Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Sunday, January 1, 2012

91. காய்பா


91. காய்பா
பிரதான ஆசாரியன் - இயேசுவின் மரணத்திற்கு பொறுப்பானவன்

கரு வசனம்
49. அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந் தெரியாது:
50. ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான். யோவான் 11:49-50

கதைச் சுருக்கம்
·                இயேசுவின் ஊழிய நாட்களில் இருந்த பிரதான ஆசாரியன்.
·                யூத அரசின் அதிகார தலைவனாகவும், சங்கத் தலைவனாகவும் காணப்பட்டான்.
·                ரோம ஆளுநருக்குப் பின் யூதேயாவில் சக்திவாய்ந்த நபராக காணப்பட்டான்.
·                இவன் இயேசுவின் மரணம், அதனால் உண்டாகும் பரிகாரம் குறித்து தன்னையும் அறியாமல் தீர்க்கதரிசனமாக கூறினான்.
·                இவன் வழக்கத்திற்கு மாறாக நீண்ட காலம் பணியிலிருந்தான். ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் திறனும் கொண்டிருந்தான்.

அறிமுகம் - அவனது கதை
காய்பாவினுடைய சேவை காலமானது கி.பி 18-36 என ஜோசப் கூறுகிறார். இவன் விட்டாலியஸ் என்ற சீரியா ஆளுநரால் பதவி இறக்கப்பட்டவன்.
இந்த காய்பா என்பவன் சாதுசிஸ் (Sadducees) என்ற ஒரு மதம் சார்ந்த குழுவிற்கு தலைவனாகவும்  நன்கு கற்றவனாயும், செல்வம் நிறைந்தவனாயும் காணப்பட்டான். அரசியல் செல்வாக்கு மிகுந்தவனாயும் தேசத்தில் காணப்பட்டான். இந்த சிறந்த குழுவானது ரோமபுரியினரோடு ஒரு நல்ல உறவு கொண்டிருந்தது. இவர்களது வாழ்வு முறைக்கு ஆபத்து வந்துவிடுமென எண்ணி இவர்கள் இயேசுவை வெறுத்தனர். இயேசு கூறின செய்தியினை அவர்களால் ஏற்க முடியவில்லை. இராஜ்யத்திலே இருக்கின்ற தலைவர்கள் எந்த முறையீடுமின்றி காணப்பட்டனர்.

காய்பாவின் வழக்கமான கொள்கை என்னவென்றால் தன்னுடைய பதவிக்கோ அல்லது அந்தஸ்துக்கோ இடையூறு வருமென்றால் அதை எப்படியாயினும் நீக்கிவிடுபவனாக காணப்பட்டான். இயேசு மரிக்க வேண்டும் என்பது அவனது கேள்வி அல்ல, அவருடைய மரணம் எந்த நேரத்தில் நடக்க வேண்டும் என்பது தான். இயேசுவானவர் பிடிக்கப்பட்டு நீண்ட அனுபவத்திற்குள்ளாவது மட்டுமல்லாது இந்த யூத மன்றமானது ஒருவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமானால் ரோமர்களின் அனுமதியை பெற வேண்டியதாயிருந்தது. காய்பாவின் திட்டத்திற்கு எதிர்பாராத விதமாக யூதாஸ் கிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்து இவனுக்கு உதவினான். காய்பாவினுடைய எண்ணம் எல்லாம் தேவனின் அற்புதமான திட்டங்களின் நிறைவேறுதல் என்று காய்பாவால் அறிந்து கொள்ள முடியவில்லை. இவனுடைய சொந்த பாதுகாப்பிற்காக வேறு ருவரின் வாழ்க்கையைத் தியாகம் செய்ய வைக்கிறான். இதிலிருந்து இவனது சுய நலம் தெளிவாகத் தெரிகிறது. இதற்கு மாறாக இயேசு தமாக முன் வந்து தனது வாழ்க்கையை நமக்காக ஜீவ பலியாக ஒப்புக் கொடுத்தார் என்பது தேவன் நம்மேல் வைத்த அன்பிற்கு அடையாளமாகும். இயேசுவை சிலுவையில் தொங்கவைத்து மரிக்கச் செய்ததனால் தான் ஜெயித்து விட்டதாக காய்பா எண்ணினான். ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதலையோ அவன் எண்ணவில்லை.

காய்பாவினுடைய மனதின் எண்ணங்கள் முற்றிலுமாக அடைக்கப் பட்டிருந்தது. அநேக சாட்சிகள் இருந்தபோதிலும் இவனால் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை ஏற்க முடியவில்லை. எவர்களுடைய வாழ்க்கை முற்றிலுமாய் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவினால் மாற்றப்பட்டிருந்ததோ அவர்கள் எல்லோரையும் அமைதி படுத்த முயற்சித்தான் (மத்தேயு 28:12-13). கிறிஸ்துவை விசுவாசியாதவர்களைப் பிரதிநிதித்தான் காய்பா. காரணம், இயேசுவை தேவன் என ஏற்றுக்கொண்டால் அது அவர்களை அதிகமாக பாதிக்கும் என்று எண்ணினான். தேவனுடைய குமாரனை ஏற்றுக்கொள்ளுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்கின்ற கடவுளுடைய வார்த்தையை விட இவர்கள் தங்களுடைய அதிகாரம் செல்வாக்கு மற்றும் இன்பம் நிறைந்த இந்த உலக வாழ்க்கையைத் தெரிந்து கொண்டனர். உங்களுடைய தேர்வு என்ன?

2. வல்லமையும் சாதனைகளும்
18 ஆண்டுகள் பிரதான ஆசாரியனாக பணியாற்றினவன். தனக்கே தெரியாமல் தீர்க்கதரிசியாக காணப்பட்டான்.

3. பெலவீனமும் குறைவுகளும்
3.1 இயேசுவின் மரணத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவன்.
3.2  அவனது அதிகாரம் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்புக்கு அவனது அலுவலகத்தை வழியாக
    பயன்படுத்திக்கொண்டான்.
3.3 இயேசுவை பிடிக்க வகைதேடினவனும், சட்ட விரோத சோதனை மேற்கொண்டவனும், இயேசுவை சிலுவையில் அறையும்படி  அங்கீகரிக்க பிலாத்துவை நிர்பந்தித்தவனும், இயேசுவின் உயர்த்தெழுதலை தடுக்க முயற்சித்தவனும், பின்னர் இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற உண்மையை மறைக்க முயற்சி செய்தவனுமாக காணப்பட்டான்.
3.4 மத தோற்றப் பொலிவை வைத்து ரோமரோடு சமரசம் செய்தவன்.
3.5 கிறிஸ்தவர்களைக் கொடுமை படுத்துவதில் பிற்காலங்களில் சம்பந்தப்பட்டவன்.


4. இவனது வாழ்க்கையிலிருந்து பாடங்கள்
4.1 தேவன் எதிரிகளின் மாறுபாடான  நோக்கங்கள் மற்றும் செயல்களைக் கொண்டும் தமது சித்தத்தை நிறைவேற்றுவார்.
4.2 சுயநல நோக்கங்களை நாம் ஆவிக்குரிய கருத்தோடும் தேவ வார்த்தைகளாலும் மூட முயற்சிப்போமானாலும், தேவன் நமது உள்ளத்தின் எண்ணத்தை அறிந்தே இருக்கிறார்.

5. வேதாகமக் குறிப்புக்கள்
மத்தேயு 28:12-13; யோவான் 11:49-50 மற்றும் அப்போஸ்தலர் நடபடிகள் 4:6லும் இவனை குறித்து வாசிக்கலாம்.

6. கலந்தாலோசனைக்கான கேள்விகள்
6.1 இவன் எத்தனை ஆண்டுகள் பிரதான ஆசாரியனாக பணியாற்றினான்?
6.2 இவனை பதவி இறக்கியவன் யார்?
6.3 இயேசுவை சிலுவையில் அறைய யூதாஸ் எங்ஙனம் உதவினான்?
6.4 இயேசுவின் இறப்பு ஒரு பாக்கியம் என இவன் கருதினது ஏன்?
6.5 ஏன் இவனும் இவனைச் சார்ந்த மற்றவர்களும் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை?

மொழிபெயர்ப்பு:
ஜான் ஆரோக்கியசாமி, பரி.பர்னபாவின் ஆலயம், கிள்ளான்.

No comments:

Post a Comment