கரு வசனம்: நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும்; அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள். நான் இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே; யாருக்குத் தெரியும், என்று சொல்லச் சொன்னார். எஸ்தர் 4:14
கதைச் சுருக்கம்
- பெர்சியாவில் நாடு துறைந்து பிறந்த யூத பெண்
- அனாதையான அவளை, மொர்தேக்காய் என்ற மாமனாரிடம் (எஸ்தர் 2.7ல் சிறிய தகப்பன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது) வளர்ந்து வந்தார்.
- மஹாராணியாக அவள் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.
- தனது உக்கத்தினாலும், ஞானத்தினாலும் தேவ உதவினாலும யூதர்களைக் காப்பாற்றினாள்.
1. முன்னுரை – அவள் வரலாறு
எஸ்தர் என்றால் நட்சத்திரம் என்று பொருள். தாங்கள் மதிக்கின்ற நபர்களின் பெயர்களை மாற்றுவது கிழக்கத்திய அரண்மனையின் வழக்கமாயிருந்த்து. (ஆதியாகம்ம் 41:45). அவ்வகையில் எஸ்தர் என்ற இப்பெயர் ராணியாராக உயர்த்தப்பட்டபோது இந்த யூதக் கன்னிகைக்கு வழங்கப்பட்டது. நாடு கடந்து பெர்சியாவில் பிறந்தாள். அபிஹெய்ல் என்பது அவள் தந்தையின் பெயர். சிறு வயதிலேயே தனது பெற்றோரை இழந்த நிலையில் அவளுடைய சிற்றப்பனாகிய மொர்டேக்காயின் ஆதரவில் வளர்ந்தாள். வஸ்தி ராணியார் மரித்த பிறகு, சௌந்தரியமான எல்லா கன்னிகைகளும் அஸாசுரஸ் ராஜா முன் நிறுத்தப்பட்ட போது, அவர் எஸ்தரை சிங்கார ராணியாக முடி சூட்டினார். ராணியாராக உயர்த்தப்பட்டவுடனேயே, மொர்தேகாயிடம் இருந்து, ராஜ பிரபுக்கள் இருவர் தன்னைக் கொன்று போடுவதற்கு சதிதிட்டம் தீட்டுகிறார்கள் என்று செய்த்தி அறிவிக்கப்பட்டது. பெர்சிய மேன்மக்கள் பொறாமை கொள்ளக் கூடும் என்ற அச்சத்தினால், புதிய அரசியாரின் குடியுரிமை இன்னும் மறைக்கப்பட்டு இருந்த்து. எஸ்தரின் இனத்தை அறிந்திராத அரசன், கவனக் குறைவால், தனது தயாளத்தைக் காட்டும் பொருட்டு, ஹாமானின் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தான். மொத்தேக்காய் தனக்குப் பணிந்து மரியாதை செலுத்தாதது ஹாமானுக்கு எரிச்சலைத் தந்த்து. அரசனும் குழந்தைகள் முதல் வயோதிகர் வரை எல்லா யூத ஜனங்களைக் கொன்றுபோட்டு அவர்களின் சொத்துகளை அபகரிக்க உத்தரவு கொடுத்தான். ஓய்வாக இருந்த எஸ்தருக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால், மொத்தேக்காய் தனது இனத்தாருக்குச் சார்பாக எஸ்தரிடம் உதவி நாடினான். அறிவிக்காமலும் அழைப்பு இல்லாமலும் ஆசுரஸை எதிர்கொண்டு சந்திக்கும்போது எஸ்தர் ராணியார் பெரும் அபாயத்தைச் சந்தித்தார். பெர்சிய சட்டத்தின்படி, அரசர் தனது செங்கோலை அந்நபரின் சார்பாக தூக்காத பட்சத்தில், அப்படிப்பட்ட செயல் மரணத்தை விளைவிக்க்க் கூடும். மூன்று நாட்கள் அவமானத்தை ஜெபத்தோடு தாங்கிய பிறகு, அரசரின் தயவு கிடைத்த பிறகு, அவருக்கு முன்பாக நின்றாள். ஓர் விருந்துக்கு அரசரை அழைத்து, எஸ்தர் ஹாமானின் திட்டத்தைத் தெரிவித்தாள். அப்போது ஹாமானும் உடன் இருந்தான். ஹாமானின் பதவி பரிக்கப்பட்டு, யூதர்கள் தாக்கப்படும் பட்சத்தில் தங்களைத் தற்காக்கும் அதிகாரத்தையும் அரசர் வழங்கினார்.
2. இந்த புத்தகத்தின் பின்னணி என்ன?
வேதாகமத்தில் எஸ்தர் வரலாறு நெகேமியாவிற்குப் பின் தோன்றினாலும், உண்மையில் 30 ஆண்டுகளுக்கு முன்பாக எஸ்தரின் காலம் அமைந்துள்ளது. இக்கதை பெர்சிய பேராட்சியில் நடைபெற்ற சம்பவத்தைக் குறிக்கிறது. அதிலும் பெர்சியாவின் தலைநகரான சுசாவில் அமைந்துள்ள அரசரின் அரண்மனையில் இடம் பெற்றிருக்கிறது.
3. இந்த புத்தகத்தின் அடக்கம் பின்வருமாறு:
வாஷியின் இடத்திற்கு எஸ்தர் ராணியாக உயர்த்தப்படுதல் (1:2). யூதர்களைக் கொன்று போடுவதற்கான ஹாமானின் சதித்திட்டம் புலப்படுதல். அதன் விளைவில் ஏற்படும் துக்கங்கள் புலப்படுத்தப்படுகின்றன. இந்தக் கதை எதிரிகளை யூதர்கள் வெற்றி கொண்டாடியதைக் காட்டுவதோடு, பூரிம் எனும் தங்கள் விடுதலையை நினைவு கூறும் பண்டிகையையும் மொர்தேக்காயின் வளர்ச்சியையும் காட்டுகிறது. (4:10)
4. சிறப்பு அம்சங்கள்
பெண்களின் பெயரில் சூட்டப்பட்ட வேத புத்தகங்கள் இரண்டில் எஸ்தரும் ஒன்று. (மற்றொன்று ரூத்) வ4.14ல் குறிப்பிட்டது போல் தேவனின் உண்மையான தோற்றம் இப்புத்தகத்தில் வெளிப்படாமல் இருப்பது ஓர் அசாத்தியமான காரியம். எனவே, சில சபை மூப்பர்கள் இப்புத்தகம் வேதாகமத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டதைக் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் தேவனின் பிரசன்னம் இப்புத்தகம் முழுவதும் வெளிச்சமாய் உள்ளது. தேவனின் அதிகாரத்தையும் தம் ஜனங்கள் மீது அவர் கொண்ட அன்பு நிறைந்த அக்கறையையும் வெளிப்படுத்துவதே அதன் நோக்கமாகும்.
5. பெலனும் நிறைவேற்றிய காரியங்களும்
a) அவளின் அழகும் குணாதிசயமும் பெர்சிய அரசரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.
b) தனது ஜனங்களைக் காப்பாற்றுவதற்கு ஊக்கத்தோடும் எச்சரிக்கையான திட்டத்தோடும் செயல்பட்டாள்.
c) ஆலோசனைகளுக்குச் செவி கொடுப்பதோடு இக்கட்டான நேரத்தில் செயல்படவும் துணிந்தாள்.
d) தனது பாதுகாப்பைவிட பிறரின் நலனில் அதிக அக்கறையுடையவளாய் இருந்தாள்.
6. அவள் வாழ்க்கையின் மூலம் நாம் கற்றுக் கொள்ளக் கூடிய பாடங்கள்
a) தேவனை ஆராதிப்பது பல சமயங்களில் நமது சொந்த பாதுகாப்பிற்கே மருட்டலாக அமைந்துவிடும்.
b) நம்மில் நியமித்துள்ள சூழ்நிலைகளுக்கு தேவன் நோக்கம் உடையவராய் இருக்கிறார்.
c) மனவூக்கம் தெள்ளந் தெளிவாக வெளிப்பட்டாலும், ஜாக்கிரதையான திட்டமிடலுக்கு ஈடுபெறாது.
d) தீர்க்கதரிசனப்பூர்வமான சாட்சியைப் பகிர்ந்து கொள்ளும்போது நாமும் எஸ்தரைப் போல் அபாயத்தைச் சந்திக்க நேரிடும்.
e) நம்முடைய கிறிஸ்தவப் பயணத்திலும், யூத ஜனங்களுக்கு நடந்த்துபோல், தேவன் பின்னணியில் செயல்படுகிறார் என்பதை விசுவாசிக்க வேண்டும்.
7. வேதாகம மேற்கோள்கள்:
எஸ்தர் புஸ்தகத்தில் கூறப்பட்டுள்ளதுபோல் அவளின் வரலாறு.
8. கலந்துரையாடுவதற்கான கேள்விகள்
8.1 அவளின் குடும்ப உறுப்பினர்கள் யாவர்?
8.2 மொர்தேக்காய் யார்?
8.3 ஹாமான் யார்?
8.4 அவள் சந்திக்க நேர்ந்த அபாயம் யாது?
8.5 தேவனின் நிமித்தம் மலேசியாவில் நமக்கு உண்டாயிருக்கும் சூழ்நிலையில் சந்திக்க வேண்டிய அபாயம் யாது?
No comments:
Post a Comment