சகரியாவின் மனைவி, யோவன் ஸ்ந்நானகளின் தாயார்
முக்கிய வசனம்
என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில்
வந்தது எனக்கு எதினால் கிடைத்தது. இதோ, நீ வாழ்த்தின சத்தம்
என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று. விசுவாசித்தவளே
பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள். (லூக்கா 1.43-45)
சுருக்கமான குறிப்புகள்
·
எலிசபெத்தும், கணவர்
சகரியாவும் ஆசாரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
·
இவர்களுக்கு
யோவான் ஸ்நானகள் என்ற மகன் பிறந்தான்.
·
இந்தத்
தம்பதியாருக்குத் தேவன் உண்மையுள்ளவராக இருந்தார்.
·
இந்த
மகன் அநேகரின் இருதயத்தைக் கர்த்தரிடத்தில் திருப்பும் தீர்க்கதரிசியாக இருந்தான்.
·
தேவன்
குறிக்கும் நேரம் நாம் நினைக்கும் நேரத்தைக் காட்டிலும் வித்தியாசமானது.
1. முகவுரை
இவளுடைய சரித்திரம்
எலிசபெத்து என்பது, “தேவன் சத்தியமானவர்” என்று பொருள்படும். இஸ்ரவேலில் அந்நாட்களிலுள்ள சமுகத்தில், ஒரு பெண்ணின் குழந்தை பெறும் தகதியைப் பொறுத்தே அவளுடைய மதிப்பு கணிக்கப்பட்டது. குழந்தை பெறாமல் முதிர்வயதடைவது, தனிப்பட்ட முறையில் அப்பெண்ணுக்குக் கஷ்டமும், அவமானமும் கொடுப்பதாக இருந்தது. எலிசபெத்தும், குழந்தையில்லாத முதிர் வயதில் தனிமையும் கஷ்டமும் அனுபவித்த போதிலும் தேவனுக்கு உண்மையுள்ளவனாக இருநதாள்
எலிசபெத்து, சகரியா இருவரும் ஆசாரிய வம்சத்தில் பிறந்தவர்கள். ஒவ்வொரு ஆண்டிலும் தனது ஆசாரிய ஊழியத்தைச் செய்யும் படி சகரியா எருசலேம் தேவாலயம் செல்ல வேண்டும். இப்படியாக ஒரு முறை தேவாலயம் சென்று திரும்பி வந்த போது, சகரியா மிகவும் உணர்ச்சி வசப்பட்டவனாக, ஆனால் பேசக் கூடாதவனாக இருந்தான். எனவே, அந்த நல்ல செய்தியை அவன் எழுதியே தெரிவிக்க வேண்டியதாக இருந்தது. அவன் மனைவி எலிசபெத்துக்கு எவ்வளவு பெரிய ஆச்சரியமான செய்தி.... கலைந்து போன தங்கள் கனவு நனவாகப் போகிற்றது. சீகிரமே எலிசபெத்து கர்ப்பம் தரித்தாள். தங்களுடைய குழந்தை, நீண்ட காலமாக நம்பிக்கையுடன் காத்திருந்து பெற்ற தேவனுடைய ஈவு என்று அறிந்து கொண்டாள்.
இந்தச் செய்தி வெகு விரைவில் பரவியது. 70 மைல்களுக்கப்பால், எலிசபெத்தின் உறவினளான மரியாளும் அதிசயமாகக் கர்ப்பவதியானாள். தேவதூதன் மரியாளிடம் வந்து, “மேசியா உன்னிடத்தில் பிறப்பார்ர’, என்று செய்து சொல்லிய பின்பு மரியாள் எலிசபெத்தின் வீட்டிற்குச் சென்றாள். தேவன் தங்களுக்குக் கொடுத்துள்ள இணையற்ற ஈவைக் குறித்து இருவரும் ஒருமித்து தேவனைத் துதித்தார்கள். மரியாளின் குமாரன் தன்னுடைய குமாரனைக் காட்டிலும் பெரியவராயிருப்பார் என்று எலிசபெத்து அறிந்து கொண்டாள். ஏனென்றால் யோவான் மரியாளின் குமாரன் இயேசுவுக்கு வழியை ஆயத்தம் பண்ணும் தீர்க்கதரிசி. குழந்தை பிறந்து எட்டாம் நாளில் யோவான் என்று பெயரிட வேண்டும் என்று எலிசபெத்து கூறினாள். சகரியாவும் அதே போல் யோவான் என்று எழுக் காட்டிய போது அவனுடைய வாய் திறக்கப்பட்டது. இந்த விசேஷித்த குழந்தை எப்படிப் பட்டதாக இருக்குமோ என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள். லூக்.2.66.
தேவனுடைய ஈவுக்காக எலிசபெத்து தேவனைத் துதித்தாள். மேரியைப் பற்றிறயும் அறிந்து தேவன் குறித்த நேரத்தைப் பற்றியும் அவள் வியப்படைந்திருப்பாள். நாமும் கூட எல்லா சூழ்நிலைகளையும் தேவன் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற்றார் எனப்தை நினைவு கூரவேண்டும். உன்னுடைய வாழ்க்கையில் சம்பவங்களும் எப்படி தேவன் குறித்த நேரத்தின்படி நடந்த்தென்று னித்துப் பார்த்த்துண்டா?
2. பலமும் சாதனைகளும்
a)
கர்த்தரின்
கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நீதியுள்ளவனாக இருந்தான். (லூக்.1.6).
b) யோவான் ஸ்நானகனின் தயார்.
c) தேவன் வாக்குக் கொடுத்தை நிறைவேற்ற வல்லவராக இருக்கிறார் என்பதில் சிறிதும் சந்தேகப்படவில்லை.
d)
இரட்சகரின்
வருகை பற்றி மரியாளைத் தவிர அறிந்து கொண்ட முதலாவது பெண்.
3. இவளுடைய வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ளும் பாடங்கள்
a)
தமக்கு
உண்மையாயிருப்பவர்களை
தேவன் ஒருபோதும் விடுவதில்லை (அ. மறப்பதில்லை)
b)
தேவனுடைய
கால அட்டவணை செய்லமுறைகளும் நாம் எதிர்பார்ப்பது போல் ஒத்திருக்கத் தேவையில்லை.
4. வேதவசன ஆதாரங்கள் – லூக்கா 1.5-80
5. விவாதத்துக்கான கேள்விகள்
a)
எலிசபெத்
என்பதன் அர்ரத்தம் என்ன?
b) தேவனுடைய வாக்குறிதியில் நம்பிக்கை வைத்தாளா?
c) அவளடைய மகன் யார்?
d) யோவானின் வருகையைப் பற்றி கேள்விப்பட்ட பெண் யார்?
e)
அவளுடைய
வாழ்க்கையிலிருந்து
நிந்தனை, அவமானத்தைத் தேவன் எவ்வாறு நீக்கினார்?
மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்,
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.
No comments:
Post a Comment