http://www.ziddu.com/download/9196623/GOALSOFTHEOLOGIZINGTamil.docx.html
http://www.ziddu.com/download/9196745/GOALSOFTHEOLOGIZINGTamil.pdf.html
தேவன், பிற மனிதர் மற்றும் உலகைப் பற்றிய மனிதனின் சரியான புரிந்துணர்வின் படி இறையியல் நடவடிக்கையின் இலட்சியம் அவதாரமானது. வெவ்வேறான இலட்சியங்களை நாம் இங்குப் பட்டியலிடுகிறோம்.
1. கிறிஸ்தவத்தின் தோற்றமும் முழுமையும் கிறிஸ்துவையும் அவர் சார்ந்த அனுபவத்தையும் மையமாக்க் கொண்டுள்ளது. தேவனின் முகத்தை நாம் இயேசுவில் காண்கிறோம். இந்த விசுவாச அனுபவம் தலைமுறை தலைமுறையாக சுவிசேஷங்கள், கலாச்சாரம், ஆராதனை, ஆராதனை முறைமை, ஜெபங்கள், சித்தாந்தங்கள் (கோட்பாடு அ, மதக்கொள்கை), விசுவாசங்கள், ஒழுக்க முறைகள், பிரமானங்கள் மூலம் சபைகள் வளர்த்து வருகின்றன. எனவே, இறையியலாளனின் கடமை ஒருவரை விளித்தெழச் செய்து, உறுதிப்படுத்தி அந்த விசுவாச அனுபவத்தை பறிமாறிக் கொள்வதாகும்.
2. விசுவாசத்தைப் பகுத்தாய்ந்து, விளக்கமளித்து ஒழுங்குபடுத்துவது இறையியலின் கடமை. இதன் மூலம் ஒருவர் விசுவாசத்தைப் புரிந்து கொள்வதோடு ஜீரனித்தும் கொள்கிறார். இறையியல் ஓயாமல் முன்னேறிச் செல்லும் செயற்பாங்கு. இது புத்தம் புதிய விசுவாசத்திற்கு வழிநடத்திச் செல்கிறது.
3. தேவ வார்த்தை அல்லது தேவ வெளிப்பாடு எப்போதும் மனித வார்த்தையின் மூலம் அறியப்படுகிறது. தேவ வார்த்தையாகிய சுவிசேஷம் மனிதனால் எழுதப்பட்டது. வேதத்தில் உள்ள மனிதனின் வார்த்தையைச் சல்லடை செய்து (அரித்து எடுத்து) அந்த மனித வார்த்தைக்கு உள்ளேயும் அப்பாலும் தேவ வார்தையைக் கண்டு கொள்ளச் செய்வது இறையியலின் கடமையாகும்.
4. வியாக்கியானம் செய்வதும் முன் அறிவிப்பதும் இறையியலின் கடமை. நியாயத்தீர்ப்பு நடவடிக்கை முன்னிட்டு, கிறிஸ்தவ சமுதாயத்தின் அப்பியாச நடவடிக்கைகளுக்கு சபைகளுக்கு வழிகாட்ட அது உதவுகிறது.
5. முறையான செயற்பாங்கின் மூலம் கிறிஸ்தவ விசுவாசத்தை வெளிப்படுத்துவது இறையியலின் முக்கியமான கடமைகளில் ஒன்று. ஆழமாகப் பகுத்தாய்ந்து, மையப்புள்ளியை நோக்கிச் செல்ல வைப்பதில் இறையியல் தனது ஒற்றுமையையும் கோவையையும் வெளிப்படுத்துகிறது. கிறிஸ்தவ விசுவாசத்தின் அஸ்திபாரம் இயேசுவின் இரகசியமும் அவரின் இரட்சிப்பும் ஆகும்.
6. விசுவாசத்தைத் திடப்படுத்துவதும் கிறிஸ்தவ வாழ்வை ஆட்கொள்வதும் ஒரு குருத்துவ இறையியலின் மற்றுமொரு முக்கிய கடமை. இறையியலாளர்கள் திண்ணமான விசுவாசிகளாகவும் கடமையுணர்வோடும் இறையியல் பணியை நிறைவேற்ற வேண்டியவர்களாகவும் திகழ்கிறார்கள். அடிமட்ட கிறிஸ்தவ விசுவாசிகளைத் அடைக்கலம் கொடுத்து, தற்காத்து, திடப்படுத்தி, விசுவாசத்தில் ஊன்றச் செய்வது இறையியல் நடவடிக்கையின் கடமையுமாகும். விசுவாசத்தின் தலையாய கடமை ஒவ்வொரு நபரையும் தெய்வீக சமூகத்தில் விழித்தெழச் செய்து அவர்களை வழிநடத்தி, சீர்திருத்தி, அவர்களைத் தெய்வீக அழைப்புக்குச் செவிகொடுக்க வைத்து இயேசு கிறிஸ்துவுக்குள் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து ஐக்கியப்படச் செய்வது விசுவாசத்தின் தலையாயக் கடமை ஆகும்.
7. தனி நபர்களுக்கும் சபைக்கும், சுவிசேஷப் பணிக்கும் இயேசு கிறிஸ்துவுக்குள் சாட்சியாக இருப்பது குருத்துவக் கடமையாகும். நெருப்பானது எரிவது மூலம் வெளிப்படுவதுபோல் சபை அதன் சுவிஷேசப் பணியின் மூலம் தோன்றி நிற்கிறது. சுவிசேஷப் பணியின் அடிப்படையில் அல்லது சாட்சி பகரும் நெறி அற்றவன் அடிப்படையில் சபை செயல்படவில்லை. அந்தந்தக் காலக்கட்டத்தின் படி தெளிவான கொள்கையையும் அப்பியாசத்தையும் இறையியல் தெளிவு படுத்த வேண்டும்.
8. ஒரு கிறிஸ்தவனையோ சபையையோ சீர்திருத்தி அமைப்பது மட்டும் இறையியல் நடவடிக்கை ஆகாது. உலக மக்கள் அனைவரையும் தேவனுடைய இராஜ்யத்திற்குள் தகுதியானவர்களாக சீர்திருத்தி அமைப்பதே இறையியல் நடவடிக்கை ஆகும். இயேசுவைப் பின்பற்றி, தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றி சபை பிரசங்கிக்க வேண்டும். தேவனுடைய இராஜ்யத்திற்குள் அனைவரும் பிரவேசிக்க வேண்டும். இந்த உலகத்திற்குள்ளும் அப்பாலும் தேவனுடைய இராஜ்யம் விஸ்தாரப்பட, அது கையாளப்பட்டு, அறிவிக்கப்பட்டு, நிலைபெற பங்காற்றுவது இறையியல் நடவடிக்கையின் கடைசி இலக்காகும்.
Sunday, March 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment