Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Friday, February 3, 2012

93. எலிசபெத்து


சகரியாவின் மனைவி, யோவன் ஸ்ந்நானகளின் தாயார்

முக்கிய வசனம்
என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது. இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று. விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள். (லூக்கா 1.43-45)

சுருக்கமான குறிப்புகள்
·         எலிசபெத்தும், கணவர் சகரியாவும் ஆசாரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
·         வர்களுக்கு யோவான் ஸ்நானகள் என்ற மகன் பிறந்தான்.
·         இந்தத் தம்பதியாருக்குத் தேவன் உண்மையுள்ளவராக இருந்தார்.
·         இந்த மகன் அநேகரின் இருதயத்தைக் கர்த்தரிடத்தில் திருப்பும் தீர்க்கதரிசியாக இருந்தான்.
·         தேவன் குறிக்கும் நேரம் நாம் நினைக்கும் நேரத்தைக் காட்டிலும் வித்தியாசமானது.

1.         முகவுரை
இவளுடைய சரித்திரம்
எலிசபெத்து என்பது, “தேவன் சத்தியமானவர்என்று பொருள்படும். இஸ்ரவேலில் அந்நாட்களிலுள்ள சமுகத்தில், ஒரு பெண்ணின் குழந்தை பெறும் தகதியைப் பொறுத்தே அவளுடைய மதிப்பு கணிக்கப்பட்டது. குழந்தை பெறாமல் முதிர்வயதடைவது, தனிப்பட்ட முறையில் அப்பெண்ணுக்குக் கஷ்டமும், அவமானமும் கொடுப்பதாக இருந்தது. எலிசபெத்தும், குழந்தையில்லாத முதிர் வயதில் தனிமையும் கஷ்டமும் அனுபவித்த போதிலும் தேவனுக்கு உண்மையுள்ளவனாக இருநதாள்

எலிசபெத்து, சகரியா இருவரும் ஆசாரிய வம்சத்தில் பிறந்தவர்கள். ஒவ்வொரு ஆண்டிலும் தனது ஆசாரிய ழியத்தைச் செய்யும் படி சகரியா எருசலேம் தேவாலயம் செல்ல வேண்டும். இப்படியாக ஒரு முறை தேவாலயம் சென்று திரும்பி வந்த போது, சகரியா மிகவும் உணர்ச்சி வசப்பட்டவனாக, ஆனால் பேசக் கூடாதவனாக இருந்தான். எனவே, அந்த நல்ல செய்தியை அவன் ழுதியே தெரிவிக்க வேண்டியதாக இருந்தது. அவன் மனைவி எலிசபெத்துக்கு எவ்வளவு பெரிய ஆச்சரியமான செய்தி.... கலைந்து போன தங்கள் கனவு நனவாகப் போகிற்றது. சீகிரமே எலிசபெத்து கர்ப்பம் தரித்தாள். தங்களுடைய குழந்தை, நீண்ட காலமாக நம்பிக்கையுடன் காத்திருந்து பெற்ற தேவனுடைய ஈவு என்று அறிந்து கொண்டாள்.

இந்தச் செய்தி வெகு விரைவில் பரவியது. 70 மைல்களுக்கப்பால், எலிசபெத்தின் உறவினளான மரியாளும் அதிசயமாகக் கர்ப்பவதியானாள். தேவதூதன் மரியாளிடம் வந்து, “மேசியா உன்னிடத்தில் பிறப்பார்ர’, என்று செய்து சொல்லிய பின்பு மரியாள் எலிசபெத்தின் வீட்டிற்குச் சென்றாள். தேவன் தங்களுக்குக் கொடுத்துள்ள இணையற்ற ஈவைக் குறித்து இருவரும் ஒருமித்து தேவனைத் துதித்தார்கள். மரியாளின் குமாரன் தன்னுடைய குமாரனைக் காட்டிலும் பெரியவராயிருப்பார் என்று எலிசபெத்து அறிந்து கொண்டாள். ஏனென்றால் யோவான் மரியாளின் குமாரன் இயேசுவுக்கு வழியை ஆயத்தம் பண்ணும் தீர்க்கதரிசி. குழந்தை பிறந்து எட்டாம் நாளில் யோவான் என்று பெயரிட வேண்டும் என்று எலிசபெத்து கூறினாள். சகரியாவும் அதே போல் யோவான் என்று எழுக் காட்டிய போது அவனுடைய வாய் திறக்கப்பட்டது. இந்த விசேஷித்த குழந்தை எப்படிப் பட்டதாக இருக்குமோ என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள். லூக்.2.66.

தேவனுடைய ஈவுக்காக எலிசபெத்து தேவனைத் துதித்தாள். மேரியைப் பற்றிறயும் அறிந்து தேவன் குறித்த நேரத்தைப் பற்றியும் அவள் வியப்படைந்திருப்பாள். நாமும் கூட எல்லா சூழ்நிலைகளையும் தேவன் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற்றார் எனப்தை நினைவு கூரவேண்டும். உன்னுடைய வாழ்க்கையில் சம்பவங்களும் எப்படி தேவன் குறித்த நேரத்தின்படி நடந்த்தென்று னித்துப் பார்த்த்துண்டா?

2.         பலமும் சாதனைகளும்
a)     கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நீதியுள்ளவனாக இருந்தான். (லூக்.1.6).
b)     யோவான் ஸ்நானகனின் தயார்.
c)     தேவன் வாக்குக் கொடுத்தை நிறைவேற்ற வல்லவராக இருக்கிறார் என்பதில் சிறிதும் சந்தேகப்படவில்லை.
d)    இரட்சகரின் வருகை பற்றி மரியாளைத் தவிர அறிந்து கொண்ட முதலாவது பெண்.



3.         இவளுடைய வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ளும் பாடங்கள்
a)     தமக்கு உண்மையாயிருப்பவர்களை தேவன் ஒருபோதும் விடுவதில்லை (. மறப்பதில்லை)
b)     தேவனுடைய கால அட்டவணை செய்லமுறைகளும் நாம் எதிர்பார்ப்பது போல் ஒத்திருக்கத் தேவையில்லை.


4.         வேதவசன ஆதாரங்கள்லூக்கா 1.5-80

5.         விவாதத்துக்கான கேள்விகள்
a)     எலிசபெத் என்பதன் அர்ரத்தம் என்ன?
b)     தேவனுடைய வாக்குறிதியில் நம்பிக்கை வைத்தாளா?
c)     அவளடைய மகன் யார்?
d)    யோவானின் வருகையைப் பற்றி கேள்விப்பட்ட பெண் யார்?
e)     அவளுடைய வாழ்க்கையிலிருந்து நிந்தனை, அவமானத்தைத் தேவன் எவ்வாறு நீக்கினார்?

மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்,
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.

92. கொர்நேலியு


ரோம நூற்ற்றுக்கதிபதி

முக்கிய வசன்னம்
நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்தஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்தஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். (அப்.19.2)

சுருக்கமான குறிப்புகள்
·         கொர்நேலியுரோமன், 100 போர் வீர்ர்களுக்கு அதிபதி.
·         ரோம சாம்ராஜ்யத்தின் தலை நகரத்தில் சுவிசேஷத்தைப் பரவச் செய்வதற்கு இவனுடைய மனமாற்றம் முன்னேற்றப் பாதையில் ஒரு படிக்கட்டு போல் இருந்தது.
·         இவன் பிறரால் நன்கு மதிக்கப்பட்டவனும், தன் வீட்டாரோடு தேவனுக்குப் பயந்தவனுமாக இருந்தான்.

1.         முகவுரைஇவனுடைய சரித்திரம்
கிறிஸ்தவ மார்க்கம் பரவத் தொடங்கிய ஆதி நாட்கள், தேவனுடைய ஆவியானவர் அசைவாடியதினாலும், அநேகருடைய ஜீவியம் மாற்றப்பட்டதினாலும் மிகுந்த ஊக்கமூட்டுவதாக இருந்தது. பற்பல நிலையிலுள்ளவர்களும் மதம் மாறிக் கொண்டிருந்தார்கள். எல்லாருக்கும் அச்சுறுத்தலாக இருந் சவுலும் கூட கிறிஸ்தவனாகி விட்டான். யூதரல்லாதோரும் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை ற்றுக் கொண்டு விசுவாசித்தார்கள். இவர்களில் ஒருவன்தான் ரோம நூற்றுக்கதிபதியாகிய கொர்நேலியு என்பவன். ஒரு நுற்றுக்கதிபதியின் அதிகாரத்தின் கீழ் 100 போர் வீரர்கள் இருப்பார்கள். இந்த செசகியா பட்டணம் யோப்பா பட்டணத்துக்கு வடக்கே 32 மைல் தூரத்தில் இருக்கிறது.

அடிக்கடி ஏற்றபடும் கலவரங்களினால் இஸ்ரவேல் நாடெங்கும் அமைதியை நிலை நாட்டும்படி ரோம போர் வீரர்கள் நிறுத்தப்பட வேண்டியதாக இருந்தது. ஆனால் ரோமருடைய அதிகாரத்தின் கீழ் இருப்பது மக்களுக்கு விருப்பமில்லை. ரோம அதிகாரிகளை வெறுத்தனர். அதனால் கொர்நேலியு இக்கட்டான நிலைமையில் இருந்தான். அவனுடைய வீடு செசரியா பட்டணத்தில இருந்தது. இவன் ஸ்ரவேல்லில் இருந்த நாட்களில் தேவனால் தெரிந்து கொள்ளப் பட்டான். இவன் தேவ பக்தியுள்ளவனும் தன்னுடைய விசுவாசத்தினால் யூதர்களின் நன்மதிப்பையும் பெற்றிருந்தான்.

அப்போஸ்தலர் நடபடிகளில் கொர்நேலியுவின் குணத்தைப் பற்றி 4 முக்கிய தன்மைகள் காணப்படுகின்றன. அவன் எப்பொழுதும் தேவனை நாடித் தேடினான். தேவ பக்தியுள்ளவன். தேவையுள்ள மக்களுக்குத் தருமங்கள் செய்கிறவனும், எப்போதும் ஜெபிக்கிறவனுமாக இருந்தான் (அப்.10.2). யோப்பா பட்டணத்திதற்கு ஆள் அனுப்பி பேதுருவை அழைப்பிக்கும்படி தேவன் அவனிடம் கூறினார் (10.5). ஏனென்றால் கொர்நேநலியு பிரியப்படுத்த விரும்பும் தேவனைப் பற்றி பேதுரு அவனுக்கு இன்னும் அதிகமாக அறிவிப்பான்.

பேதுரு கொர்நேலியுவின் வீட்டிற்குள் நுழைந்நத போது, யூதருடைய சட்டங்களை மீற வேண்டியதாயிற்று. பேதுரு முதலில சிறிது தயங்கின போதிலும் அங்கு வாஞ்சையுடன் கூடியிருந்த மக்களைக் கண்ட போது, தன்னுடைய செய்தியைக் கூறாமல் இருக்க முடியவில்லை. பேதுரு பேசத் தொடங்கிய போது அந்த ரோம குடும்பத்தினரைத் தேவன் தமது பரிசுத்த ஆவியினால் நிரப்பினார். எனவே, பேதுரு அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து மற்றவர்களைப் போலவே அவர்க்களையும் வளர்ந்து வரும் கிறிஸ்தவத் திருச்சைபைக்குள் வரவேற்க வேண்டியதாயிற்று. உலக முழுமைக்கும் சுவிசேஷத்தை எடுத்துச் செல்லும் முயற்சியில் ஒரு படி முன்னேறி விட்டது.

தம்மை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக தேவன் அசாதாரணமான வெவ்வேறு முறைகளையும் உபயோகிக்க ஆயத்தமாக இருக்கிறார் என்பதற்குக் கொர்நேலியு ஒரு உதாரணமாக இருக்கிறான். தேவன் பாரபட்சம் பாராட்டுவதில்லை. தம்மைக் கண்டடைய விரும்புபவர்க்கு அவர் தம்மை ஒளித்துக் கொள்வதில்லை. பேதுரு, கொர்நேலியுவையும் நம்மையும் கொண்ட உலக முழுவதையும் தேவன் நேசிப்பதினால் தமது குமாரனை அனுப்பினார்.

2.         பலமும் சாதனைகளும்
a)     தெய்வ பக்தியும் தாராள மனப் பான்மையும் கொண்ட நூற்றுக்கதிபதி.
b)     யூதரை அடிமைப் படுத்திய ரோம சேனையின் அதிகாரியாக ருந்த போதிலும் யூதரின் மதிப்புக்குரியவனாக இருந்தான்.
c)     தேவனுக்குக் கீழ்ப்படிந்து, தன் குடுமபத்தினரையும் அவ்வாறே ஊக்குவித்தான்.
d)    அவனுடைய மதமாற்றம், கிறிஸ்தவின் நற்செய்தி யூதர், புற ஜாதியார் ஆகிய எல்லா ஜனத்துக்கும் உரியது என்பதை ஆதித் திருச்சபை உணர்ந்து கொள்ள உதவி செய்தது.

3.         இவனது வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள்
a)     தம்மை அறிய விரும்புபவர்களுடம் தேவன் வந்து தம்மை வெளிப்படுத்துகிறார்.
b)     சுவிசேஷம் எல்லா மக்களுக்கும் உரியது.
c)     விசுவாசிக்க வாஞ்சையுள்ள மக்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றனர்.
d)    சத்தியத்தைத் தேடி, தேவனுக்குக் கீழ்ப்படிய நாம் விரும்பும் போது தேவன் நமக்கு நல்ல பலனளிப்பார்.
e)     தம்மை உண்மையாய்த் தேடுகிறவர்களுக்குத் தேவன் தில் அளிக்கிறார் (எபி.11.6) என்பதற்குக் கொர்நேலியு உதாரணமாக இருக்கிறான். கிறிஸ்தவரல்லாத ஒருவருக்கு நாம் எவ்வாறு உதவி செய்யலாம்? (அப்.0.4)

4.         வேத வசன ஆதாரங்கள்அப்.10.1-11.18

5.         விவாதிக்க வேண்டிய கேள்விகள்
a)     தேவனுக்குப் பயப்படுகிற கிறிஸ்தவரல்லாத ஒருவரை எவ்வாறு கிறிஸ்துவண்டைக் கொண்டு வரலாம்? (அப்.10.2).
b)     கொர்நேலியுவின் நான்கு சிறப்பான தன்மைகளைப் பற்றி எடுத்துக் கூறு.
c)     கொர்நேலியுவையும் அவன் வீட்டாரையும் தேவனுடைய திருச்சபைக்குள் கொண்டு வந்த அப்போஸ்தலன் யார்?
d)    தேசிய சட்டம் இடமளிப்பதற்கு அதிகமாக நாம் எவ்வாறு சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்?
e)     கிறிஸ்தவர்களால்லாதவர்களின் விசுவாசத்தை நாம் எவ்வாறு வளர்ச்சியடைய அல்லது விருத்தியாகச் செய்யலாம்?


மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்,
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.