பிரதான ஆசாரியன், இயேசுவின் மரணத்திற்குப் பொறுப்பாளியக இருந்தவன்
முக்கிய வசனம்
அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த
வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந்
தெரியாது; ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு
ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள்
என்றான். (யோவான் 11.49-50)
சுருக்கமான குறிப்புகள்
·
இயேசுவின்
ஊழிய காலத்தில் பிரதான ஆசாரியனாக இருந்தான்.
·
யூதருடைய
ஆலோசனை சங்கத்தில் தலைமை வகித்தான்.
·
ரோம
தேசாதிபதிக்கு அடுத்த படியாக யூதேயாவில் மிக்க அதிகாரமுள்ளவன்.
·
தான்
பேசுவது என்ன என்று அறிறயாமலேயே அவன் இயேசு ஜனங்களுக்காக மரிக்கப் போகிறார் என்று தீர்க்கதரிசனமாகக் கூறினான்.
·
அரசியலில்
இவனுக்கு நல்ல திறமை இருந்ததினால் நீண்ட காலமாகப் பதவியில் இருந்தான். சீரியா நாட்டு தேசாதிபதி இவனைப் பதவி நீக்கம் செய்தார்.
1. முகவரை – இவனுடைய சரித்திரம்
யோசேப்பு எனப்பட்ட காய்பா, கி.பி.18-36 வது பிரதான ஆசாரியனாகப் பதவி வகித்தான். சதுசேயர் எனப்படும் மதசம்பந்தமான குழுவினருக்குத் தலைவனாக இருந்தான். இந்தக் குழுவினர் நன்கு கற்றவர்களும், செல்வந்தர்களுமாக நாட்டின் அரசியலிலும் செல்வாக்குள்ளவர்களாக இருந்தனர். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கிய இவர்கள் ரோமரோடு நல்ல உறவு கொண்டிருந்தனர். இயேசு இவர்களது வாழ்க்கை முறைக்கு அச்சுறுத்தலாக இருந்ததினாலும், இயேசு கற்பித்தவற்றை இவர்கள் ஏற்றுக் கொள்ள முடியாத்தினாலும் இவர்கள் இயேசுவைப் பகைத்தார்கள். அத்துடன் இயேசு பிரசங்கித்த தேவனுடைய ராஜ்யத்தை அவர்கள் விரும்பவில்லை.
தன்னுடைய அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பது எதுவானாலும் அதை எவ்விதத்திலாவது அகற்றிப் போட்டு விடுவதே காய்பாவின் கொள்கையாக இருந்தது. இயேசு மரிக்க வேண்டும் என்பதல்ல, அவருடைய மரணம் எப்போது என்பதுதான் கேள்வியாக இருந்தது. இயேசு கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவது மட்டுமல்ல, ஆனால், மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னதாக ரோம அரசாங்கத்தின் ஒப்புதலையும் ஆலோசனை சங்கம் பெற வேண்டியதாக இருந்தது. யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுக்க முன்வந்தது, எதிர்பாராத விதமாகக் காய்பாவின் திட்டத்திற்கு உதவி செய்தது.
தான் போட்ட திட்டங்கள் யாவும், உண்மையில் தேவன் நிறைவேற்றிய அதிசயமான திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததை காய்பா உணரவில்லை. தன்னுடைய பாதுகாப்புக்காக மற்றொரு மனிதனை பலியாக்க விரும்பினது. அவனுடைய சுயநலத்தைக் காண்பிக்கிறது. இதற்கு மாறாக, நமக்காக மரிக்கும்படி இயேசு தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்து அன்பின் தியாகத்திற்கு உதாரணமாக இருக்கிறது. இயேசு சிலுவையில் மரித்த போது, காய்பா தான் வெற்றி பெற்று விட்டதாக நினைத்தன். ஆனால் அவர் உயிர்த்தெழுவார் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை.
தெளிவான சாட்சியங்கள் இருந்த போதிலும், காய்பா இயேசுவின் உயிர்த்தெழுதலை உண்மை என்று ஏற்றுக் கொள்ளவில்லை. காவல் சேவகர் அதை வெளியில் சொல்லாதபடிக்குப் பணம் கொடுத்து அவர்கள் பொய் சொல்லும்படி செய்தான். (மத்தேயு 28.12-113). இயேசுவை விசுவாசித்து ஏற்றுக் கொள்வதின் கிரயத்தைச் செலுத்த வேண்டும் என் நினைத்து இயேசுவை ஆண்டவராக ஏற்றுக் கொள்ளாத மக்களின் பிரதிநிதியாக இருக்கிறான். தமது குமாரனை ஏற்றுக் கொள்ளுபவர்களுக்கு தேவன் அருளும் நித்திய ஜீவனுக்குப் பதிலாக, அவர்கள் இந்த உலகத்தின் அழிந்து போக்க் கூடிய அதிகாரம், கௌரவம்,, சிற்றின்பங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
நீ தெரிந்து கொள்வது எது?
2. பலமும் சாதனைகளும்
18 ஆண்டுகளாகப் பிரதான ஆசாரியனாக ஊழியம் செய்தான். தன்னையும் அறியாமல், தீர்க்கதரிசனமாக உரைத்தான்.
3. பெலவீனமும் தவறுகளும்.
a)
இயேசுவின்
மரணத்திற்றகு நேரடியான பொறுப்பாளிகளாக இருந்தவர்களுள் ஒருவன்.
b) தன்னுடைய பதவியைத் தனது அதிகாரத்திற்கும், சுய பாதுகாப்புக்கும் பயன்படுத்திக் கொண்டான்.
c) இயேசுவைக் கைது செய்யத் திட்டம் வகுத்து, சட்ட விரோதமான நியாய விசாரணை செய்து, சிலுவை மரணத்தை அனுமதிக்கும்படி பிலாத்துவை வற்புறுத்தி, இயேசுவின் உயிர்த்தெழுதலைத் தடை செய்ய முயற்றசி செய்து, உயிர்த்தெழுந்த உண்மையையும் மூடி மறைக்க நினைத்தான்.
d) வெளித் தோற்றத்திற்கு மதப் பற்றுள்ளவன் போல் காண்பித்துக் கொண்டு ரோம அரசாங்கத்துடன் விட்டுக் கொடுத்து உறவாடினான்.
e)
பின்னர்,
கிறிறஸ்தவர்களைத் துன்புறுத்துவதிலும் பங்கு கொண்டான்.
4. இவனுடைய வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ளும் பாடங்கள்
a)
சத்துருக்களின் தீய
எண்ணங்களையும் செயல்களையும் கூட தேவன் தமது சித்தத்தை நிறைவேற்றுவதில் பயன்படுத்திக் கொண்டார்.
b)
சுய
நலமான நமது எண்ணங்களை நாம் ஆவிக்குரிய காரியங்களைக் கொண்டு மூடி மறைக்கும்
போது, தேவன் நமது உள்ளெண்ணங்களைப் பார்கிறார்.
5. வேத வசன ஆதாரங்கள்
மத்.28-12-13, யோவான் 11.49,50, அப்போஸ்தலர் நடபடிகள் 4.6
6. விவாத்த்துக்கான கேள்விகள்
a)
பிரதான
ஆசாரியனாக எவ்வளவு காலம் பதவி வகித்தான்?
b) யாரால் பதவி நீக்கம் செய்யப்பட்டான்?
c) இயேசுவை சிலுவையில் அறைவதற்கு யூதாஸ் எவ்வாறு உதவி செய்தான்?
d) இயேசுவின் மரணம் ஆசீர்வாதமாக இருக்கும் என்று அவன் ஏன் நினைத்தான்?
e)
அவனும்
மற்றவர்களும் என் இயேசுவை ஏற்ற்றுக் கொள்ளவில்லை?
மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்,
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.
No comments:
Post a Comment