, பெத்துவேலின்
குமாரன், ரெபெக்காளின்
சகோதரன்.
முக்கிய
வசனம்:
"என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால, நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று ராத்திரி உம்மைக் கடிந்து கொண்டார் என்று சொன்னான்." (ஆதியாகமம் 31:42)
சுருக்கமான
கதை:
·
லாபான்
பெத்துவேலின் குமாரன், யாக்கோபுக்கும் ஈசாவுக்கும் மாமன். (ஆதியாகமம் 24:29)
·
ரெபெக்காளும்
ஈசாக்கும் திருமணம் புரிய லாபான் அனுமதி அளித்தான்.
·
யாக்கோபுக்கு
ராகேலின்மேல் இருந்த மிகுந்த ஆசையைப் பயன்படுத்தி, அவன் தனக்கு 14 வருடங்கள் ஊழியம் செய்ய லாபான் சூழ்ச்சி செய்தான்.
·
லாபான்
தன் ஏமாற்றப்பட்டதை அறிந்தான். (ஆதியாகமம் 26)
·
அவன்
யாக்கோபுடன் ஓர் உடன்படிக்கை செய்ய வேண்டியதின் அவசியத்தை அறிந்தான்.( ஆதியாகமம் 31)
·
யாக்கோபு
வெற்றி பெற்றது தன்னுடைய தந்திரத்தால் அல்ல, ஆண்டவருடைய உடன்படிக்கையின் கிருபையால்.
1. முன்னுரை– லபானுடைய
கதை:
எபிரேய மொழியில் லாபான் என்ற பெயருக்கு "வெண்மை" என்று பொருள். நாம் எல்லோரும் சில நேரங்களில் சுய நலவாதிகள்தான். ஆனால்
சிலர் இந்த பலவீனத்துக்கு அடிமைகள். லாபானின் வாழ்நாள் முழுவதும் சுய நலத்தால் முத்திரை குத்தப்பட்டது. அவனது முதன்மையான நோக்கமே தன்னைத்தான் கவனித்துக்கொள்ளுவதுதான். அவன் மற்றவர்களை எவ்வாறு நடத்தினான் என்பது இந்த நோக்கத்தால்தான் கட்டுப்படுத்தப்பட்டது. தன் சகோதரி ரெபெக்காளுக்கும் ஈசாக்குக்கும் நடந்த திருமணத்தின் மூலம் தனக்கு லாபகரமான ஏற்பாடுகளைச் செய்து கொண்டான்; தன் குமாரத்திகளின் வாழ்க்கையை பேரம் பேசும் சில்லுகளாக பயன்படுத்தினான். இறுதியில் யாக்கோபு லாபானைத் தோற்கடித்தான். ஆனால், வயதில் பெரியவனான லாபான் இந்தத் தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. யாக்கோபின் மேல் அவனுக்கு இருந்த பிடி உடைந்து போனாலும், அந்த இடத்தைவிட்டு நிரந்தரமாகப் போய்விடுகிறேன் என்று யாக்கோபை உறுதிமொழி செய்யச் சொன்னதன் மூலம், லாபான் யாக்கோபை ஓரளவாவது கட்டுப்பாடு செய்ய முயன்றான். யாக்கோபையும், யாக்கோபின் ஆண்டவரையும் தன்னால் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்தான்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது நாம் லாபானுடன் அடையாளப் படுத்திக்கொள்வது கடினமான போதிலும், அவனுடைய சுயனலம்தான் நமக்கும் அவனுக்கும் இருக்கும் ஒரு பொதுவான காரியம். அவனைப் போலவே, மற்றவர்களையும், நிகழ்வுகளையும் நம்முடைய சுய லாபத்துக்காகக் கட்டுப்படுத்தும் மனப்போக்கு பல நேரங்களில் நமக்கும் இருக்கும். மற்றவர்களை நடத்தும் விதத்துக்கு நாம் சொல்லும் "நல்ல" காரணங்கள், நம்முடைய சுயனலமான நோக்கத்தை மறைக்க நாம் போடும் மிக மெல்லிய போர்வையாகும். நம்முடைய சுயனலத்தை நம்மாலேயே கண்டுபிடிக்க முடியாது. அதைக் கண்டு பிடிக்க ஒரு வழி, நம்முடைய தவறை ஒப்புக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்று ஆராய்வதுதான். லாபானால் இதைச் செய்ய முடியவில்லை. நீங்கள் சொல்லியதைக் குறித்து நீங்களே ஆச்சரியப்பட்டு, உங்களுடைய தவறான நடவடிக்கையை ஒப்புக்கொள்ளத் தவறும்போது, உங்களுடைய சுய நலத்தின் காட்சியைக் காணலாம். சுயனலத்தை அடையாளம் கண்டு கொள்ளுவது ஒரு வேதனை தரும் காரியம், ஆனால் அதுதான் ஆண்டவரை நோக்கி நாம் செல்லும் பாதையில் நம்முடைய முதல் அடியாகும்.
2. லாபானுடைய
பலமும், சாதனைகளும்:
அ) ஆபிரகாமின்
குடும்பத்தில் இரண்டு சந்ததியாரின் திருமணங்களைக் கட்டுப்படுத்தினான். ( ரெபெக்காள், ராகேல் மற்றும் லேயாள்).
ஆ) மிகவும்
கூர்மையான அறிவுடையவன்.
3. பலவீனங்களூம்
தவறுகளும்:
அ) தன்னுடைய
சுய லாபத்துக்காக மற்றவர்களை கட்டுப்படுத்தினான்.
ஆ) தன்
தவறுகளை ஒப்புக்கொள்ள மனதில்லாதிருந்தான்.
இ) யாக்கோபை
உபயோகப்படுத்தி உலகத்துக்குரிய பணத்தில் பயனடைந்தான் ஆனால் யாக்கோபின் தேவனை அறிந்து வழிபட்டதன் மூலம் ஆவிக்குரிய வாழ்க்கையில் பயன் அடையவில்லை.
4. அவனுடைய வாழ்க்கையிலிருந்து
பாடங்கள்:
அ) மற்றவர்களை
உபயோகப்படுத்துபவர்கள்
கடைசியில் தாங்களே மற்றவர்களால் உபயோகப்படுத்தப்படுவதைக் காண்பார்கள்.
ஆ) ஆண்டவருடைய
திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது.
5. வேத ஆதாரங்கள்:
லாபானுடைய கதை ஆதியாகமம் 24:1–31:55 வசனங்களில் கூறப்பட்டுள்ளது.
6. விவாதத்துக்குரிய
கேள்விகள்:
6.1. லாபானுக்கும் ஆபிரகாமுக்கும் இருந்த உறவு என்ன?
6.2. யாக்கோபு தன்னுடைய சகோதரனையே ஏமாற்றினான். அவனை லாபான் எவ்வாறு ஏமாற்றினான்?
6.3. லாபானுடைய பிடியிலிருந்து யாக்கோபு எப்படி தப்பினான்?
6.4. அவனுடைய பலவீனங்கள் என்ன?
6.5. அவனுடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்கும் பாடங்கள் என்ன?
மொழி பெயர்ப்பு:
திருமதி. கிரேஸ் ஜட்சன்,
பரி. பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.
No comments:
Post a Comment