Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Thursday, January 26, 2012

97. ஜேம்ஸ் (யாக்கோபு)


97.       ஜேம்ஸ் (யாக்கோபு) இயேசுவின் மேன்மையான நெருங்கிய தோழன்.

முக்கிய வசனங்கள்: “அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து, போதகரே, நாங்கள் கேட்டுக்கொள்ளப் போகிறதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறோம் என்றார்கள். அவர் அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலதுபாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்றார்கள்.” (மாற்கு 10: 35-37)

சுருக்கமான விவரங்கள்
v  யோவான் பெத்சாயிதாவிலிருந்து வந்தவன்.
v  சமாரியா நாட்டிலுள்ளவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள விருப்பம் இல்லாதபோது அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் மேல் நெருப்பை ஊற்றும்படி வேண்டிக்கொண்டார்கள்.
v  எங்த நிலைமையிலும் அவரைப் பின்பற்றினான்.
v  அவருடைய அழைப்புக்காக மரணத்தைத் தழுவவும் ஆயத்தமாயிருந்தான்.
v  அவன் உள்ளடங்கிய ஓர் உறுப்பினன்.

1.    முகவுரைஅவன் விவரம்.

யாக்கோபு சிறியவன் என்பவனிடமிருந்து அடையாளம் காண யாக்கோபு உயர்ந்தவன் எனப் பெயரிடப்பட்டான். அவன் யோவான் சுவிசேஷகனின் சகோதரனும் செபெதேயு, சலோமி என்பவர்களின் குமாரனுமாயிருந்தான். (மத்தேயு: 4:21) அவன் கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா ஊரான். தன் சகோதரனாகிய யோவானோடு, ஒரு மீன் பிடித்தவன்; அவனோடு சேர்ந்து எல்லாவற்றையும் விட்டு கிறிஸ்துவைப் பின்சென்றான். (மாற்கு: 1:19-20) அந்தச் சகோதரர்கள் நமது தேவனின் மறுரூபமாகுதலுக்குச் சாட்சியாயிருந்தார்கள் (மத்: 17:1). இயேசுவுக்கு ஊழியம் செய்த நேரத்தில் யாக்கோபும் யோவானும் அரிதாய்ப் பிரிந்திருந்தார்கள். அவர்கள் பிரசங்கத்திலும் நடத்தையிலும் ஒன்றாக இணைந்து செயல்பட்டார்கள். சில சமாரியர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள மனதில்லாதிருக்கிறதைக் கண்டபோது யாக்கோபும் யோவானும், ஆண்டவரே, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி, நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள் (லுக்: 9:54). சில நாட்களுக்குப் பிறகு தாயார் சலோமி மூலமாக ராஜ்யத்திலுள்ள மற்ற சீஷர்களின் முன்மாதிரியைப் பின்பற்ற சிறந்த விண்ணப்பத்தைச் செய்தார்கள். நமது இரட்சகரின் உயிர்த்தெழுதலுக்குப் பின் சில நாட்களுக்குப் பிறகு யாக்கோபும், யோவானும் திபேரியாக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்கள். அவர்கள் இயேசுவைப் பார்த்த பொழுது அவர்கள் இருவரும் பரமேறுதலை நேரிடையாகக் கண்டார்கள். 42-44ம் வருடங்களில் ஏரோது ராஜாவின் பேரனாகிய ஏரோது அகிரிப்பா யாக்கோபு பிடிக்கப்பட்டு, எருசலேமில் கொலை செய்யப்படக் காரணமாயிருந்தான். (அப்: 12: 1-2) யாக்கோபை நீதிபதிகளின் முன்னால் குற்றம் சுமத்தின ஒருவன் இயேசு கிறிஸ்துவிடம் பாவத்தை அறிக்கையிட்டு, உறுதியான எண்ணம் கொண்டு, தன்னை ஒரு கிறிஸ்தவனாக அறிக்கையிட்டு ஒரு அப்போஸ்தலரைச் சிரச்சேதம் செய்வதைக் கண்டனம் செய்தான்.


யாக்கோபின் மற்ற விவரங்கள்

            யாக்கோபு மூத்த சகோதரனாயிருப்பதால் எப்போதும் அவன் பெயர் யோவானுக்கு முன்னால் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  அவர்களின் தகப்பனார் செபெதேயு மீன் வியாபாரத்துக்குச் சொந்தக்காரராயிருந்ததால், அவர்கள் பேதுரு, அந்திரேயா, யோவான் இவர்களை அழைக்கும்போது, யாக்கோபு அவன் கூட்டாளியாகப் பின்பற்ற ஆர்வமுள்ளவனாயிருந்தான்.
            யாக்கோபு இயேசுவின் சீஷர்களுக்குள் உள்ளடங்கியவனாயிருந்ததால் மகிழ்ச்சி அடைந்தான். ஆனால் இயேசுவின் நோக்கத்தைத் தவறாகப் புரிந்து கொண்டான். அவனும் அவன் சகோதரனும் இயேசுவின் ராஜ்யத்தில் தங்கள் பங்கை நிலைநிறுத்திக் கொள்ள, அவர்கள் ஒவ்வொருவருக்கும் விசேஷித்த இடம் வேண்டுமென்று இயேசுவிடம் விண்ணப்பம் பண்ணவேண்டுமென்று கேட்டு முயற்சி செய்தார்கள்.
            யாக்கோபு 12 சீஷர்களில் சுவிசேஷத்திற்காக மரணமடைந்தவர்களில் முதல்வனாயிருந்தான். அவன் மரணமடைய மனதுள்ளவனாயிருந்தான். ஏனென்றால் நிலையான வாழ்வின் வாசல் கதவான மரணத்தை இயேசு வெற்றி கொண்டார் என்று அவனுக்குத் தெரியும்.


2.    வல்லமையும் திறமையும்
a)    12 சீஷர்களில் ஒருவன்.
b)    பேதுரு, யோவானோடு மூவரில் உள்ளடங்கிய விசேஷமான ஒருவன்.
c)    12 சீஷர்களில் விசுவாசத்திற்காக மரணமடைந்தவர்களில் முதன்மையானவன்.


3.    பலவீனங்களும் தவறுகளும்.
கோபம் (லுக்: 9:54) சுய நலம் (மாற்கு: 10: 37) இவை இரண்டின் போராட்டங்களான இந்த இரண்டு வெளிப்பாடுகளும் யாக்கோபின் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. இரண்டு நேரங்களிலும் அவனும் அவன் சகோதரன் யோவானும் ஒருவர் போல் பேசினார்கள்.


4.    அவன் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்
வாழ்க்கை இழப்பு இயேசுவைப் பின்பற்றுவதற்குச் செலுத்த மிகவும் பாரமான விலை மதிப்பல்ல.    


5.    வேதாகமக் குறிப்புகள்: யாக்கோபின் கதை சுவிசேஷங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அப்: 1:13லும் 12: 2லும் அவன் குறிப்பிடப்பட்டிருக்கிறான்.


6.    விவாதிப்பதற்கான கேள்விகள்.

6.1          அவன் எங்கேயிருந்து வந்தான்?
6.2          அவனுடைய பெற்றோர் யார்?
6.3          அவனுடைய வல்லமையையும் திறமையையும் விவாதித்தல்.
6.4          அவனுடைய பலவீனங்கள் யாவை?
6.5          நாம் அவன் வாழ்க்கையிலிருந்து என்ன பாடங்கள் கற்றுக்கொள்ளலாம்?


மொழிபெயர்ப்பு
திருமதி மேபல் பட்டு,
பரி.யாக்கோபின் ஆலயம்.

No comments:

Post a Comment