(பேராயர் பத்துமலை அவர்களின் குறிப்புகள்)
A. இறையியல் என்றால் என்ன?
இறையியல் பொதுவாக தேவனையும் மார்க்கத்தையும் விவாதிக்கிறது. இறையியலின் நோக்கங்கள் மாறுபட்டிருக்கின்றன. (உம் – ஆசியா அல்லது மலேசியாவின் இறையியல்)
1. தேவனைப் பற்றிய கேள்வி தேவனைப் பற்றிய சம்பாஷனை இறையியல் என்று புரியப்படுகிறது. தேவனின் பிரசன்னத்தை அற்பமாக்க் கருதக்கூடாது. தேவன் உண்மையிலேயே தோன்றியிருக்கிறாரா? அப்படியே தோன்றியிருந்தாலும் அவரைப் பற்றி ஏதாவது அறிந்து கொள்ள இயலுமா? தேவனைப் பற்றி தர்க்க ரீதியாகப் பேச முடியுமா?
தேவனின் பிரசன்னம்:
தேவனின் பிரசன்னத்தைப் பற்றி பொதுவான மூன்று கருத்துகள் உள்ளன: நாத்திகம் (Atheism), எதார்த்தவாதம் (Agnosticism) ஆத்திகம் அல்லது இறை பக்தி (Theism).
a) நாத்திகம் (Atheism)
இது இறைவனை முற்றும் மறுக்கும் கொள்கை. (உம்- கார் மார்க்ஸ், சிக்மண்ட் ஃபிரட்)
b) எதார்த்தவாதம்??? (Agnostics)
இறைவன் உள்ளாரா இல்லையா என்று கவலைப்படாத கொள்கை. அவர் தோன்றியிருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த உலகம் உருண்டு கொண்டுதான் இருக்கும். சில சமயக் கலாச்சாரங்கள் கூட இறைவனின் பிரசன்னத்தைப் பற்றிக் கவலைப் படுவதில்லை (non-theistic) (உம் – தேர்வடா, பௌத்தீகம்).
c) ஆத்திகம் (Theism)
தோன்றியிருக்கிறார் என்பதற்கு 5 ஆதாரங்களை முன் வைக்கிறார். அவை சமகால உலகியல் தர்க்கங்கள்தாம். ஆயினும் இந்த ஆதாரங்கள் கண்டனுபவிக்க இயலாத தத்துவங்கள். கொள்கையளவில் காரண காரியங்கள் அடிப்படையில் மனிதர்கள் தேவனைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
2. தேவனைப் பற்றி நாம் பேசலாகுமா?
ஞானார்த்தக் கலாச்சாரம் முடியாது என்று மறுக்கிறது. ஆனால் வேதாகமக் கலாச்சாரமும் கிறிஸ்தவக் கலாச்சாரமும் இது கூடும் என்று ஆமோதித்து தேவனைப் பற்றி சாதகமான புரிந்துணர்வைக் கொண்டிருக்கலாம் என்று பகர்கிறது.
a) எல்லா படைப்புகளும் தேவனின் சாயலை குறிப்பிட்ட அளவில் சார்ந்திருக்கின்றன. குறிப்பாக மனிதன் தேவனின் சாயலிலும் குணாதிசயத்திலும் படைக்கப் பட்டிருக்கிறான். ஆனாலும் தேவனே எல்லாவற்றிற்கும் மேலானவர். நமது மனித வியாக்கியானங்கள் தேவனின் மகத்துவத்தை எட்டிப் பிடிக்க இயலாது.
தேவனைப் பற்றி மனிதனுக்கு ஓரளவு ஞானம் இருக்கலாம். ஆனால்
தேவனைப் பற்றிய அவர்களின் ஞானம் மட்டுறுத்தலுக்குட் பட்டது. (ரோமர். 3:23).
3. தேவனைப் பற்றிய ஞானம் – ஓர் ஒப்புவமைஒப்புவமை இணக்கப்பாடு அல்லது சமன்பாட்டிற்கு முரணானது. இணக்கப்பாடு என்றால் ஒரு குறிப்பிட்ட சொல் அல்லது மொழி ஒரே அர்த்த்த்திற்குப் பயன்படுத்தப் படுகிறது என்று அர்த்தமாம். தேவனுக்கும் இதர படைப்புகளுக்கும் ஒரே பதத்தையோ மொழியையோ பயன்படுத்த இயலாது. தேவன் கணக்கிட முடியாத தன்மை வாய்ந்தவர். மனிதனோ மற்ற உயிரினமோ கணக்கில் அடங்கும் தன்மை வாய்ந்தவை. ஒப்புவமை மூலமே இறையியலைப் பற்றி விவாதிக்க முடியும். ஒப்புவமைக் கொள்கையை வகுத்தவர் அரிஸ்டாட்டில். இப்படிப்பட்ட ‘உடன்படிக்கை‘ இல்லையென்றால்
நாம் என்றுமே தேவனை அறிய முடியாது. இயேசு தேவனை ‘எங்கள்
பிதாவே’ என்று அழைக்கக் கற்றுத் தந்தார்.
4. தேவனைப் பற்றிய அனுபவம்
ஆன்மீகத் தன்மையும் ஆன்மீக அனுபவமும் நுணுக்கம் நிறைந்த காரியங்கள் ஆகும். இவற்றைப் பல இயல்பியல் கூறுகள் அறிய முற்படுகின்றன. சமய வரலாறு, சமயக் கூறுகள், சமய சமூகவியல், சமய மனோவியல், சமயத் தத்துவம் சமய விநோதவியல், சமய இறையில் போன்றவை இவற்றுள் அடங்கும்.
ஒருவர் பல விதமான சமய அனுபவங்களைப் பெற்றிருப்பார். உம் –
எரிகின்ற புதர் (ஆதி.3.2-6), மற்றும் சூரியனின் மகத்துவம் மற்றும் பிரகாச அனுபவம் (Transfiguration மத்தேயு 17:1-13). தேவனை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது. அதே நேரத்தில் நமது தினசரி உபயோகத்தில் உள்ள சொற்களாலும் விளக்க முடியாது. இறையியல் விந்தை நிறைந்த காரியத்தை இயல்பான மொழியில் விளக்குகிறது என்று யாரோ ஒருவர் கூறியுள்ளார்.
5. உருவகமான சமய மொழி
இறைத் தன்மையை உருவகமாக விளக்க இரண்டு உதாரணங்கள் வழங்கப் பட்டிருக்கலாம்: இயேசு கிறிஸ்துவே கிறிஸ்தவத்தின் உச்சநிலை அடையாளம். இயேசுவில் தெய்வத் தன்மையும் மனிதத் தன்மையும் இணைந்து விநோத (உச்ச) நிலையில் ஐக்கியமாகின்றன. இயேசுவினிடத்தில் நாம் தேவனைக் காண்கிறோம். அவரை அனுபவிக்கிறோம். இயேசுவே தேவனுக்கும் மனிதனுக்கும் தொடர்பதிகாரி. என்னைக் கண்டவன் என் பிதாவைக் காண்கிறான் என்று இயேசு சொல்லியிருக்கிறார். இயேசு கிறிஸ்துவே தேவனின் உடன்படிக்கை. நற்கருணையின் போது கிறிஸ்தவ சமூகம் வெளிப்படுத்தப் பட்டு, அனுபவிக்கப் பட்டு, தியானிக்கவும் படுகிறது.
ஆனாலும் கிறிஸ்துவின் பிரசன்னம் சபையிலும் உலகிலும் ஏற்கனவே நடந்தேறிவிட்டது. நற்கருணைக்கு முன்பிருந்து கூட இது நிதரிசணமாகி விட்டது. நற்கருணை அந்த நிதரிசணத்திற்கு ஒரு புற அடையாளம் மாத்திரமே. தேவனின் வெளிப்பாடு அல்லது சுய ஈகை நமது சிந்தை, நியாயப்பாடு, உடல், மற்றும் புலச் சுவையின் மூலம் வெளிப்படுகிறது. இதனை உருவகப் படுத்தி தியானிக்கலாம். இயல்பு இறையியலும் கிறிஸ்தவ இறயியலும் உருவக தன்மையைப் பெற்றிருக்கிறது.
No comments:
Post a Comment