101. யோசேப்பு, நாசரேத்திலுள்ள ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிகையாகிய மரியாளின்
புருஷன்.
முக்கிய வசனங்கள்: “அவள்
புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல் இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கையில் கர்த்தருடைய தூதன்
சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு, தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே: அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.” (மத்: 1: 19 – 20)
சுருக்கமான குறிப்புகள்.
v அவன் நீதிமானாயிருந்து தேவனுக்குக் கீழ்ப்படிந்தான்.
v அவன் மரியாளின் வாழ்க்கையில் தேவன் தலையிடுவதிற்கு மரியாதை கொடுத்தான்.
v அவன் தச்சனாயிருந்தான். சமூகத்தில்
உயர்ந்த ஸ்தானத்தில் இல்லை.
v அவன் மரியாளையும் இயேசுவையும் கவனித்துக் கொண்டான்.
v அவன் தேவனின் வழிநடத்துதலால் உணர்ச்சிமிக்கவனாயிருந்தான்.
1. அறிமுகம் – அவன்
விவரம்.
யோசேப்பு என்றால் `அவர், யெகோவா, இணைந்தவர்’ என்று பொருள். அவன்
மரியாளின் புருஷன், நமது
தேவனின் தாயார்; நேர்மையான நியாயமானவன், தாவீதின் வழிமுறையில் வந்தவன்.
(மத். 1: 20) யோசேப்பு எகிப்தில் சொற்ப காலம் தங்கியிருந்த காலத்திற்கு முன்பும் பின்பும்
தச்சு வேலை செய்து, நாசரேத்தில்
தொடர்ந்து அந்தத் தொழிலைச் செய்து கொண்டிருந்தான்.
இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன் யோசேப்பு மரணமடைந்தான்
என்று காணப்படுகிறது. (யோவான். 19: 27) ஆனால் அவன் மரணத்தின் நேரம் அல்லது வகை என்று ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லை. (மத். 1: 16 – 24; லூக். 1: 27; யோவான். 1: 45; 5: 42)
சில விவரங்களைப் புரிந்து கொள்வது உதவியாய் இருக்கும்.
மரியாள் தான் கருவுற்றிருக்கும்
நிலையை யோசேப்பிடம் கூறியபோது, யோசேப்புக்கு
அந்தக் குழந்தை தன்னுடையதல்ல என்று தெரியும்.
பரிசுத்த ஆவியின் செய்கையை யோசேப்பு புரிந்து கொள்வது இலேசான
காரியமல்ல. என்றாலும் யாரோ ஒருவர் அவன்
மணவாட்டி ஏதாவது தவறு செய்திருப்பாள் என்று நினைக்கக் கடினமானது என்று உணர்ந்தான். அந்த யாரோ ஒருவர் தேவன் தான் என்று ஒப்புக்கொள்ள நிலை தடுமாறினான்.
யோசேப்பு மரியாளை அவமானப்படுத்த
மனதில்லாமல் இரகசியமாய் அவளைத் தள்ளிவிட மனதாயிருந்தான்.
அவன் நியாயமாயும்,
அன்பாயும் நடந்து கொள்ள எண்ணமுடன் இருந்தான். அவன்
இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கையில் தேவன் அவருடைய தூதனை தூதாக அனுப்பி யோசேப்புக்கு
மரியாளின் செய்தியை உறுதிப்படுத்தி மரியாளை மனைவியாக ஏற்றுக்கொள்ள கீழ்ப்படியும்படி
வேறொரு வழியைத் திறந்தார். யோசேப்பு தேவனுக்குக் கீழ்ப்படிந்து, மரியாளை விவாகம்பண்ணி குழந்தை பிறக்கும்வரை அவள் கன்னிமைக்கு
மரியாதை கொடுத்தான்.
எவ்வளவு காலம் யோசேப்பு இயேசுவின்
உலகத் தகப்பனாக வாழ்ந்தார் என்று நமக்குத் தெரியாது. கடைசியாக இயேசுவுக்கு 12 வயதாகும்போது அவன் குறிப்பிடப்பட்டிருக்கிறான். ஆனால்
யோசேப்பு தன் குமாரனை குலத் தொழிலாகிய தச்சுத்தொழிலில் பயிற்றுவிக்கப்பட்டு, நாசரேத்தில் நல்ல ஆவியுள்ள பயிற்சியில் ஈடுபட உறுதியான நம்பிக்கை
கொண்டு, பஸ்கா பண்டிகைக்கு முழுக் குடும்பத்தையும்
எருசலேமுக்கு வருஷந்தோறும் பிரயாணம் போய் இயேசு அவர் வாலிப நாட்களில் தொடர்ந்து அனுபவிக்கச்
செய்தார்.
யோசேப்பு, கர்த்தருடைய தூதனின் வார்த்தைகளைக் கேட்ட நேரத்திலிருந்து
இயேசு ஒரு விசேஷமானவர் என்பதை அறிந்து கொண்டான். அதில் அவனுக்குப் பூரணமான நம்பிக்கை. அவன் தேவனின் முன்மாதிரியான அதிகாரத்தைப் பின்பற்றி நடக்க
ஆவலுள்ளவனாயிருந்ததால் இயேசுவின் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகத் தகப்பனாயிருந்தான். அவனுடைய
குமாரர்கள் யாக்கோபு, யோசேப்பு, யூதா, சீமோன்
மற்றும் குமாரத்திகள்.
2. வல்லமையும் திறமையும்
a)
அவன் நேர்மையானவனாயிருந்தான்.
b)
அவன் தாவீது ராஜாவின் வம்சச்
சந்ததியைச் சேர்ந்தவன்.
c)
அவன் இயேசுவின் சட்டரீதியான
உலகப்பிரகாரமான தந்தை.
d)
அவன் தேவனின் வழிகாட்டுதலால், என்ன
பலன் கிடைத்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் தேவனின் விருப்பததை மனமுவந்து செய்ய ஒரு
உணர்ச்சியுள்ள மனிதனாக இருந்தான்.
3. அவன் வாழ்க்கையின் மூலம் பாடங்கள்.
a) தேவன் நேர்மையை கெளரவப்படுத்துகிறார்.
b) தேவனின் தேர்வுப்படி சமூகப்பதவி முக்கியமானதல்ல.
c) தேவனிடமிருந்து பெற்ற வழிகாட்டுதலுக்குக் கீழ்ப்படிந்தால், அவரிடமிருந்து அதிகமான வழிகாட்டுதலுக்கு அழைத்துச் செல்லும்.
d) எண்ணங்கள் சரியான, தவறான
ஒரு செயலின் திட்டமான அளவாய் இருக்காது???
e) இயேசுவின் பாதுகாப்புக்காக அவன் தியாகம் செய்தான்.
இயேசுவையும் எல்லாவித பாதுகாப்புக்காகவும் எகிப்துக்குக் கூட்டிக்கொண்டு போனான்.
4. வேதாகமக் குறிப்புகள்
a) யோசேப்பின் விவரம் மத்தேயுவில் கூறப்பட்டிருக்கிறது. (மத்.1:16; 2:23; லுக். 1:26; 2:52)
b) NIV ஆய்வு வேதாகமம் (1641ம் பக்கம்)
c) A.R. பக்லண்ட். யுனிவர்சல்
வேதாகம அகராதி. 266ம் பக்கம்.
d) The IDB, Vol. E-J p. 979.
5. விவாதத்திற்குரிய கேள்விகள்.
5.1
யோசேப்பு ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிகை மரியாளைத் தன் மனைவியாக ஏற்றுக்கொள்ள ஏன் விரும்பவில்லை?
5.2
தேவனின் ஊழியக்காரனாகவும், மரியாளின் புருஷனாகவும் இருக்க அவன் எப்படி தூண்டுதலாய் இருந்தான்?
5.3
அவனுடைய சக்திகள் என்ன?
5.4
அவன் இயேசுவின் போஷிக்கும்
தந்தையாக என்ன செய்தான்?
5.5
உங்களது பார்வையின் பிரகாரம்
தேவனின் சபையில் அவனைப் பரிசுத்தவானாக மரியாதை செய்ய சபை என்ன செய்தது?
மொழிபெயர்ப்பு
திருமதி மேபல் பட்டு,
பரி.யாக்கோபின் ஆலயம்.
No comments:
Post a Comment