Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Thursday, March 11, 2010

பல்வேறு விளக்கத்தில் கிறிஸ்தவ இறையியல்

தம்முடைய நேசக் குமாரன், நமது இயேசு கிறிஸ்துவையும் பரிசுத்த ஆவியானவரையும் நம்மிடத்தில் அனுப்பி தமது திட்டத்தை முழுமையாக வெளிப்படுத்தினார்.

1.    ‘தியோலோஜியா‘:  
இது கிரேக்க வார்த்தை ஆகும். ‘தியோஸ்’ என்றால் தேவன். ‘லோகோஸ்’ என்றால் உரை அல்லது விவாதம் அல்லது ஆய்வு. எனவே இறையியல் என்று பொருள்படும் இப்பதம், தேவனைப் பற்றிய ஆய்வு அல்லது விவாதம் என்று அர்த்தப்படுகிறது.

2.    விசுவாசத்தை நாடும் ஞானம்:  
பரி.அன்செல்ம் இறையியலை விசுவாசத்தை முன்னிட்டு தேடப்படும் புரிந்துணர்தல் என்று அர்த்தப்படுத்துகிறார். இதன் மூலச் சொல் ஃபீடஸ், க்வாரேன்ஸ், இன்ட்தெலெகம் என்பதாகும். இறையியல் என்பது தேவனின் வார்த்தையைப் புரிந்துகொள்ளவும் மனுகுல இரட்சிப்புக்காக உலக வரலாற்றின் வெளிப்பாடையும் மேற்கொள்ளப்படும் தேடல் என்று பொருள் கொள்ளலாம்.

புரிந்து கொள்வதற்காக நான் புரிந்து கொள்கிறேன். விசுவாசம் மாத்திரமே உண்மையான புரிந்துணர்வுக்கு வழி நடத்த முடியும். தேவ வாக்கு மாத்திரமே உன்னதமான பதிலாக இருக்க முடியும். – இவ்வாறு அன்செல்ம் கூறிகிறார். தேவன் வெளிப்படுத்தும் யாவற்றையும் அதன் காரணகர்த்தாவை ஆராயாமல் வெளிப்படுத்துவதை ஏற்றுக் கொள்கிறார். அறிவுப்பூர்வமான சிந்தை கரணகர்த்தாவால் நிரூபிக்க இயலாதவற்றை நிராகரித்து விடுகிறது. தேவ வசனம் சத்தியமாய் (யோவான் 17.17) இருப்பதால், மெய்தத்துவ ஞானத் தேடல், அந்த தேவ வாக்கைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
ஒருவன் புரிந்து கொள்வதற்கும், ஆன மட்டும் (ஞானத்தை) விளக்குவதற்கும் அழைக்கப் பட்டிருக்கிறான். ஒவ்வொரு புதிய தலைமுறையினரும் தங்கள் சமகால விசுவாசத்திற்காகப் பாடுபடவும் கணக்கு காட்டவும் வேண்டியதாய் இருக்கிறது. அந்த விசுவாசக் கணக்கு பிறருக்கு சத்தியத்தைக் குறித்த நம்பிக்கையையும் (1 பேதுரு 3.15) வேண்டியதாய் இருக்கிறது. விசுவாசத்திற்கும் அறிவுப்பூர்வமான காரணிக்கும் இடையில் உள்ள இறுக்கத்தை முழுமையாக நீக்கிவிட முடியாது. அதேபோல் இறையியல் மற்றும் மறைபொருள் இறுக்கத்தையும் போக்க முடியாது. (ஈஸ்டர் சபை???) இந்த மாறுபாடுகள் ஆரோக்கியமானதாகவும் கனி நிறைந்த்தாகவும் திகழ்கின்றன. அதுவே இறையிலின் ஆக்கப்பூர்வத்திற்கும் புதுமைக்கும் மூலமாகவும் ஒளிர்கிறது.

3.    மேற்கத்திய அணுகல் 
அறிவுப்பூர்வமாகவும் ஞானம் நிறைந்த்தாகவும் மறைபொருளாகவும் தத்துவப்பூர்வமாகவும் அமைந்திருக்கிறது. அதே வேளையில் கிழக்கத்திய அணுகல் வேத ஆதாரத்தையும் பக்தியையும் வழிபாட்டையும் அணுகுமுறையாக்க் கொண்டிருக்கிறது. இறையியல் என்பது வரலாற்றில் இடம் பெற்றுள்ள (அதிலும் குறிப்பாக இயேசு கிறிஸ்துவில்) தேவ வாக்கையும் செயலையும் புரிந்து கொள்வதோடு விளக்கம் தரும் காரியமாகும். ஆராதனை வெளிப்பாடு இறையியலின் தனிச் சிறப்பான மூலமாகும். எல்லா கிறிஸ்தவ விசுவாசங்களும் சித்தாந்தங்களும் தங்கள் சபைகளின் ஆராதனை மற்றும் ஜெபங்களின் வரலாற்றைக் கொண்டுள்ளன. விசுவாசப் பிரமானங்கள் அடிப்படையில் அறிக்கையிடுதலும் சாட்சி பகர்தலும் ஆராதனையின் அங்கமுமாகும். ஜெபங்களும் ஆராதனைகளும் விசுவாச அனுபவங்களின் விளைவுகளாகும்.   கிழக்கத்தியர்கள் விசுவாசமும் அனுபவமும் இல்லாத வெறும் ஆராதனை முறைமையை நிராகரிக்கிறார்கள்.


4.    விசுவாசத்தின் கண்ணாடியான இறையியல்– மெய்பொருளின் வெளிப்பாடு
எதிர்ப்பு மறுமலர்ச்சிக் கொள்கை (புரோட்டஸ்டன்) சுவிசேஷத்தை மட்டும் சார்ந்திருக்க வேண்டும் என்று முன்மொழிந்த்து. பிற்காலத்தில் வேதத்தையும் திருச்சபைகளையும் ஒன்று விடாமல் எல்லாவற்றையும் புறக்கனித்து விட்டது. விளைவாக, இறையியல் தத்துவப்பூர்வமாகவும் சிந்தனைப்பூர்வமாகவும் திகழ்ந்தது.

சமுதாயத்தில் தாக்கத்தை உண்டு பண்ணும் பொருட்டு, விசுவாசத்தை அடையாளம் கண்டு, ஆராய்ந்து, அதன் அனுபவத்தை வெளிப்படுத்தும் கடமையை இறையியல் சுமக்கிறது என்று புரிந்து கொள்ளப்பட்டது. தனி மனிதனை மாத்திரம் சாராமல் சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று அரசியல் சார்ந்த இறையியலும் சுதந்திரம் சார்ந்த இறையியலும் வலியுறுத்துகிறது. விசுவாசத்தின் அடிப்படையில் எல்லாவற்றையும் விவாதிப்பது இறையியல் ஆகும். பிற்காலத்தில் வானத்தில் இருந்து இறங்கிய விசுவாசம் பூமியின் விசுவாசத்தைப் பூர்த்தி செய்த்து. இதனை மனிதன் விளக்குவதற்குக் கடமைப் பட்டவனாய் இருக்கிறான்.

a.    மனுகுலம் சார்ந்த இறையியல்

மனிதனைச் சார்ந்த ஆகமமும் இறைவனைச் சார்ந்த ஆகமும் ஒன்றுக்கொன்று பூர்த்தி செய்கின்றன. இறையியல் என்பது வெறும் தேவனை தனித்த நிலையில் ஆராயாமல் தேவனுடன் உறவாடுகிற மனிதனையே ஆராய்கிறது (அல்லது மனிதனாகத் தோன்றிய இறைவன்). தேவன் வெளிப்படுத்தியவாறு மனிதனுக்குக் கிடைத்த இரட்சனியத் திட்டத்தை விவாதிப்பது இறையியல். எனவே, இறையியல் தேவனைத் தனித்த நிலையில் ஆராயவில்லை. ஆனால் தேவனோடு உறவாடுகின்ற மனிதனைப் பற்றி விவாதிக்கிறது. மேலும், மனித இரட்சனியத்திற்காக மறை பொருளாக நிற்கின்ற (எபிரேயர் 1.1) தேவ திட்டத்தை அது அலசுகிறது. இறையியல், இறைவனை விட மனிதனையே அதிகம் பேசுகிறது. எனவே, இறையியலை மனுகுலம் சார்ந்த இறையியல் என்று தீர்க்கமாகப் புரிந்து கொள்ளலாம். கிறிஸ்தவ இயல் என்பதை தேவன் மனிதனாகத் தோன்றினார் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

b.    நுணுக்கப்பூர்வமான கிறிஸ்தவத்திற்கு விமர்சனப்பூர்வமான மறு ஆய்வைத் தரும் இறையியல்
வார்த்தை (வாக்கு) அடிப்படையில் இறையியல் நுணுக்கப்பூர்வமான மறு ஆய்வைத் தருகிறது என்று குத்தரேஸ் விளக்கம் தருகிறார் (சுதந்திரப்பூர்வமான இறையியல், 1965, பக்.6-15) சபை தானாக மையமிட்டு இருக்கவில்லை. மாறாக. தேவனுடைய இராஜ்யத்தில் மையமிட்டு இருக்கிறது. கிறிஸ்தவ விசுவாசம் ஆதி முதலே தோன்றி விட்டது. வெறுமனே பல உண்மைக் கூற்றுகளின் தொடரால் நிறுவப்பட்டு புரிந்து கொள்ளப்படவில்லை. அது ஒரு நுணுக்கமான அழைப்பு. தேவனுடைய இராஜ்யத்திற்காக ஆயத்தம் செய்வதற்கு ஒத்தாசையாக இருக்கிறது. கிறிஸ்தவ நுணுக்கத்தை நுட்பமாகப் பிரதிபலிப்பது இறையியல். ‘சுதந்திரப்பூர்வமான இறையியல்’ ஒரு கிளையாகப் பிரிந்த்தன்று. மாறாக இறையியலை வெளிப்படுத்தும் விதம்.

c.    தொடர்ந்து வளரும் இறையியல்

காலத்தின் அடையாளங்களைச் சோதித்துப் பார்த்து விசுவாசத்தை சுவிசேஷ வெளிச்சத்தில் வியாக்கியானம் செய்வது சபையின் கடமையாகும். இது இறையியலின் பெருங் கடமையாகவும் விளங்குகிறது. இது தொடர் வளர்ச்சியின் தன்மையைக் கொண்டுள்ளது. வேதத்தை வாசிப்பதோடு, கடந்த கால மற்றும் தற்கால வரலாற்றை நிகழ்கால சூழ்நிலைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பது நமது கடமையாய் இருக்கிறது.

தற்காலத் தோற்றத்திற்குரிய தன்மைகளையும் நிதர்சன தன்மைகளையும் தேவ வாக்கின் வெளிச்சத்தில் விளக்கம் தரும் தோற்றத்தை இறையியல் கொண்டுள்ளது. கிறிஸ்தவ விசுவாசப் பொருள்கள் திரும்பத் திரும்ப விளக்கப்பட வேண்டியுள்ளது. அப்படிச் செய்வதால்தான் அடுத்தடுத்து வரும் புதிய தலைமுறையினருக்கு தெளிவான விளக்கம் கிடைக்கும். ஆகவே, இறையியலை தொடர்ந்து அல்லது ஓயாது வளர்ந்து வருடம் நடவடிக்கையாகக் கருத வேண்டும்.

d.    கிறிஸ்தவப் புராணங்களை விளக்கும் இறையியல்

இறையியல் கிறிஸ்தவப் புறாணங்களில் தொடங்குகிறது: தேவன் மனுகுல வரலாற்றில் நுழைந்து, பாவத்தில் இருந்தும் மரணத்தில் இருந்தும் நம்மை இரட்சிப்பதற்காக இயேசு கிறிஸ்துவாக மனு அவதாரம் எடுத்த புராணம் அது.

e.    செயல்பூர்வமான தன்மை வாய்ந்த இறையியல்

புதிய அனுபவத்திலும் நவீன உலகத்தாரின் மாற்றத்தின் தேவைக்கும், விசுவாசிக்கும் மக்களின் ஊடாகவும் வழியாகவும், ஒரு கோணத்தில் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாட்டு உணர்விலும் மறு கோணத்தில் கிறிஸ்தவ விசுவாசத்தைப் புதுப் புதுக் கோணத்தில் விளக்கம் பகவர்வதிலும் பொதுவாக மனித வாழ்க்கையின் அர்த்தத்தில், கிறிஸ்தவ இறையியல் ஓர் ஒழுக்கச் சீரான மற்றும் விமர்சனப்பூர்வமான விளக்கப் பொருளாகத் திகழ்கிறது.  முடிவு பரியந்தம் தீர்க்கதரிசிகளின் குணாதிசயங்கள் மூலம் பரிசுத்தம் நிறைந்த தோற்றத்திற்காகத் தற்காலக் கிறிஸ்தவ விசுவாசிகளைத் தூண்டும் வகையில் தன்னை விரித்துக் காட்டும் விமர்சனப்பூர்வமான ஒழுங்காக இறையியல் திகழ்கிறது. வேத்த்திலும் கிறிஸ்தவ கலாச்சாரத்திலும், கிறிஸ்தவ வெளிப்பாட்டின் பார்வையில், மனுகுலம், அண்டசராசம், தெய்வீகம் ஆகியவை அடங்கிய மனித வாழ்வின் ஒட்டுமொத்த பொருளையும் மறைபொருளையும் பிரதிபலிக்கும் வகையில் இறையில் திகழ்கிறது. இறையியல் விளக்கவுரைகள் தற்கால நிதரிசனங்களையும் (உம் – அறிவியல்) சந்திக்க வேண்டியுள்ளது. ஒட்டுமொத்த இறையியல் விளக்கவுரை கிறிஸ்தவ மக்கள் வட்டத்திற்குள் இடம் பெறுகிறது. கிறிஸ்தவ மக்கள் அல்லது திருச்சபையை விலக்கி விட்டு, ஒரு தனி மனிதனின் ஆக்கப்பூர்வமான (ஆனால் குறுகிய) சிந்தனையால் விளைந்து விடாது. தீர்க்கதரிசன குற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும் இறையியலாளர்கள் மக்களின் பொது உறவு அதிகாரியாகத் (பேச்சாளராக) திகழ்கிறார்கள்.

No comments:

Post a Comment