87. அப்பொல்லோ
– அப்போஸ்தலர் நடபடிகளில் உள்ள சுவிசேஷ ஊழியர்களில் ஒருவன்.
முக்கிய வசனம்
25 அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஸ்நானத்தைமாத்திரம்
அறிந்தவனாயிருந்து, ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப்
போதகம்பண்ணிக்கொண்டுவந்தான். 26 அவன்
ஜெபஆலயத்தில் தைரியமாய்ப் பேசத்தொடங்கினபோது ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக்
கேட்டு, அவனைச் சேர்த்துக்கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை
அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக்காண்பித்தார்கள். (அப்போஸ்தலர் 18.25-26)
சுருக்கமான குறிப்புகள்
·
அக்சந்திரியா
பட்டணத்து யூதன் (அப்.118.2240
·
வேதாகமத்தை
ந்ந்நன்கு அறிந்திருந்தான்.
·
நல்ல
பேச்சுத் திறன் வாய்ந்தவனாக இருந்தான். பழைய ஏற்பாட்டை நன்றாகப் புரிந்துணர்ந்து கற்றிருந்தான்.
·
ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் இவன்
இயேசுவைப் பற்றி அதிக திட்டமாய் அறிந்து கொள்ள உதவி செய்தார்கள்.
1.
முகவுரை
– இவனுடைய சரித்திரம்
பொது இடங்களில் பேசுவதற்குச் சிலருக்கு இயற்கையான திறமை இருக்கிறது. சிலர்
அத்துடன் நல்ல செய்தியையும் சேர்த்துச் சொல்றார்கள். அப்பொல்லோ எபேசு பட்டணத்துக்கு வந்த போது, கிருபையினால்
விசுவாசிகளானவர்களுக்கு
மிகவும் உதவியாக இருந்தான். அவன் ஜெப ஆலயத்தில் தைரியமாகப் பேசி, பழைய
ஏற்பாட்டு வார்த்தைகளை விவரித்துக் கூறி, இயேசுவே கிறிஸ்து என்று போதித்தான். கிறிஸ்தவ மார்க்கத்தை எதிர்த்த யூதருடன் பலமாகத் தாக்கம் பண்ணினான். வெகு
சீக்கிரமே ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் இவன் நன்கு பேசுவதைக் கவனித்தார்கள்.
பழைய ஏற்பாட்டையும் யோவான் ஸ்நானகளையும் அடிப்படையாகக் கொண்டே இவன் பிரசங்கித்து வந்ததை கவனித்து கொண்டுபோய் இயேசுவைப் பற்றியும் அந்நாட்களில் நடந்த விஷயங்கள் பற்றியும் அவனுக்குப் போதித்தார்கள். இயேசுவின் வாழ்க்கை, சிலுவை
மரணம், உயிர்த்தெழுதல், பரிசுத்த ஆவியின் வருகை பற்றி அவனுக்குக் கூறியபோது அவன் சுவிசேஷத்தை முழுமையாக அறிந்து கொண்டான். புதிய
பலமும் தைரியமும் பெற்றுக் கொண்டான்.
இதன் பின்பு அப்பொல்லோ அகாயா நாட்டிற்குப் போக விரும்பினான். அங்குள்ள மக்கள் அவனை ஏற்றுக் கொள்ளும்படி அவர்களுக்கும் கடிதம் கொடுத்தனுப்பினார்கள். கொரிந்து பட்டணத்திலும் அப்பொல்லோ சவிசேஷத்தைப் பிரசங்கித்து, அதை எதிர்த்தவர்களுடன் தர்க்கித்து வந்தான். வழக்கமாக
நடைபெறுகிறது போலவே இதினிமித்தமாகப் பல பிரச்சனைகள் எழும்பின. அவனுடைய செய்தியைப் பின்பற்றுவதற்குப் பதிலாக சிலர் அப்பொல்வைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு அவனைப் பின்பற்றினார்கள். இதனால் கொரிந்தியர் மத்தியில் பிரிவினை ஏற்பட்டதைப் பவுல் கண்டிக்க வேண்டியதாயிற்று. தங்களுக்குப் பிடித்தமான ஊழியர்களின் பெயரைக் கொண்டு பிரிவுகளை ஏற்படுத்தினர். அப்பொல்லோ
கொரிந்து பட்டணத்தை விட்டுச் சென்று மறுபடி திரும்பி வரத் தயங்கினான். கொரிந்துவில் பவுல் விதைத்த சவிசேஷமாகிய விதைகளுக்கு நீர் பாய்ச்சிய உழியக்காரன் அப்பொல்லோ என்று பவுல் குறிப்பிட்டார். தீத்துவுக்கும் பவுல் அப்பொல்லோவைக் குறித்து எழுதினான் (தீத்து
3.3). இவன் பல இடங்களுக்கும் பயணம் செய்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வந்தான்.
தன்னுடைய இயற்கையான திறமைகளைக் குறித்து பெருமை கொள்ளாமல் மென்மேலும் கற்றுக் கொள்வதில் ஆர்வமுடையவனாக இருந்தான். தாங்கள்
பவுலிடமிருந்து கற்றுக் கொண்டதை ஆக்கில்லா, பிரிஸ்கில்லாள் அப்பொல்லோவுக்குக் கற்றுக் கொடுக்கும்படி தேவன் உபயோகித்தார். அப்பொல்லோவும் அதைக் கற்று ஒஒரு சிறந்த சுவிசேஷப் போதகர் ஆனான். கற்றுக்
கொள்வதில் உனக்குள்ள ஆர்வம், தேவன் தாம் விரும்பும் வண்ணமாக நீ இருக்கும்படி
உனக்கு உதவி செய்ய எடுத்துக் கொள்ளும் முயற்சியை எவ்வளவாகப் பாதிக்கிறது.
2.
பலமும்
சாதனைகளும்
a.
ஆதித்
திருச்சபையில் திறமையும் சொல்வன்மையும் வாய்ந்த பிரசங்கி.
b.
தனக்குப்
போதனை செய்வதை ஏற்றுக் கொள்ள விருப்பமுள்ளவன்.
c.
எபிரெயர்
நிருபத்தை எபதியவர் யார் என்று திட்டமாகத் தெரியாத பட்சத்தில், எபதியிருக்கலாம் என்று குறிப்பிடப் படும் பெயர்களில் இருக்கிறார்.
3.
இவருடைய
வாழ்க்கையிலிருந்து
படிக்கும் பாடங்கள்.
a.
தேவனுடைய
வல்லமையுடன் கொடுக்கப்படும் சரியான செய்தியே பயனுள்ள சுவிசேஷத்தை எடுத்துக் கூறுவதாகும்.
b.
சவிசேஷத்தைத்
தெளிவான வார்த்தைகளினால் விளக்கிக் கூறும்போது அது விசுவாசிகளை ஊக்குவிப்பதாக இருப்பதுடன் அவிசுவாசிகளுக்கும் உண்மையை எடுத்துக் காண்பிப்பதாக இருக்கிறது.
4.
வேத
வசன ஆதாரங்கள்
a.
அப்.18.24-28,
19.1, 1கொரி.1.12, 3.4-66,22,
4.16, 16.12, தீத்து
3.13.
5.
விவாத்த்துக்கான கேள்விகள்.
a.
சுவிசேஷத்தைப் பரப்புவதில்
எவ்வாறு உதவி செய்தான்?
b.
அவனுடைய
விசேஷித்த தாலந்து என்ன?
c.
இயேசுவைக்
குறித்து அவனுக்குப் போதித்தது யார்?
d.
சுவிசேஷமாகிய
விதைக்கு எவ்வாறு நீர் பாய்ச்சினீர்?
e.
ஆதித்
திருச்சபையில் பிரிவுகள் ஏற்படுவதற்கு இவன் எவ்வாறு காரணமாக இருந்தான்?
மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்,
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.
No comments:
Post a Comment