Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Friday, February 3, 2012

90. பர்தொலொமேயு


கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களில் ஒருவன்

முக்கிய வசனம்
அவனோ தன் வீட்டிலே ஒரு தேவதூதன் நிற்கிறதைக் கண்டதாகவும், யோப்பா பட்டணத்திலிருக்கிற பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைக்கும்படிக்கு மனுஷரை அவ்விடத்திற்கு அனுப்பு;  (அப்.11.13)

சுருக்கமான குறிப்புகள்
·         இயேசுவின் 12 சீஷர்களில் அதிகமாக அறியப்படாதவன் இவன்.
·         இவன் தொலொமேயுவின் குமாரன். இவனுடைய பெயர் யுத்த வீரன் என்றும் பொருள்படும்.
·         சீஷர்களில் ஒருவன் இவனை இயேசுவிடம் கொண்டு வந்திருக்கக் கூடும்.
·         சுவிசேஷ ஊழியராக இந்தியாவுக்குச் சென்று அங்கே இரத்தச் சாட்சியாக மரித்தார் என்று கூறப்படுகிறது.

1. முகவுரைஇவனுடைய சரித்திரம்
மேற்கு மலேசியா சிங்கப்பூர் திருமண்டலம் பரி.பர்தொலொமேயுவின் திருநாளன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் முதலாவது பேராயர் பிஷம் பெர்குசன் டேவி அவர்கள் 1909ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். வேலை ஓய்வு பெற்ற்றபின் இவர் இந்தியாவின் தேசிய மொழியான ஹிந்தியைக் கற்று, இந்தியாவில் சுவிசேஷகராக ழியம் செய்து, பின்பு ஆப்பிரிக்காக் கண்டத்துக்குப் போய் கிறிஸ்துவுக்கு சேவை செய்தார்.

2.         பர்தொலொமேயு யார்?
இயேசுவின் முதலாவது 12 சீஷர்களில் இவன் ஒருவன். பர்தொலொமேயு என்று அழைக்கப்பட்டான். யோவான் 1ம் அதிகாரத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் நாத்தான்வேல் இவன் என்று சிலர் கருதுகின்றனர். இயேசு தண்ணீரைத் திராட்சரசமாக மாற்றிய கலிலேயாவிலுள்ள கானாவூரிலிருந்து வந்தவர். பர்தொலொமேயுவும் மாற்றப்பட்டான். அர்மேனியாவிலும், இந்தியாவிலும் ஊழியம் செய்த்தாகச் சொல்லப்படுகிறது. இவர் இரத்த சாட்சியாகத் தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதுவும் சீஷத்துவத்தின் கிரயம். ஒரு சீஷன், அப்போஸ்தலன் அல்லது இரத்தசாட்சியாக இறப்பதன் கிரயம் என்ன என்பதை அநேகர் புரிந்துணர்ந்து கொள்வதில்லை.

3.         பர்தொலொமேயுவிடமிருந்து என்ன கற்ற்றுறக் கொள்ளுகிறோம்?
மூன்று முக்கியமான விஷயங்களை நாம் பார்க்கலாம்.
)        சீஷத்துவம்கற்றுக் கொள்ளும் மாணவனாக இருப்பது.
)       அப்போஸ்தல உழியம்மக்களிடத்திற்கு அனுப்பப் படுதல்.
)        இரத்தச் சாட்சிபலியாகுவது போல் துன்பப்படுதல்.

            மலேசியாவிலும், வேறு எந்த இடத்திலும் தேவனுடைய திருச்சபையின் வளர்ச்சி, அபிவிருத்திக்கு மேற்கூறிய  விஷயங்களும் அத்தியாவசியமானவை. சீஷரில் ஒருவன் என்பது உறுதியாகிறது. நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சீஷராகும் படி அழைக்கப் பட்டிருக்கிறோம். இது நீண்ட காலத்திற்குரிய அழைப்பு. இயேசுவின் சீயர்கள் தங்கள் வாழ்க்கையை இயேசுவுடன் வாழ்ந்தார்கள். நமது குரு (போதகர்) இயேசுவே. நெருக்கமான உறவில் தான் கற்றுக் கொள்ள முடிகிறது. நாம் அப்போஸ்தலராக, சுவிசேஷத்தை மற்றவர்களுக்கு அறிவிக்கவும், அதை நமது ஜீவியத்தின் மூலம் காண்பிக்கவும் மற்றவர்களுக்கு அறிவிக்கவும், அதை நமது ஜீவியத்தின் மூலம் காண்பிக்கவும் அனுப்பப் படுகிறவர்களாக இருக்கிறோம். ஆனால் அதற்கு முன்பாக நாம் தேவனுடைய வார்த்தையைக் கற்று, பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்பட வேண்டும். ஒரு கிறிஸ்தவன் தேவனுடைய வார்த்தையையும் அவருடைய ஆவியையும் நிறைந்தவனாக இருக்க வேண்டும். இது ஒரு ஜீவியகால முழுமைக்குமான அழைப்பு. எங்கேயும், எல்லா இடங்களிலும் தம்மைப் பின்பற்றும்படி இயேசு அழைக்கிறார்.

2.         இரண்டாவது விஷயம், கிறிஸ்துவின் அப்போஸ்தலனாக இருப்பது. இயேசு இந்த உலகில் தேவனுடைய சுவிசேஷகராக, “பிதா என்னை அனுப்பினது பேல நானும் உங்களை அனுப்புகிறேன்என்று கூறினார் (யோ.20.21). அவர் நம்மை வல்லமையோடும், அதிகாரத்தோடும் அனுப்புகிறார் (மாற்கு 6.7-8, 12). அப்போஸ்தலர்கள் தங்கள் வீடுகளை விட்டுச் சென்று ஒவ்வொருவரிடமும் தேவனிடம் திரும்பும்படிக் கூறத் தொடங்கினார்கள். கிறிஸ்தவ ஊழியத்திலும், சாட்சியிலும், எப்போதும் சிலர் ஏற்றுக் கொள்ள மறுப்பதற்காக சாத்தியம் உள்ளது. நாம் இதற்கும் ஆயத்தமாக இருக்க வேண்டும். வளர்ந்து வரும் திருச்சபைகள் இருக்கின்றன. வளர்ச்சியே இல்லாமல் செயல்பட்டு வரும் சபைகளும் இருக்கின்றன. வளர்ச்சியே இல்லாமல் செயல்பட்டு வரும் சபைகளும் இருக்கின்றன. வளரும் சபை ஊழியரை அனுப்பும் சபையாக இருக்கிறது.

3.         மூன்றவாது விஷயம், பர்தொலொமேயு இரத்த சாட்சியாக மரித்தான் என்பதாகும். “ஓர் இரத்தச் சாட்சி சிந்தும் இரத்தம் திருச்சபையின் வித்துஎன்று கூறப்படுகிறது. உண்மையுள்ளவர்களும் தங்களையே அர்ப்பனிக்கும் தியாக சிந்தையுள்ளவர்களுமான கிறிஸ்தவ சுவிசேஷகர்கள் நம் நாட்டுக்குத் தேவையாக இருக்கின்றனர்.

4.         வேத வசன ஆதாரங்கள்சுவிசேஷங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் உதவியாக இருக்கின்றன

5.         விவாதத்துக்கான கேள்விகள்
1.         சீஷன், அப்போஸ்தலன், இரத்தச் சாட்சிஇவைகளின் அர்த்தம் என்ன?
2.         மலேசியா சிங்கப்பூர் திருமண்டலம் எப்போது அமைக்கப்பட்டது?
3.         இந் திருமண்டலத்தின் முதலாவது பேராயர் யார்?
4.         பர்தொலொமேயு எவ்வாறு இரத்த சாட்சியாக மரித்தார்?
5.         ஒரு சுவிசேஷ ஊழியருக்கு நாம் எவ்வாறு உதவி செய்யலாம்?


மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்,
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.

No comments:

Post a Comment