– யூத குலத்து ராஜா
16 சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள்
ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக்
குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை. 17 நாங்கள்
ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய
கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். 18 விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு
ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது
ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள். (தானியேல் 3.16-18)
சுருக்கக் குறிப்புகள்
·
பாபிலோனில்
யூத தலைவர்கள்
·
சாத்ராக்
– இவன் எரிரகிற அக்கினிச் சூளையில் போடப்பட்டான்.
·
மேஷாக்
– தானியேலின் தோழன்.
·
ஆபேத்நேகோ
– அசரியா
·
நட்பு
சோதிக்கப்பட்டு வலுவடையச் செய்தது.
1.
முகவுரை
– 3 விசுவாச வீர்ர்களின் சரித்திரங்கள். இவற்றை ஒவ்வொன்றாகப் புரிந்துணர்ந்து கொள்ள முயற்சி செய்வோம்.
a.
சாத்ராக்
– நேபுகாத் நேச்சாரின் அரண்ணமனைக்குள் கைதிகளாகக் கொண்டு வரப்பட்ட 33 ராஜ குமாரர்களுள் ஒருவர். அனனியா
எனப்பட்ட இவனுக்குக் கொடுக்கப்பட்ட பாபிலோனியப் பெயர். தேவனை மறுதலிக்க மறுத்து விட்டதால் எரிகிற அக்கினிச் சூளையில் போடப்பட்டான். (தானியேல் 11.7, 2.49, 3.12-30).
b.
மேஷாக்
– தானியேலின் நண்பர்களில் ஒருவனான மிஷாவேலுக்குக் கொடுக்கப்பட்ட பாபிலோனியப் பெயர். (தானி.1.7, 2.49).
c.
ஆபேத்நேகோ
என்றால் நேகாவின் வேலையாள் என்று பொருள் படும். அவனுடைய யூத பெயர் அன்னியா என்பது. பாபிலோனுக்குச் சிறையாக்க்
கொண்டு போகப்பட்ட 4 ராஜ குமாரருள் இவன் ஒருவன். நேபுகாத்
நேச்சாரின் பிரதானிகளின் தலைவனால் இந்தப் பெயர் கொடுக்கப் பட்டன. (தானி.11.7). ராஜா
நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ள மறுத்த்தினால் அக்கினிச் சூளையில் போடப்பட்ட 3 நண்பர்களில் ஒருவன் (தானியேல்
3ம் அதி.)
2.
இந்த
அறிமுகத்துடன் தேவனுக்கு உத்தம சாட்சிகளான இந்த 3 பேரின் மற்ற காரியங்களை கவனினப்போம். கஷ்டங்களின் மத்தியில் நட்பு சோதிக்கப்பட்டு வலுப்படுத்தப்படகிறது. இந்த 4 நண்பர்களிடையே காணப்படும்
உறவு, நட்பு என்பதன் உண்மையான அர்த்த்த்தைக் குறித்து சிந்திக்க வைக்கிறது. தங்கள் நட்பின் மத்தியிலும் அவர்கள் தேவனுக்குக் கொடுக்க வேண்டிய இடத்தை விட்டுக்கொடுக்கவில்லை. இவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ராஜா செய்த பொற்சிலையை வணங்க அமைதியுடன் மறுத்தனர். இவர்களை
எப்படியாவது அழித்துப்போட விரும்பிய மற்ற மனிதர் ராஜாவிடம் சென்று இந்த 3 பேரும் ராஜாவுக்குக் கீழ்ப்படியவில்லை என்று சொன்னார்கள். ராஜாவினால் இவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.
மரணம் அவர்களைப் பிரிக்கும் சமயம் வருவதாக இருந்தது. ஆனாலும் அவர்கள் விட்டுக் கொடுப்பதாக இல்லை. இவர்கள்
ஒவ்வொருவரும் தேவனுக்கு
உண்மையுள்ளவர்களாக
இருந்தனர். அதனால் தங்கள் ஜீவனைத் தேவனுடைய கரங்களில் ஒப்புவிக்கத் தயங்கவில்லை. இதன் பின்பு இவர்களுக்கு வெற்றியே கிடைத்த்து.
2. பலமும்
சாதனைகளும்.
2.1. ராஜா
போஜனத்தைப் புசிக்க மறுத்ததில் இவர்கள் தானியேலுடன் உறுதியாயிருந்நதார்கள்.
2.2. கஷ்டங்கள்,
வெற்றி, செல்வம், மரண ஆபத்து எல்லாவற்றிலும் சோதனையை எதிர்த்து நட்பைப் பகிர்ந்து கொண்டார்கள்.
2.3. மரணம்
நேரிடுவதாக இருந்நதாலும் தங்கள் விசுவாசத்தை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை.
2.4. பயங்கரமான
அக்கினிச் சூளையிலும் உயிர் தப்பினர்.
3.
அவர்களிடமிருந்து கற்றுக்
கொள்ளும் பாடங்கள்
a.
நட்பு
நமக்கு உதவியாக இருக்கலாம் ஆனால், அது நமது ஆழ்ந்த ஆத்மீகத் தேவைகளைச் சந்திக்க முடியாது. நம்முடைய
உறவிலிருந்து தேவனை விலக்கி வடும் போது, நமது வாழ்க்கையில் அவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
b.
உண்மையான
நட்பில் மிகுந்த பலம் காணப்படுகிறது.
c.
நமது
நம்பிக்கைகளைப் பகிர்ந்து கொள்பவர்களுக்கு நாம் எப்போதும் துணையாக இருக்க வேண்டும்.
d.
வரப்போகும்
விளைவுகளை முன்னறிய முடியாத போதும் நாம் தேவனை நம்பலாம்.
e.
சாத்ராக்,
மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோருக்கு தேவன் விடுதலை கொடுத்தது, சிறைப்பட்டிருந்த யூதருக்கு விசுவாசத்தின மிகப் பெரிய வெற்றியாக இருந்தது. அவர்கள்
தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டு, சோதனையில் ஆறுதல் படுத்தப் பட்டனர். தேவன்
மகிமைப் படுத்தப்பட்டார். அந்த 3 வாலிபரையும்
அக்கினியும் உஷ்ணமும் சிறிதும் சேதப்படத்தவில்லை. தொடவும் இல்லை. நாம்
விடுதலையாக இருக்கும்படி தேவன் விரும்பும் போது எந்த மனித சக்தியும் நம்மைக் கட்டிப் போட முடியாது.
4.
வேத
வசன ஆதாரங்கள் – தானியேலின் புத்தகம்.
5.
விவாதிக்க
வேண்டிய கேள்விகள்.
a.
தேவனுக்கு
உண்மையாயிருந்த 3 சாட்சிகள் யார்?
b.
அவர்கள்
எவ்வாறு சோதிக்கப் பட்டார்கள்?
c.
அவர்கள்
விசுவாசத்தை விட்டுக் கொடுத்தார்களா?
d.
இதிலிருந்து
நீ கற்றுக் கொள்ளும் பாடங்களை எடுத்துக் கூறு
e.
இந்த 3 வாலிபரின் நட்பைப் பற்றி எடுத்துக் கூறு.
மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்,
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.
No comments:
Post a Comment