இறையியல் நடவடிக்கையில் இயல்பாகவே இறுக்கங்களும், வேறுபாடுகளும், நிர்பந்தங்களும், பிரிவினைகளும் உள்ளன. பல அது பல சர்ச்சைகளையும், ஐயங்களையும் மாறுபாடுகளையும் சந்திக்கின்றது. அவற்றில் தொடர்புடைய சிலவற்றைக் காண்போம்.
1. மறை பொருளும் வெளிப்பாடும்
விசுவாசமும் காரணியும் இறையியலில் தத்தம் கடமைகளைக் கொண்டுள்ளன. இருப்பினும் அது கற்பனையில் இருந்தும் அறிவுப்பூர்வத்திற்கும் அப்பாற்பட்டு நடுநிலையாக நிற்கிறது. இறையியலின் தொடக்கம் அறிவுப்பூர்வமாக இல்லாமல் விசுவாச அனுபவமாக உள்ளது. இறையியல் புரிந்துணர்வு முற்றுப் பெறாத மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கையாக அமைந்துள்ளது. விசுவாசம் தனித்து நின்று ஒரு மெய்யான புரிந்துணர்வைத் தரவல்லது. விசுவாசத்திற்கு மட்டுமே மெய்யான பதிலைத் தரும் சக்தி உள்ளது. இறையியல் விவாதத்தில் விசுவாசத்திற்கும் காரணகர்த்தாவுக்கும் மறைபொருளுக்கும் இடையில் எப்போதும் மாறுபாடுகளும் இருக்கங்களும் தோன்றிய வண்ணம் உள்ளன. நம்மால் தேவனைப் பற்றியும் அவர் திட்டத்தின் இரகசியத்தைப் பற்றியும் பேசக் கூடும்.
2. அடையாளமும் மாற்றமும்
தீர்க்கதரிசிகள் மூலமாகப் பேசப்பட்டு, சுவிசேஷகங்கள் மூலம் ஊட்டம் பெற்றுள்ள தேவ வார்த்தை (யாத்திராகம்ம், உடன்படிக்கை, அவதாரம், மரணம் மற்றும் இயேசவின் உயிர்த்தெழல்), மனுகுல இரட்சிப்புக்காக அவரின் திட்டத்தை வெளிப்படுத்துகிறது. தேவனைப் புரிந்து கொள்ளும் நமது ஆற்றல் தொடர்ச்சியாக செம்மைப்படுத்தப்பட்டு, விளக்கப்பட வேண்டியுள்ளது. ஆகவே, கிறிஸ்தவ இறையியலுக்கு தொன்மையும் மாற்றமும் தேவைப்படுகிறது.
3. சிக்கல் நிறைந்த முனைப்பான காரியம்
எனவே, இறையியல் பிரித்தாள முடியாத ஒப்பந்தம். அது கண்டனுபவிக்க முடியாத, கணிக்கமுடியாத, கற்றல் நடவடிக்கைக்கு அப்பாற்பட்ட துறை ஆகும். மாறாக, அது நமது வாழ்க்கையை துலங்கச் செய்யும் செயல்பூர்வமான நெறியாகும். ஓர் இறையியலாளன் தான் கற்றுக் கொடுத்ததை விசுவாசிப்பதோடு அதனைச் செயல்படுத்தவும் வேண்டும். அது ஒரு சிக்கலான நடவடிக்கை ஆகும்.
4. சமுதாய மற்றும் தனிநபர் இறையியலாளன்
தனிநபர் சார்ந்த இறையியலாளன் சமுதாயச் சார்புடைய இறையியலை ஏற்றுக் கொள்கிறான். ஆனாலும் இரண்டு தரப்பிற்கும் மாறுபட்ட சொந்த அனுபவங்களும், தரிசணங்களும், வரங்களும் கிடைக்கின்றன. இறையியலைப் புரிந்து கொள்வதற்கான எல்லா சவால்களும் சமுதாயத்திலேயே தோன்றுகின்றன. ஆனாலும் கிறிஸ்த மக்கள் யாத்திரையை (பயணத்தை) மேற்கொள்ளும் மக்கள் ஆவர். அவர்கள் தங்கள் வரலாற்று நிலைமைகளுக்கும் தொடர்ச்சியான புத்தாக்கத்திற்கும் கட்டுப்பட்டிருக்கிறார்கள்.
5. தேசங்களையும் வரலாற்று எல்லைகளையும் தாவிச் செல்லும் ஒற்றுமை வேற்றுமைத் தன்மை
கிறிஸ்தவத்திலும் பல்வேறு கலாச்சாரங்களும், (கத்தோலிக்கம், ஆர்த்தடொக்ஸம், புரோட்டன்சம் பெந்தேகோஸம் போன்ற) சபைப் பிரிவுகளும் இருக்கதான் செய்கிறது. ஒவ்வொன்றுக்கும் தத்தம் இறையியல்கள் உள்ளன. (உதாரணமாக கத்தோலிக்க சபைகளின் விசுவாசப் பிரமாணம், 1994). எனவே, இறையியல் நடவடிக்கை தேசங்கள் மற்றும் வரலாற்று எல்லைகளைக் கடந்து செல்லும் தொடர்ச்சியான ஒற்றுமை வேற்றுமைகளைக் கொண்டிருக்கிறது.
6. பொது மற்றும் நிலப்பரப்புக்கு உட்பட்ட இறையியல்
தாமாஸ் அக்குய்னன் என்பர் பல நூற்றாண்டுகளுக்கு முழு கத்தோலிக்க சபைக்கும் நிலையான இறையியலாளனாக கருதப்பட்டார். அவர் அரிஸ்டாட்டில் கொள்கை அடிப்படையில் மிகப் பெரிய மாற்றத்திற்குட்பட்ட புதுமையான இறையியலை அறிமுகப்படுத்தினார். உண்மையில் அவருடைய சமகால மக்கள் யாரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் மரணமடைந்த உடனேயே, பாரிஸின் பேராயர் அவரின் புத்தகங்களைத் தீயிட்டுக் கொளுத்தினார். அவருடைய இறையியல் அவருடைய சமகால கண்டுபிடிப்பாகும். அது மத்தியகால சமூக, கலாச்சார மற்றும் அரிஸ்டாட்டில் கொள்கைக்குக் கட்டுப்பட்டது. எந்த இறையியலும் நிலையானதன்று. அவை வரலாறு, சமுதாயம் மற்றும் கலாச்சாரப் பரப்புக்கு உற்பட்டது.
தற்காலத்தில் வளர்ந்து வரும் சில இறையியல் பாணிகளைக் குறிப்பிட விரும்புகிறோம்:
a) சுதந்திர இறையியல் – சமுதாய – பொருளாதார – அரசியல் ரீதியாக விளைவிக்கப்படும் வறுமை, துஷ்பிரயோகம்மற்றும் அநீதிக்கு விரோதமாக பேசப்படும் சமயக் கருத்துகள்.
b) மகளிர் இறையியல் – ஒதுக்கப்படும் மற்றும் உரிமை மீறப்படும் பெண்கள் இந்தத் துறையை வளர்த்து வருகிறார்கள்.
c) கருப்பர் இறையியல் – இனத் தூவேஷத்தோடு ஒடுக்கப்படும், ஒதுக்கப்படும், மற்றும் உரிமை மீறப்படும் கருப்பர்கள் மேற்கூறியது போல் (மகளிர்) இந்தத் துறையை வளர்த்து வருகிறார்கள்.
d) தலித்தியர் இறையியல் – தலித்தியர்கள் அல்லது தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் சுதந்திரம், நீதி சம உரிமை அடிப்படையில் இந்தியாவில் குரல் கொடுக்கும் அடிப்படையில் இத்துரை வளர்ந்து வருகிறது.
e) வம்ச இறையியல் – ஜனங்களின் வம்சாவளி அடிப்படையில் இந்தத் துறை வளர்ந்து வருகிறது.
Saturday, March 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment