இயேசு, யாக்கோபின் சகோதரன், யூதா நிருபத்தின்
எழுத்தாளன்.
முக்கிய வசனம்: “பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக் குறித்து உங்களுக்கு எழுதும்படி நான்
மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு
ஒரு விசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று
உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாகக் கண்டது.”(வசனம். 3)
சுருக்கமான குறிப்புகள்:
v இயேசுவின் சகோதரன் இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரன்,
இயேசுவின் சகோதரன் என்று தானே அழைத்துக் கொள்கிறான்.
v அவன் இயேசுவின் சகோதரர்களில் ஒருவனாக மத்.
13:55ல் எண்ணப்படுகிறான்.
v யூதா நமது பொதுவான இரட்சிப்பு சம்பந்தப்பட்டதை எழுதத் தேவையானதைக் கண்டுபிடித்தான். அப்போஸ்தலர்களின்
நம்பிக்கையின் சக்திவாய்ந்த தற்காப்பின் மிகுந்த விவாதத்தின் வழி கடமையைச் செய்யக்
கண்டுபிடித்தான்.
v நமது தேவனின் கிருபையின் மதிப்பைக் குறைவாக்கி,
நமது ஒரே எஜமான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மறுதலிக்கும்
கேள்விக்குரிய போலி ஆசிரியர்களைத் தாக்குவது அவசியமாகிறது என்று அவன் அறிந்துகொண்டான்.
v முதல் நூற்றாண்டிலிருந்து சபை மதத்திற்கு எதிரான கொள்கை, போலியாகக் கற்பிக்கப்படுவதின் மூலம் அச்சுறுத்தப்பட்டு வருகிறது. யூதா
தன்னைக் காப்பாற்றிக்கொண்டான்.
1. அறிமுகம் – அவன்
விவரம்
தீங்கிலிருந்து பாதுகாக்க, தாக்குதலிலிருந்து காப்பாற்ற,
எதிரிகளைத் துரத்த
– நூற்றாண்டுகளாக முரட்டுத்தன்மையுள்ள பாதுகாவலர்கள் அவர்களை
எழுப்பினார்கள். ஆயுதங்களை உபயோகித்தார்கள், யுத்தத்தை
நடத்தினார்கள், தேசங்களையும், நகரங்களையும் காப்பாற்ற யுத்தத்தில் மூலப்பொருட்களையும், மனித ஆதாரங்களையும் விரிவுபடுத்தினார்கள். முழு ஒத்துழைப்போடும்,
தைரியமான கைவிடப்பட்டவர்களோடும் சேர்ந்து தனித்து விடப்பட்டவர்கள்
தங்கள் குடும்பத்தாருக்காக யுத்தம் செய்தார்கள். நாம் பிழைத்திருக்க யுத்தம்
செய்வது, நமக்கு எது மிகுந்த விசேஷமாயிருக்கிறதோ
அதைப் பெற ஒவ்வொரு ஆர்வம் அல்லது கற்பனைத் தாக்குதல் இவைகளை அடக்க முழுப்பலத்தோடு எதிர்கொள்ள
வேண்டும் என்பது வாழ்க்கையின் சட்டம்.
தேவனின் வார்த்தை, நிலையான வாழ்வின் பரிசு மிகுதியான மதிப்புடையது. இவைகள்
கிறிஸ்துவைப் பின்பற்றும் விசுவாசிகளுக்கு நம்பிக்கை கொடுக்கும். அங்கே
தேவனுக்கும் அவரின் சீஷர்களுக்கும் எதிராக அநேக மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள்
தேவனின் உண்மையை மாற்றிச் சொல்லி ஜாக்கிரதையில்லாதவர்களை ஏமாற்றி, அழித்துப்போட வழி தேடுகிறார்கள். ஆனால் தேவனின் உண்மை தொடர்ந்து
முன்னே செல்லும்.
தேவ குமாரனிடம் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு
பாதுகாக்கப்படும்.
இது ஒரு முக்கியமான கடமை. ஒரு பக்தியான பொறுப்பு, இந்த வேலை பொறுப்புள்ள சலுகை.
எல்லா இடங்களிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு
இது யூதாவின் செய்தி.
எதிர்ப்புகள் ஏற்படும். தேவனற்ற ஆசிரியர்கள் எழும்புவார்கள். ஆனால்
கிறிஸ்தவர்கள் விசுவாசத்தில் திருப்தியாயிருக்க வேண்டும். (வசனம்: 3) எல்லா போலியானவைகளையும், பாவகரமானவைகளையும்
தள்ளிவிடுதல்.(4-19 வசனங்கள்) தேவனின்
வல்லமையான காப்பாற்றுதலையும் தண்டனைகளையும் நினைவுகூறுதல். (5-11,
14-16 வசனங்கள்) அப்போஸ்தலர்களின் எச்சரிக்கை. (17-19 வசனங்கள்) அதை வாசிக்கிறவர்கள் தங்கள்
மகா பரிசுத்தமான விசுவாசத்தின் மேல் ஜெபத்தின் மூலம் தங்களை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். (வசனம் 20) கிறிஸ்துவிடம் நெருக்கமாயிருங்கள்.(வசனம் 21) மற்றவர்களுக்கு உதவுங்கள்.(22-23 வசனங்கள்) பாவத்தை வெறுத்துத் தள்ளுங்கள்.(வசனம் 23) பிறகு யூதா தேவனுக்கு மகிமையான
ஆசீர்வாதமான ஸ்தோத்திரம் செலுத்தி முடிக்கத் தீர்மானித்தான்.(24 – 25 வசனங்கள்)
தேவனின் வார்த்தைகள், சபையின் கூட்டமைப்பு,
இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிதல் இவைகளை நீங்கள் எவ்வளவு
மதிக்கிறீர்கள்? அநேக போலியான ஆசிரியர்கள் உங்கள் கிறிஸ்து சம்பந்தப்பட்ட வாழ்க்கையை நம்பத்
தகுந்த தேவனின் வார்த்தை, கிறிஸ்து
சபை ஒற்றுமை இவைகளினால் அழிக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். யூதா
நிருபத்தை வாசித்து உங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்க உறுதிகொண்டு எந்த நிலையிலும்
தேவனின் உண்மையைக் காப்பாற்றுங்கள். வேறு ஒன்றும் அதை விட மதிப்பு
உள்ளதல்ல.
2. அவனுடைய கருப்பொருள் அதின் முக்கியத்துவம்.
கருப்பொருள்
|
முக்கியத்துவம்
|
போலியான ஆசிரியர்கள்
|
|
யூதா கர்த்தராகிய கிறிஸ்துவையும் மற்றவர்களின் விசுவாசத்தை குறைவாக எடை போடுவதையும்
ஏற்க மறுக்கும் போலி ஆசிரியர்களுக்கும்,
தலைவர்களுக்கும் விரோதமாக எச்சரிக்கிறான்.
|
நாம் கிறிஸ்தவ உண்மைகளைப் பலமாக ஆதரிக்க வேண்டும். தங்கள்
நோக்கத்திற்கு ஏற்றபடி வேதாகமத்தைத் திரித்துச் சொல்லும் தலைவர்களை விட்டு விலகுங்கள்.
|
|
|
அந்தத் தலைவர்கள் அவர்களை வழி தவறும்படி செய்கிறதற்காகத் தண்டிக்கப்படவேண்டும்.
|
உண்மையான தேவனின் ஊழியக்காரர்கள் தங்கள் வார்த்தையிலும், குணத்திலும் கிறிஸ்துவை விசுவாசத்தோடு வர்ணிப்பார்கள்.
|
|
|
அப்போஸ்தலத் தன்மை
யூதா கிறிஸ்துவை விட்டு விலகிப்போன அப்போஸ்தலத் தன்மையையும் எச்சரித்தான். அவனுக்கு விரோதமாகக் கலகம் செய்பவர்களைத் தேவன் தண்டிப்பார்
என்பதை நினைவுகூரவேண்டும். கிறிஸ்துவுக்கு
விசுவாசமுள்ள ஒத்துழைப்பிலிருந்து விலகிக் கொள்ளாமல் இருப்பதில் நாம் கவனமாயிருக்கவேண்டும்.
|
தேவனின் வார்த்தையிலுள்ள உண்மைகளை அறியக் கவலைப்படாதவர்கள் அப்போஸ்தலத்தில்
பாதிக்கப் படுவார்கள். கிறிஸ்தவர்கள்
அப்போஸ்தலர்களால் போதிக்கப் படுகிறவைகள்,
தேவனின் வார்த்தைகளால் எழுதப்பட்டிருந்தால் அதற்கு விரோதமாகப்
போலியான போதனைகளால் அவர்கள் உண்மையிலிருந்து விலகச் செய்வார்கள் என்பதை அறிந்து தங்களைக்
காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
|
3. பெரிய சபைகளுக்கு இது முக்கியமானது.
இந்தக் கடிதம் “கத்தோலிக்கக் கடிதங்கள்” என
குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதம் சந்ததியின் கஷ்டங்களுக்கு
எதிரான விசுவாசத்தைக் காப்பாற்ற, அந்தச்
சந்ததியின் முக்கியமாக பெரிய அளவிலான குணாதிசயங்களைக் காட்டுகிறது. அது 2பேதுருவுக்கு மிக நெருங்கிய சம்பந்தமுள்ளது. இந்தக்
கடிதத்தின் முக்கியமானது சபையினுள் சமய பேதத்தின் சிக்கலான கதையில் பங்கு கொள்வதில்
அடங்கியிருக்கிறது.
அது முன்னுள்ள போராட்டமான
”ஆஸ்தீகம்” வசனங்கள் “மதபேதம்” அது
தொடர்ந்து அப்போஸ்தல வழக்கமான சபை அதிகாரி,
பரம்பரை வழக்கம்,
அதிகாரமுள்ள மொழி பெயர்த்தல் இவைகளை ஏற்படுத்த தொடர்ந்து
சபையைக் கட்டாயப்டுத்த பங்கு கொண்டது.
4. நோக்கம்
எழுத்தாளன், அழைக்கப்பட்டவர்கள் பிதாவாகிய தேவனில் அன்பு கூர்ந்தவர்கள், இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் இவர்களுக்கு முக்கியமான
கிறிஸ்தவனாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
5. வேதாகமக் குறிப்புகள்: யூதாவின்
கடிதம் எழுத்தாளரைப் பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது.
6. விவாதத்திற்குரிய கேள்விகள்
6.1
யூதா யார்?
6.2
அவன் எப்படி
இயேசு கிறிஸ்துவுக்கு சொந்தமாயிருந்தான்?
6.3
அந்த நிருபத்திற்கு
அவனின் முக்கியமான தொடர்பு என்ன?
6.4
அவன் யாருக்காக
எழுதினான்?
6.5
இயேசு கிறிஸ்து
சம்பந்தமாகத் தற்காலப் பிரச்சினை என்ன?
மொழிபெயர்ப்பு
திருமதி மேபல் பட்டு,
பரி.யாக்கோபின் ஆலயம்.