேவ வாக்குதத்தத்தில் நம்பிக்கை வைத்தாளா?
5.3 அவளுடைய மகன் யார்?
5.4 யோவானின் வருகையைக் குறித்து கேள்விப்பட்ட பெண் யார்?
5.5 தனது வாழ்வில் ஏற்பட்ட அவமானத்தை தேவன் எப்படிப் போக்கினார்?

No comments:

Post a Comment