Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Sunday, February 7, 2010

89. பர்னபாஸ் – ஊக்கம் நிறைந்தவன், பலரின் வாழ்வை மாற்றியமைத்தவன்

பர்னபாஸ் – ஊக்கம் நிறைந்தவன், பலரின் வாழ்வை மாற்றியமைத்தவன்


கரு வசனம்: அவன் நல்லவனும், பரிசுத் ஆவியினாலும் பரிசத்த விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான். அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய் சேர்க்கப்பட்டார்கள்.


வரலாற்றுச் சுருக்கம்

v பொது மக்களை முக்கியமான பொறுப்பிற்கு உயர்த்தினான்;
v ஆதித் திருச்சபையை புதிய சுவிசேஷ நிலையமாக மாற்றினான் (உம் – அந்தியோக்);
v சுவிசேஷகர்களுக்கு ஊக்கமூட்டினான் (பவுல், ஜான் மார்க).
v தங்களை உடைமைகள தானம் செய்ய பலரை ஊக்குவித்தான். (உம் – அன்னியாய்). கேட்கப்படாமலேயே தனது உடைமைகளை ஆலயத்திற்கு வழங்கினான்;
v சுய விருப்பத்தோடு பவுலின் தலைமைத்துவத்தை ஊக்குவித்து, சுவிசேஷப் பணிகளுக்கும் சபை சந்திப்புகளுக்கும் துணைத் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டான்;
v பவுலைத் தேடிக் கண்டுபிடித்து அவனைப் பாத்திரனாக்கி தனிச்சிறந்த காணிக்கையையும் அவனுக்குச் செலுத்தினான்.




1. முன்னுரை – அவனின் வராலாறு

ஒரு சில வேதாகமப் பாத்திரங்களே ஊக்கமும் ஆறுதலும் நிறைந்தவன் என்று வர்ணிக்கப்படுகிறார்கள். (அப்.4.36) அவனின் மறுபெயர் யோசேப்பு. கேட்கப்படாமலேயே தனது பெரும் சொத்துகளை காணிக்கை செலுத்தினான். அவன்தான் சவுலைப் பவுலாக (ரோமாபுரியப் பெயர்) ஜான் மார்க் போன்ற சபைகளின் தலையாய சுவிசேஷகனாக மாற்றினான். அவன் விவாகம் செய்து கொண்டானா இல்லையா என்று கூறப்படவில்லை (1கொரி.9.5-6). ஆதித் திருச்சபைகளுக்கும் சுவிசேஷப் பணிக்கும் பர்னபாவை மாணிக்கமாகவும் முத்தாகவும் உவமானமாகக் கூறலாம்.


2. குடும்ப்ப் பின்னணி

அவன் சைப்பிரஸில் தோன்றிய லேவியன். அவனுடைய குடும்பம் சைப்பிஸிற்கு மாறியதால் பர்னபாஸ் ஆலயத்தில் பணிவிடை செய்யவில்லை. அவன் நற்செய்தியை சைப்பிரஸ் மக்களுக்கே முதலில் வழங்கினான் – இதன் மூலம் ரோமாபூரிய நகர்களில் சைப்ரஸ் மக்களே முதலில் கிறிஸ்துவை அறிந்த மக்களாகத் தோன்றினர். கிறிஸ்து உயிர்த்தெழுந்த்தை விசுவாசித்த முதல் ஜனங்களில் இவனும் ஒருவன். மக்களுக்கு உற்றாசத்தையும் ஆறுதலும் வழங்கும் தனித் திறன் இவனிடம் காணப்பட்டது. சுவிசேஷத்தை அவன் சாதாரண மக்களுக்கு வழங்கினான். அதனைப் பெற்றுக் கொண்ட மக்கள் சுவிசேஷகர்களாக எழுந்தனர். நல்லவன் என்று புதிய ஏற்பாட்டில் முதன் முதலாகபு புகழப்பட்டதாக அறியப்படுகிறது. (அப்.11.24). பவுலுடன் ஆதரவாக இருந்த பரி.லூக்கா, பர்னபாஸை பரிசுத்த ஆவியாலும் விசுவாசத்தாலும் நிறைந்தவன் என்று வர்ணித்தான். பலரைக் கிறிஸ்துவுக்குள் கொண்டு வந்து சேர்த்தான். (அப்.12.24-25) கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய பவுலை மன்னித்த்தோடு சபைகளுக்கு அவனை ஏற்றுக்கொள்ளப்படும் பொருட்டு அறிமுகமும் செய்து வைத்தான். பின்னர் பவுல் தலையாய சுவிசேஷகராக எழுந்து, பல நிருபங்களை எழுதி நற்செய்தி கூறும் சபைகளை நிறுவினார். பர்னபாஸைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ள முடியவில்லை. அவன் துன்பம் நிறைந்த இரத்த பலியாக மரித்தான் என்று கருதப்படுகிறது. (மூலம்: A.R. Buckland, The Universal Bible Dictionary, Morrison & Gibbs, London, 1963, p. 56).


3. ஊக்கம் நிறைந்த அந்த மனிதன் என்ன வழங்கினான்?

a) தனது உடைமைகளை வழங்கியது மூலம் ஊக்கம் கொடுத்தன். அவன் வாழ்வு முழுவதும் தேவ நன்மையும், பரிசுத்த ஆவியும் ஊக்கமும் நிறைந்திருந்த்து. தள்ளப்பட்டவர்களையும் சாதாரன மக்களையும் தனது சுவிசேஷப் பணியில் சேர்த்துக் கொண்டான்
b) பிறரை முந்திக் கொண்டு தனது சொத்துடைமைகளை வழங்கி, பிறரையும் உற்சாகப்படுத்தி இருக்கிறான். “செல்வம் நிறைந்த அவன் தனது சொத்துகளை விற்று அதன் கிரயத்தை அப்போஸ்தலரின் பாத்த்தண்டை வைத்தான்” (அப்.4.36-37) கேட்டுக் கொள்ளப்படாமலேயே கொடுத்தான். பிறரையும் சுவிசேஷப் பணியின் நிமித்தம் ஆலயங்களுக்கு வழங்க உற்சாகப் படுத்தினான். அனநியாவும் சப்பீராவும் தங்கள் சொத்துகளை விற்றனர். ஆனால் அனநியா பரிசுத்த ஆவிக்கும் சீமோன் பேதுருவிற்கும் விரோதமாக பொய் சொல்லி தனக்கென்று ஒரு தொகையை வைத்துக் கொள்ள முயன்றான். (அப். 5: 1-4).
c) தனது சொந்த தேசமாகிய சைப்ரஸுக்கு நற்செய்தி வழங்கினான். தங்கள் சொந்த வசிப்பிடத்திற்குத் திரும்பி பலர் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ள முன்வர மாட்டார்கள். சிலிம் ரிவரில் உள்ள குளுனி தோட்டத்தில் முதல் பேராக இரட்சிக்கப் பட்ட நான் 1959ம் ஆண்டில் அதே தோட்டத்தில் ஒரு சிறுவர் ஞானப் பள்ளியை (சண்டே ஸ்கூல்) தொடக்கி நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள தேவன் எனக்கும் உதவி செய்தார். நமது கிராமத்திற்கோ வீட்டிற்கோ சென்று மீட்பின் வெகுமதியைப் பகிர்ந்து கொள்வது இயேசுவின் சித்தமாயிருக்கிறது. (மத். 8:20-34; மாற். 5: 1-20; லூக். 8:26-39). கெர்சியாவில் பிசாசு பிடிக்கப்பட்ட புத்திய சுவாதீனம் இல்லாம மனிதனும் சுகமடைந்தான். சுகமானதற்கு வெகுமதியாக அந்த மனிதன் இயேசுவைப் பின்தொடர்ந்து அவருக்குத் துணையாக இருக்க முடியுமா என்று கேட்டான். ஆனால் “வீட்டுக்குத் திரும்பி, தேவன் உனக்குச் செய்த்தைச் சொல்” (லூக். 8.39) என்றார். அவனும் நகர் வழியாகச் சென்று இயேசு தனக்குச் செய்த்தைக் கூறினான்.
d) பர்னபாஸ் சபைகளுக்குச் சிறந்த சுவிசேஷகர் ஆவான். யூத மார்க்கம் வந்த பவுல் ஒரு சிறந்த கல்விமானும் Gamaliel ஆவான். அவன் கிறிஸ்தவ சபைகளை மிக மோசமாகத் தாக்கி வந்த்தால், துன்பப்பட்ட மக்கள் அவனை ஆலயத்திற்குள் வரவேற்பதில் தயக்கம் காட்டினர். (அப். 9:27). தொடக்கத்தில் பர்னபாஸ்தான் அந்த சுவிசேஷக் குழுவை வழிநடத்தினான். (அப்.13.1-3) பின்னர் பர்னபாசின் அனுமதியோடு பவுல் அக்குழுவை வழிநடத்தியதாக்க் காணப்படுகிறது. புதிதாக இரட்சிக்கப்பட்ட பவுல் பின்னர் பர்னபாஸின் தலைமைத்துவத்தை ஏற்றத் தயாராக்கப்பட்டான். மிகச் சிலரே தங்கள் தலைமைத்துவப் பொறுப்பைப் பிறருக்கு வழங்க முன்வருவார்கள்.

சபைகளைத் துன்பப்படுத்திய பவுலைக் குறிந்து மக்கள் பயந்த்தால், அவனின் சீடத்துவத்தை நம்ப மறுத்தனர். பர்னபாஸ் சவுலைத் தேடி தர்சுவிற்குச் சென்றான். அவனை அந்தியோக்குவிற்குக் கொண்டு வந்தான் (அப்.12.24) பர்னபாஸ் பவுலுக்கு உதவி செய்ய முன்வந்து அவனை அப்போஸ்தலர்களிடத்தில் கொண்டு வந்தான். தமாஸ்குஸ் செல்லும் சாலையில் சவுல் எப்படி தேவனைப் பார்த்தான் என்றும் தேவன் அவனோடு பேசினார் என்பதையும் பர்னபாஸ் அவர்களுக்கு விளக்கினான். சவுல் எவ்வளவு உறுதியாக தமாஸ்குஸ் மக்களுக்கு போதித்தான் என்றும் பர்னபாஸ் விளக்கினான். (அப்.9.26-27) பவுலை சபைக்கு அறிமுகப்படுத்துவதில் அவன் அபாயத்தைச் சந்தித்திருக்க்க்கூடும் என்று காணப்படுகிறது.
e) பர்னபாஸ் ஒரு சிறந்த சுவிசேஷ சபையை வழங்கினான்
அந்தியோகிய சபை ஒரு சிறந்த சுவிசேஷ சபை ஆகும். (சுவிசேஷகர்களை) அனுப்பும் சபையாகத் திகழ்ந்த்து (அப். 13:1-3). “அவர்கள் உபவாசித்து தேவனைத் துதித்துக் கொண்டிருக்கும் போது, பரிசுத்த ஆவியானவர், “பர்னபாஸுக்கும் சவுலுக்கும் என் திட்டமிட்டுள்ள பணிக்காக அவர்களைத் தாருங்கள். தேவன் அவனை நேரடியாக அபிஷேகம் செய்யாவிட்டாலும், சபைகள் அவனை அப்போஸ்தலர் என்றழைத்தன. அந்தியோகியாவே சுவிசேஷகர்களை அனுப்பிய முதல் சபையாகும்.
f) பர்னபாஸ் பவுலோடு ஒரு சுவிசேஷ இயக்கத்தை அருளியுள்ளான். அவன் இரண்டாவது சுவிசேஷ இயக்கத்தையும் தொடக்கினான். பர்னபாஸின் மாமன் மகனாகிய யோவான் மாற்கு தனது முதல் சுவிசேஷப் பணியை முடிக்காத நிலையில் திரும்பிய பிறகு, அவனை இணைந்து கொள்ள வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை. இருப்பினும் பர்னபாஸ் அவனுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்க கேட்டுக் கொண்டான். இதில் உடன்பாடு ஏற்படாத்தால் இரண்டு வெவ்வேறு சுவிசேஷப் பணிகள் தொடக்கப்பட்டன. சீலாஸைப் பவுலும் யோவான் மாற்குவை பர்னபாஸும் தெரிந்து கொண்டார்கள். பர்னபாஸ் பொறுமையும் மூலாதாரமும் நிறைந்தவன். ஒருமுறை யோவான் மாற்று பயனற்றவன் என்று கூறியிருக்கிறான். பிறகோ, யோவான் மாற்று பயன் நிறைந்தவன் என்று கூறியதோடு தனது உழைப்பில் யோவான் மாற்குவையும் இணைத்துக் கொண்டார். பயனற்ற மனிதனை தேவன் பயன் நிறைந்தவனாக மாற்றியமைத்தார். இவனே மாற்கு சுவிசேஷத்தை எழுதியவன் ஆவான்.


முடிவு

எல்லோரும் பாவிகள் (ரோமர். 3:23) பர்னபாவுக்கும் விதிவிலக்கு இல்லை (கலா. 2), பேதுருவோடு பர்னபாசும் புறஜாதி விசுவாசிகளை விட்டு தனித்து வாழ்ந்தான். பவுல்தான் அவன் மனதை மாற்றினான். நமக்கு நாமே கேட்டுக் கொள்கிறோம்: நமது சபை சுவிசேஷத்திற்காக (அனுப்புதல்) என்ன செய்த்து? நமது சபையின் சுவிசேஷப் பணிக்காக நாம் தனிப்பட்ட முறையில் என்ன செய்திருக்கிறோம்? கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்தவர் அல்லாதவருக்கும் உதவி செய்ய ஊக்கம் மிகவும் பயனுள்ள வழியாகும். மல்லிகையைப் போன்று தனது மனத்தால் மக்களை ஈர்ப்பது போல, நாமும் நமது ஊக்கத்தால் மக்களை இயேசுவண்டைக் கவர வேண்டும். “உன் ஒளி பிரகாசித்து மக்கள் முன் தேவனை மகிமைப்படுத்தட்டும்” என்று இயேசு சொன்னார். பர்னபாசிட்ம் காணப்பட்ட ஊக்கவுணர்வு கிறிஸ்தவர்களை ஆக்கப்பூர்வமான சுவிசேஷகர்களாக்கட்டும்.

உலகப் பிரகாரமனா நெருக்குதல் குருமார்களையும் சபையாரையும் அதிகமாகத் தாக்கம் செய்து வருகிறது. இது அவர்களின் ஆக்கத்தைக் கெடுத்துப் போடக் கூடும். இரு தரப்புக்கும் ஊக்கமும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன. எனது 35 ஆண்டு கால ஆங்கிலிக்கன் உழியத்தில் ஏற்றத்தையும் இரக்கத்தையும் கண்டு வந்திருக்கிறேன். ஒரு சிலரே தேவ அழைப்பிற்கு உண்மையுள்ளவர்களாக பணியாற்ற உற்சாகப்படுத்தி இருந்தாலும் அவர்களுக்கு நன்றி பாராட்டுகிறோம். குருமார்களுக்கும் சபை மூப்பர்களுக்கும். சபையார் பொருத்தமான ஊக்கத்தைத் தர வேண்டும். இது தேவனோடு நாம் கொண்டுள்ள இணையான பங்காளித்துவம் ஆகும்.


4. வேதாகம மேற்கோள்கள்: The Gospel of Luke and Acts of Apostles, 1 Corinthians, Galatians and 1 Peter are helpful.


5. கலந்துரையாடலுக்கான கேள்விகள்

5.1 அவனின் தாய்நாடு எது?
5.2 அவன் பவுலுக்கு எப்படி உதவினான்?
5.3 அவன் யோவான் மாற்குவிற்கு எப்படி உதவினான்?
5.4 தேவ ஊழியத்தில் பங்கு பெற நீ எப்படி பிறரை ஊக்குவிக்கலாம்?
5.5 யோவான் மாற்குவின் விவகாரத்தில் பவுல் எப்படி பர்னபாசைப் பாராட்டினான்?

No comments:

Post a Comment