இயேசுவின் சகோதரர், எருசலேமிலுள்ள முதலாவது
யூத சபையின் தலைவர்.
முக்கிய வசனம்
: “பின்பு உயிர்த்தெழுந்த இயேசு யாக்கோபுக்கும், அதன் பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.” ( 1கொரி :15: 7)
சுருக்கமான விபரங்கள்.
v அவன் அவனுடைய உலக வாழ்க்கையில் இயேசுவின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
v இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு எருசலேமிலுள்ள யூத கிறிஸ்தவ சபையின் அங்கத்தினனாக
மாறினான்.
v அவன் எருசலேமின் முதல் பேராயராக நியமிக்கப்பட்டான்.
v அவன் முதல் எருசலேம் சபை கூட்டத்தில் தலைமையேற்றான்.
v அவன் உயிர்த்தியாகத்தில் வேதனை அடைந்தான்.
1. அறிமுகம் – அவன் விவரம்
பண்டை காலத்தில் அநேக மக்கள்
யூதர்கள், கிறிஸ்தவர்கள் இரு தரப்பினரும்
யாக்கோபை அழைத்தார்கள். புதிய ஏற்பாட்டிலுள்ள பக்கங்களில்
தேடிக் கண்டுபிடிக்கலாம். கீழ்க்கண்ட யாக்கோபை நாம் அடையாளம்
காணலாம்.
·
யாக்கோபு செபெதேயுவின் குமாரன்.(மாற்கு : 1: 19 ; 3: 17; அப் : 12: 2)
·
யாக்கோபு யூதாவின் சகோதரன். ( லுக்: 6:16; அப்: 1:13)
·
யாக்கோபு இளையவன். (மாற்கு 15:40)
·
யாக்கோபு இயேசுவின் சகோதரன். (மாற்கு: 6:3; 1கொரி: 15: 7; கலா: 1: 19; 2: 9-12; அப்: 12:17 ; 15: 13 ; 21:18)
யாக்கோபின் சகோதரன் அவன் சகோதரர்கள் யோசே, இயேசு, சீமோன், யூதா இவர்களுடன் குறிப்பிடப்பட்டிருக்கிறது. (மத்: 13: 55). அவன் உலக வாழ்க்கையில் இயேசுவின்
அதிகாரத்தைத் தெளிவாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் நண்பர்கள், அவன் சகோதரர்களும் இணைந்து கொண்டார்கள். (மாற்கு: 3: 21). உயிர்த்தெழுந்த இயேசு அவனுக்குத் தரிசனமான பின்பு
(1கொரி: 15: 7) அவன் எருசலேமிலுள்ள யூத கிறிஸ்தவ சபையின் முன்மாதிரி அங்கத்தினன் ஆனான் (கலா: 1: 19 ; 2: 9) என்று பாரம்பரியம் குறிப்பிடுகிறது. தேவனாலும், அப்போஸ்தலர்களாலும் எருசலேமின் முதல் பேராயராக நியமிக்கப்பப்டார். புறஜாதியாரை
கிறிஸ்தவ சபையில் சேர்த்துக் கொள்ளும் முறையை ஏற்றுக்கொள்ளவும், அந்தியோகியா, சீரியா, சிலிசியாவிலுள்ள சபைக்குத்
தெளிவாகத் தீர்மானித்துப் பிரகடனம் செய்ய முதலாவது எருசலேம் சபைக்குத் தலைமை தாங்கினார். (அப்:15:19–23) பிறகு அவன் திறமுள்ள யூதக் கிறிஸ்தவர்களின் கருணையோடு தொடர்ந்து கடைசி தடவையாக
பரி.பவுல் எருசலேமுக்கு வந்தபோது
அவரிடம் வேண்டிக்கொண்டது சாட்சியானது. (அப்: 21: 18) பின்னால் ஹெகிசிப்புஸ் கூற்றுப்படி அவன் நியாயமானவன் என்று அழைக்கப்பட்டான். ஏனென்றால் யூத சட்டத்திற்கு விசுவாசமுள்ள ஆதரவாளனாகவும், எளிய முறையில் வாழ்பவனாகவும் இருந்தான். புது வேதாகம
அகராதி, (IVF) 597ம் பக்கம். தேசாதிபதி
பெஸ்து 61 A.Dல் மரணமடைந்த பிறகு நடந்த விசாரணையின்
போது அவன் பிரதான ஆசிரியனாகிய அனனியாவின் கைகளால் கல்லெறியப்பட்டு உயிர்த்தியாகம் செய்து
வேதனைப்பட்டான்.
யாக்கோபு சபை அதிகாரமுள்ள யாக்கோபு சுவிசேஷத்தின் எழுத்தாளனாக ஏற்றுக்கொள்ளப்பட்டான். அங்கே
அவன் தன்னைத் தேவனுக்கும் கர்க்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாக விவரித்தான்.
2. அவன் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்.
a) இயேசுவின் ஒரே சந்ததி பரம்பரையிலிருந்து அவன் வந்தவனாயிருந்தாலும், யாக்கோபு கர்த்தராகிய கிறிஸ்துவைத் தன் சொந்த வழியில் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.
b) எழுத்தாளர் அதிகமாக யூதர்களின் மனதின்படி அக்கறை உள்ளவனாயிருந்தான். அவன் சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுடனும் பேசினான். (யாக்: 1: 1) ஆனாலும் மற்றவர்களையும், மற்ற
கோத்திரங்களையும் சந்திக்க வேண்டியதிருந்தால் தர்மம் செய்ய வீட்டில் ஆரம்பிக்க வேண்டும். இயேசு தானாகவே நமது ஊழியம் எருசலேமிலும், யூதேயாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும் ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னார். (அப்: 1: 8) நமது அண்டையிலுள்ளவர்கள், உறவுக்காரர்கள் நமது சலுகைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
c) யாக்கோபு எருசலேமில் தலைவனாகத் தோன்றினான்.
(அப்: 21: 17) அவன் யூதர்கள், புறஜாதியார்
இவர்கள் மேல் அக்கறை செலுத்தினான். புறஜாதியாரை
யூத சம்பிரதாயத்தைப் பின்பற்றும்படி கட்டாயப்படுத்தவில்லை.
(விருத்தசேதனம்) என்றாலும் அங்கே பரி.பவுலுக்கு
எதிராக யூதர்களால் குற்றச் சாட்டுகள் ஏற்பட்டன.
(அப்:21:21-24) யாக்கோபு பரி.பவுலிடம்
ஒவ்வெருவரையும் யூதனாக நினைக்கவும், அவனும்
சட்டத்திற்குக் கீழ்ப்படியும் முறையைப் பயிற்றுவிக்கும் யூதனாகவும் இருக்க வேண்டும்
என்று அறிவுரை கூறினான். (அப்:21:25) சுவிசேஷத்திற்காக ஒருவன் தன் உள்ளூரில் உள்ளவர்களின் தேவைக்காக
விட்டுக் கொடுக்கவேண்டும்.
d) யாக்கோபு பெரிய பாரம்பரியர்களான பேதுரு,
பரி.பவுல்
போன்ற ஊழிய சிந்தனையுள்ள தலைவர் இவர்களோடு சுவிசேஷத்திற்காக சேர்த்துக் கொள்ள வேண்டும். நாம் ஒன்றை விரும்புகிறோம் என்றும், அது நமக்கு ஆறுதலைக் கொடுக்கிறது என்றும் நினைத்து நாம் நமது
வழிகளை அமைக்கக்கூடாது.
3. வேதாகமக் குறிப்பு: மாற்கு: 6:31; 1கொரி: 15: 7 ; கலா: 1: 19; 2: 9, 12; அப்: 12: 17; 15: 13; 21: 18.
4. விவாதிக்கக் கேள்விகள்
4.1
யாக்கோபு
யார்?
4.2
அவன் எப்போது
இயேசுவை நம்பினான்?
4.3
அவன் எப்படி
எருசலேம் சபையை வழி நடத்தினான்?
4.4
எருசலேம்
சபை கூட்டத்தில் அவன் கடமை என்ன?
4.5
அவன் வாழ்க்கையின்
மூலம் நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும்?
மொழிபெயர்ப்பு
திருமதி மேபல் பட்டு,
பரி.யாக்கோபின் ஆலயம்.
No comments:
Post a Comment