கேரியோத் என்னும் மனிதன்.
கிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்த ஒருவன்.
முக்கிய வசனங்கள்: “அப்பொழுது
பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர் கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான். அவன்
பிரதான ஆசாரியர்களிடத்திலும், சேனைத்தலைவர்களிடத்திலும்
போய் அவரைக் காட்டிக் கொடுக்கும் வகையைக் குறித்து அவர்களோடே ஆலோசனை பண்ணினான்.(லூக். 22:3–4)”
சுருக்கமான விவரங்கள்
v அப்போஸ்தலர்களில் மிகவும் அறிமுகமானவன்.
v அவன் கிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்தான்.
v அவன் பலவீனங்களில் ஒன்று பண ஆசை. (லூக். 12: 4 -5)
v யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.
v யூதாஸ் கிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்த பின்பு குற்ற உணர்வினால் பாதிக்கப்பட்டான்.
v அவன் நான்று கொண்டு செத்தான்.
1. அறிமுகம் – அவன்
விவரம்
அவன் மிகவும் அறிமுகமான அப்போஸ்தலர்களில் ஒருவன். அவன் பெயர் மற்றவர்களைக் காட்டிக்கொடுக்கும் யாராயிருந்தாலும்
அவர்களுக்குப் பழமொழியாக எண்ணப்பட்டது. யூதா என்ற சொல்லுக்கு துதி என்று பொருள். யூதாஸ் என்பது யூதா என்ற எபிரேய
சொல்லின் கிரேக்க முறை. இது புதிய ஏற்பாட்டின் மிக
அறிமுகமான பெயர். (மத். 1: 2-3; அப். 9:13) பர்னபாஸின் தகப்பன் பெயர் யூதாஸ். நமக்குக் கலிலேயனாகிய யூதாசும் இருக்கிறான்.(அப். 5:37) நமக்கு யாக்கோபின் யூதா, நினைவுகூற
ஒரு யாக்கோபின் குமாரன் ததேயு என்று அழைக்கப்பட்டவனும் இருக்கிறான். யோவான் 14.22ல் ஸ்காரியோத்தல்லாத யூதா என்று அறிமுகப்படுத்தப்பட்டான். இன்னும் கர்த்தரின் சகோதரனும் யாக்கோபின் சகோதரனும் இருந்தான். இயேசுவின் சகோதரர்கள் இயேசு உயிர்த்தெழுதல் வரைக்கும் அவரை
விசுவாசிக்கவில்லை. (யோவான் 7:5) நாசரேத்தில்
வசிப்பவர்கள் கூற்றுப்படி தங்கள் அண்டை வீட்டுக்காரரின் குமாரனின் அதிசயமான போதனையை
ஆச்சரியமாகக் கவனித்தார்கள்.(மத். 13:55) அவன் தன்னை இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரன், யாக்கோபின்
சகோதரன் என்று விளக்கப்படுத்தி யூதா நிருபத்தை எழுதினான்.
(யூதா. 1)
நமக்குத் தேவை அவன் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவன். நமது
கர்த்தரைக் காட்டிக் கொடுத்தவன். அவன்
சீமோனின் குமாரனாகிய யூதாஸ் காரியோத் என்று அழைக்கப்பட்டான்.
(யோவான். 6:71) இந்த நடபடியின்படி அவனின் உண்மையான குணம் எப்போதும் அவன்
தலைவருக்குத் தெரியும். (யோவான். 6:64) அவனுடைய பலவீனம் பெத்தானியாவில் அபிஷேகம் பண்ணப்பட்ட வேளையில்
வெளியரங்கமானது. (யோவான். 12: 4 – 5) “ஏன் இந்த வீண் செலவு?” என்று சொல்லப்பட்டது பன்னிரண்டு பேரின் எண்ணம். ஆனால் இந்தக் கூற்று இந்தத் தைலத்தை விற்று, அந்தப் பணத்தைத் தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்பது யூதாஸிடமிருந்து
வந்தது. யோவானிடமிருந்து நாம் கற்றுக்
கொண்டபடி காட்டிக் கொடுத்தவனின் உண்மையான எண்ணம் என்ன என்பது தெளிவாகிறது. ஏனென்றால் அவன் திருடன்.
அவன் பணப்பையைச் சுமக்கிறவன்.
(அல்லது கொண்டு போகிறவன்,
விருப்பு வெறுப்பற்றவன்)
என்ன உள்ளே வைத்திருக்கிறதோ அவைகள். (யோவான். 12: 4–6) குணத்தின் தன்மை வெளிப்பாட்டில் யூதாஸின் முடிவான துரோகம் போதுமானபடி விவரிக்கப்பட்டிருக்கிறது. பேராசை, நமது
தேவனின் ஊழியத்தின் இயற்கைத் தன்மையில் ஏமாற்றம் இதில் இணைத்தல், யூதாஸின் மன சிந்தனையின் விருத்தி மதிப்புப் பெற, முடிவான ஒப்புக்கொடுத்தலில் உச்ச நிலையை அடைந்தான் என்று
சுட்டிக்காட்டப்படும் வசனம் “சாத்தான்
அவனுக்குள் புகுந்தான்”. (யோவான். 13: 27) அது பிரதான ஆசாரியர்களோடு தொடர்புள்ளது. நமது கர்த்தரைக் காட்டிக்கொடுத்தது ஏன் யூதாஸ் இயேசுவைக்
காட்டிக்கொடுத்தான். டி. க்யூனி யும், மற்றவர்களும் யூதாஸின் நோக்கம் தேசப்பற்று ஆவலுள்ளவனாய், அவன் எஜமான் மக்களிடம் முறையீடு செய்யத் தூண்டினார்கள் எனினும்
மற்றவர்கள் காட்டிக்கொடுத்தலைத் தர்க்கிக்க எண்ணினார்கள்.
இயேசு உண்மையாகவே மேசியாவாக இருந்தால் அவரின் விடுதலைக்கு
ஆவியின் வல்லமையைக் கொண்டுவா. அவர்
மேசியா இல்லையென்றால் அவருடைய அழிவு தகுதியானது.
இந்தத் தத்துவங்கள் சுவிசேஷம் விவரிக்கும் வசனங்களுக்கு முரண்பாடாயிருந்தால்
சொல்லப் போதுமானது. பெத்தானியாவில்
நடந்த காட்சி திருப்புமுனையாக வந்து சேர்ந்தது.
(மத். 26: 14) சாத்தான் தன் கருவியைக் கண்டுபிடித்தான்.
யூதாஸ் பிரதான ஆசாரியர்களிடம் சென்றான். (லூக். 22:3-4) அவன் 30 வெள்ளிக்காசை எதிர்பார்த்தான். (மத். 26:15) அவன் துரோகியாக நடிக்க ஒப்புக்கொண்டு,
தன்னுடைய தகுந்த நேரத்திற்காகக் காத்திருந்தான். அவன் தன் எஜமானோடும்,
தன்னுடன் வேலை செய்பவர்களுடனும் முன்போலவே பெத்தானியா, எருசலேம் இவ்விரண்டு இடங்களுக்கும் போய் வந்தான். அவன் கெத்செமனேக்கும் அவர்களோடு போனான். (யோவான். 18:2) கடைசி பஸ்காவிலும் அவர்களோடிருந்தான்.
இரட்சகரால் அவன் கால்கள் கழுவப்பட்டன. ரபீ
நானோ என்று கேட்டவர்களோடும் இருந்தான். (மத். 26:25) அவன் எஜமானை ஒரு முத்தத்தினாலே
காட்டிக் கொடுத்தபொழுது அவன் ஊழியம் முடிந்து போயிற்று. ஒரு செயல், அவனால் மோசம் செய்யப்பட்டவரின் மனவேதனையை அதிகப்படுத்தினது. (லூக். 22:48)
யூதாஸ் காட்டிக்கொடுத்த பிறகு குற்ற உணர்வால் பாதிக்கப்பட்டான். அவன்
குற்ற உணர்வு மிகவும் உண்மையாய் இருந்ததால்,
அவன் செய்த பாவமான காரியங்களை இனிமேல் செய்யக்கூடாது என்று
விண்ணப்பம் பண்ணினான். (மத். 27:3-4) இந்த மனத்திட்டத்தின்படி அவன் முப்பது வெள்ளிக்காசைத் திரும்ப
எடுத்துக்கொண்டு போனபோது அவன் பரிகாசம் செய்யப்பட்டான்.
அவன் கேட்டின் மகன்.
(யோவான். 17:12) இந்த வாழ்க்கையில் அவனுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை. அதினால் அவன் விலகிச் சென்று,
புறப்பட்டுப்போய் நான்று கொண்டு செத்தான். (மத். 27:5)
யூதாஸ் நான்று கொண்டு செத்தான் என்று சொல்லப்படுகிறது. இங்கே குயவனுடைய நிலம் இருந்தது. அதன் பிறகு இரத்தப் பணத்தினால்
வாங்கப்பட்டது. அது இரத்த நிலம் என்று அழைக்கப்பட்டது. அப்.1:18ன் படி யூதாஸ் தானே ஒரு நிலத்தை வாங்கி, தலைகீழாக விழுந்தான்.
அவன் வயிறு வெடித்து,
குடல்களெல்லாம் சரிந்து போயிற்று.
2. வல்லமையும் நிறைவேற்றுதலும்
a) கலிலேயன் அல்லாத இவன் ஒருவன் மட்டும்
12 சீஷர்களில் ஒருவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
b) அவன் குழுவின் செலவுக்காக பணப்பை வைத்திருந்தான்.
c) அவனுக்கு இயேசுவைக் காட்டிக்கொடுத்த பாவத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது.
d) நாம் நம்பிக்கையில்லாமை, மரணத்தைத்
தேர்ந்தெடுக்கலாம்.
அல்லது நாம் செய்த குற்றத்திற்காக வருந்துதல், மன்னிப்பு, நம்பிக்கை, நிலையான
வாழ்வு இவைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
e) இயேசுவின் இலவசமான பரிசுகளை ஏற்றுக்கொள்ள அவன் நமக்கு ஞாபகப்படுத்துகிறான். அல்லது
காட்டிக்கொடுப்பவனாக இருப்பது, மோசமான
நிலைமையை அனுபவிப்பது.
3. பலவீனங்கள் தவறுகள்.
a) அவன் பேராசை கொண்டவன்.(யோவான். 12:6)
b) அவன் இயேசுவைக் காட்டிக்கொடுத்தான்.
c) அவன் மன்னிப்புப் பெறுவதற்குப் பதிலாக தற்கொலை செய்து கொண்டான்.
4. அவன் வாழ்க்கையின் மூலம் பாடங்கள்.
a) பாவத்தின் திட்டம், எண்ணம்
நம்மை இன்னும் அதிகமான பாவங்களைச் செய்ய சாத்தானால் தூண்டப்படும் நிலைக்குத் தள்ளப்படுவோம்.
b) பாவத்தின் பலன் நாசம் விளைவிக்கும்.
சிறு பொய்கள், சிறு தவறுகள் கூட அபாயகரமான முடிவைக் கொண்டு வரும்.
c) தேவனின் திட்டம், நோக்கம்
மோசமாக நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளில் கூட வேலை செய்யும்.
d) இயேசுவைக் காட்டிக்கொடுத்தது அவசியமானது.
ஆனால் யூதாஸ் அதைக் கொண்டு வர தன் சொந்த முயற்சியை உபயோகித்தான்.
e) யூதாஸ் மனவருத்தப்பட்டது முக்கியமானது.
(லூக். 15:7)
5. வேதாகமக் குறிப்புகள்: யூதாஸின்
விவரம் சுவிசேஷங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அவன் அப்:1:18-19ல் குறிப்பிடப்பட்டிருக்கிறான்.
6. விவாதிக்க வேண்டிய கேள்விகள்.
6.1
அவன் வாழ்க்கையில் உள்ள சூழ்நிலையை விவாதித்தல்.
6.2
அவன் ஏன் கிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்தான்?
6.3
அவன் எப்படி மரணமடைந்தான்?
6.4
அவன் பெத்தானியாவில் மரியாளின்
தாராள குணத்தைப் பார்த்து என்ன கூறினான்?
6.5
அவனுடைய சக்திகளும் பலவீனங்களும்
எவைகள்?
மொழிபெயர்ப்பு
திருமதி மேபல் பட்டு,
பரி.யாக்கோபின் ஆலயம்.
No comments:
Post a Comment