கரு வசனம்:
“மாத்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து, ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்!” (லூக்கா 10:40)
வரலாற்றுச் சுருக்கம்
- பெத்தனியில் வாழ்ந்த மரியாளுக்கும் லாசருவிற்கும் சகோதரி
- பொறுப்பு நிறைந்த குடும்பப் பெண்ணாகத் திகழ்ந்தாள்.
- இயேசு மீது படிப்படியான விசுவாசத்தில் வளர்ந்தாள்.
- எல்லாவற்றையும் மிக நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்ற ஊக்கம் கொண்டவள்.
- தனது கருத்தை பிறர் முதன்மையாக ஆதரிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்தாள்.
- இயேசு அவள் வீட்டுக்கு வரும்போது, அவர் பேசுவதைக் கேட்க அதிக நேரமிராது.
- தன் சகோதரி மீது பொறுமை கொள்ளாத்தால் இயேசு அவளைக் கடிந்து கொண்டார்.
1. முன்னுரை – அவளின் வரலாறு
அரமிய மொழியில் ஐயை அல்லது ஸ்திரி என்று அவள் பெயர் பொருள் படுகிறது. இப்பெயரின் பொருளை எபிரேய மொழியில் காணமுடிவதில்லை. மூத்த சகோதர சகோதரிகள் தங்கள் இளைய சகோதர்ர்களுக்காக பணிவிடை செய்யும் மனப்போக்கு உடையவர்களாய்க் காணப்படுவர். இதைத்தான் மாத்தாளின் வாழ்க்கையிலும் காண முடிந்த்து. மரியாளுக்கும் லாசருவிற்கும் மூத்த சகோதரியாகத் திகழ்ந்த மார்த்தாள் தனது கட்டுப்பாட்டிற்குள் குடும்பத்தைக் கொண்டு வர முயன்றாள்.
மார்த்தாள், மரியாள் மற்றும் லாசரு வெளிப்படுத்திய தயாளம் அவர்களைத் தனித்து உயர்த்திக் காட்டுகிறது. இந்த்த் தயாள உபசரணை அவர்களுடைய சமுதாய எதிர்ப்பார்ப்பாகத் திகழ்ந்த்து. ஒருவரை வீட்டுக்குள் அனுமதிக்காமல் அனுப்பிவிடுவது அவமானமாகக் கருதப்பட்டது. மார்த்தாளின் குடும்பத்தார் இந்த உபசரிக்கும் பண்பை உடையவர்களாகத் தெளிவாகக் காணப்பட்டனர்.
மார்த்தாள் வாழ்க்கைக் கணக்கில் நாட்டமுடையவளாய் இருந்தாள். பிறரைப் பிரியப்படுத்துவதிலும் பணிவிடை செய்வதிலும் நியாயம் என்று நினைக்கும் காரியங்களைச் செய்வதிலும் கவனமாய் இருந்தாள். ஆனால் அது அனைவருக்கும் அசௌகரியத்தைக் கொண்டு வந்த்து. உண்மையில், குடும்பத்தின் மூத்தப் பெண் என்ற முறையில் தங்களைக் குறித்த காரியங்கள் நேர்த்தியாக இல்லாமல் போகுமோ என்ற அவமான உணர்வில் ஆழ்ந்திருந்தாள். தவறு நடந்துவிடாதபடிக்குத் தன்னால் ஆன எல்லா நன்மையான காரியங்களை செய்ய முயன்றாள். அதன் விளைவாக ஓய்வு எடுப்பதற்கும் விருந்தினரை மகிழ்விப்பதற்கும் அவளால் இயலாமல் போனது. அதனிலும் மேலாக, மரியாள் தன்னுடைய ஆயத்தங்களில் ஒத்துழைக்காமல் போனதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மார்த்தாளின் ஏமாற்றம் உச்சவரம்பை அடைந்து, இயேசுவையே பிரச்சனையைத் தீர்த்து வைக்க்க் கேட்குமளவுக்குச் சென்றது. அவர் பக்குவமாக, அவளுடைய அக்கறை நியாயமாக இருந்தாலும் மிகச் சிறந்த்தாக இருக்க வாய்ப்பில்லை என்று திருத்துகிறார். விருந்தாளிகளுக்கு வசதிகளைச் செய்து கொடுப்பதைவிட அவர்களைத் தனிப்பட்ட முறையில் கவனித்துக் கொள்வது இன்னும் முக்கியமானதாகத் திகழவேண்டும்.
இறுதியாக, லாசரு மரித்த போது, தன்னைத் தேற்றிக் கொள்வதற்குக்கூட பெலனில்லாமல் போனாள். இயேசுவின் வரவைக் கேள்விப்பட்ட அவள், விரைந்து ஓடி அவரைச் சந்தித்து, தனது ஆள் மனக் குழப்பத்தையும், ஏமாற்றத்தையும் நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்துகிறாள். இயேசு அவளுடைய மட்டுறுத்தல் நிறைந்த நம்பிக்கையைச் சுட்டிக் காட்டுகிறார். அவர் மரணத்திற்கு அப்பாற்பட்டவர் மட்டும் அல்லர். மரணத்தை ஜெயங் கொண்டு, உயிர்த்தெழுந்து ஜீவன் தருகிற தேவனுமாயிருக்கிறார்! சில விநாடிகளுக்குள் மார்த்தாள் மீண்டும் தனது அறியாமையைப் புலப்படுத்துகிறாள். நான்கு நாட்களுக்கு முன்னர் (லாசருவின்) பூதவுடல் அழுகாமல் இருந்த்து என்று சுட்டிக் காட்டுகிறாள். தகவல் தரவுகளில் அவளுடைய அக்கறை ஒட்டு மொத்தமான முழு தோற்றத்தையும் காணவிடாமல் தடுத்த்து. ஆனால் இயேசு எப்பொழுதும் அவளிடம் பொறுமையாய் இருந்தார்.
அவளைப் பற்றி எழுதப்பட்ட இறுதிப் பகுதியில், மார்த்தாள் இயேசுவுக்கும் அவருடைய சீடர்களுக்கும் உணவு பரிமாறுவது காட்டப்படுகிறது. அவள் பரிமாறுவதை நிறுத்தவில்லை. ஆனால், வேதம் அவளின் மௌனத்தை வெளிப்படுத்துகிறது. தன் இளைய சகோதரி பெற்றுக் கொண்ட அனுபவத்தை அவள் அறியத் தொடங்குகிறாள் – மௌனமாயிருந்து செவி மடுப்பதில்தான் ஆராதனை தொடங்குகிறது.
2. பெலனும் நிறைவேறிய காரியங்களும்
பொறுப்பு நிறைந்த குடும்பப் பெண் என அறியப்படுகிறாள்.
வளர்ந்து வரும் விசுவாசத்தில் இயேசுவை அறிந்து கொண்டாள்.
எல்லா காரியங்களையும் சரியாக செய்ய வேண்டும் என்ற உறுதியான ஊக்கம் கொண்டவள்.
யோவான் 11.27 அவளுடைய விசுவாசத்தின் கதறல் இடம் பெறுகிறது – உதவி வேண்டும்.
3. அவளுடைய பெலவீனமும் தவறுகளும்
தன்னை முதன்மைப்படுத்தி உடன்பட்டு வரவேண்டும் என்று எதிர்ப்பார்த்தாள்.
தகவல் தரவுகளை அதிக கவனம் செலுத்தினாள்.
தன்னுடைய உழைப்பு அங்கீகரிக்கப்படாத போது தனக்குத்தானே பரிதாப்ப்பட்டுக் கொண்டாள்.
தனது வாழ்க்கையில் இயேசுவின் ஆற்றலைக் குறைத்து மதிப்ப்ட்டுக் கொண்டாள்.
4. அவள் வாழ்க்கையில் நாம் கற்றுக் கொள்ளக் கூடிய பாடங்கள்
தகவல் தரவு வட்டத்திற்குள் சிக்கிக் கொள்வது நமது நடவடிக்கையின் பிரதான நோக்கத்தை அறிய முடியாமல் செய்து விடும்.
இயேசுவின் சத்த்த்தைக் கேட்பதற்கும் அவருக்குப் பணிவிடை செய்வதற்கும் என்று தனித்தனியாக கால நேரம் உண்டு.
5. வேதாகம மேற்கோள்கள்:
லூக்கா 10.38-42ல் மற்றும் யோவான் 11.17-45ல் சொல்லப்பட்டுள்ள மார்த்தாவின் கதை.6. கலந்துரையாடுவதற்கான கேள்விகள்
அவளுடைய சகோதரனும் சகோதரியும் யாவர்?
அவளுடைய சிறப்பாற்றல்கள் யாவை?
அவளுடைய பெலவீனங்களைச் சுட்டிக் காட்டவும்.
முக்கியத்துவம் வாய்ந்த காரியங்களை அடையாளம் காண தேவன் எப்படி அவளுக்கு உதவினார்?
தேவனை ஆராதிப்பதற்கும் அவருடைய வார்த்தைகளை அறிவதற்கும் நீ எப்படி உன்னுடைய முக்கியத்துவத்தை வகுத்திடுவாய்?
No comments:
Post a Comment