ரோம நூற்ற்றுக்கதிபதி
முக்கிய வசன்னம்
நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்தஆவியைப் பெற்றீர்களா
என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்தஆவி உண்டென்பதை
நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். (அப்.19.2)
சுருக்கமான குறிப்புகள்
·
கொர்நேலியு – ரோமன்,
100 போர் வீர்ர்களுக்கு அதிபதி.
·
ரோம
சாம்ராஜ்யத்தின் தலை நகரத்தில் சுவிசேஷத்தைப் பரவச் செய்வதற்கு இவனுடைய மனமாற்றம் முன்னேற்றப் பாதையில் ஒரு படிக்கட்டு போல் இருந்தது.
·
இவன்
பிறரால் நன்கு மதிக்கப்பட்டவனும், தன் வீட்டாரோடு தேவனுக்குப் பயந்தவனுமாக இருந்தான்.
1. முகவுரை – இவனுடைய சரித்திரம்
கிறிஸ்தவ மார்க்கம் பரவத் தொடங்கிய ஆதி நாட்கள், தேவனுடைய ஆவியானவர் அசைவாடியதினாலும், அநேகருடைய ஜீவியம் மாற்றப்பட்டதினாலும் மிகுந்த ஊக்கமூட்டுவதாக இருந்தது. பற்பல நிலையிலுள்ளவர்களும் மதம் மாறிக் கொண்டிருந்தார்கள். எல்லாருக்கும் அச்சுறுத்தலாக இருந்த சவுலும் கூட கிறிஸ்தவனாகி விட்டான். யூதரல்லாதோரும் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை ஏற்றுக் கொண்டு விசுவாசித்தார்கள். இவர்களில் ஒருவன்தான் ரோம நூற்றுக்கதிபதியாகிய கொர்நேலியு என்பவன். ஒரு நுற்றுக்கதிபதியின் அதிகாரத்தின் கீழ் 100 போர் வீரர்கள் இருப்பார்கள். இந்த செசகியா பட்டணம் யோப்பா பட்டணத்துக்கு வடக்கே 32 மைல் தூரத்தில் இருக்கிறது.
அடிக்கடி ஏற்றபடும் கலவரங்களினால் இஸ்ரவேல் நாடெங்கும் அமைதியை நிலை நாட்டும்படி ரோம போர் வீரர்கள் நிறுத்தப்பட வேண்டியதாக இருந்தது. ஆனால் ரோமருடைய அதிகாரத்தின் கீழ் இருப்பது மக்களுக்கு விருப்பமில்லை. ரோம அதிகாரிகளை வெறுத்தனர். அதனால் கொர்நேலியு இக்கட்டான நிலைமையில் இருந்தான். அவனுடைய வீடு செசரியா பட்டணத்தில இருந்தது. இவன் இஸ்ரவேல்லில் இருந்த நாட்களில் தேவனால் தெரிந்து கொள்ளப் பட்டான். இவன் தேவ பக்தியுள்ளவனும் தன்னுடைய விசுவாசத்தினால் யூதர்களின் நன்மதிப்பையும் பெற்றிருந்தான்.
அப்போஸ்தலர்
நடபடிகளில் கொர்நேலியுவின் குணத்தைப் பற்றி 4 முக்கிய தன்மைகள் காணப்படுகின்றன. அவன் எப்பொழுதும் தேவனை நாடித் தேடினான். தேவ பக்தியுள்ளவன். தேவையுள்ள மக்களுக்குத் தருமங்கள் செய்கிறவனும், எப்போதும் ஜெபிக்கிறவனுமாக இருந்தான் (அப்.10.2). யோப்பா பட்டணத்திதற்கு ஆள் அனுப்பி பேதுருவை அழைப்பிக்கும்படி தேவன் அவனிடம் கூறினார் (10.5). ஏனென்றால் கொர்நேநலியு பிரியப்படுத்த விரும்பும் தேவனைப் பற்றி பேதுரு அவனுக்கு இன்னும் அதிகமாக அறிவிப்பான்.
பேதுரு கொர்நேலியுவின் வீட்டிற்குள் நுழைந்நத போது, யூதருடைய சட்டங்களை மீற வேண்டியதாயிற்று. பேதுரு முதலில சிறிது தயங்கின போதிலும் அங்கு வாஞ்சையுடன் கூடியிருந்த மக்களைக் கண்ட போது, தன்னுடைய செய்தியைக் கூறாமல் இருக்க முடியவில்லை. பேதுரு பேசத் தொடங்கிய போது அந்த ரோம குடும்பத்தினரைத் தேவன் தமது பரிசுத்த ஆவியினால் நிரப்பினார். எனவே, பேதுரு அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து மற்றவர்களைப் போலவே அவர்க்களையும் வளர்ந்து வரும் கிறிஸ்தவத் திருச்சைபைக்குள் வரவேற்க வேண்டியதாயிற்று. உலக முழுமைக்கும் சுவிசேஷத்தை எடுத்துச் செல்லும் முயற்சியில் ஒரு படி முன்னேறி விட்டது.
தம்மை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக தேவன் அசாதாரணமான வெவ்வேறு முறைகளையும் உபயோகிக்க ஆயத்தமாக இருக்கிறார் என்பதற்குக் கொர்நேலியு ஒரு உதாரணமாக இருக்கிறான். தேவன் பாரபட்சம் பாராட்டுவதில்லை. தம்மைக் கண்டடைய விரும்புபவர்க்கு அவர் தம்மை ஒளித்துக் கொள்வதில்லை. பேதுரு, கொர்நேலியுவையும் நம்மையும் கொண்ட உலக முழுவதையும் தேவன் நேசிப்பதினால் தமது குமாரனை அனுப்பினார்.
2. பலமும் சாதனைகளும்
a)
தெய்வ
பக்தியும் தாராள மனப் பான்மையும் கொண்ட நூற்றுக்கதிபதி.
b) யூதரை அடிமைப் படுத்திய ரோம சேனையின் அதிகாரியாக இருந்த போதிலும் யூதரின் மதிப்புக்குரியவனாக இருந்தான்.
c) தேவனுக்குக் கீழ்ப்படிந்து, தன் குடுமபத்தினரையும் அவ்வாறே ஊக்குவித்தான்.
d)
அவனுடைய
மதமாற்றம், கிறிஸ்தவின் நற்செய்தி யூதர், புற ஜாதியார் ஆகிய எல்லா ஜனத்துக்கும் உரியது என்பதை ஆதித் திருச்சபை உணர்ந்து கொள்ள உதவி செய்தது.
3. இவனது வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள்
a)
தம்மை
அறிய விரும்புபவர்களுடம் தேவன் வந்து தம்மை வெளிப்படுத்துகிறார்.
b) சுவிசேஷம் எல்லா மக்களுக்கும் உரியது.
c) விசுவாசிக்க வாஞ்சையுள்ள மக்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றனர்.
d) சத்தியத்தைத் தேடி, தேவனுக்குக் கீழ்ப்படிய நாம் விரும்பும் போது தேவன் நமக்கு நல்ல பலனளிப்பார்.
e)
தம்மை
உண்மையாய்த்
தேடுகிறவர்களுக்குத்
தேவன் பதில் அளிக்கிறார் (எபி.11.6) என்பதற்குக் கொர்நேலியு உதாரணமாக இருக்கிறான். கிறிஸ்தவரல்லாத ஒருவருக்கு நாம் எவ்வாறு உதவி செய்யலாம்? (அப்.0.4)
4. வேத வசன ஆதாரங்கள் – அப்.10.1-11.18
5. விவாதிக்க வேண்டிய கேள்விகள்
a)
தேவனுக்குப்
பயப்படுகிற கிறிஸ்தவரல்லாத ஒருவரை எவ்வாறு கிறிஸ்துவண்டைக் கொண்டு வரலாம்? (அப்.10.2).
b) கொர்நேலியுவின் நான்கு சிறப்பான தன்மைகளைப் பற்றி எடுத்துக் கூறு.
c) கொர்நேலியுவையும் அவன் வீட்டாரையும் தேவனுடைய திருச்சபைக்குள் கொண்டு வந்த அப்போஸ்தலன் யார்?
d) தேசிய சட்டம் இடமளிப்பதற்கு அதிகமாக நாம் எவ்வாறு சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்?
e)
கிறிஸ்தவர்களால்லாதவர்களின் விசுவாசத்தை
நாம் எவ்வாறு வளர்ச்சியடைய அல்லது விருத்தியாகச் செய்யலாம்?
மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்,
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.
No comments:
Post a Comment